Saturday, June 6, 2009

ஆபத்துகள் நீங்கிட துஆ

அல்லாஹும்ம அன் த ரப்பீ லா இலாஹ இல்லா அன் த அலைக்க தவகல்து வ அன் த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹூ கான வ மாலம் யஷஉ லம்யகுன்வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அஃலமு அன்னல்லாஹ அலா குல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக மின் ஷர்ரி நப்ஸீ வமின்ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன் த ஆகிதுன் பி நாஸியத்திஹா இன்ன ரப்பீ அலா ஸிராத்திம் முஸ்தகீம்.

நாயனே! நீ என் இரசட்சகன். உன்னைத் தவிர வேறு நாயனே இல்லை.நான் என்னுடைய காரியங்கள் யாவற்றையும் உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன். நீ கண்ணியமிக்க அர்ஷுடைய இரசட்சகன்.அல்லாஹ் நாடிய ஒன்று நடந்து விடுகிறது. அவன் நாடாத ஏதும் நடப்பதேயில்லை.


எந்த நன்மையைச் செய்யவும் எந்த்த் தீமையிலிருந்து விலகவும் மகத்தான அல்லாஹ்வின் துணைகொண்டு மட்டுமே முடியும். திண்ணமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் மிக்க ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்றும் திண்ணமாக அல்லஹ் அனைத்துப் பொருட்களையும் பரிபூரனமாக அறிகிறான் என்றும் நான் உறுதியாக அறிகிறேன்.


நாயனே! திண்ணமாக நான் என் ஆத்மாவினுடைய திங்கிலிருந்தும், பிராணிகளின் முன் நெற்றி ரோமங்கள் உன் பிடியில் இருக்கின்றனவே அப்படிப்பட்ட பிராணிகள் அனைத்தினுடைய தீங்குகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகீறேன். திண்ணமாக என்னுடைய இரட்சகனாகிய நீ நேரிய வழியின் மீது இருந்து கொண்டிருக்கிறாய்.

7 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

துஆக்களை அரபி மற்றும் தமிழ் இரண்டிலும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
(சரியான உச்சரிப்புக்காக சொல்லவந்தேன்.)

Jaleela said...

வருகைக்கு மிக்க நன்றி,சகோதரர் நவாசுதீன்,

முடிந்த வரை தமிழில் கேட்கும் தூஆ க்களை போட்டு வருகிறேன்.
அரபி எழுத்தை எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை, மேலே குறிப்பிட்ட இந்த தூஆ மன்ஞிலில் கீழே இருக்கும் தூஆ
முயற்சி செய்கீறேன்.

நீங்கள் சொல்வதும் சரிதான்.

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்ல முயற்சி, மன்ஜிலில் இருக்கும் அனைத்து துஆக்களும் மிக்க பயனுள்ளது, உங்களிடம் மொழிபெயர்ப்புடன் உள்ள மன்ஜில் இருந்தால் துஆவின் அர்த்ததையும் முடிந்தால் பதிவிடுங்கள். நானும் வாய்ப்பு கிடைக்கும்போது மன்ஜில் ஓதுவது வழக்கம்.

kathijath said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்க துஆ blog மென்மேலும் வளர என் துஆ......

Jaleela said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் கதிஜத் வாங்க ரொம்ப நாள் ஆச்சு உங்கள் பதிவு பார்த்து.
பிள்ளைகள் நலமா?

Jaleela said...

சகோதரர் ஷாபி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஆமாம் மன்ஞில் தினம் ஓதினால் ரொம்ப நல்லது.

அதன் கீழ் இருக்கும் இந்த தூஆ விற்கு தான் அர்த்தம் தேடி கொண்டு இருக்கிறேன்.

Jaleela said...

ச‌கோத‌ர‌ர் ஷாஃபி நீங்க‌ள் கேட்ட‌ ப‌டி தூஆவின் அர்த்த‌தை தேடி போட்ட‌ச்சு.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா