Sunday, May 31, 2009

முழு மீன் டீப் பிரை - Fish Fry

//துபாயில் ஜுமேரா பீச்சில் இரவில் குளிர்காலத்தில் ஒரு சிறிய பொட்டி கடை போல் இருக்கும். அங்கு அரேபியர்களும், இந்திய கூட்டமும் அலை மோதும் இந்த முழு மீன் சாப்பிட. இது கிரில், சுடுவது எல்லாம் கிடையாது, அப்படியே எண்ணையில் போட்டு ஒரு வயகன்ற ஆழ கிடாயில் போட்டு பொரித்து எடுப்பது.

இது ஒரு பெரிய டேபிளில் நடுவில் இந்த மீனை வைத்து சுற்றி எல்லோரும் மொத்தமாக உட்கார்ந்து குபூஸுடன் சாப்பிடுவார்கள்.
அங்கு பல வகையான பெரிய பெரிய மீன்கள் இருக்கும் நாம் எதை காண்பிக்கிறோமோ அதை உடனே நம் கண் முன்னால் பொரித்து தருவார்கள்.
அதே போல் நாம் வீட்டிலும் குடும்பத்தோடு இது செய்து சாப்பிடலாம்.//தே.பொருட்க‌ள்

முழு மீன் = இரண்டு
உப்பு = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = ஒரு மேசை கரண்டி
இரண்டு தேக்கரண்டி (அ) முழு பூண்டில் பாதி (பூண்டை அரைத்தும் போடலாம்).
பூண்டு பொடி = ஒரு தேக்கரண்டி (அ)
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
க‌ர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ரெட் க‌ல‌ர் பொடி ‍ = இர‌ண்டு சிட்டிக்கை (தேவைப‌ட்டால்)
எலுமிச்சை சாறு = ஒரு மேசை க‌ர‌ண்டி

செய்முறை


மீனை முழுசாக‌ க‌ழுவி சுத்த‌ம் செய்து வ‌யிற்றில் உள்ள‌ அழுக்கை அக‌ற்றி விட்டு சைடில் உள்ள‌ முள்ளை க‌த்திரியால் க‌ட் ப‌ண்ண‌வும்.
அதில் மேலே குறிப்பிட்ட‌ அனைத்து ம‌சாலாக்க‌ளையும் போட்டு ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பெரிய பேனில் எண்ணை ஊற்றி நல்ல நிதானமாக மொருகலாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:


நிறைய ஊர் களிலும் இது போல் மீனை முழுசாக பொரித்து கொடுக்கிறர்கள், ஆனால் எண்ணை பழசாக கூட இருக்கலாம், வீட்டில் நாம் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.
இருக்கும்
சாலட், குபூஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
அவரவர் விருப்பமான மீனை முழுசாக பொரித்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள்.

ஆக்கம்
ஜலீலா

Thursday, May 28, 2009

கல்வி ஞான விருத்திக்கும், நினைவு தரிபடுவதற்கும் ஓதும் தூஆ

யா அல்லாஹ்! சந்தேக இருள்களிலிருந்து எங்களை வெளியேறச் செய்தருள். சிந்தனை ஒளிவைக் கொண்டு எங்களுக்குக் கிருபை செய்.
உன் கிருபையினுடயவும், ஞானத்தினுடையவும் வாசல்களை எங்களுக்குத் திறந்து விடு.

உன் கல்வி கருவூலத்தை எங்கள் மீது சொரிந்தருள். உன்னையே துதிக்கின்றேன். (நீ தூய்மையானவன்). நீ எங்களுக்கு கற்பித்ததைத் தவிர வெறொரு கல்வியும் எங்களிடம் இல்லை. நிச்சயமாக நீயே அறிவுடையோனும்,ஞானமுடையோனுமாவாய்.


//நாம் எவ்வளவோ ஓதுகிறோம், பிள்ளைகளும் படிக்கிறார்கள், ஆனால் மறதி என்னும் வியாதி எல்லோருக்குமே இருக்கு, ஆண்டவன் நம் அனைவருக்கும் நல்லவிஷியங்களை மறக்காமல் இருக்கவும், தீய விஷியங்களை மறக்கவும் கிருபை புரிவானாக.//


மேலே உள்ள‌ தூஆவை பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு செல்லும் போது, தேர்விற்கு செல்லும் போது ஓத‌ சொல்ல‌வும்.

பாலுட்டும் தாய்மார்களுக்கு

1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.2. பால் அதிகமாக சுரக்க ‍= ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும்.

ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது

4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.

5.தாய்மார்கள் இர‌ண்டு காதுக‌ளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ள‌வும்.

காலில் என்னேர‌மும் செருப்பு அனிய‌வும்.

இர‌வில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ள‌வும்.

இப்ப‌டி செய்வ‌தால் ந‌ர‌ம்புகளில் காத்து ஏறுவ‌தை த‌விர்க்க‌லாம்.6.எலும்புகள் வலுவடைய‌ சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் ந‌ல்ல‌ சுர‌க்கும்.7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும்.

(இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.

ப‌ச்சிள‌ம் குழ‌ந்தையை குளிக்க‌ வைக்கும் போது பாக‌ம் 21. பிற‌ந்த‌குழ‌ந்தைக்கு த‌லைக்கு ஊற்றும் போது மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ ஊற்ற‌னும்.
காது , மூக்கு தொண்டையில் த‌ண்ணீர் போகாத‌ வ‌ண்ண‌ம் ஊற்ற‌னும்.
ந‌ம் காலில் ச‌ரிவ‌லாக‌ ப‌டுக்க‌ வைத்து ஊற்றினால் இப்ப‌டி த‌ன்ணீர் உள்ளே போவ‌தை த‌விர்க்க‌லாம்.


2. இர‌ண்டு காலையும் ஒண்று சேர்த்து ச‌ரிவ‌லாக வைத்து கொண்டு குழ‌ந்தை த‌லை மேலே இருக்குமாறு வைத்து கொள்ள‌வும்.

3. க‌ழுத்திலிருந்து மேலே வ‌ரை முத‌லில் ந‌ல்ல‌தேய்த்து ஊற்றி விட்டு பிற‌கு த‌லையில் முன் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌மால் பின் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌வேண்டும்.ஊற்றும் போது இர‌ண்டு காது ம‌ற்றும் நெற்றி ப‌க்க‌ம் கையை வைத்து கொண்டு ஊற்ற‌வும்.

4. போன‌ குறிப்பில் சொன்ன‌ப‌டி உட‌னே ஒரு பெரிய‌ காட்ட‌ன் துப்ப‌ட்டாவில் சுருட்டி ந‌ன்கு ப‌ஞ்சை துடைப்ப‌து போல் துடைத்து ப‌வுட‌ர் சிறிது உச்ச‌ந்த‌லையில் வைக்க‌வும். இது த‌ண்ணீர் நின்றால் அதை எடுத்து விடும்.

5. எக்கார‌ண‌த்தை கொண்டும் காதில் ப‌ட்ஸை போட‌ கூடாது.
ஒரு சிறிய‌ மெல்லிய‌ ம‌ல் துணியை ந‌ன்கு சுருட்டி காதில் துடைக்க‌வும்.

6. குழ‌ந்தை குளித்து முடித்த‌தும் உட‌னே சாம்ராணி புகை மூட்டி அதில் உட‌ம்பு, த‌லை,கால் போன்ற‌வ‌ற்றை காண்பிக்க‌வும்.
சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ பிடித்து கொள்ளுங்க‌ள்.
இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.

7. பிற‌கு ந‌ன்கு வ‌யிற்றை நிரைத்து துணியில் சுற்றி உட‌னே தூங்க‌ வையுங்க‌ள்.
குளித்தால் குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ தூங்குவார்க‌ள், ந‌ல்ல‌ தூங்கினால் தான் ச‌தை வைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென‌ இருப்பார்க‌ள்.

Tuesday, May 26, 2009

பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது பாகம் ‍ 1
1. பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக குளிக்க வைக்க வேன்டும்.

2. சில குழந்தைகள் துள்ளி கொண்டு தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவார்கள்.3. வாரம் ஒரு முறை நல்ல வெது வெதுபான வெண்ணீரில் நல்ல குளிக்கவைக்க்க வேண்டும்.
தினம் குளிக்க வைக்க ஒரு சிறிய சாதம் வைக்கும் பேசின் (அ)சப்பாத்தி மாவு குழைக்கும் தொட்டி போதுமானது.

4. தொட்டியில் பாதியளவு வெண்ணீர் வைத்து அதில் லிக்விட் பேபி பாத் லோஷனை இரண்டு டிராப் விட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள், தனியாக ஒரு மக்கில் வெண்ணீர் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய குட்டி டம்ளர் போட்டு வையுங்கள்.

5.குளிக்க வைக்க்கும் முன் ஒரு மெல்லிய காட்டன் துப்பட்டாவை ரெடியாக உங்கள் தோள் பட்டையில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.குழந்தை குளித்து முடித்ததும் உடனே சுருட்டிக்கொள்ள இது உதவும்.
இது ரூம் அல்ல்து ஹலிலேயே குளிக்க வைக்கலாம்

6.இடது கை ஈரமில்லாமல் இருக்கட்டும் இடது கையால் குழந்தையின் தலையை பிடித்து கொள்ளுங்கள். பாதி அள்வு உள்ள தொட்டில் வெண்ணிரில் குழந்தை உட்காரும் பொசிஷனில்வையுங்கள் தண்ணீர் குழந்தையின் இடுப்பு வரை இருக்கட்டும்.
இப்போது ரொம்ப நேரம் குழந்தையை ஊறவிடாமல் வலது கையால் நன்கு தேய்த்து கை கால் இடுப்பு எல்லாம் தேய்த்து முதுகிலும் தேய்த்து இரண்டு முக்கு கழுத்து வரை முக்கி எடுக்கவும். முகத்தில் அள்ளி ஊற்றாமல் கை விரகளால் தொட்டு துடைக்கவும்.

7. ரொம்ப நேரம் குழந்தைகளை தண்ணீரில் ஊறவிடாமல் சீக்கிரமாக ஊற்றி முடிக்கவும்

8. எல்லாமுடித்து கடைசியில் சுத்தமான வெண்ணீரை சிறிய டம்ளரால் ஊற்றி உடனே பெரிய காட்டன் துப்பாட்டாவில் சுற்றி எடுத்து கொள்ளவும்.

9. மெயினாக ரூமில் பேன் ஏசியை ஆஃப் செய்து விட்டு துடைக்கவும்.

10. கீரிம் அல்லது லோஷன் தடவி நல்ல வயிற்றை நிறைத்து (கண்டிப்பாக குழந்தைக்கு பால் கொடுக்குமுன் தாய் மார்கள் சூடாக காபி (அ) பால் (அ) சூப் குடித்து கொள்ளவும்). தூங்க வைக்கவும்.

11. குழந்தைகள் குளித்தால் நல்ல சுகமாக தூங்குவார்கள்.
நல்ல தூங்கினால் தான் குழந்தைகளுக்கு சதை வைக்கும்.

குறிப்பு:

இதற்கு முன் உள்ள டிப்ஸ் களில் குழந்தை மசாஜ் பற்றி எழுதி இருந்தேன்.
ஒவ்வொரு முறை குளிக்க் வைக்கும் போதும் சிறிது ஆலிவ் ஆயில்(அ) பேபி ஆயில் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வைக்கவும்.


(தொடரும்)

கேஸ் அடுப்பை கிளீன் செய்யும் போது


1. கேஸ் அடுப்பை துடைக்கும் போது சோப்பு போடு கழுவிய உடன்,ஸ்பான்ஞ் வைத்து துடைகக் துடைக்க சோப்பு நுரை வந்து கொண்டே இருக்கும்.

2. அதை தவிர்க்க. பழைய துணி அல்லது பனியன் துணியை கொண்டு துடைத்தால் இரண்டு முறை அலசி துடைத்து விடலாம்.

3. கையிலும் கீறல் ஏதும் விழாது.கையில் கிளவுஸ் போட்டு கேஸை துடைக்க சிலருக்கு பிடிக்காது.

4. ஸ்டீல் கொண்டு கேஸ் அடுப்பில் உள்ள விடப்பிடியான கரையை அழுத்தி துடைக்கும் போது கையில் சுர சுரப்பு ஏற்படும், கீறல்கள் விழும் அதை தவிர்க சாக்ஸை கையில் போட்டு கொன்டு துடைக்கலாம்.

5. சாக்ஸ் போட்டு கொண்டு துடைக்கும் போதும், ஸ்பான்ஞ்சுக்கு பதில் துணியை பயன் படுத்தி துடைப்பதாலும் எளிதாக கேஸ் அடுப்பை துடைத்து விடலாம்.

உளுவா கஞ்சி (சுகப்பிரசவத்திற்கு)


தே.பொருட்கள்
**************************


அரிசி = கால் கப்
வெந்தயம் = ஒரு மேசை கரண்டி
பனைவெல்லம் = ஒரு பெரிய துண்டு
தேங்காய் பால் = அரை முறி
முட்டை = ஒன்று
பூண்டு = ஒரு முழு பூண்டு

செய்முறை
**************************

1.அரிசியை பொடித்து அத்துட‌ன் வெந்த‌ய‌ம் சேர்த்து ந‌ன்கு ஊற‌வைக்க‌வும்.

2.தேங்காயை முத‌ல் பால், இர‌ண்டாம் பால் எடுத்து வைக்க‌வும்.

3. பூண்டு, ஊறிய அரிசி மற்றும் வெந்தயத்தை இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

4. ந‌ன்கு வேக‌வைத்து அதில் வெல்ல‌த்தை இள‌க்கி வ‌டிக்க‌ட்டி சேர்த்து கிள‌ற‌வும்.

5.முத‌ல் தேங்காய் பாலில் முட்டையை ந‌ன்கு க‌ல‌க்கி கொண்டு வெந்து கொண்டிருக்கும் அரிசி க‌ல‌வையோடு சேர்த்து கட்டி பிடிக்கமல் ந‌ன்கு கிள‌ற‌வும்.

நிறை மாத கர்பிணி பெணகளுக்கு சுகப்பிரசம் ஆக இந்த உளுவா கஞ்சியை செய்து கொடுக்கலாம்


குறிப்பு:

இது க‌ர்பிணி பெண்க‌ளுக்கு பிள்ளை பெறும் நேர‌த்தில் கொடுக்க‌வும். உட‌ல் சூட்டை த‌ணிக்கும்.
க‌ட்டியாக‌ காய்ச்சினா முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வ‌ரும், கொஞ்ச‌ம் த‌ண்ணி மாதிரி காய்ச்சினால் ஐந்து ட‌ம்ள‌ர் வ‌ரும்.

குளுமை உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை சிறிது குறைத்து போடவும்


இந்த கஞ்சியை கர்பிணி பெண்கள் நிறைமாததில் சாப்பிடுவதால் கர்ப்ப பை வாய் இளக்க்ம் கொடுத்து வயிற்றில் உள்ள வாயுவை கலைத்து சுகப்பிரசவம் ஏற்பட உதவும்.

உடல் சூடு மற்றும் கேஸ் பிராப்ளம் உள்ளவர்களும் இதை செய்து சாப்பிடலாம்

Tuesday, May 19, 2009

மன அமைதிக்கு சிறந்த துஆ

யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றை கொண்டு என்னை திருப்தியாக்கிவை.அதில், எனக்கு மேலும் பரக்கத் செய். என்னை விட்டும் மறைந்து விட்ட ஓவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்தவற்றை எனக்குக் கொடு.


சிறப்பு: இந்த துஆ மனநிம்மதிக்கு சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும். ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வத்திற்கும் இடையே இதை ஓதுவது சுன்னதாகும்.

Saturday, May 9, 2009

மினி தந்தூரி பிட்சா


பிட்சா மேல் வைக்கும் பில்லிங்
******************************
சிக்கன் எலும்பில்லாதது = 200 கிராம்
தந்தூரி சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
பிட்சா மேலே தூவ
*******************
மொஜெரெல்லா சீஸ் - 12 தேக்கரண்டி(அ) தேவைக்கு
பிட்சா சாஸ் - 12 தேக்கரண்டி (அ) தேவைக்கு
கேப்ஸிகம் - கால் கப் (பொடியாக அரிந்தது)
பச்சை (அ) கருப்பு ஆலிவ் காய் - 12 (கொட்டை நீக்கி பொடியாக அரிந்தது)
டொமேட்டோ கெட் - 12 தேக்கரண்டி (அ) தேவைக்கு
பிட்சா மாவு தயாரிக்க
********************
மைதா - 200 கிராம் (ஒரு டம்ளர்)
கோதுமை - அரை கப்பிற்கு சிறிது கம்மியாக
ஓட்ஸ் பவுடர் - நாலு தேக்கரண்டி
இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
சூடான பால் - அரை கப்
தண்ணீர் -பிசையதேவைஅன அளவு
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சிக்கன் தாளிக்க
****************
எண்ணை - ஒரு தேக்கரண்டி
பட்டர் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி (தேவை பட்டால்)

செய்முறை

1. முதலில் மாவு தயாரிக்க

சூடான பாலில் ஈஸ்ட், உப்பு ,சர்க்கரை போட்டு சிறிது நேரம் கழித்து மைதா, கோதுமை, ஓட்ஸ் மாவில் பட்டர் போட்டு பிசைந்து அதில் ஈஸ்ட் கலவையை ஊற்றி, தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு குழத்து முன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
முன்று மணி நேரம் கழித்து மாவு கல சிறிது பொங்கி வரும் அதை மீண்டு குழைத்து சிறு பூரிக்கு போடும் உருண்டைகளாக போட்டு வித்து கொள்ளவேண்டும்.

2.சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து அதில் சிக்கனில் கலக்க வேண்டிய மசக்களை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து தோசை தவ்வாவில் பட்டர் + எண்ணை ஊற்றி வெங்காயம் பொட்டு வதக்கி சிக்கன் கலவையை சேர்த்து நனுகு டிரையக வதக்கவேண்டும்.

3 கேப்ஸிகம்,ஆவில் காய் பொடியாக நீளவாக்கில் அரிந்து வைக்கவேன்டும்.

4. இப்போது பிட்சா உருண்டைகள், சீஸ்,சாஸ்,கேப்ஸிகம் மற்றும் ஆலிவ் காய்கள், சிக்கன் கலவையை தயார்.
ஓவனை 180 டிகிரி 15 நிமிடம் பிரீ ஹீட் செய்ய வேண்டும் அதற்குள் பூரி அளவில் உள்ள உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து நாளு விரல்களால் நல்ல உள்ளங்கை அள்விற்கு தேய்த்து அதில் முதலில் பிட்சா சாஸை பரவலாக தடவவும்.அடுத்து சிக்கன் கலவையை உதிரித்து ஒரு தேக்கரண்டி அளவு தூவ வேன்டும். அடுத்து ஆலிவ் காய், கேப்ஸிகம் இரண்டு ஒரு ஒரு தேக்கரண்டி அள்வு தூவி, சீஸையும் தூவி அதன் மேல் டொமேட்டோ கெட் சப்பை தெளித்து ஓவனில் வைத்து 15 நிமிடம் பேக் செய்யவும்.
முடிந்தது ஓவனை ஆப் பண்ணி விட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
வாவ் யம்மி யம்மி மினி பிட்சா ரெடி.

குறிப்பு
***********
1. இதை வெரும் மைதாவிலும் செய்யலாம். பில்லிங் சிக்கன் தான் என்றில்லில்லை மதியம் செய்த எந்த காய் கறி கலவை, சிக்கன் கலவை, இறால் கலவை எது வேண்டுமானாலும் வைக்கலாம். டயட் செய்பவர்கள் இதில் பட்டருக்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். சீஸ் கூட கொஞ்சமா சேர்த்து கொள்ளுங்கள்.

2. வெஜ் டேரியன் கள் சிக்கனுக்கு பதில் பனீர் கியுப்சை பொரித்து சேர்க்கலாம் (அ) மஷ்ரூம் கூட போடலாம் பில்லிங் நம் இழ்டம் தான் அவரவர் விருப்பம்.

3. இது பிரட் பன்னிலும் ஈசியாக தாயாரித்து மைக்ரோவேவிலும் இரண்டு நிமிடம் வைத்தும் எடுக்கலாம்

வேலையை சுலபமாக்க

1. சமையலுக்கு தேவையான முக்கியமான பொருள் இஞ்சி பூண்டு பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்டை ஒரு மாதத்திற்கு தேவையானதை அரைத்து பாதியை பிரிட்ஜிலும் , மீதியை பிரீஜரிலும் வைத்து கொண்டால் வசதியாக இருக்கும்.

2.சேமியா, ரவை போன்றவைகளை வறுத்து வைத்து கொண்டால் காலை டிபன் ஈசியாக முடிக்கலாம்.

3.மோர் குழம்புக்கு தேவையானதை கொஞ்சம் நிறைய அரைத்து இரண்டு முன்றாக பிரித்து வைத்து கொண்டாலும் ரொம்ப சுலபமாக தேவைக்கு அதில் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மோர் கலந்து கடைசியில் தாளித்து இரக்கலாம்.

4. புளி பேஸ்ட் நிறைய செய்து ஐஸ் கியுப் செய்து பீரிஜரில் போட்டு வைத்து கொண்டால் நிமிழத்தில் ரசம், மீன் குழம்பு, புளி குழம்பு, வத்த குழம்பு வைத்து விடலாம்.

5. தேங்காயுடன் முந்திரி, பாதம், பிஸ்தா சேர்த்து அரைத்து வைத்து நாலைந்து பாகமாவோ அல்லது ஐஸ்கியுப் போலவோ போட்டு வைத்து கொண்டால் குருமா குழம்பு வைக்கும் போது இன்னும் சுலபமாக இருக்கும்.

6.கொண்டைகடலையை நிறைய வேக வைத்து வைத்து கொண்டால் சென்னா, சுண்டல், சாலட், வடை போன்றவையை எளிதில் தயாரிக்கலாம்.


7.தேசைக்குமாவு அரைக்கும் போது ஒரு கிலோ அள‌விற்கு அரைத்து வைத்து கொண்டால் அந்த‌ வார‌ம் முழுவ‌தும் தேவைக்கு இட்லி, தோசை, ஆப்ப‌ம், ஊத்தாப்ப‌ம், அப்ப‌ம் என்று செய்து கொள்ள‌லாம்.

8.தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து கொஞ்சம் கொஞ்மாக பாக்கெட் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம்.

Thursday, May 7, 2009

டயட் அடை (Barely ,horsegram adai)

கொள்ளு = கால் கப்

பார்லி = கால் கப்

பர்கல் = கால் கப்

வெள்ளை சென்னா = கால் கப்

புழுங்கல் அரிசி = கால் கப்

வால் நட் = கால் கப்

ராகி மாவு = ஒரு மேசை கரண்டிஇஞ்சி = ஒரு அங்குல‌ துண்டு

பூண்டு = முன்று ப‌ல்

ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று

கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை சிறிது (பொடியாக‌ கசாப் செய்த‌து)

சின்ன‌ வெங்காய‌ம் ‍ = ஆறு (பொடியாக‌ க‌ட் செய்த‌துஉப்பு = தேவைக்கு

ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் = சுட்டெடுக்க‌

கொள்ளு , வெள்ளை சென்னா , அரிசி யை இரவே ஊற போடவும்.

பர்கல், பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும்.

அரைக்கும் போது பூண்டு இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக‌க்வும்.அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்து ம‌ல்லி, புதினா க‌ருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்க‌வும்.

அரைத்த‌ க‌ல‌வை க‌ட்டியாக இருக்க‌வேண்டும்.

தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ மீன் குழ‌ம்பு, கார‌ குழ‌ம்பு, வ‌த்த‌ குழ‌ம்பு, அல்ல‌து புதினா துவைய‌ல்.

இத்தாலிய‌ன் கிரில் சிக்க‌ன்

சிக்கன் = ஒரு கிலோ

சீஸ் = ஒரு கப்

உப்பு = தேவைக்கு

தயிர் = ஒரு கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்னறை மேசை கரண்டி

ஆலிவ் ஆயில் = இரண்டு மேசை கரண்டி

பச்ச மிளகாய் பழுத்தது = நான்குசிக்கனை கழுவி அதில் பழுத்து ரெட் கலர் பச்ச மிளகாயை அரைத்து ஊற்றவும்.மீதி உள்ள சீஸ்,உப்பு,தயிர்,ஆலிவ் ஆயில், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு சிக்கனில் விறவவும்.

சிக்கனை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

250 டிகிர் முற்சூடு ப‌டுத்திய‌ அவ‌னில் அரை ம‌ணி நேர‌ம் பேக் செய்து எடுக‌க்வும்.

பேக் செய்யும் போது த‌ண்ணீர் கீழே நிற்கும் அத‌ற்கு முத‌லில் ந‌டு டிரேவில் இருப‌து நிமிட‌ம் வைத்து வைக்க‌வும்.

அடுத்து கீழ் டிரேவில் ப‌த்து நிமிட‌ம் வைத்து எடுக‌க்வும்.

சுவையான‌ இத்தாலிய‌ன் கிரில் சிக்க‌ன் ரெடி.

ச‌ப்பாத்தி, கோதுமை ரொட்டி, குபூஸ்,கார்லிக் சாஸ், ஹமூஸ் போன்றவைக‌ளுட‌ன் சாப்பிட‌லாம்.Tuesday, May 5, 2009

கர்பிணி பெண்களுக்கு
 சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி நிற்கும் வாக்கு ருசி படும் என்று தெரியாது, அதற்கு என் அனுபவ டிப்ஸ் உங்களுக்காக..

1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.


2. ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும்.
மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.

3. தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம்.

4. சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.

5. சாப்பிட கூடாத பழங்கள்
கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை.

6. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்
ஆப்பில், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச்


7. இறால், சிக்கன், பீஃப் போன்றவை கூட ரொம்ப சூடு ‍இதேல்லாம் கூட தவிர்ப்பது நல்லது.
சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.

8. புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.

9. நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம்

10.பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன் படுத்தவும்.

Sunday, May 3, 2009

மூக்கில் இரத்தம் வருகிறதா?

உடல் அதிகம் சூடானால் மூக்கிலிருந்து இரத்தம் வரும்.
ஒன்றும் பயப்பட தேவையில்லை.

1. தலையை அன்னாந்து படுக்க வைக்கவேண்டும்.

2. த‌லைக்கு ந‌ல்லெண்ணை தேய்த்து குளிக்க‌ வேண்டும்.

3. த‌யிர், மோர் போன்ற‌வைக‌ளை அதிக‌மாக‌ சேர்த்து கொள்ள‌லாம்.

மோர் குழ‌ம்பு, த‌யிர் சாத‌ம், ப‌ருப்பு கீரை க‌டைச‌ல், வெள்ளை க‌ஞ்சி போன்றவை சாப்பிட‌லாம்.

4. குளிர்சியான‌ காய் வ‌கைக‌ளை ப‌ருப்புட‌ன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட‌லாம்.
5.ரூஆப்ஷா மில்க் ஷேக் ரொம்ப‌ ந‌ல்ல‌து.

6. மாதுளை ஜூஸ் குடிக்க‌லாம்.

7.டீ காபியை த‌விர்க்க‌ வேண்டும்.

8.மோரில் (இஞ்சி , கொத்தும‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ஐஸ் க‌ட்டிக‌ள் சேர்த்து நுரை பொங்க‌ மிக்ஸியில் அடித்து குடிக்க‌லாம்.


9. இளநீர் குடிக்கலாம்.

10. கடற் பாசி வித விதமாக செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு மோஷன் பிராப்ளமா?

சில குழந்தைகளுக்கு வயிறு கல் மாதிரி ஆகி மோஷன் டைட்டாடும்.

சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.

வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.


ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ர்காம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.


கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.

அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.

Saturday, May 2, 2009

பிறந்த குழந்தைகளின் முகம் மற்றும் உடம்பில் உள்ள முடியை அகற்ற‌

சில பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியில் நிறைய முடிகள் இருக்கும் அதை அகற்ற.


1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.

2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.

கவனிக்க வேண்டியது:

1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.

2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?

1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.

2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.


3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.