Tuesday, March 3, 2009

இஞ்சி ரசம்








புளி - ஒரு லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று

அரைத்து கொள்ள
------------ -----------

இஞ்சி இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
கொத்து மல்லி தழை - கால் கை பிடி அளவு
கருவேப்பிலை - கால் கை பிடி அளவு
தாளிக்க
********

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு


செய் முறை
********* *****

1. புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
2.அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும்.
3. தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
5. சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி.





குறிப்பு

பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.
சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.
வீசிங் பிராப்ளம் உள்லவர்கலுக்கும் நல்லது.
சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது.

ஜலீலா

2 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

இன்று இந்த ரசம் செய்தேன்.சூப்பர்ர்!!!எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அக்கா.

Jaleela said...

ஹாய் மேனகா நலமா? உங்கள் பிளாக்கில் பதில் போட முடியலபா.

ரொம்ப நல்ல இருக்கும் இந்த ரசம் மணமாக , குழந்தை பெற்றவர்கக்கு ரொம்ப நல்லது.
ஜலீலா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா