Sunday, June 14, 2009

திரீ இன் ஒன்

பச்சரிசி = இரண்டரை( 500 கிராம்)
புழுங்கல் அரிசி = ஒன்னறை (300 கிராம்)
அவல் = கால் டம்ளர்
வெந்தயம் = ஒரு தேக்கரண்டி
உளுந்து = ஒரு டம்ளர் குவியலாக‌ (220 கிராம்)









1. இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் அந்த வாரம் முழுவதும் ஒரு பெரிய டென்ஷன் தீர்ந்த மாதிரி.

2. இரவு ஊறவைத்து காலை அரைப்பது சிறந்து அல்லது காலை ஊறவைத்து மாலை அரைக்கலாம்.

3. அரிசி,வெந்தயம், அவலை ஒன்றாகவும், உளுந்தை தனியாகவும் ஊறவைத்து முதலில் அரிசியை கிரெயிண்டரில் ஆட்டவும், பிறகு உளுந்தை ஆட்டவும் அப்பதான் வழித்தெடுப்பது சுலபம்.







4. ஐஸ்வாட்டர் ஊற்றி அரைத்தால் மோட்டாரும் கெட்டு போகாது, மாவும் நன்கு காணும்.
மொத்த‌மா அரைத்து அதில் உப்பு போட‌ வேண்டாம். தேவைக்கு அப்ப‌ அப்ப‌ க‌ரைட்து ஊற்ற‌வும்.

5. இட்லிக்கு ச‌ற்று கெட்டியாக‌ அள்ளி ஊற்றுவ‌து போல் க‌ரைக்க‌வும்.தேசைக்கு சிறிது த‌ள‌ர்த்தியாக‌ க‌ரைக்க‌னும்.

6. ஆப்ப‌த்திற்கு கொஞ்ச‌ம் த‌ண்ணி மாதிரி க‌ரைக்க‌னும் அதுவும் தேங்காய் பால் சேர்த்து க‌ரைக்க‌னும்.

7. அப்ப‌டியும் மீதி ஆகும் மாவை கொண்டு ஊத்தாப்பாம், கோதுமை இனிப்பு அப்ப‌ம் போன்ற‌வை த‌யாரிக்க‌லாம்.

8. குளிர் கால‌த்தில் மாவு புளிக்காது அத‌ற்கு மாவில் உப்பு போட்டு கையால் ந‌ல்ல‌ பிசைந்து க‌ல‌க்கி வைக்க‌லாம்.

9. ச‌மைக்கும் அடுப்பிற்கு அருகே வைக்க‌லாம்.
10 . அவ‌ல் இல்லை என்றால் சாத‌மும் போட்டு அரைக்க‌லாம், சிறிது ஜ‌வ்வ‌ரிசி சேர்த்தாலும் ந‌ல்ல‌ தோசை பஞ்சி போல் வ‌ரும்

2 கருத்துகள்:

ஹர்ஷினி அம்மா said...

சுப்பர் அக்கா... நான் எல்லாத்துக்கும் தனி தனியா தான் ஆட்டிட்டு இருக்கேன் !!!!!... இந்த வாரம் திரீ இன் ஒன் வாரம் தான் அக்கா :-)

Jaleela said...

வாங்க ஹர்ஷினி அம்மா டிரை பண்ணுங்கள், இது அது அதுக்கும் செய்யும் போது மாவு கரைக்கும் விதத்தில் இருக்கு இது மூன்றும் வருவது.
சரியா?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா