Tuesday, April 28, 2009

பிரயாணத்தில் பாதுகாப்பைப் பெற‌

அல்லாஹு ஹாfபிலி அல்லாஹு நாஸிரி அல்லாஹு ஹாலிரி அல்லாஹு மஹி


பொருள்
அல்லாவே!எனது பாதுகாவலன்; அல்லாவே எனது உதவியாளன்;அல்லாவே என் முன் இருப்பவன்;அல்லாவே (எப்போதும்) என்னுடன் இருப்பவன்.பிர‌யாண‌த்தில் அச்ச‌ம் அதிக‌ம் உள்ள‌ இட‌ங்க‌ளில்,க‌டும் இருளில் இருப்ப‌வ‌ர்க‌ள் இந்த‌ நான்கு க‌லிமாக்க‌ளை ஓதிக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லாஹ், அனைத்து ஆப‌த்துக‌ளை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாவ‌லைப் பெற்ற‌வ‌ராக‌ இருப்பார்.

ஹெல்தி புட்டு

கேழ்வரகு = கால் கப்
கம்பு = கால் கப்
சோளம் = கால் கப்
பட்டாணி = கால் கப்
சிகப்பரிசி = கால் கப்
முந்திரி பாதம் = கால் கப்
கொண்டை கடலை= கால் கப்
சோயா பீன்ஸ் = கால் கப்
பார்லி = கால் கப்

பிரவுன் பர்கல் = கால் கப்
கேரட் துருவியது = தேவைக்கு
துளசி இலைகள் = சிறிது


1. மேற் கூறிய அனைத்து பொருட்களையும் கேரட், துளசி தவிர புட்டு மாவு பதத்திற்கு திரித்து வைத்து கொள்ளவும்.

2. அதிலிருந்து தேவைக்கு ஒரு கப்போ அல்லது இரண்டு கப்போ எடுத்து கலக்கி செய்யவும்.

3. புட்டு அவிக்கும் போது அத்துடன் கேரட், துளசி இலைகளை தூளாக்கி கலந்து அவிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாதாக புட்டு மாவை ஊறவைகக்வும்.

4. புட்டு மாவு கலக்கும் போது கட்டி இல்லாமல் சாஃப்டாக கலந்து வைக்கவும்.

5. இட்லி பானையில் ஈர துணையை விரித்து அவித்து எடுக்கவும்.

6. குழந்தைகளுக்கு சர்க்க‌ரை, நெய் , தேங்காய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.

7. பெரியவர்கள் தேவையான அளவிற்கு கொஞ்சம சேர்த்து சாப்பிடவும்.

8. இல்லை கடலை குழம்பு செய்து இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு: ரிச் புரோட்டீன், அயர்ன்,பீ காம்ப்லெக்ஸ் அடங்கி உள்ளது இந்த புட்டு மாவில் இவை அனைத்தையும் திரிக்க முடியாதவர்கள் இருக்கும் பொருட்களை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

துணிகளை வெட்டும் போது


துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.

யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

Monday, April 27, 2009

பெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங்கள்.

அம்மா நமக்காகவே வாழ்கிறாள், மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்திது கொண்டு சதா அவர்கள் நினைவாகவே இருக்கிறாள்.

இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது இது வேண்டும் அது வேண்டும் என்று.

கிழவி தானே வயதாகி விட்டது என்று நினைக்க வேண்டாம்.

அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.

உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கேடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலத்தில் தேவையானவை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்.பணம் கொடுத்தால் அவர்களுக்கென்று எதுவும் வாங்கி கொள்வதில்லை.

சேலை வாங்கி கொடுக்கும் போது ரொட்டி மாதிரி அடர்த்தியான சேலை வாங்கி கொடுக்காமல் லேசானா அதே நேரம் மெல்லியதாக இல்லாமல் பார்த்து வாங்கி கொடுக்கவும்.

என்ன தான் அப்பாவிற்கு கை நிறைய வீட்டு செலவிற்கு பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக பணம் கொடுங்கள். அவர்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

Saturday, April 25, 2009

ரசம் தாளிக்கும் போது

1. ரசம் தாளிக்கும் போது கொஞ்சமா தான் செய்வோம் ஆனால் சின்ன சட்டியை வைத்து தீயை அதிக படுத்தி தாளிக்க கூடாது.

2. அப்படி தாளித்தால் சட்டியின் மேல் தீ பிடித்து கொள்ளும்.

3. இது ஒருவர் இப்படி செய்த போது நானே நேரில் பார்த்துள்ளேன்.

4. அப்படியே தாளித்து விட்டு தீயை குறைத்து விட்டு அல்லது ஆஃப் பண்ணிவிட்டு கரத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும்.

5. இல்ல நன்கு கொதிக்க விட்டு தாளிப்பது ரொம்ப safe.

Wednesday, April 22, 2009

பொரி அரிசி

வருத்த வேர்கடலை = அரை கப்
பச்சரிசி = அரை கப்
சர்க்கரை = கால் கப்
வருத்த முந்திரி = ஐந்து


மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
எட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.
நல்ல சத்தான கலவை இது

குறிப்பு:

இது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.
இல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
சிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.
இல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

Tuesday, April 21, 2009

தீராத நோய்கள் தீர ஓதும் துஆ

1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான்.

2. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபதேசமும், இதயங்களில் இருப்பவைகளுக்கு நோய் நிவாரணியும் வந்துவிட்டன.

3.குர் ஆனில் இருந்து விசுவாசிகளுக்கு எவை சௌக்கியமாகவும், அனுக்கிரமாகவும் உள்ளனவோ அவற்றினை நாம் இறக்கி வைப்போம்.

4.அதன் (தேனியின்) வயிறுகளிலிருந்து நிறங்கள் பலதரப்பட்ட பானம் அதில் மனிதர்களுக்கு ஆரோக்கியம் உள்ளது.

5. நான் நோய் வாய் படும் பொழுது என்னை அவன் சுகப்படுத்திவைப்பான்.

6. (நபியே) அது ( குர் ஆன்) விசுவாசம் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் சௌக்கியமாகவும் உள்ளது.
1. வயஷ்பி ஸூதூர கவ்மின் முஃமினீன்.

2. யா அய்யு ஹ்ன்னாஸு கத்ஜா அத்கும் மவ இளத்துன் மிர் றப்பிகும் வஷீபாஉ லிமா பிஸ்ஸுதூரி.

3. வனு நஜ்ஜிலு மினல் குர் ஆனி மாஹுவ ஷிபா உன் வ‌ரஹ்மத்துன் லில் முஃமினீன்.

4.எக்ருஜ்மின் புதூனிஹாஷராபுன் முக்தலிபுன் அல்வானுஹு பிஹி ஷிபா உன் லின்னாஸி.

5. வஇதா மரிள்து பஹுவ யஷ்பீனி

6. குல்ஹுவ லில்லதீன ஆமனூ ஹுதன் வஷிபாஉன்

ஹெல்தி அடை


ஹெல்தி அடை

ப‌ருப்பு வ‌கைக‌ள்
******************

துவரம் பருப்பு = கால் கப்
கடலை பருப்பு = கால் கப்
முழு பாசி பயிறு = கால் கப்
உளுந்து பருப்பு = கால் கப்
பச்சரிசி = கால் கப்
புழுங்கல் அரிசி = கால் கப்
பாசி பருப்பு = கால் கப்
கொண்டை கடலை = கால் கப்

கேழ்வ‌ர‌கு மாவு = ஒரு மேசை க‌ர‌ண்டி
மசாலா
********
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
பச்ச மிளகாய் = இரண்டு
காஞ்ச மிளகாய் = இரண்டு
கருவேப்பிலை = அரை கைப்பிடி

சோம்பு = ஒரு தேக்கரண்டி
பூண்டு = இரண்டு

உப்பு = இரண்டு தேக்கரண்டி (அ) தேவைக்கு
வெங்காயம் = ஒன்று பெரியது

கொத்து மல்லி தழை = சிறிது
எண்ணை = சுட தேவையான அளவு


1.பருப்பு வகைகளை தனியகவும், அரிசியை தனியாகவும், பயறு மற்றும் கொண்டைகடலையை தனியாகவும் இரவே ஊறவைக்கவும்.

2.காலையில் முதலில் இஞ்சி பச்ச மிளகாய்,காஞ்ச மிளகாய்,சோம்பு, பூண்டை அரைத்த்து கொண்டு அத்துடன் அரிசியை முதலில் போட்டு அரைக்கவும்.

3.பிறகு கொண்டை கடலை மற்றும் பயறை சேர்த்து அரைகக்வும்.

4.கடைசியாக பருப்பு வகைகளை சேர்த்து அரைத்து அத்துடன் ராகி (கேழ்வரகு மாவை) சேர்த்து கலக்கி உப்பும் சேர்ர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.

5.வெங்காயம் , கொத்துமல்லி தழையை பொடியாக நருக்கி கலந்து தோசை கல்லில் நன்கு பரத்தி எண்ணை விட்டு மொருக விட்டு இரக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள வெல்லம், கொத்துமல்லி துவையல் போதுமானது, இல்லை இட்லி மிளகாய் பொடி தொட்டும் சாப்பிடலாம்.நல்ல சூப்பரான மொரு மொரு ஹெல்தி அடை குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்

குழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?

குழந்தைகளை கிரீச் மற்றும் பேபி கேரில் விடப்போகிறீர்களா?


பழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.

அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.உடனே என் பிள்ளை ஒன்றுமே சாப்பிலையா என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பாதீர்கள். பழக சாப்பிட ஆரம்பிக்க கொஞ்சம் டைம் எடுக்கும்.

இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.

அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.


அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.

குழந்தைகளில் பல வகை

சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.

சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.

கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ போக‌ ச‌ரியாகிடும் எப்ப‌டியும் ஒரு மாத‌ம் பிடிக்கும் அங்கு அவ‌ர்க‌ள் ப‌ழ‌குவ‌த‌ற்கு, அது வ‌ரை நீங்க‌ள் பொருமையாக‌ இருக்க‌வேண்டும்.

ஆ ஆ காரம் சூடு நாக்கு பொத்து விட்டதா?

1. டீ (அ) வெண்ணீர் குடிக்கும் போது தெரியாம சூடா வாயில் வைத்து நாக்கு பொத்து போய் விட்டதா? கவலை வேண்டாம் உடனே ஒரு மேசைகரண்டி முழுவதும் தேன் எடுத்து குடிங்க. சரியாகி விடும்.

2. ரொம்ப கார சாரமாக சாப்பிட்டு விட்டீர்களா ? அதற்கும் தேன் தான் குடிக்க வேண்டும்.


3.பிறகு கொஞ்ச நாளைக்கு நாக்குக்கு எந்த டேஸ்டும் தெரியாது.


(வடிவேலு சூட ஏதோ சாப்பிட்டு விட்டு இரண்டு காது வழியா ஆவி பறக்குமே அது நெஜம் தான். ஒரு நாள் ஆபிஸ் போகும் அவசரத்தில் சுடாக டீ குடித்து விட்டேன் அவ்வளவு தான் இரண்டு காதும் பிஞ்சு போற அளவுக்கு ஒரு வலி ஒரு நிமிடம் என்ன் ஆயிற்று என்றே தெரியல, பிறகு உடனே ஒரு மேசை க‌ர‌ண்டி தேன் சாப்பிட்டேன் சூப்பர்.)

Monday, April 20, 2009

குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்

1. வெயில் காலங்களில் அதிக சூடு காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால் ஒன்றும் பயப்பட தேவையில்லை.

2. குழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.
இல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.

3. படுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.
வெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.

4. வேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற்றும்.

5. சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் நான்கந்து எலுமிச்சை பழத்தை விளையாட கொடுக்கலாம்.

6. நிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.

7. அசைவ‌ம் கொடுக்க‌ வேண்டாம், பால் சாத‌ம், மோர் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம், த‌யிர் சாத‌ம் போன்ற‌வை கொடுத்தால் போதும்.

8. ஓட்ஸ், ராகி போன்ற‌ பான‌ங்க‌ளும் கொடுக்க‌லாம்.
கேர‌ட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இள‌நீரும் கொடுக்க‌லாம்.

9. ஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.
கொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.

10. அதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.
நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.
இது பெரியவர்களுக்கும் பொருந்தும்

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - கால் கிலோ

கடலை பருப்பு - 4 மேசை கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசை கரண்டி
கருவேப்பிலை - ஒரு கை பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு சிட்டிக்கை
உப்பு - ஒன்னே முக்கால் தேக்கரண்டி
மிளகாய் - 12
தாளிக்க
********
எண்ணை - கால் கப்


கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பீன்ஸை பொடியாக அரிந்து கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஊறிய பருப்புடன் காஞ்ச மிளகாய்,கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காய பொடி ஒன்னறை உப்பு சேர்த்து கர கரப்பாக அரைகக்வௌம்.

ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை பாதி ஊற்றி அரைத்த விழுதை போட்டுநன்கு வடஹ்க்கவும்.
பிறகு பீன்ஸ் சேர்த்து சிறிது எண்ணை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மீதி உள்ள எண்ணையையும் சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.

குறிப்பு
இதை கொத்தவரைகாய்,முட்டை கோசிலும் செய்யலாம், இதில் எண்ணை கொஞ்சம் அதிகமாக இழுக்கும். எப்பவாவது ஒரு முறை செய்து சாப்பிடலாம்.

தங்க நகைகளை கழுவும் போது

தங்க நகைகளை கழுவும் போது நாட்டு மருந்து கடைகளில் பொன்னாங்கொட்டை என்று விற்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊறவைத்தால் அதில் நுரை போல் வரும் அதில் போட்டு சிறிய பிரெஷ் வைத்து தேய்த்து கழுவவும்.
அப்படி இல்லையானால்

பேபி ஷாம்பு (அ) ஷாம்பு கொண்டு கழுவவும்.

சின்ன கம்மல், திருகாணி,மோதிரம், மூக்குத்தி போன்றவைகளை கழுவும் போது ரொம்ப ஜாக்கிரதையாக கழுவ வேண்டும்.
ஒரு பெரிய சில்வர் போலில் ஷாம்புவை போட்டு கலக்கி சின்ன சின்ன நகைகளை அதில் ஊறவைத்து சின்ன டூத் பிரெஷ் கொண்டு நன்கு கழுவி அதை டீ வடிகட்டும் வடிகட்டியில் சோப்பு தண்ணியோடு வடிகக்வும் அப்படியே இரண்டு மூன்று முறை கழுவவும்.

பிறகு வடித்த நகைகளை ஒரு வெள்ளி துணியில் வைத்து துடைத்து எடுத்து வைக்கவும்.

Saturday, April 18, 2009

மன அமைதிக்கு சிறந்த துஆ

யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு என்னை திருப்தியாக்கிவை.
அதில், எனக்கு மேலும் பரக்கத் செய்.
என்னை விட்டும் மறைந்து விட்ட ஒவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்த வற்றை எனக்குக் கொடு.


சிறப்பு:
******

இந்த துஆ மன நிம்மதிக்குச் சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும்.

ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வதிற்கும் இடையே இதை ஓதுவது சுன்னத்தாகும்.

நற்சுகத்தைப் பெற‌

நற்சுகத்தைப் பெற‌

யா அல்லாஹ்!எனக்கு உடலில் நற்சுகத்தை தருவாயாக!

எனது செவிப்புலனில் நற்சுகத்தை தருவாயாக!

எனது பார்வையில் நற்சுகத்தை தருவாயாக!

உன்னை அன்றி வேறு இறைவன் இல்லை.

Tuesday, April 14, 2009

அல்லாவிட‌ம் ம‌ட்டும் இறைஞ்சுவோம்.

அருள்மறை திருக்குர் ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் மொழியிலிருந்தும், நாம் வல்ல அல்லாஹ்விடம் எவ்வறு இறைஞ்ச வேண்டும் என்பதைச் சில சான்றுகள் மூலம் காண்போம்.

முத்தான துஆ ‍ = 1


"இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"

முத்தான துஆ ‍ = 2


"யா அல்லாஹ்! உயரத்திலிருந்து கிழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ,மூழ்கியோ,எரிந்தோ, இறபப்தை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னுடைய பாதையில் (போர் செய்யும் போது) புற முதுகு காட்டி ஓடி இறப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."


இது பல வருடம் முன் வெளியான அல் ‍= ஜன்னத் புக்கிலிருந்த தூஆ..

Monday, April 13, 2009

பூப்பொன்று முகத்திற்கு

முகம் பூப்போல் , பஞ்சு போல் சாஃடாக இருக்கனுமா?

பாலாடை, தேங்காய் எண்ணை (அ) ஆலிவ் ஆயில் சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு குழைத்து கீழிருந்து மேலாக தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகத்தை லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் கழுவவும்.

நேரம் இருப்பவர்கள் பஞ்சால் வெண்ணீரை நனைத்து துடைத்து எடுக்கவும்.

தினம் குளிப்பதற்கு 20 நிமிடம் முன் ஆலிவ் ஆயில் அல்லது பாதம் ஆயில் அல்லது தேங்காய் எண்ணை முகத்தில் தேய்த்து குளிக்கவும்.

எண்ணை வ‌டியும் முக‌த்திற்கு

எண்ணை வ‌டியும் முக‌த்தை ப‌ள‌ ப‌ள‌ப்பாக்கும் த‌ன்மை த‌க்காளிக்கு உண்டு.

சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து கொண்டே இருக்கும்.

தக்காளியை வட்டவடிவமாக கட் செய்து முகத்தில் நன்கு 10 நிமிடம் தேய்த்து லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகம் கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

வார‌ம் ஒரு முறை அல்ல‌து இருமுறை செய்ய‌வும்

Sunday, April 12, 2009

பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு

1. பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு இரண்டு ஸ்பூன் கசகசாவை மென்று சாப்பிடவும். இது வாய் புண்ணுக்கு கூட கேட்கும். கீழே உள்ள இரண்டும்


2. மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு வெற்றிலையில் கல் உப்பு,இஞ்சி ஒரு சிறு துண்டு வைத்து ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் முன்று நாட்களுக்கு சாப்பிடவும். சமீபத்தில் கேள்வி பட்டது. இது ஒருவர் இருபத்தைந்து வருடமாக செய்து வருகிறார்கள். பலன் உண்டு

3. அந்த நேரத்திற்கு ஒரு வாரம் முன்பு வெந்தயத்தை மாத்திரை போல் போட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

4. சுக்கு , சோம்பு, வெல்லம் கலந்தும் சாப்பிடலாம்.

5. வெந்தயத்தை இரவே ஊறவைத்தும் காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

இது குளிர் காலத்தில் குடிக்க கூடாது அதற்கு பதில் வெந்தயத்தை வருத்து பொடிசெய்து வைத்து கொள்ள வேண்டும்.
அதை தினம் உணவில் ரசம், புளி குழம்பு போன்றவற்றில் சேர்த்து செய்து கொள்ளலாம்.

பிளவுஸ் தைக்கும் போது

1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.

2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.

கருவளையத்துக்கு

1. கிரீமா இருந்தாலும், கலவை எண்ணையா இருந்தாலும்,வெள்ளரி உருளை பேக் காக இருந்தாலும் அதை சர்குலர் மூமெண்டில் இரு விரல்கள் அதாவது ஆள்காட்டிவிரல், நடு விரல் இது இரண்டையும் கொண்டு தேய்க்கனும்.

2. வலது கண்ணில் தேய்க்கும் போது வலது விரல்களால் (ஆள்காட்டிவிரல், நடு விரல்)க்லாக் வைஸ் தேய்க்கனும்.

3. இடது கண்ணில் தேய்க்கும் போது இடது விரலால் (ஆள்காடி விரல்,நடு விரல்) ஆண்டி க்ளாக் வைஸ் தேய்க்கனும்.

4. இரண்டு கண்ணிலும் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் தடவவும்.

5.தேய்க்கும் போது கண்ணை மூடி கொள்ளவும் இல்லை என்றால் கண் உள்ளே கிரீம் மற்றும் எண்ணை பட்டு விட்டால் கண் பார்க்கும் போது மங்கலாக இருப்பது போல் இருக்கும்.

6. நேரம் கிடைக்கும் போதேல்லாம் கண்ணை மூடி கண்ணுக்கு ரெஸ்ட் கொடுக்கனும்.
7.கண்ணில் தூசி ஏதும் விழுந்து விட்டால் ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து கண்ணை அதில் விரித்து பார்த்து கழுவவும்.சும்மா போட்டு க‌ச‌க்க‌க்கூடாது, ஒரு க‌ர்சீஃபில் வாயால் ஊதி கூட‌ க‌ண்ணின் மேல் வைக்க‌லாம்.

Friday, April 10, 2009

மகன் தந்தைக்கு செய்யும் துஆ

மகன் தந்தைக்கு செய்யும் தூஆ வானது, உம்மத்துகளுக்காக நபி (ஸல்) செய்யும் தூஆ வை போன்றதாகும்.

நபிகள் (ஸல்)

இது ஷாகுல் ஹமீது காலண்டரில் இருந்தது.

Wednesday, April 8, 2009

பட்டு புடவை பழசாகி விட்டதா?

1. பட்டு புடவையை வெள்ளி கிழமை மற்றும் வீட்டு விஷேஷ நாட்களில் வீட்டில் கூட கட்டி கொள்ளலாம்.2.அதை குழந்தைகளுக்கு பாவடை சட்டை வித விதமாக தைத்து போடலாம்.3.சில பட்டு சேலைகள் உடுத்தி கொள்ளவே முடியாது. டார் டாராக கிழியும் அப்படி உள்ள பட்டு சேலையை வீட்டில் திரை சீலையாக பயன் படுத்தலாம். உங்கள் வீட்டுக்கு ரிச், கிராண்ட் லூக் கிடைக்கும்.4.ஏழை எளியவர்களுக்கு, வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் அதை கட்டுகிற போது உள்ள சந்தோஷம் வாழ்த்து எல்லாம் உங்களையே சேரும்.5. பட்டு சேலையை துணி பையில் போட்டு வைத்தால் கரை பிடிக்காது.6.ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து நல்ல உதரி மடித்து வைக்க வேண்டும்.7. விஷேஷங்களுக்கு கட்டி வந்ததும் அப்படியே வியர்வை ஈரம் போகும் வரை பேனில் நல்ல இரண்டு நள் காய போட்டு பிறகு மடித்து பீரோவில் வைக்கவேண்டும்.

8. இல்லை நீங்களே பாவடை தாவனி போலும் கட்டி கொள்ளலாம், இப்ப அது தானே பேஷன்.

கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி

கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போதுகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு நிற்கும்.அதற்கு முன்னாடி வகிடு ஆரம்பத்தில் நெற்றி சுட்டி உடன் ஒரு சிறிய பித்தலை சேஃப்டி பின் கோல்ட் கலரில் இருக்கும் அதை குத்தி விட்டால் அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை.கல்யாண பெண்ணிற்கும் டென்ஷன் இல்லை, இப்பதெல்லாம் தங்கத்தில் தான் பயன் படுத்துகிறார்கள் அது தொலைந்து போகவும் வாய்ப்பில்லை

கீபோர்ட் கிளீனிங்

1. கீபோர்டில் அதிகமாக உணவு துகள்கள், தூசி எல்லாம் கீழே போய் அடைந்து கொள்ளும் அதற்கு கீபோர்டை தலை கீழா கவிழ்த்து தட்டினாலே எல்லாம் வந்து கீழே விழுந்துவிடும்.2.அதில் ஏதாவது கொட்டிவிட்டால் அதை அப்படியே துடைக்க கூடாது தலை கீழாக சீல்ங் ஃபேன் துடைப்பது போல் பிடிந்து கொண்டு காட்டன் பட்ஸ் (அ) பெயிண்டிங் பிரெஷ் கொண்டு துடைக்கவும்.ஒவ்வொரு எழுத்தாகவும் கழட்டி துடைக்கலாம்.3. இதில் டாய்லெட்டில் இருக்கும் கிருமியவிட மோசமான கிருமிகள் அதில் இருக்குமாம். அதற்காக தான் அதை கீளின் செய்வது அவ்வளவு முக்கியம்.பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு

1. பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு இரண்டு ஸ்பூன் கசகசாவை மென்று சாப்பிடவும். இது வாய் புண்ணுக்கு கூட கேட்கும். கீழே உள்ள இரண்டும்


2. மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு வெற்றிலையில் கல் உப்பு,இஞ்சி ஒரு சிறு துண்டு வைத்து ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் முன்று நாட்களுக்கு சாப்பிடவும். சமீபத்தில் கேள்வி பட்டது. இது ஒருவர் இருபத்தைந்து வருடமாக செய்து வருகிறார்கள். பலன் உண்டு

3. அந்த நேரத்திற்கு ஒரு வாரம் முன்பு வெந்தயத்தை மாத்திரை போல் போட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

தையல் டிப்ஸ்கள்

1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.

4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.

பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்

1 பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமான பிலஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள்.2. பிலாஸ்டி பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில் ஒரு சீல் இருக்கும். அதனுள் நம்பர் இருக்கும், அதில் நம்பர் 1 என்று இருந்தால் நல்ல பிலாஸ்டிக், அப்படி நம்பர் 2, 3,4,5 என்றேல்லாம் இருந்தால் அதை ரொம்ப நாளைக்கு பயன் படுத்தகூடாது.


3. குழந்தைகளின் பால் பாட்டில் நம்பர் 5 யில் தயாரிக்கிறார்கள்.ஆகையால் அதிக நாட்கள் பயன் படுத்த வேண்டாம்.4. இனி ரொம்ப நாள் பயன் படுத்திய டப்பாக்களை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி போடுங்கள்.


5. விலை உயர்ந்த பிலாஸ்டிக் கண்டெயினர் வாங்கும் போது இனி பார்த்து வாங்குங்கள்.

Tuesday, April 7, 2009

கோடை கால டிப்ஸ்

1. தண்ணீர் நிறைய குடிக்கனும்.

2.தண்ணீர் என்றில்லை சூப், ஜூஸ்,மோர் என்று கூட எடுத்து கொள்ளலாம்.

3.உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.


4.வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.

5.வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள், கிளம்பும் நேரம் தடவி சென்றால் அது பயனளிக்காது.இது ஸ்கின் டாக்டர் சொன்னது.

6.கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்க‌ள்.

7.கையில் எந்நேர‌மும் குடை (அ) கூளிங் கிளாஸ் இருக்க‌ட்டும்.

8. கூடுமான‌ வரை வெளியில் செல்வ‌து மாலை நேர‌ங்க‌ளில் வைத்து கொள்ளுங்க‌ள்.

9.டின் ஜூஸ்க‌ளை விட‌ ஃப்ரெஷாகா ஜூஸ் வகைகளை வீட்டிலேயே தாயாரித்து குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌வும்.

அம்மை போட்டு இருந்தால் ,அம்மை தழும்பிற்கு

1.தினமும் வேப்பிலை, பூண்டு, மஞ்சள் அரைத்து சாப்பிட கொடுக்கனும்.

2.அம்மை தழும்பு மறைய கொத்துமல்லி, வேப்பிலை, மஞ்சள்,கிராம்பு அரைத்து அவர்களை குளிக்க வைக்கும் போது அள்ளி கட்டிகளில் வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

அம்மை போட்டு இருந்தால் அவர்களை நல்ல படியாக கவனிக்கவும்.


முதலில் சுத்தம் தேவை, தினமும் பெட்சீட், தலையனை உறை எல்லாம் மாற்றனும் கூடுமான வரை வெள்ளை துணியாக இருந்தால் நல்லது.

ரொம்ப அரிப்பெடுக்கும் சொரிய விடக்கூடாது, சொரிந்து விட்டால் அந்த தழும்பு என்றைக்கும் ஆறாது.

வேப்பிலையை கொத்தாக கட்டு போல் கட்டி அதை கையில் கொடுத்து சொரி எடுக்கும் இடத்தில் வருடி விட சொல்லவும்.

சின்ன குழந்தைகளாக இருந்தால் நீங்களே மெதுவாக வருடி விடவும்.

அவர்களுக்கு படுத்தே இருப்பது போரடிக்கும் கையில் நிறைய எலுமிச்சையை கொடுத்து பால் போல் விளையாட கொடுக்கலாம்.

Monday, April 6, 2009

குழந்தைகளுக்கு வயிற்று வலி

குழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் மேல் வயிறு முட்டை மாதிரியும், கல்லு மாதிரியும் இருக்கும்.

அதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.


சூடான‌ வெண்ணீரை ஆற்றி அப்ப‌ அப்ப‌ இரண்டு ஸ்பூன் கொடுக்க‌வும்.

அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கால் தேக்க‌ர‌ண்டி சோம்பை லேசாகா கருகாமல் வ‌ருத்து த‌ண்ணீர் சேர்த்து இர‌ண்டு ஸ்பூனாக‌ வ‌ற்ற‌விட்டு கொடுக்க‌வும்.

கண்ணின் மேல் உள்ள கட்டிகளுக்கு

1. வீங்கிய கட்டிக்கு
கண்ணுக்கு மேல் அல்லது முகத்தில் வேறு எங்கு கட்டி வந்தாலும்கிராம்பும், மஞ்சளும் நல்ல பொடி செய்து பண்ணீரில் கலந்து தேய்க்கவும். இரண்டு நாட்களில் குணம் தெரியும்.
கொஞ்சமாக பொடிக்க முடியாது இதை அதிக அளவில் பொடித்து வைத்து
கொண்டால் தேவைக்கு பயன் படுத்தலாம்.

2. அம்மை தழும்பிற்கு


வேப்பிலை, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொட்கொக்கனும்.
தழும்பு மறைய வேப்பிலை, கருவேப்பிலை, கொத்து மல்லி,மஞ்சள், கிரம்பு நல்ல அரைத்து அந்த கட்டிகளில் அள்ளி வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

3. நக சுத்திக்கு

நக சுத்திக்கு மருதாணியில் மஞ்சள்பொடி, கிராம்பு பொடி , எலுமிச்சை சாறு,சிறிது கடுகு எண்ணை, நீலகிரி தைலம் கலந்து கையில் தொப்பி போல் வைக்கவும், இதே போல் அழுகி போன நகத்துக்கும் வைக்கலாம்.
முன்று நாள் தொடர்ந்து முன்று நாட்கள் மாத்திரை சாப்பிடுவது போல் கையில் தொப்பி வைக்க வேண்டும்.

முட்டை கோஸ் டிப்ஸ்


முட்டை கோஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது அதை எப்படி உணவில் சேர்ப்பது.

1.பருப்பு உசிலி செய்யும் போது பீன்ஸ்,கொத்தவரைக்கு பதில் முட்டை கோஸை சேர்க்கலாம்.

2.பிரைட் ரைஸில் சேர்க்கலாம்.

3.வெங்காய பகோடா செய்யும் போதும் சேர்க்கலாம்.

4.பிட்சா தோசை செய்யும் போதும் சேர்க்கலாம்.

5.மன்சூரியன் பால்ஸிலும் சேர்த்து பொரித்து கொடுக்கலாம்.

6.கீமா பிரெட் சாண்ட் விச்சிலும் இது ஒரு கைபிடி அளவு சேர்த்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட வாறு முட்டைகோஸை சேர்த்து செய்து கொடுக்க்லாம். முட்டை கோஸ் பிடிக்காதவர்கலும் இப்படி சாப்பிடலாம்.இது கேன்சர் நோயை கட்டு படுத்தும், வெயிட் குறையவும் அதிகமாக் சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி மற்றும் , கேஸ் பிராப்ளத்திற்கு

1. வயிற்று வலிக்கு

வயிற்று வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்த‌ய‌த்தை வ‌றுத்து பொடிசெய்து ஒரு ட‌ம்ள‌ர் மோரில் அரை தேக்க‌ர‌ண்டி வீத‌ம் க‌ல‌ந்து குடிக்க‌வும்.


2. கேஸ் பிராப்ள‌த்திற்கு

சுக்கு, சோம்பு, வெல்ல‌ம் முன்றையும் க‌ல‌ந்து சாப்பிட‌வும்.
இல்லை சுக்கு, சோம்பு காப்பி, அல்ல‌து சுக்கு சோம்பு டீ குடிக்க‌வும்.

3.

பூப்பெய்திய பெண்களுக்கு

1. ஆறு மாதத்திற்கு மீன் இறால், கருவாடு சாப்பிட கூடாது.

2. முட்டை பால்

3. பாதம் பால்

4. முட்டை இடியாப்பம் மிளகு சேர்த்து

5. உளுந்து சுண்டல்

6. உளுந்து வடை, உளுந்து அடை, உளுந்து களி, உளுந்து பால்

7. மருந்து சோறு

8. எலும்பு சூப் வகைகள்

9. இடியாப்பம் முட்டை வட்லாப்பம்

10. வெந்தயம் அல்லது வெந்தய கீரை சாதம் கீரைஸ் போல் செய்து கொடுக்கனும்.

11. உளுந்து களி இதை முட்டை வட்லாப்பம் போல் கூட செய்து கொள்ளலாம்.
ஆக மொத்ததில் நல்ல சத்தான ஆகாரங்கள் கொடுக்கனும்.

12. மைதா மாவு இனிப்பு தோசை முட்டை சேர்த்து ஒரு கைபிடி மாவிற்கு இரண்டு முட்டை அளவிற்கு கரைத்து ஊற்றனும்.

இதேல்லாம் கொடுத்தால் இடுப்பெலும்பு பலம் பெரும்

துணி துவைத்து விட்டு தண்ணீரில் வேலை பார்த்து விட்டு ஈர பாவாடையுடன் படுக்க கூடாது இது பிற்காலத்தில் கால் வலியை உண்டாக்கும்.

பூப்பெய்திய பெண்களுக்கு மாதம் ஒரு முறை வேப்பிலை அரைத்து இஞ்சி சாறு தேன் கலந்து கொடுத்தால் ரொம்ப நல்லது.

வயிற்றில் உள்ள வேண்டாத அழுக்குகள் வெளியாகும்.

ஆண்களுக்கு சாக்ஸ் டிப்ஸ்

1.ஷூ பயன் படுத்துபவர்கள் சாக்ஸை தரமானதாக வாங்கி போடவும்.

2. இல்லை என்றால் அதை தினம் நல்ல வாஷ் பண்ணி போடுங்கள்.

3. சில சோம்பேறிகள் அப்படியே ஷூ உள்ளே வைத்து விட்டு காலையில் அப்படியே எடுத்து போட்டு செல்வார்கள்.

4.உங்களுக்கு ஒன்றும் தெரியாது , ஆனால் ஆபிஸிலோ மற்ற வீடுகளிலோ நீங்கள் நுழைதால் எதிரில் உள்ளவர்களுக்கு வாடை கப் தாங்க முடியாது ஒன்றுமே செய்ய முடியாது எல்லோரும் மூக்கை அங்குள்ளவர்கள் வேறு வழி இல்லாமல் மூக்கை பொத்தி கொள்ள வேண்டியது தான்.

5. பெரிய பெரிய மீட்டிங்க் போகும் போதெல்லாம் டை கட்டி ஸ்மாட்டா போன பத்தாது கொஞ்சம் காலையும் கவனித்து விட்டு போங்க.

6. ஒரு சிறிய குளிக்கும் மக்கில் சோப்பு போட்டு சாக்ஸை ஊறவைத்து உடனே கையால் கசக்க்கி தொங்க விட்டு விடுங்கள். காலையில் காய்ந்து விடும்.

7. இல்லை 10 செட்டு வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

8. குழந்தைகளுக்கும் சின்னதில் இருந்து அப்படியே பழக்க படுத்தவும்.

9. சாக்ஸ் அணியும் போது காலுக்கு பவுடர் போட்டு விட்டு அணிந்து கொள்ளுங்கள்.

10. சாக்ஸை துவைத்து காய்ந்ததும் அதன் ஜோடிகளை சேர்த்து முடிச்சி போட்டு வைத்து கொண்டால் தொலைந்து போகமால் இருக்கும்.

இடுப்பு சதை மற்றும் வெயிட்டை குறைக்க

எல்லோருக்குமே 16 வயது சிட்டு போல் இருக்க ஆசை தான் என்ன்ன செய்வது வயது ஏறிக்கொண்டே போகிறதே
அதை தடுக்க முடியாதே.

இன்னும் நிறைய பெண்கள் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று அடிக்கடி கண்ணடியை பார்த்து கொள்கிறார்கள்.

கேள்வி பட்ட, நேரில் கண்ட, சில டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக
*******************************************************************************


1. மூச்சு பயிற்சி காலையில் 300 செய்யனும் பெரு மூச்சு விட வேண்டாம் முடியாது தான்

ஆரம்பத்தில் 21 , பிறகு கொஞ்சம் கொஞ்சம் மாக கூட்டி கொள்ளலாம்.

2. மூக்கை சிந்துவது போல் வயிறை உள்ளிழுத்து இரண்டு மூக்கையும் ஒரே நேரத்தில் சிந்துவது போல் ஒரு பயிற்சி. மூக்கு அடைத்து கொண்டால் சிறிது தைலம் தேய்த்து கொள்ளலாம்.

3. முன்றாவது சேரில் உட்கார்ந்து கொண்டு காலுக்கு சின்ன ஸ்டூல் வைத்து கொண்டு முக்கால் இரண்டு முட்டியையும் மாற்றி மாற்றி தொடனும். எத்தனை முடியுதோ அத்தனை. காலையில் முடியலையா லுஹர் தொழும் முன், மாலை மக்ரீப் தொழும் முன். செய்தால் போதும்.

4. காலையில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி இது எல்லோரும் சொல்வது தான் இப்படி செய்து 10 குறைந்தவரை நேரிலும் பார்த்து இருக்கிறேன். (ஆனால் என்னால் செய்ய முடியல அதற்கு வாய்ப்பே இல்லை அதுவும் காலையில்.)

5. உடற்பயிற்சி செய்யும் போது கொஞ்சமா சூடான வெண்ணீர் வைத்து கொண்டு அப்ப அப்ப குடித்து கொண்டே செய்தால் இன்னும் எஃபெக்டிவாக இருக்கும். இதுவும் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

6. காலை , இரவு நாலு பிரெட் சிலைஸ், ஓட்ஸ் இரண்டு கப் இதை தொடர்ந்தால் ஆறு மாதத்தில் 10 கிலோ கம்மிஆகும்.

7. ஐந்து நேர தொழுகையை நிருத்தி நிதானமாக தொழுதால் அது கூட நல்ல உடற்பயிற்சிதான்.

8. ஆனால் எதுவுமே தொடரனும் விட்டீங்க அவ்வளவு தான், முடிய வில்லை என்றால் வாரத்தில் முன்று நாட்கள் செய்யலாம்.

9. அதே போல் உண்வு கட்டு பாடும் தேவை, வாரத்திற்கு முன்று நால் சுத்த சைவம் சாப்பிடலாம். இல்லை வாரத்திற்கு ஒரு நாள் நோன்பு வைத்து விடலாம்.

10.எதை ஆரம்பித்தாலும் லைஃப் லாங்க் தொடரனும் இல்லை என்றால் ஒன்றும் பண்ண முடியாது.


11. பூண்டு பால் தினம் இரவு குடிக்கவும்.

12.வெந்தயம் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து விடவேண்டும்.இல்லை வெந்தயத்தை வருத்து பொடி செய்து காலை 11 மணிக்கு மோரில் கலந்து குடித்து விடவேண்டும்.


ஜலீலா

Sunday, April 5, 2009

கடுஞ்சளி இருமலுக்கு

1. மிளகு பால்

அரை தேக்கரண்டி மிளகை லேசாக வருத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு , பனங்கற்கண்டு சேர்த்து கடைசியில் ஒரு சிட்டிக்கை மஞ்சள் பொடி சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

2. சாப்ரான் பால்

ஒரு டம்ளர் பாலை நன்கு காய்ச்சி அதில் ஒரு மேசை கரண்டி பால் எடுத்து நான்கு இதழ் சாப்ரன் (குங்கும பூ) சேர்த்து கரைத்து பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.
இந்த சாப்ரான் பால் குடித்தால் காதுகிட்ட அடைந்து கிடக்கும் சளிக்கூட கரைந்து விடும்.

3. அக்கரா எல்லாத்தையும் விட ரொம்ப நல்ல மருந்து.

அக்கரா பொடியை தேனில் குழத்து சாப்பிடலாம், இஞ்சி சாறில் சேர்த்தும் குடிக்கலாம்.

4. காய்ச்சி ஆறிய வெண்ணீர் அல்லது வெது வெதுப்பான வெண்ணீர் குடிக்கலாம்

Saturday, April 4, 2009

குழந்தைகளின் ஹெல்தி உணவு

தேவையான பொருட்கள்
**********************

பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று

செய்முறை
***********

மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர‌க்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்

செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
குறிப்பு:

பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்

துஆக்கள் ஓதும் போது

துஆக்கள் ஓதும் போது அரபியில் அப்படியே மனப்பாடம் செய்து ஓதுவதை விட அதன் பொருளை தமிழில் அறிந்து அர்த்ததுடன் ஓதும் போது கூடுதலான உருக்கம் ஏற்படும்.
ஆகையால் தான் தமிழ் அர்த்ததை எடுத்து இதில் போடுகிறேன்.

கிட்ஸ் லாலி பாப்

கிட்ஸ் லாலி பாப்லெக் பீஸ் = 900 கிராம் (ஒரு பாக்கெட்)14 pcs

வினிக‌ர் ‍= ஒரு மேசை க‌ர‌ண்டி

காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி

ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = ஒன்ன‌றை தேக்க‌ர‌ண்டி

மிள‌கு தூள் ‍ ஒரு தேக்க‌ர‌ண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டிஎலுமிச்சை ‍= ஒன்று சிறிய‌து

த‌யிர் ‍ = ஒரு மேசை க‌ர‌ண்டி

முட்டை = ஒன்று

மைதா = ஒரு குழி க‌ரண்டிஎண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அளவுஅல‌ங்க‌ரிக்க‌கேர‌ட்வெள்ள‌ரித‌க்காளிஎலுமிச்சைகொத்தும‌ல்லி த‌ழைசெய்முறை1.சிக்க‌ன் லெக் பீஸை தோலெடுத்து வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து 5, 6 முறை க‌ழுவி குறுக்காக‌ ஆழ‌மாக‌ கீறி விட்டு த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.2. தேவையான‌ அனைத்து பொருட்க‌ளையும் த‌யாராக‌ வைக்க‌வும். (தூள் வ‌கைக‌ள்,முட்டை,மைதா,எலுமிச்சை,த‌யிர்,உப்பு, எண்ணை,சிறிது கொத்தும‌ல்லி த‌ழை)3.முட்டை மைதா த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்து பொருட்க‌ளையும் சிக்க‌னில் சேர்க்க‌வும்.4. ந‌ன்கு பிசைந்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.5.பிற‌கு முட்டை மைதா சேர்த்து பிசைய‌வும்.

6.சிக்க‌னை பிரிட்ஜில் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

7.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ழித்து ஒரு வாய‌க‌ன்ற‌ இரும்பு வான‌லியில் பொரிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணை ஊற்றி, நான்கு நான்கு பீஸாகாக‌ போட்டு பொரிக்க‌வும்.

8.தீயை மீடிய‌மாக‌ வைத்து மூடி போட்டு ந‌ன்கு வேக‌விட‌வும்.9.வெந்த‌தும் தீயை சிறிது அதிக‌ ப‌டுத்தி ந‌ல்ல‌ பொரிந்த‌தும் எடுத்து எண்ணையை வ‌டிக்க‌வும்.10.சுவையான‌ ஷாஃப்ட் கிட்ஸ் அன்ட் கிரிஸ்பி கிட்ஸ் லாலி பாப் ரெடி.

குறிப்பு:இது நான் செய்யும் ப‌ல‌ வகையான‌ சிக்க‌ன் பிரையில் இதுவும் ஒன்று.

குழ‌ந்தைக‌ளுக்கு சிக்க‌ன் தான் ரொம்ப‌ பிடிக்கும். இது ந‌ல்ல‌ முட்டை மைதா கொடுத்து ஊற‌வைப்ப‌தால் உள்ளே ந‌ல்ல‌ ஷாஃப்டாக‌வும் வெளியில் கிரிஸ்பியாக‌வும் இருக்கும். அதுவும் எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்க‌ன் விங்க்ஸ்ஸும் தான்.ந‌ல்ல அல‌ங்க‌ரித்து கொடுக்க‌வும்.இப்ப‌டி பொரிப்ப‌தால் எண்ணை கிளிய‌ராக‌ இருக்கும்.சில‌ வ‌கை சிக்க‌ன் பொரிக்கும் போது எண்ணையில் ம‌சாலா அனைத்து போல் ச‌ட்டியில் அடியில் போய் ஒட்டி கொள்ளும்.

ஜ‌லீலா