Tuesday, April 7, 2009

அம்மை போட்டு இருந்தால் ,அம்மை தழும்பிற்கு

1.தினமும் வேப்பிலை, பூண்டு, மஞ்சள் அரைத்து சாப்பிட கொடுக்கனும்.

2.அம்மை தழும்பு மறைய கொத்துமல்லி, வேப்பிலை, மஞ்சள்,கிராம்பு அரைத்து அவர்களை குளிக்க வைக்கும் போது அள்ளி கட்டிகளில் வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

அம்மை போட்டு இருந்தால் அவர்களை நல்ல படியாக கவனிக்கவும்.


முதலில் சுத்தம் தேவை, தினமும் பெட்சீட், தலையனை உறை எல்லாம் மாற்றனும் கூடுமான வரை வெள்ளை துணியாக இருந்தால் நல்லது.

ரொம்ப அரிப்பெடுக்கும் சொரிய விடக்கூடாது, சொரிந்து விட்டால் அந்த தழும்பு என்றைக்கும் ஆறாது.

வேப்பிலையை கொத்தாக கட்டு போல் கட்டி அதை கையில் கொடுத்து சொரி எடுக்கும் இடத்தில் வருடி விட சொல்லவும்.

சின்ன குழந்தைகளாக இருந்தால் நீங்களே மெதுவாக வருடி விடவும்.

அவர்களுக்கு படுத்தே இருப்பது போரடிக்கும் கையில் நிறைய எலுமிச்சையை கொடுத்து பால் போல் விளையாட கொடுக்கலாம்.

2 கருத்துகள்:

Mrs.Faizakader said...

வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் விஷயம். நல்ல தகவல் அக்கா..அம்மை நேரங்களில் மிகவும் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்

Jaleela said...

பாயிஜா மிக்க நன்றி பதிவு போட்டதற்கு.இரண்டு வருடம் முன் என் இரண்டு மகன் மற்றும், பக்கத்து வீட்டு பையன் மூவருக்கும் அம்மை போட்டு இருந்தது அதான் வெயில் வந்ததும் நினைவிற்கு வந்தது.
உடனே போட்டேன்.
அதே போல் 7 வருடம் முன் பேபி கேர் பர்த்த போது ஆறு மாத குழந்தை அம்மை போட்டு இருந்த குழந்தையையும் பார்த்து கொன்டேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா