Monday, June 29, 2009

கேரட் ஜூஸ் ‍ குழ‌ந்தைக‌ளுக்கு<
தேவையான‌ பொருட்க‌ள்
கேரட் = ஒன்று
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி (அ) தேன்


செய்முறை
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.குறிப்பு:குழந்தைக‌ளுக்கு இதை ஆறு மாத‌த்திலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுத்து ப‌ழ‌க்க‌வும்.

முத‌லில் வெரும் ஆறிய‌ வெண்ணீரில் செய்து கொடுக்க‌வும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.


பிற‌கு எந்த‌ பார்முலா மில்க் ஆர‌ம்பிக்கிறீர்க‌ளோ அதில் கொடுக்க‌வும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.
நல்ல ஒரு எனர்ஜி பானம்.

கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
க‌ர்பிணிபெண்க‌ள் தின‌ம் இதை குடிக்க‌லாம். குழ‌ந்தைக்கு ந‌ல்ல‌ க‌ல‌ர் கிடைக்கும்.
முக‌த்தில் அரைத்தும் தேய்க்க‌லாம். முக‌ம் ப‌ள‌ ப‌ள‌க்கும்.மனநோய் குணப்படுத்தும் சீரகம்


இது எனக்கு மெயிலில் வந்த தகவல்நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா?

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.இது மெயிலில் வந்த தகவல்


இது என் டிப்ஸ்

சீர் அகம் என்றால் உடம்பை சீர் படுத்துவது என்பது பொருள்.

உப்புமா, பொரியல், கூட்டு, வாயு கஞ்சி ரசம், கீரை எல்லாம் தாளிக்க ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்வது நல்லது.


Sunday, June 28, 2009

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

ஒரே டிப்ஸ் படித்து போரடிக்குதா வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்.
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

சவுதி – அல்கோபரிலிருந்து நண்பர் முஜிபுதீன் அனுப்பிய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

நன்றி முஜீபுதீன்

Thursday, June 25, 2009

முன்று வகையான ராகி (கேழ்வரகு)சமையல்கள்ராகி சேமியா புட்டுதேவையான பொருட்கள்

ராகி சேமியா = கால் கிலோ
தேங்காய் = அரை மூடி
நெய் = ஒரு மேசை கரண்டி
சர்க்கரை = 200 கிராம்

செய்முறை

1. ராகி சேமியாவை லேசான வெண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் வடிகட்டி விடவேண்டும்.
2.அதை இட்லி பானையில் ஈரதுணியை விரித்து அவித்து எடுக்கவும்.
3. அதில் நெய்யை உருக்கி ஊற்றி, சர்க்கரை சேர்த்து தேங்காயை துருவி சேர்த்து நன்கு கலக்க்கவும்.
சுவையான ராகி சேமியா புட்டு ரெடி.
குழந்தைகள் இனிப்பு நுடுல்ஸ் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.


ராகி சேமியா உப்புமா

தேவையான‌ பொருட்க‌ள்


ராகி சேமியா = 100 கிராம்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
கருவேப்பிலை = சிறிது
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
காஞ்ச‌ மிள‌காய் ‍= ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்க‌ர‌ண்டி


செய்முறை


1. வெண்ணீரை கொதிக்க‌ விட்டு அதில் ராகி சேமியாவை போட்டு நூடுல்ஸ் செய்வ‌து போல் இர‌ண்டு முன்று நிமிட‌த்திற்குள் வ‌டித்து விட‌வும்.
2 .பிற‌கு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை காய‌வைத்து க‌டுகு, காஞ்ச‌ மிள‌காய், உளுத்த‌ம் ப‌ருப்பு, பூண்டு, வெங்காய‌ம், க‌ருவேப்பிலை போட்டு தாளித்து ப‌ச்ச‌மிள‌காயை இர‌ண்டாக‌ கீறி போட‌வும்.

3. வ‌டித்து வைத்துள்ள‌ ராகியை சேர்த்து கிள‌றி எலுமிச்சை சாறு சேர்த்து இர‌க்க‌வும்.ட‌யாப‌ட்டீஸ் பேஷ‌ன்ட்டுக‌ளுக்கு ஏற்ற‌ உண‌வு இது.
இதை சிக்க‌ன் ம‌ட்ட‌ன் சேர்த்து காய்க‌ள் சேர்த்து செய்து சாப்பிட‌லாம்.
ராகி கஞ்சி (பானம்)

நான்கு மாத கை குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை குடிக்கும் சத்தான பானமாகும்.உடல் சேர்வை நீக்கும், பசி தாங்கும் பானமும் ஆகும்.

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் = இரண்டு மேசை கரண்டி
பால் = இரண்டு டம்ளர்
தண்ணீர் = முன்று டம்ளர்
சர்க்கரை = 10 தேக்கரண்டி
ஏலக்காய் = முன்று
சாப்ரான் (குங்கும பூ) = கால் தேக்கரண்டி
நெய் = கால் தேக்கரண்டி


முதலில் ராகி பவுடரில் பாதி அளவு தண்ணீர் விட்டு கலக்கி டீ வடிகட்டி கொண்டு வடிக்கட்டவும்.
மீண்டும் அந்த வடித்த கப்பியில் மீதி தண்ணீரை ஊற்றி வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும்.
ராகி வெந்து கஞ்சி பதத்திற்கு வரும் போது பால் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அதில் சாப்ரானை தூவி நெய் உருக்கி ஊற்றி இரக்கவும்.

குறிப்பு

கை குழதைகளுக்கு பால் சேர்க்காமல் மெல்லிய வெள்ளை மல் துணியில் ஆறிய வெண்ணீரில் கலக்கி வடித்து பிறகு காய்ச்சி கொடுக்கவும்.
ஆறு மாதத்திற்கு பிறகு என்ன பால் பார்முலா மில்க் சேர்ந்து காய்ச்சி கொடுக்கலாம்.
எட்டு மாதத்திலிருந்து ராகியுடன் பொட்டுகடலை,கோதுமை,அரிசி, ஜவ்வரிசி, பாதம் எல்லாம் சேர்த்து மிஷினில் கொடுத்து திரித்து காய்ச்சி கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தெம்பையும் புஷ்டியையும் கொடுக்கும்.
முழு ஏலக்காயிக்கு பதில் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஒரிரு இதழ் சாப்ரான் போட்டு காய்ச்சி விட்டு பிறகு அதை எடுத்து விட்டு கொடுக்கவும்.
சில குழந்தைகளுக்கு வாயில் தட்டினால் வாமிட் வரும்.
வயதானவர்கள் நெய் சேர்க்காமல் கொஞ்சமா சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.இதை கூழ் போல கட்டியாக காய்ச்சியும் ஸ்பூனால் ஊட்டி விடலாம்.
ரொம்ப மாவை அள்ளி போட்டு சரியாக வேக வில்லை என்றால் பிள்ளைகளுக்கு பிடிக்காது.காலையிலிருது மதியத்துக்கும் கொடுக்கனும், மாலை இரவு வேண்டாம்.
(வயலில் ஏர் உழபவன் ஒரு கோப்பை கேப்பங்கஞ்சியை (ராகியை) குடித்து விட்டு தான் ஏர் உழுகிறான்). உடலுக்கு அவ்வளவு தெம்பை கொடுக்கும்.
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது சாப்பிட வில்லையே என்று கவலை பட தேவையில்லை, இது ஒரு டம்ளர் கொடுத்தால் போதும் நிம்மதியா இருக்கலாம்.


Wednesday, June 24, 2009

துன்பங்களை நீக்கும் ஏழு ஆயத்துகள்.

பிஸ்மில்லாஹிரஹ்மான்னிர்ரஹீம்.

1. குல் லன் யுஸிஃபனா இல்லா மா கதபல்லாஹு லன ஹுவ மௌலானா வ அலல்லாஹி ஃபல்யதவக்கலில் முமினூன்.

1 . அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ் எங்களுக்கு எதனை விதியாக்கினானோ அதனைத் தவிர வேறொன்றும் எங்களைப் பற்றி விட மாடா. அவன் எங்களின் எஜமானன். அந்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உடையவர்கள் தம் காரியங்களை ஒப்படைத்து விடட்டும். (9.51)

2.வ இன் யம்ஸஸ்கல்லாஹு பிலுர்ரின் ஃபலா காஸ்ஷிபஃப லகு இல்லாஹுவ யுரித்க பிகைரின் ராஆத்த லிஃபல்லிஹி யுஸிபுன் பிஹி மன் யஷாஉ மின் இபாதிஹி வஹுவல் கஃபுருர்ரஹீம்.

2. அருள்மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாஹ்வின் பெயரால் நபியே! அல்லாஹ் உமக்கு ஓர் இடரைப் பற்றச் செய்வானாயின் அதனை அவனைத் தவிர வேறு எவராலும் அகற்றிவிட முடியாது. இன்னும் உமக்கு ஒரு நன்மைய அவன் நாடிவிடுவாயின் அந்த நன்மையை எவரும் தடுத்துவிடமுடியாது. இன்னும் அவன் தன்னுடைய அடியார்களிடமிருந்து தான் நாடியவருக்கு அந்த நன்மையைக் கிடைக்கும்படிச் செய்வான். மேலும் அவன் மிக்க மன்னிப்பவனும், மிக்க அன்புள்லவனுமாயிருக்கிறான். (10:37)

3..அருள் மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாவின் பெயரால் இப்பூமியிலுள்ள எந்தப் பிராணிக்கும் அதற்குரிய உணவு அல்லாஹ்விடத்தே தவிர வேறெருவரிடத்திலும் இல்லை. அவன் தங்குமிடத்தையும் அது போய்ச் சேருமிடத்தையும் நன்கறிவான். அனைத்துக் காரியங்களும் பகிங்கரமான பட்டோலையில் பதிவு செய்ய பட்டுள்ளன.(11:6)

4. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் திண்ணமாக என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்விடத்தே என்னுடைய காரியங்கள் அனைத்தையும் நான் ஒப்படைத்துவிட்டேன். இத்தரணியிலுள்ள ஓவ்வொரு பிராணியினுடைய முன் நெற்றி உரோமமும் அல்லஹ்வினுடைய பிடியில் மட்டும் உள்ளது. திண்ணமாக என்னுடைய இரட்சகன் நேரிய வழியின் மீது இருக்கிறான். (11.56)

5.அருள் மிக்கவன் அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் எந்தப் பிராணியும் தனக்குள்ள அப்பிராணிகளுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான் அவன் மிக்க செவியுறுபவனும் மிக்க அறிபவனுமாயிருக்கிறான். (29:60)

6. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால்.அல்லாஹ் மனிதர்களுக்கு ஓர் அருளை வழங்கிவிடுவானாயின் அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை. அப்படி ஓர் அருளைத் தடுத்து நிறுத்தி விடுவானாயின் அதன் பிறகு அதனைக் கொண்டு தருபவர் எவருமில்லை. அவன் மிக்க மிகைத்தவனும், மிக்க ஞானமுள்ளவனுமாயிருக்கிறான்.

7. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன்! அல்லாஹ்வின் பெயரால்.வானங்கள், பூமியைப் படைத்தவன் யார்? என்று நபியே! நீர் அவர்களிடத்தில் கேட்பீராயின் திண்ணமாக அவர்கள் 'அல்லாஹ்' என்றே பதிலுரைப்பார்கள். இன்னும் அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குகின்ற தெய்வங்கள், எனக்கு ஓர் இடரை அல்லாஹ் நாடிவிட்டானாயின் அவ்விடரை அவைகள் நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடி விட்டானாயின் அவ்வருளை அவைகள் தடுத்து விட முடியுமா? என்ன கூறுகின்றீர்கள்? எனறு நபியே நீர் கேட்பீராக. இன்னும் நபியே! அவர்களுக்கு நீர் கூறுவீராக! எனக்கு அல்லாஹ் போதும். அல்லாஹ்விடம் தம் காரியத்தை ஒப்படைப்பவர்கள் அவனிடமே ஒப்படைத்து விடுவார்கள். ( 39:38)

Tuesday, June 23, 2009

இறைவனிடம் மட்டும் இறைஞ்சுவோம்.

பெற்ற தாயினும் தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்; தாய்ப் பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பை விட ஆயிரம் மடங்கு அன்பைநம்மீது பொழிபவன் அல்லாஹ்.1. "இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்தியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"

2. இறைவா எனக்கு ஸாலிகான நற்குணமுடைய மகனைத் தருவாயாக"

3. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"

4. "எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நீராகரிக்கும் மக்களிடமிருந்து உன்னாருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!"

5. "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவயாக!"

6. "எங்க‌ள் இறைவா! எங்க‌ளுக்கு இவ்வுல‌கில் ந‌ற்பாக்கிய‌ங்க‌லைத் த‌ருவாயாக‌! ம‌றுமையிலும் ந‌ற்பாக்கிய‌ங்க‌ளைத் த‌ருவாயாக‌! எங்க‌ளை ந‌ர‌க‌ வேத‌னையிலிருந்தும் காத்த‌ருள்வாயாக‌!"

7. "எங்க‌ள் இறைவா! நீ எங்க‌ளுக்கு நேர்வ‌ழியைக் காட்டிய‌ பின் எங்க‌ள் இத‌ய‌ங்க‌ளை (அதிலிருந்து) த‌வ‌றுமாறு செய்து விடாதிருப்பாயாக‌! மேலும் நீ உன் புற‌த்திலிருந்து எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ருளை அளிப்பாயாக‌! நிச்ச‌ய‌மாக‌ நீயே பெருங்கொடையாள‌ன்"

8. "எங்க‌ள் இறைவா! நாங்க‌ள் (இவ்வேத‌த்தின் மீது) ந‌ம்பிக்கைக் கொண்டோம். என‌வே (இவ்வேத‌ம் ச‌த்திய‌மான‌தென்று) சாட்சி கூறுவோருட‌ன் எங்க‌ளையும் நீ ப‌திவு செய்து கொள்வாயாக‌"

Sunday, June 21, 2009

கேன்சர் அபாயம்

இப்போது மனிதர்களை படுத்தும் ஒரு வியாதிகளில் கேன்சருக்கு பெரும் பங்கு இருக்கு.
ஏன் வருகிறது எனக்கு தெரிந்த சில டிப்ஸ்கள்.


1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும் உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

2. அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன் படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.

3. அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால் கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான் என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.

4. அடுத்து புது துணி வேவ்வேறு நாட்டில் இருந்து வருகிறது, அதில் பல வகை கை பட்டு பல வியாதியை தரும் கிருமிகள் இருக்கும். இனி ஒரு முறை வீட்டில் அலசி விட்டு போட்டு கொள்ளுங்கள்.

5 . பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும். உள்ளாடைகளை வெண்ணீரில் அலசுங்கள் கிருமிகள் அழியும்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கு.

6. ஆண்கள் பான் பீடா என்னேரம் போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் க‌ண்ட‌து அந்த‌ ந‌ப‌ர் இப்போது உயிரோடு இல்லை.

7. எந்த‌ வியாதியும் த‌லைவ‌லியோ ம‌ற்ற‌வ‌லியோ தொட‌ர்ந்து முன்று மாத‌ம் ஆறு மாத‌ம் என்று விடாம‌ல் வ‌ந்தால் உட‌னே முறையாக‌ டிரீட்மெண்ட் எடுக்க‌வும்.

8. ஒரு 45 வ‌ய‌து பெண்ணிற்கு வாயில் புண்ணு இர‌ண்டு வ‌ருட‌மா இருந்திருக்கு அது வ‌லிக்க‌வும் இல்லையாம் க‌டைசியில் போய் காண்பிக்க‌ போன‌ அது கேன்ச‌ர் , லாஸ்ட் ஸ்டேஜ் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது என்று சொல்லிவிட்டார்க‌ள், இன்னும் அதிக‌மாகி பிற‌கு சாப்பிட‌ முழுங்க‌ முடியாம‌ல் இர‌ண்டு மாதமாக‌ அவ‌தி ப‌ட்டு அவ‌ர் இறைய‌டி சேர்ந்துவிட்டார்.

9. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர் 1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது.

10. எல்லோரும் 35 , 40 வ‌ய‌தை க‌ட‌க்கும் போது ரெகுல‌ராக‌ ஒரு நோய் இருக்கோ இல்லையோ ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜென‌ர‌ல் செக்க‌ப் செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

Saturday, June 20, 2009

கொத்து மல்லி கருவேப்பிலை ரசம்


//உணவு உண்ட பின் செரிமானத்துக்கு ரசம் ஒரு அருமையான உணவு, இதில் ரசத்தில் தாளிக்கும் கருவேப்பிலை மற்றும் கடைசியாக மேலே தூவும் கொத்து மல்லி புதினா கொண்டு தயாரிக்கும் விதம்.
கொத்தும‌ல்லி கீரை ந‌ம‌து உட‌லில் ர‌த்த‌தை சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து, கர்பிணி பெண்களின் வாய்க்கு ருசி ப‌டும், க‌ருவேப்பிலையை (முடி வ‌ள‌ர , முடி கொட்டும்பிரச்சனைக்கு) தேங்காய் எண்ணை (அ) ந‌ல்லெண்ணையில் காய‌வைத்து பொடித்து த‌லைக்கு தேய்பார்க‌ள், அதை உண‌வாக‌ உட்கொள்வ‌த‌ன் கூடுதல் பலன் .கிடைக்கும்.
ஜுர‌ம் வ‌ந்து வாய் க‌ச‌ப்பாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செய்து கொடுத்தால் வாய்க்கு ருசி ப‌டும். க‌ல்யாண‌ விட்டில் பிரியாணி சாப்பிட்டு இரவு வெரும் ர‌ச‌ம் சாதம், மாசி தொட்டு கூட சாப்பிட‌லாம். //


தேவையான‌ பொருட்க‌ள்
****************************
புளி = ஒரு சிறிய‌ ஒன்ன‌றை எலுமிச்சை அளவு
உப்பு = ருசிக்கு
ரசப்பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

அரைத்து கொள்ள‌
***************** *
ந‌ன்கு ப‌ழுத்த‌ த‌க்காளி = ஒன்று
கொத்தும‌ல்லி = ஒரு கைப்பிடி
க‌ருவேப்பிலை = ஒரு கைப்பிடி
மிள‌கு = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
பூண்டு = நான்கு ப‌ல்
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்தயம் = 5 எண்ணிக்கை
பெருங்காய‌ம் = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = 5 இதழ்
கொத்து ம‌ல்லி சிறிது


செய்முறை


1.புளியை க‌ழுவி சுடுத‌ண்ணீரில் க‌ரைத்து முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வைக்க‌வும்.


2. கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலையை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.


3. இப்போது அரைக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை அரைத்து கொண்டு அத்துட‌ன் த‌க்காளி, பூண்டு, கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை சேர்த்து அரைத்து (அரைத்த‌து + மிக்சியில் இருந்து வ‌ழித்தெடுத்த‌து) இர‌ண்டு ட‌ம்ள‌ர் அள‌வு.


4. இப்போது க‌ரைத்து வைத்திருக்கும் புளி த‌ண்ணீருட‌ன் அரைத்த‌ க‌ல‌வை, ர‌ச‌ப்பொடி, உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.


5. இப்போது தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை க‌ரிகாம‌ல் தாளித்து கொதித்து வைத்திருக்கும் க‌ல‌வையில் ஊற்றி கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.


6. க‌ம‌ க‌ம‌ன்னு கொதிக்கும் போது உங்க‌ள் ர‌ச‌ம் வாசனை எட்டு வீட்டு மூக்கை துளைக்கும்.


குறிப்பு
ர‌சத்தை ப‌ல‌வ‌கையாக‌‌ வைக்க‌லாம். த‌க்காளி ர‌ச‌ம், அரைத்து விட்ட‌ ர‌ச‌ம்,தேங்காய் பால் ர‌ச‌ம், எலுமிச்சை ர‌ச‌ம், அன்னாச்சி ப‌ழ‌ ர‌சம்.
வாங்கும் ஊட்டி புளிப்பா போச்சா க‌வ‌லை வேண்டாம் அதிலும் ர‌ச‌ம் த‌யாரிக்க‌லாம்.இதில் ஒரு சிறிய‌ பிட்டு வெல்ல‌ம் போட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இது சுமார் ஆறு பேர் சாப்பிட‌லாம்

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலுருந்து கொடுக்கும் உணவுகள்.1.ஆப்பில் கேரட்
ஆப்பில் கேரட் இரண்டையும் நன்கு வேகவைத்து கட்டி தட்டாமல் மசித்து கொடுக்கவும்.

2.உருளை கிழங்கு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து தோலெடுத்து அதில் ஒரு சிட்டிக்கை அளவு
மிளகுதூள் சேர்த்து ஊட்டி விடவும்.

3.குழந்தைகளுக்கு நேந்திரன் பழத்தை வேகவைத்து மசித்தும் கொடுக்கலாம்.

4. சூடான சாதத்தை நன்கு மசித்து அதில் கீரை வேக வைத்த தண்ணீ, வேக வைத்த பருப்பு போன்றவை சேர்ந்து பிசைந்து ஒரு சொட்டு நெய் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
5.எப்போதும் குழந்தைகளுக்கு சிறிது பால் சாதம் பழக்க படுத்துவது நல்லது.

6. முட்டை புட்டிங் பால் ச‌ர்க்க‌ரை , முட்டை சேர்த்து க‌ல‌க்கி சின்ன‌ டிப‌ன் பாக்சில் வைத்து குக்க‌ரில் இர‌ண்டு மூன்று விசில் விட்டு வேக‌ வைத்தும் ஊட்டி விட‌லாம்.
மெது மெதுவாக‌ ஒவ்வொன்றாக‌ ஆர‌ம்பித்து அதை ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ள‌னும்.

7. கிச்சிடி
அரிசி, பாசி ப‌ருப்பு , கேர‌ட்,மிள‌கு தூள், பூண்டு, நெய் சேர்த்து ந‌ன்கு குக்க‌ரில் ம‌சிய‌ வேக‌வைத்து கொடுக்க‌லாம்.இதில் சிறிய‌ துண்டு சிக்க‌னும் சேர்த்து வேக‌வைக்க‌லாம்.

8. குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்தை போட்டு அடைக்காம‌ல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுப்ப‌து ந‌ல்ல‌து.
ஒரு இட‌மா உட்கார‌ வைத்து உண‌வு கொடுத்து பழ‌க்குங்க‌ள். க‌ண்டிப்பாக‌ க‌ழுத்தில் பிப் (அ) ஒரு காட்ட‌ன் துணியை க‌ட்டி கொள்ள‌வும்.

Tuesday, June 16, 2009

கர்பிணி பெண்களுக்கு 2

கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு மற்றும் இரத்ததின் அளவு கம்மியாகி
விட்டால் என்ன என்ன உணவு சாப்பிட்டால்

1. இரவு இரண்டு வேலையும் அத்தி பழம் இரண்டு பேரிட்சை இரண்டும், காய்ந்த‌ திராட்சை ஸ்வீட்டுக்கு ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து இது முன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும்.இது முன்றையும் சேர்த்து ஹ‌ல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.

2.புரோகோலி சூப், பொரிய‌ல்,புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம்.இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.

3.ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.

4.ம‌ண்ணீர‌ல் சுட்டு அல்ல‌து பொரித்தோ சாப்பிட‌லாம். இது வார‌ம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அள‌வு கூடும்.

5.சால‌ட் நிறைய‌ செய்து சாப்பிட‌லாம்.

6.கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலை அரைத்து ,துவையலாக‌ (அ) ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.

7.ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.

8. கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு,இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.

9.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.

10. இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.இல்லை என்றால் நெஞ்செரிச்சல், கேஸ்பிராப்ளம் இரண்டும் சேர்ந்து கொண்டு இரவு தூக்கமின்மையாக இருக்கும்.


ஏன் உட‌ல் எடை குறைகிற‌து என்றால் ம‌ச‌க்கை கார‌ண‌மாக‌ இர‌வில் லைட்டாக‌ ச‌ப்பாத்தி சாப்பிட்டு வ‌ருவ‌தால் நாள‌ட‌டைவில் பிள்ளை பெறும் நேர‌த்தில் எடை குறைந்து விடுகிற‌து.

ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மைய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.

அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தான்  என்பதை மனதில் கொண்டு நேரம் தவராமல் சாப்பிடவேண்டும்.

இரண்டு மாததிலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது, நிறைமாதத்தில் ஏற்படும் பிரசவ வலியை தாங்கிக்க கூடிய சக்தி கிடைக்கும்

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள்

1. "யாஅல்லாஹ் இயலாமை,சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், மண்ணறை வேதனை, வாழ்க்கையில் ஏற்படும் சோதனை ஆகியவவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." என்று நபி (ஸல்) அவர்கள் அல்லஹ்விடம் இறைஞ்சினார்கள்".

2. "யா அல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும், கற்பொழுக்கத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் உன்னிடம் கேட்கிறேன்."


3. யா அல்லாஹ்! நான் உன் அருளையே ஆதரவு வைத்துள்ளேன்; (அதனை) கண் மூடித் திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!மேலும் என் அனைத்துக் காரியங்களையும் சீர்படுத்தி வைப்பாயாக! வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு எவருமிலர்!"

4. "யா அல்லாஹ் உள்ள‌ங்க‌ளைத் திருப்ப‌க் கூடிய‌வ‌னே! எங்க‌ள் உள்ள‌ங்க‌ளை உன் வ‌ழிபாட்டின் ப‌க்க‌ம் திருப்புவாயாக‌!"

5."உள்ள‌ங்க‌ளைப் புர‌ட்டுப‌வ‌னே! என் உள்ள‌த்தை உன் மார்க்க‌த்தில் நிலைத்து நிற்க‌ச் செய்வாயாக‌!"

6. "யா அல்லாஹ்! இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் உன்னிட‌ம் ந‌ல்ல‌தைக் கேட்கிறேன்"

7. "யா அல்லாஹ் என்னுடைய‌ செவியின் தீங்கை விட்டும்,பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ள‌த்தின் தீங்கை விட்டும், எண்ண‌த்தின் தீங்கை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன்."

8. "யா அல்லாஹ்! வெண்குஷ்ட‌ம்,பைத்திய‌ம்,உட‌லுருப்புக‌ள் அழுகிவிழும் நோயை, ம‌ற்றும் பிற‌தீய‌ நோய்க‌ள் ஆகிய‌ அனைத்திலிருந்தும் நிச்ச‌யமாக‌ உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.

9."யா அல்லாஹ்! நிச்ச‌ய‌மாக‌ நீயே ம‌ன்னிப்ப‌வ‌ன்; க‌ண்ணிய‌த்துக்குரிய‌வ‌ன்;ம‌ன்னிப்பை விரும்புகின்ற‌வ‌ன். என‌வே என்னை ம‌ன்னித்த‌ருள்வாயாக‌!"

10. "யா அல்லாஹ்! உன்னுடைய‌ த‌யாள‌த் த‌ன்மையிலிருந்தும் உன்னுடைய‌ அருளிலிருந்தும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் கேட்கிறேன். ஏனெனில் இவ‌ற்றை உன்னைத் த‌விர‌ வேறு எவ‌ரும் சொந்த‌ம் கொள்ள‌ முடியாது.

11."யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."


12."இறைவா! வ‌றுமை, ஏழ்மை,இழிவு ஆகிய‌வ‌ற்றை விட்டும், நான் பிற‌ருக்கு அநீத‌ம் செய்வ‌தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அண்டை வீட்டார் திசை மாற‌ச் செய்து விடுவார்க‌ள்."

13.யா அல்லாஹ்! (உன‌க்கு) அஞ்சாத‌ உள்ள‌ம், ஏற்று கொள்ள‌ப‌டாத பிராத்த‌னை, நிறைவ‌டையாத‌ ம‌ன‌ம், ப‌ய‌ன‌ளிக்காத‌ க‌ல்வி ஆகிய‌ இந்த‌ நான்கு த‌ன்மைக‌ளை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத்தேடுகீறேன்."

14. "யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனப்பதியை கேட்கிறேன். மேலும் எரி நரகை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."


15. "இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக.!"

16. " யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதை விட்டும் நிச்சயமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்."

17. "யா அல்லாஹ் பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும், ஏற்றுக் கொள்ளப்படும் நல்லறங்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்."

18."யா அல்லாஹ்! நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை எனக்குப் போதுமானதாக்கி, அதில் எனக்கு அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் அருட்கொடைகளுக்குப் பகரமாக அதை விட சிறந்தவற்றை எனக்கு வழங்குவாயாக!"

19."யா அல்லாஹ்! என்னை (ம‌றுமையில்) மிக‌வும் எளிதாக‌ விசார‌ணை செய்வாயாக‌!
எல்லாம் வ‌ல்ல‌ ர‌ஹ்மான் நாம் கேட்கும் பிராத்த‌னைக‌ளை ஏற்று ந‌ம் அனைவ‌ர் மீதும் த‌ன் பேர‌ருளைச் சொரிவான‌க‌! ஆமீன்! ஆமீன்! யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.

(இந்த‌ தூஆ அல் ஜ‌ன்ன‌த் ப‌திப்பு 2002 வில் என‌க்கு கிடைத்த‌து, ப‌த்திர‌ ப‌டுத்தி வைத்தது , அவை அனைத்தையும் எடுத்து கோர்வையாக இங்கு போட்டு உள்ளேன்.)

Sunday, June 14, 2009

திரீ இன் ஒன்

பச்சரிசி = இரண்டரை( 500 கிராம்)
புழுங்கல் அரிசி = ஒன்னறை (300 கிராம்)
அவல் = கால் டம்ளர்
வெந்தயம் = ஒரு தேக்கரண்டி
உளுந்து = ஒரு டம்ளர் குவியலாக‌ (220 கிராம்)

1. இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் அந்த வாரம் முழுவதும் ஒரு பெரிய டென்ஷன் தீர்ந்த மாதிரி.

2. இரவு ஊறவைத்து காலை அரைப்பது சிறந்து அல்லது காலை ஊறவைத்து மாலை அரைக்கலாம்.

3. அரிசி,வெந்தயம், அவலை ஒன்றாகவும், உளுந்தை தனியாகவும் ஊறவைத்து முதலில் அரிசியை கிரெயிண்டரில் ஆட்டவும், பிறகு உளுந்தை ஆட்டவும் அப்பதான் வழித்தெடுப்பது சுலபம்.4. ஐஸ்வாட்டர் ஊற்றி அரைத்தால் மோட்டாரும் கெட்டு போகாது, மாவும் நன்கு காணும்.
மொத்த‌மா அரைத்து அதில் உப்பு போட‌ வேண்டாம். தேவைக்கு அப்ப‌ அப்ப‌ க‌ரைட்து ஊற்ற‌வும்.

5. இட்லிக்கு ச‌ற்று கெட்டியாக‌ அள்ளி ஊற்றுவ‌து போல் க‌ரைக்க‌வும்.தேசைக்கு சிறிது த‌ள‌ர்த்தியாக‌ க‌ரைக்க‌னும்.

6. ஆப்ப‌த்திற்கு கொஞ்ச‌ம் த‌ண்ணி மாதிரி க‌ரைக்க‌னும் அதுவும் தேங்காய் பால் சேர்த்து க‌ரைக்க‌னும்.

7. அப்ப‌டியும் மீதி ஆகும் மாவை கொண்டு ஊத்தாப்பாம், கோதுமை இனிப்பு அப்ப‌ம் போன்ற‌வை த‌யாரிக்க‌லாம்.

8. குளிர் கால‌த்தில் மாவு புளிக்காது அத‌ற்கு மாவில் உப்பு போட்டு கையால் ந‌ல்ல‌ பிசைந்து க‌ல‌க்கி வைக்க‌லாம்.

9. ச‌மைக்கும் அடுப்பிற்கு அருகே வைக்க‌லாம்.
10 . அவ‌ல் இல்லை என்றால் சாத‌மும் போட்டு அரைக்க‌லாம், சிறிது ஜ‌வ்வ‌ரிசி சேர்த்தாலும் ந‌ல்ல‌ தோசை பஞ்சி போல் வ‌ரும்

மனனம் செய்ய முத்தான துஆக்கள்

1. நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி//

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.

2.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!

3.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.

4.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!

5.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

6.உண‌வு உண்ட‌ பின் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அத் அம‌னா வ‌ஸ‌கானா வ‌ஜ அல‌னா மின‌ல் முஸ்லிமீன்.

ந‌ம‌க்கு உண்ண‌ உண‌வ‌ளித்து,ப‌ருக‌த் த‌ண்ணீரும் த‌ந்து, ந‌ம்மை முஸ்லீம்க‌ளில் ஆக்கி வைத்த‌ அல்லாஹ்வுக்கே எல்லாப் புக‌ழும்!

7.புத்தாடை அணியும் போது

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

8.கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!

9.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை

10 பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!

11. ப‌ள்ளிக்குள் நுழையும் போது

அல்லாஹும்ம‌ஃப்த‌ஹ் லீ அப்வாப‌ ர‌ஹ்ம‌த்திக்க‌

அல்லாஹ்! என‌க்கு உன‌து அருளின் வாயில்க‌ளைத் திற‌ந்து விடுவாயாக!

12.முஸாஃபாஹா செய்யும் போது ஓதும் தூஆ

ய‌ஃக்ஃபிருல்லாஹூ லனா வலகும்
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மன்னிப்பை அருள்வானாக!

13 .பள்ளியை விட்டு வெளியே வரும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக‌
அல்லாஹ்! நான் உன்னிடம் உனது கிருபையைக் கேட்கிறேன்.

14.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும்

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

15. தூங்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம பிஸ்மிக அமூ(த்)து வ அஹ்யா
அல்லாஹ்! நான் உன் பெயரைக் கொண்டே மரணிக்கவும், உயிர் பெறவும் செய்கிறேன்.

16 . ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

Friday, June 12, 2009

. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இது எனக்கு மெயிலில் வந்தது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் பின்வரும் கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு அவற்றுக்கு விடைகாண முயல்வது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ஏதவாக அமையும். இவ்வாறு தன்னைத் தானே விசாரிப்பது இஸ்லாமியப் பரிபாஷையில் முஹாஸபதுன் நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஹழ்ரத் உமர்(ரழி)அவர்கள், நீங்கள் விசாரிக்கப்படமுன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள்கணிப்பிட்டுபார்க்கப்பட முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உமர்(ரழி) அவர்கள்தன்னைத்தானே விசாரித்துக்கொள்வதுடன் தனக்குத்தானே தண்டனையையும்விதித்துக் கொண்டுள்ளார்கள். முஹாஸாதுன் நப்ஸ், இஸ்லாத்தில் உள்ளவிடயமொன்றாகும். இந்த வகையில் எம்மை நாமே திருத்திக் கொள்ள
பின்வரும் கேள்விகளை எம்மிடம் நாமே கேட்டுக் கொள்ள முயற்சிப்போமாக!

சுவனத்தை ஆவல் கொண்டுள்ள எமக்கு இது ஒரு நல்ல வழிகாட்டலாக அமையும்.
கிழமைக்கு ஒரு முறை அல்லது தினமும்

1. பள்ளியில் இந்தக் கிழமை முழுவதும் சுபஹ் தொழுகையை ஜமாஅத்தோடுநிறைவேற்றினாயா? உரிய நேரத்தில் தொழுதாயா?

2. அனைத்துத் தொழுகையையும் பள்ளியில் ஜமாஅத்தோடு நிறைவேற்றினாயா? உரிய நேரத்தில் தொழுதாயா?

3. இந்தக் கிழமையில் குர்ஆன் ஓதி வந்தாயா? மனனம் செய்தாயா?

4. ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் திக்ரு, அவ்ராது போன்றவற்றை ஓதி வந்தாயா?

5. பயபக்தியுடன் தொழுதாயா? குர்ஆனை விளங்கி சிந்தித்து ஓதினாயா?

6. மவ்த்து, மறுமைபற்றி சிந்தித்தாயா? கண்ணீர் விட்டு அழுதாயா?

7. பர்ளுத்தொழுகைகளுக்கு முன்பின் உள்ள சுன்னத்துத் தொழுகைகளைத் தொழுதாயா?

8. மறுமையின் கஷ்டங்கள், பயங்கரம் பற்றி சிந்தித்தாயா?

9. நபியவர்கள் “யார் சுவர்க்கத்தை மும்முறை வேண்டுகிறாரோ சுவர்க்கம்அவர்ரைத் தன்னில் நுழைத்து விடுமாறு வேண்டுகிறது. யார் நரக விடுதலையை வேண்டுகிறாரோ நரகம் அவரை தன்னில் நுழைக்காதிருக்கும் படி வேண்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கமைய உன் பிரார்த்தனைஅமைந்திருந்ததா?

10. நபியவர்களின் ஹதீஸ்களை ஒவ்வொரு நாளும் வாசித்தாயா? விளங்கிக் கொண்டாயா?

11. உனது நண்பர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்?

12. தீய நண்பர்களை விட்டும் ஒதுங்க நினைத்தாயா?

13. அதிக சிரிப்பையும், கேளிக்கைகளையும் தவிர்க்க நினைத்தாயா?

14. இக்கிழமையில் அல்லாஹ்வை நினைத்து பயந்து அழுதாயா?

15. காலை, மாலை திக்ருகளை ஓதி வந்தாயா?

16. பாவமன்னிப்பு கேட்டாயா? இஸ்திஃபார் செய்தாயா?

17. தூய்மையான உள்ளத்துடன் இறைபாதையில் மரணத்தைச் சந்திக்கஅல்லாஹ்விடம் பிராத்தித்தாயா?

18. அல்லாஹ்வின் மார்க்கத்தில் உனது உள்ளம் நிலைத்திருக்க அவனை வேண்டினாயா?

19. துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிக்கின்ற நேரங்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தாயா?

20. உனக்காக கோபப்படுவதை விட்டு அல்லாஹ்வுக்காகவே கோபப்பட்டாயா?கோபத்தை பொறுத்தவரை உனது நிலை எவ்வாறு காணப்பட்டது?

21. பொறாமை, கர்வம் போன்றன உனது உள்ளத்தில் தோன்றாதவாறு உள்ளத்தைபார்த்துக்கொண்டாயா?

22. பொறாமை, முகஸ்துதி, குரோதம் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும்,பொய்யுரைத்தல், கோள், வீண்வாதம், வீண்கேளிக்கைகள் போன்ற தீயஉணர்வுகளிலிருந்தும் உன்னை, உனது உள்ளத்தை பார்த்துக் கொண்டாயா?

23. நீ உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அருந்தும் பானங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் அல்லாஹ்வை பயந்து கொண்டாயா?

24. தஹஜ்ஜத் தொழுகையில் உனது நிலை எவ்வாறு இக்கிழமையில் இருந்தது.

25. உன் தாய், தந்தையருக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவர்களுக்காகப் பிராத்தித்தாயா? நண்பரகள், உறவினர்களுக்காகவும்பிராத்தனை செய்தாயா?

26. அல்லாஹ்வுடைய பாதையில் உனது பணத்தில் இருந்து செலவளித்தாயா?எவ்வளவு செலவளித்தாய்?

27. நன்மைகள் உன்னை அடைந்த போது அல்லாவுக்கு நன்றி செலுத்தினாயா?

28. உன்னைத் துன்பங்கள் அணுகிய போது பொறுமையுடன் ' இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன் ' என்று கூறினாயா?

29. உன்னுடன் பழகுபவர்களுடன், உன் பக்கத்தே வாழ்வோருடனும் நன்றாக நடந்து கொண்டாயா?

30. உன்னை விட வயது முதிந்தவர்களைக் கண்ணியப்படுத்தி இளம் வயதினர்களுடன் அன்பாக நடந்து கொண்டாயா?

31. இந்தக் கிழமையில் இஸ்லாமிய நூற்களை வாசிப்பதில் எவ்வளவு தூரம் அக்கரை செலுத்தினாய்? என்னென்ன நூற்களை வாசித்தாய்?

32. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டாய்?எவ்வளவு தூரம் தூய்மையாக நடந்து கொண்டாய்?

33. உனது பொழுது போக்கு எவ்வாறு இருந்தது? அல்லாஹ் திருப்திப்படும்விதத்தில் அவை அமைந்திருந்ததா?

34. பிற சமய சகோதரர்களுடன் உமது தொடர்பு எவ்வாறு இருந்தது? அவர்ககள் உனது நடவடிக்கைகளைத் திருப்தியோடு ஏற்றுக் கொண்டனரா?

35. உனது வீட்டு அங்கத்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்? பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரர்களுடன் நட்புடன் நடந்து கொண்டாயா?

36. எத்தனை முறை இஸ்திஹ்பார் செய்தாய்? உனது நாவு எத்தனை தடவைஸூப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர் என்று உரைத்தது?

37. இறைவனைப் புகழும்போது அவனது படைப்புக்களைப் பார்க்கும்போதும் உனது மனநிலை எவ்வாறிருந்தது? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாயா?

38. உன்னை விட அறிவில், அழகில் உடலமைப்பில் உயர்ந்தவர்களை,தாழ்ந்தவர்களைக் கண்ட போது அல்லாஹ் உனக்கருளிய அருளையிட்டு அவனுக்குநீ நன்றி செலுத்தினாயா?

39. நீ செய்த தீய செயல்களை நினைத்து வருந்தி மீண்டும் அதனை செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு அல்லாஹ்விடம் தௌபாச் செய்தாயா?

40. உரிய நேரத்தில் உரிய கடமைகளைச் செய்தாயா? வாக்களித்தபடி நடந்துகொண்டாயா? உரிய நேரத்தில் சமூகம் அளிக்கத்தவறி பிறருக்கு அசௌகரியம்ஏற்படுத்தினாயா?


இது போன்ற கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு விசாரித்துக் கொள்வதுடன்தன்னில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும். அதனைவழக்கமாக செய்து வரும் பொழுது குறைகள் நீங்க ஏதுவாகும். அவ்வாறேஅல்லாஹ்வின் திருப்திக்குப் பொருத்தமானவர்களாகவும் நாம் அமையலாம். வல்லஅல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியையும் நஸீபாக்குவானாக! மனிதனின்வெற்றி அல்லாஹ்வின் திருப்தியிலே தங்கியிருக்கிறது. எமது அமல்கள்அல்லாஹ்சுக்காக என்ற தூய எண்ணத்தில் அமைய அல்லாஹ்வையே நாம்பிராத்திப்பேமாக!

மரணம் நிச்சயம் இடம் பெறுகின்ற ஒன்று அது எங்கு எப்போது எவ்வாறுஇடம்பெறும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எந்த நேரத்திலும் தயாராக இருக்கவே வேண்டும் எம்மை நாமே சுய விசாரனை செய்வதன் மூலம் எம் தவறை நாமே திருத்தி அல்லாஹ்வின் திருப்தியையும் மன்னிப்பையும் பெற்ற நன்மக்களாக எம்மை அமைத்துக் கொள்ள உறுதி கொள்வோமாக!

"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.(41:30)

Thursday, June 11, 2009

குழந்தைகளுக்கு 4 மாதத்திலிருந்து உணவு பாகம் = 11.பிறந்த குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது.அதிக வெயில் காலத்தில் குழந்தைகள் தொண்டை வறண்டு போகும், இல்லை வயிற்று வலி,வயிறு கல்லு மாதிரி ஆகும் இதற்கெல்லாம் நன்கு காய்ச்சிய ஆறிய வெண்ணீரைசிறிய தேக்கரண்டி அல்லது பாலாடையால் இரண்டு மூன்று சொட்டு காலை 11 மணி அளவில் கொடுக்கலாம்.

2. அடுத்து செரிலாக் ஆரம்பிப்பார்கள் அது 4 மாதத்திலிருந்து கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.கேழ்வரகு காய்ச்சி கொடுக்கலாம் இது நல்ல தெம்பை கொடுக்கும்.எது காய்ச்சினாலும் கட்டி தட்டாமல் நல்ல பட்டு போல் குழந்தைகளுக்கு சாப்பிட ஈசியாக உள்ளே போவது போல் இருக்கனும். வாயில் குத்தாத கூர்மை இல்லாத ஷாஃப்டான ஸ்பூனால் கொடுக்கவும்.


3.ஆறு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா டேஸ்டும் சாப்பிட வைத்தால் தான் நாள் போக போக எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.


4.முட்டை வேக வைத்து முக்கால் வேக்காடக கொடுக்கலாம், ரொம்ப கல்லு மாதிரி வேகாமல் சிறிது குழ குழப்பாக இருந்தால் நல்லது.


5.எந்த உணவு புதுசா ஆரம்பிப்பதாக இருந்தாலும் காலை 10 லிருந்து 4 கிற்குள் ஆரம்பிக்கவும்.இது பிள்ளைகளுக்கு ஒத்து கொள்கிறதா என்பதை பார்த்து கொள்ள முடியும். இரவில் கொடுத்தால் வயிறு செமிக்க லேட் ஆகும்.பாலே குடித்து கொண்டு இருந்த குழந்தைக்கு தீடீரென திட உணவு ஆரம்பிக்கும் போது இப்படி ஆரம்பிப்பது நல்லது.


6. அதே போல் நெஸ்டம், செரிலாக் கிளறும் போது அதில் ஆப்பில் ஜூஸ், அல்லது சூப் தண்ணீர் ஊற்றி கிளறலாம்.பாவ மன்னிப்புக்கு

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُـوْرُபொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும் மன்னிப்பவனுமாவாய்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، اْلأَحَدُ، الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.

Wednesday, June 10, 2009

முன்று வகையான இனிப்பு முட்டை தோசைகள்

வித விதமான தோசைகள்.

1. ஆட்டா மாவு இனிப்பு தோசை


கோதுமைமாவு (ஆட்டா) = இரண்டு டம்ளர்
முட்டை = முன்று
உப்பு ‍ ‍ ஒரு சிட்டிக்கை
சர்க்கரை = முக்கால் டம்ளர்
ஏலக்காய் = முன்று
தேங்காய் = பல்லாக கீரியது சிறிது
எண்ணை ‍= சுட‌ தேவையான‌ அள‌வு
நெய் = சிறிது

மிக்சியில் கோதுமை மாவுடன் மேலே குறீப்பிட்ட அனைத்து பொருட்களையும் தேங்காய் பல் தவிர தேவைக்கு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அத்துடன் பொடியாக நருக்கி வைத்துள்ள தேங்காய் பல்லை சேர்த்து தோசைகளாக வார்க்கவும்.


2.முட்டை தோசை

தோசை மாவு = ஒரு க‌ப்
முட்டை = இர‌ண்டு
ச‌ர்க்க‌ரை = நான்கு மேசை க‌ர‌ண்டி
நெய் + எண்ணை சுட‌ தேவையான‌ அள‌வு.

முட்டையில் ச‌ர்க்க‌ரையை போட்டு ந‌ன்கு க‌ரையும் வ‌ரை அடித்து வைக்க‌வும்.தோசை வார்க்கும் தவ்வாவில் ஒரு குழி கரண்டி அளவு தோசை மாவை ஊற்றி சுழற்றி உடனே முட்டை கலவையையும் முன்ற்ல் ஒரு பங்கு ஊற்ற்றி தோசை போலவே தேய்க்கவும்.
ஊற்றி சிறிது சுழ‌ற்றி விட்டு எண்ணை + நெய் க‌ல‌வையை விட்டு தனலை குறைத்து வைக்கவும். பிற‌கு அழ‌காக‌ புஸுன்னு பொங்கி ந‌ல்ல‌ வெந்து நிற்கும்.பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும்.
சுவையான‌ முட்டை தோசை ரெடி.
3. இனிப்பு மைதா தோசை

மைதா மாவு = ஒரு கப்
முட்டை = இரண்டு
சர்க்கரை = அரை கப்
தேங்காய் பால் = அரை கப்
தண்ணீர் தேவைக்கு
உப்பு = ஒரு பின்ச்
பொடி ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி


மைதா உடன் முட்டை,தேங்காய் பால்,ரவை, சர்க்கரை, உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
இல்லை என்றால் மிக்சியிலும் அடித்து கொள்ளலாம்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த தோசை. அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே போகும், இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

பெரியவர்கள் முட்டை சர்க்கரைக்கு பதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து கலக்கி சுட்டு சாப்பிடலாம்.

Tuesday, June 9, 2009

தலைவலியா? ஒற்றை தலைவலியா? ஆமாம்பா ஆமாம்.ஆ தலை வலி மண்டைய பிளக்குதே, இது எல்லோரும் சொல்வது.

சிலருக்கு வெயிலில் போனால் தலைவலி, சிலருக்கு டென்ஷன் ஆனால் தலைவலி, சிலருக்கு ஆபிஸ் டெஷனால் தலைவலி, பெண்களுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலிவரும்.

ஒருபக்கமா கண், நெற்றி பொட்டு எல்லாம் வின் வின் என்று குத்தும், தொழும் போது குனியமுடியாது முழு மண்டையின் பாரம் வந்து விழுவது போல் இருக்கும்,

சிலருக்கு பிள்ளைகள் சண்டையால் தலைவலி,சத்தமாக பக்கத்துவீட்டில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தால் கூட தலைய என்னவோ பண்ணுவது போல் இருக்கும்.

மாணவர்களுக்கு அட்வைஸ் பெரிய தலை வலி தான்.அம்மாவுடைய‌ திட்டுக‌ளும் த‌லை வ‌லிதான்.


சில‌ருக்கு ச‌ரியா மோஷ‌ன் போக‌வில்லை என்றாலும் த‌லை வ‌லி வ‌ரும்.


பிள்ளைக‌ளுக்கும் த‌லைவ‌லி தான் அம்மா கார்டூன் பார்க்க‌ விட‌வில்லை என்றால், சில‌ பிள்ளைக‌ளுக்கு புக்கை பார்த்தேலே த‌லை வ‌லி தான்..
இப்ப‌டி சொல்லி கொண்டே போக‌லாம்.

இதெல்லாத்துக்கும் ம‌ருந்து இஞ்சி சாறு தேன் கலந்து குடிப்பதும், ஆவி பிடிப்பதும் நல்ல எபட்டிவ்வாக இருக்கும். (எந்த‌ சுடுகாட்டில் என்று கேட்காதீர்க‌ள்)


ஆனால் தொட‌ர்ந்து மாத‌ க‌ண‌க்காக‌ த‌லை வ‌லி இருப்ப‌வ‌ர்க‌ள் உட‌னே டாக்ட‌ரை அனுக‌வும், இது கிட்னி பிராப்ள‌மாக‌ கூட‌ இருக்க‌லாம்.1. இஞ்சி சாறு

இஞ்சி சாற்றை த‌லையில் தேய்ப்ப‌த‌ன் மூல‌ம் சிறிது விடுத‌லை பெறலாம்.இஞ்சி 50 கிராம் எடுத்து கொள்ளுங்க‌ள்.

அதை த‌ண்ணீர் ப‌ட‌மால் அதாவ‌து க‌ழுவ‌வாம‌ல் தோலை நீக்கி விட்டு ஈர‌மில்லாம‌ல் காய்ந்த‌ மிக்சியில் போட்டு அரைத்து ஒரு ட‌ம்ள‌ரில் சாறை பிழிந்து எடுங்க‌ள்.

சிறிது நேர‌ம் க‌ழித்து பார்த்தால் கீழே ந‌ஞ்சு த‌ங்கி இருக்கும் வெள்ளை ப‌டிவ‌ம் போல் தெளிந்த‌ சாறைம‌ட்டும் எடுத்து ஒரு மெல்லிய‌ துணியை தீயில் எரிய‌விட்டு அப்ப‌டியே அந்த‌ ச‌றில் போட‌வும் , போட்ட‌தும் அனைந்து விடும்.

இப்போது அந்த‌ சாறை கை விர‌ல்க‌ளால் எடுத்து ந‌டு ம‌ண்டை, பின் ம‌ண்டை நெற்றி பொருத்து காது ம‌ட‌ல் போன்ற‌ இட‌ங்க‌ளில் த‌ட‌வி விட‌வும்.

கொஞ்ச‌ நேர‌த்தில் த‌லையில் உள்ள‌ நீரை எடுத்து விடும் த‌லை வ‌லி, பார‌மும் சிறிது விடும், பிற‌கு ஒரு இஞ்சி டீ (அ) இஞ்சி காப்பி குடிக்க‌வும்.
ந‌ல்ல‌ அமைதியான‌ இட‌த்தில் ரெஸ்ட் எடுங்க‌ள் .


2. ஆவி பிடிப்ப‌து
****************


ஆவி பிடிப்ப‌து த‌லைவ‌லி, த‌லைபார‌ம்,ச‌ளி, மூக்க‌டைப்பு எல்லாத்துக்குமே இதான் ம‌ருந்து.
கொதிக்க‌ கொதிக்க‌ வெண்ணீர் எடுத்து கொள்ளுங்க‌ள், அதில் சுக்கு (அ) ச‌ர்க்க‌ரை (அ) ஏதாவ‌து தைல‌ம் ஒரு சொட்டு தான் விட‌னும் ,இல்லை என்றால் முக‌ம் பொத்து போய் விடும், ஆவி பிடிக்கும் முன் முக‌த்தில் ஏதாவ‌து கிரீம் த‌ட‌வு கொள்ள‌லாம்.
ஆவி பிடிக்கும் போது முக‌த்திற்கும் வெண்ணீர் பாத்திர‌த்திற்கும் ஒரு ஜான் அள‌வு இடைவெளி இருக்க‌ட்டும்.
பேன், ஏசி எல்லாம் ஆஃப் ப‌ண்ணி கொள்ளுங்க‌ள், தொட‌ர்ந்து இர‌ண்டு முன்று த‌ட‌வை பிடிங்க‌ள்.
எதுவும் இல்லை என்றால் வெரும் வெண்ணீரே போதுமான‌து.


3. இஞ்சி சாறு குடிக்க‌
**********************

50 கிராம் இஞ்சியை தோல் சீவி வெண்ணீரில் க‌ழுவி அதை ப‌ட்டு போல் அரைக்க‌வேண்டாம், இர‌ண்டு திருப்பு திருப்பினாலே போதும் எடுத்து ஒரு ட‌ம்ள‌ரில் வ‌டிக‌ட்டியில் பிழிந்து சாறில் உள்ள நஞ்சை உறைய விடுங்கள்.

பிழிந்த இஞ்சி சக்கையை பிரிட்ஜில் வையுங்கள், இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட பயன் படுத்தி கொள்ளலாம்.

மேலோடு தெளிந்து நிற்கும் சாறில் தேவைக்கு தேன் க‌ல‌ந்து ஒரு க‌ல் உப்பு சேர்த்து முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு குடிக்க‌வும்.4. சோம்பு இஞ்சி காப்பி
************************

பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = அரை டம்ளர்
சர்க்கரை தேவைக்கு
சோம்பு தூள் = அரை தேக்கரண்டி
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி
இன்ஸ்டன் காபி பொடி = ஒரு பின்ச்

த‌ண்ணீரில் இஞ்சி ம‌ற்றும் சோம்பு தூளை போட்டு ந‌ன்கு கொதித்து கால் ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் சுடான‌ பால், ச‌ர்க்க‌ரை , க‌ல‌ந்து வ‌டிக‌ட்டி காபி பொடி சேர்த்து க‌ல‌க்கி குடிக்க‌வும்.


இந்த‌ இஞ்சி காபி குடிப்ப‌தால் மோஷ‌ன் பிராப்ள‌த்திற்கு குட் பை சொல்ல‌லாம்.
க‌டுங்குளிர் வாட்டும் போது கை கால் ஐஸ் போல் ஆகும் அந்த‌ நேர‌த்திலும் இதை குடிக்க‌லாம், பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளும் இதை குடிக்க‌லாம்.

Sunday, June 7, 2009

முருங்கக்கீரை பொரியல்
தே.பொருட்கள்

ஆய்ந்த கீரை = முன்று டம்ளர்
சின்ன வெங்காயம் = 200 கிராம்
தேங்காய் துருவல் = அரை முடி (முறி)
காஞ்ச மிளகாய்= ஐந்து
உளுந்து = ஒரு மேசை கரண்டி
பூண்டு = ஆறு ப‌ல்
சீர‌க‌ம் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
எண்ணை = ஆறு தேக்க‌ர‌ண்டி

செய்முறை
முருங்க‌க்கீரையை ஆய்ந்து முன்று ட‌ம்ள‌ர் அள்வு எடுத்து அல‌சி வ‌டித்து வைக்க‌வும்.
ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் காஞ்ச‌ மிள‌காய்,உளுந்து, சீர‌க‌ம், பூண்டு போட்டு தாளிக்க‌வும்.
பிற‌கு சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்கி கீரையை சேர்த்து கிள‌றி தேவைக்கு உப்பு சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் வேக‌விட‌வும்.
க‌டைசியாக‌ தேங்காய் துருவ‌ல் சேர்த்து இர‌க்க‌வும்.
சுவையான‌ முருங்க‌க்கீரை பொரிய‌ல் ரெடி.

குறிப்பு:

தினம் சாப்பிடும் உண‌வில் கீரையை அதிக‌மாக‌ சேர்த்து கொள்வ‌து ந‌ல்ல‌து.
முருங்க‌க்கீரை க‌ர்பிணி பெண்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

Saturday, June 6, 2009

பிறந்த குழந்தைக்கு நாப்பிரேஷ் வந்தால்.1.பிறந்த குழந்தைகளுக்கு எந்த நேரமும் பேம்பரே போடுவதால், போதுமான காற்று இல்லாமல் மூடி வைப்பதாலும் ரேஷ் வருகிறது.அடைத்த மாதிரி ஆகிவிடுகிறது,ஆகையால் இடை இடையே டயப்பர் துணி (அ) மெல்லிய காட்டன் சேலை மற்றும் துப்பட்டாவின் துணியையும் சதுரமாக வெட்டி மடித்து கட்டி விடலாம்.


2. அதே போல் அடிக்கடி மலம் கழித்து கொண்டே இருப்பார்கள்.
அது பின் புறம் தோலோடு ஒட்டி கொள்ளும், ஒரு முறை இரண்டு முறை கழுவலாம், சும்மா கழுவ கூடாது.

3. அதற்கு தேங்காய் எண்ணை (அ) பேபி ஆயிலை நன்கு இடுப்பிற்கு கீழ் முன்னாடி பின்னாடி நல்ல தேய்த்து விட்டு பேம்பரோ துணியோ கட்டுங்கள்.

4. இப்போது நம்பர் டூ போய் விட்டால் காட்டன் பஞ்சை வெண்ணீரில் நனைத்து அப்படியே துடைத்து எடுங்கள், ஒட்டவும் செய்யாது, ரேஷ்ஷும் வராது, கீரிம் பவுடர் எதுவும் போட வேண்டாம் அது யுரின் போகும் இடத்தில் போய் அடைத்து கொள்ளும்.

ஆபத்துகள் நீங்கிட துஆ

அல்லாஹும்ம அன் த ரப்பீ லா இலாஹ இல்லா அன் த அலைக்க தவகல்து வ அன் த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹூ கான வ மாலம் யஷஉ லம்யகுன்வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அஃலமு அன்னல்லாஹ அலா குல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக மின் ஷர்ரி நப்ஸீ வமின்ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன் த ஆகிதுன் பி நாஸியத்திஹா இன்ன ரப்பீ அலா ஸிராத்திம் முஸ்தகீம்.

நாயனே! நீ என் இரசட்சகன். உன்னைத் தவிர வேறு நாயனே இல்லை.நான் என்னுடைய காரியங்கள் யாவற்றையும் உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன். நீ கண்ணியமிக்க அர்ஷுடைய இரசட்சகன்.அல்லாஹ் நாடிய ஒன்று நடந்து விடுகிறது. அவன் நாடாத ஏதும் நடப்பதேயில்லை.


எந்த நன்மையைச் செய்யவும் எந்த்த் தீமையிலிருந்து விலகவும் மகத்தான அல்லாஹ்வின் துணைகொண்டு மட்டுமே முடியும். திண்ணமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் மிக்க ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்றும் திண்ணமாக அல்லஹ் அனைத்துப் பொருட்களையும் பரிபூரனமாக அறிகிறான் என்றும் நான் உறுதியாக அறிகிறேன்.


நாயனே! திண்ணமாக நான் என் ஆத்மாவினுடைய திங்கிலிருந்தும், பிராணிகளின் முன் நெற்றி ரோமங்கள் உன் பிடியில் இருக்கின்றனவே அப்படிப்பட்ட பிராணிகள் அனைத்தினுடைய தீங்குகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகீறேன். திண்ணமாக என்னுடைய இரட்சகனாகிய நீ நேரிய வழியின் மீது இருந்து கொண்டிருக்கிறாய்.

Thursday, June 4, 2009

ஈரல் கூட்டு - Liver Gravy

தே.பொருட்க‌ள்

ஈரல் = கால் கிலோ

தக்காளி = ஒன்று

வெங்காயம் = இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி

மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = தேவைக்கு

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு (பொடியாக‌ அரிந்த‌து)

கொத்து மல்லி தழை = சிறிது

ப‌ட்டை = ஒரு சிறு துண்டு

எண்ணை = நான்கு தேக்கரண்டிசெய்முறை1. ஈர‌லை சுத்த‌ம் செய்து மேலே உள்ள‌ மெல்லிய‌ இழையை இர‌ண்டு முன்று முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.2. ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் எண்ணை ஊற்றி ப‌ட்டை போட்டு வெடிக்க‌ விட‌வும்.3.அடுத்து வெங்காய‌ம் + இஞ்சி பூண்டு + த‌க்காளியை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌த‌க்க‌வும்.

4.த‌க்காளி சுருண்ட‌தும் ஈரலை போட்டு உப்பு + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து அதிக‌ தீயை வைத்து கிள‌ற‌வும்.5.அடுத்து மிள‌காய் தூள்,க‌ர‌ம் ம‌சாலா தூள் சேர்த்து கிள‌றி தீயை குறைத்து வைத்து மூடி போட்டு சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.

6. க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை ம‌ற்றும் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.

குறிப்பு:ஆட்டு ஈர‌ல் இர‌த்த‌ம் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

ரொம்ப‌ நேர‌ம் வேக‌ விட்டால் க‌ல்லு மாதிரி ஆகிவிடும். க‌ருப்பாக‌வும் ஆகிவிடும்.ஹிமோகுளொபின் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள், க‌ர்பிணி பெண்க‌ள் இதை வார‌ம் முன்று முறை சாப்பிட்டால் இர‌த்த‌த்தின் அள‌வு கூடும்.