Tuesday, June 16, 2009

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள்

1. "யாஅல்லாஹ் இயலாமை,சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், மண்ணறை வேதனை, வாழ்க்கையில் ஏற்படும் சோதனை ஆகியவவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." என்று நபி (ஸல்) அவர்கள் அல்லஹ்விடம் இறைஞ்சினார்கள்".

2. "யா அல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும், கற்பொழுக்கத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் உன்னிடம் கேட்கிறேன்."


3. யா அல்லாஹ்! நான் உன் அருளையே ஆதரவு வைத்துள்ளேன்; (அதனை) கண் மூடித் திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!மேலும் என் அனைத்துக் காரியங்களையும் சீர்படுத்தி வைப்பாயாக! வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு எவருமிலர்!"

4. "யா அல்லாஹ் உள்ள‌ங்க‌ளைத் திருப்ப‌க் கூடிய‌வ‌னே! எங்க‌ள் உள்ள‌ங்க‌ளை உன் வ‌ழிபாட்டின் ப‌க்க‌ம் திருப்புவாயாக‌!"

5."உள்ள‌ங்க‌ளைப் புர‌ட்டுப‌வ‌னே! என் உள்ள‌த்தை உன் மார்க்க‌த்தில் நிலைத்து நிற்க‌ச் செய்வாயாக‌!"

6. "யா அல்லாஹ்! இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் உன்னிட‌ம் ந‌ல்ல‌தைக் கேட்கிறேன்"

7. "யா அல்லாஹ் என்னுடைய‌ செவியின் தீங்கை விட்டும்,பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ள‌த்தின் தீங்கை விட்டும், எண்ண‌த்தின் தீங்கை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன்."

8. "யா அல்லாஹ்! வெண்குஷ்ட‌ம்,பைத்திய‌ம்,உட‌லுருப்புக‌ள் அழுகிவிழும் நோயை, ம‌ற்றும் பிற‌தீய‌ நோய்க‌ள் ஆகிய‌ அனைத்திலிருந்தும் நிச்ச‌யமாக‌ உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.

9."யா அல்லாஹ்! நிச்ச‌ய‌மாக‌ நீயே ம‌ன்னிப்ப‌வ‌ன்; க‌ண்ணிய‌த்துக்குரிய‌வ‌ன்;ம‌ன்னிப்பை விரும்புகின்ற‌வ‌ன். என‌வே என்னை ம‌ன்னித்த‌ருள்வாயாக‌!"

10. "யா அல்லாஹ்! உன்னுடைய‌ த‌யாள‌த் த‌ன்மையிலிருந்தும் உன்னுடைய‌ அருளிலிருந்தும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் கேட்கிறேன். ஏனெனில் இவ‌ற்றை உன்னைத் த‌விர‌ வேறு எவ‌ரும் சொந்த‌ம் கொள்ள‌ முடியாது.

11."யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."


12."இறைவா! வ‌றுமை, ஏழ்மை,இழிவு ஆகிய‌வ‌ற்றை விட்டும், நான் பிற‌ருக்கு அநீத‌ம் செய்வ‌தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அண்டை வீட்டார் திசை மாற‌ச் செய்து விடுவார்க‌ள்."

13.யா அல்லாஹ்! (உன‌க்கு) அஞ்சாத‌ உள்ள‌ம், ஏற்று கொள்ள‌ப‌டாத பிராத்த‌னை, நிறைவ‌டையாத‌ ம‌ன‌ம், ப‌ய‌ன‌ளிக்காத‌ க‌ல்வி ஆகிய‌ இந்த‌ நான்கு த‌ன்மைக‌ளை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத்தேடுகீறேன்."

14. "யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனப்பதியை கேட்கிறேன். மேலும் எரி நரகை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."


15. "இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக.!"

16. " யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதை விட்டும் நிச்சயமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்."

17. "யா அல்லாஹ் பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும், ஏற்றுக் கொள்ளப்படும் நல்லறங்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்."

18."யா அல்லாஹ்! நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை எனக்குப் போதுமானதாக்கி, அதில் எனக்கு அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் அருட்கொடைகளுக்குப் பகரமாக அதை விட சிறந்தவற்றை எனக்கு வழங்குவாயாக!"

19."யா அல்லாஹ்! என்னை (ம‌றுமையில்) மிக‌வும் எளிதாக‌ விசார‌ணை செய்வாயாக‌!
எல்லாம் வ‌ல்ல‌ ர‌ஹ்மான் நாம் கேட்கும் பிராத்த‌னைக‌ளை ஏற்று ந‌ம் அனைவ‌ர் மீதும் த‌ன் பேர‌ருளைச் சொரிவான‌க‌! ஆமீன்! ஆமீன்! யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.

(இந்த‌ தூஆ அல் ஜ‌ன்ன‌த் ப‌திப்பு 2002 வில் என‌க்கு கிடைத்த‌து, ப‌த்திர‌ ப‌டுத்தி வைத்தது , அவை அனைத்தையும் எடுத்து கோர்வையாக இங்கு போட்டு உள்ளேன்.)

10 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையான பதிவு சகோதரி. தொடரட்டும் உங்கள் பணி இன்ஷா அல்லாஹ்.
தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் என்று போட்டுவிடுங்கள்.

Jaleela said...

சகோதரர் நாவஸ் அவர்களுக்கு,
தவற்றினை சுட்டி காண்பித்ததற்கு மிக்க நன்றி. இந்த பதிவை தான் முதலில் போட இந்த தூஆ பிளாக்கே ஆரம்பித்தேன்.

நிறைய பேருக்கு தூஆ கேட்கும் முறை தெரியாது (எனக்கும் தான்) இந்த புக்கை ஒரு இடத்தில் பார்த்தேன், அதில் இருந்த இந்த தூஆக்கள் ரொம்ப நல்ல இருந்தது , இன்னும் மீதி இருக்கு முடிந்த போது போடுகிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகவும் பயனுள்ள துஆக்கள் சகோதரி.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !
எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் அருள்புரிவானாக ! ஆமின் !

kathijath said...

அஸ்ஸலமு அலைக்கும்
மிக அருமையான் துஆ. தொடருங்கள்

Jaleela said...

கதிஜத் வா அலைக்கும் அஸ்ஸலாம்

ஒதி விட்டு பதில் அளித்தமைக்கு நன்றி

Jaleela said...

சகோதரர் எம்.ரிஷான் ஷரீப் ,

உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி.

ஷ‌ஃபிக்ஸ் said...

மிக்க பயனுள்ள துஆக்கள், தொடருட்டும் உங்கள் சேவை!! MAY ALLAH BLESS YOU!!

asiya omar said...

ஜலீலா ,இந்த துவா பற்றிய ப்ளாகை சுமஜ்லா ப்ளாக் மூலமாக தெரிந்துகொண்டேன்.வேறு என்னென்ன ப்ளாக் வைத்துள்ளீர்கள்,தெரிவித்தால் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க வசதியாக இருக்கும்.இந்த ப்ளாக் மிக்க பயன் உள்ளது.அருமை.

Jaleela said...

ஆசியா வாங்க அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊரில் தான் இருக்கீங்களா?
பையன் இங்கு தனியா அவங்க டாடி கூட இருக்கானா?
உங்கள் மாமானாஅருக்கு இப்ப எப்படி இருக்கு. பொண்ணை அங்கு ஸ்கூலில் சேர்த்து இருக்கீங்களா?

அருசுவை சுத்தமா நுழையவும் முடியல, பதிவும் போட முடியல, என் பதிவுகளையே என்னால் பார்க்க முடியல.முன்று மாதமாகிறது சரியாக கிடைக்கல.

என் பையன் ஊருக்கு போய் விட்டான் இத்தனை வருடமா பிரிந்ததில்லை, ரொம்ப மனசு கழ்டமா இருக்கு, அருசுவை ஓப்பன் ஆனாலாவது யாருக்காவது பதில் கொடுத்து கொண்டு மனதை மாற்றி கொள்ளலாம்.

இப்ப பிளாக்கில் பதிவுகள் போட போட கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கு.

உங்களுக்கு தான் அருன்பிரசங்கி மூலம் விரோதி வருஷ பருப்பு பதில் என் பிளாக் ஐடி கொடுத்து இருந்தேனே. பார்க்கலையா?

இந்த தூஆ பகுதி முழுவதும் பாருங்கள் அதிலேயே எல்லா லிக்கும் இருக்கு.

தெரியவில்லை என்றால் சொல்லுங்கள். உங்களுக்கு பெரிய பதில் போட்டாச்சு,

அபுஅஃப்ஸர் said...

உங்கள் பதிவுகள் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

தொடரட்டும் உங்கள் பணி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா