Sunday, June 21, 2009

கேன்சர் அபாயம்

இப்போது மனிதர்களை படுத்தும் ஒரு வியாதிகளில் கேன்சருக்கு பெரும் பங்கு இருக்கு.
ஏன் வருகிறது எனக்கு தெரிந்த சில டிப்ஸ்கள்.


1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும் உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

2. அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன் படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.

3. அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால் கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான் என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.

4. அடுத்து புது துணி வேவ்வேறு நாட்டில் இருந்து வருகிறது, அதில் பல வகை கை பட்டு பல வியாதியை தரும் கிருமிகள் இருக்கும். இனி ஒரு முறை வீட்டில் அலசி விட்டு போட்டு கொள்ளுங்கள்.

5 . பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும். உள்ளாடைகளை வெண்ணீரில் அலசுங்கள் கிருமிகள் அழியும்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கு.

6. ஆண்கள் பான் பீடா என்னேரம் போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் க‌ண்ட‌து அந்த‌ ந‌ப‌ர் இப்போது உயிரோடு இல்லை.

7. எந்த‌ வியாதியும் த‌லைவ‌லியோ ம‌ற்ற‌வ‌லியோ தொட‌ர்ந்து முன்று மாத‌ம் ஆறு மாத‌ம் என்று விடாம‌ல் வ‌ந்தால் உட‌னே முறையாக‌ டிரீட்மெண்ட் எடுக்க‌வும்.

8. ஒரு 45 வ‌ய‌து பெண்ணிற்கு வாயில் புண்ணு இர‌ண்டு வ‌ருட‌மா இருந்திருக்கு அது வ‌லிக்க‌வும் இல்லையாம் க‌டைசியில் போய் காண்பிக்க‌ போன‌ அது கேன்ச‌ர் , லாஸ்ட் ஸ்டேஜ் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது என்று சொல்லிவிட்டார்க‌ள், இன்னும் அதிக‌மாகி பிற‌கு சாப்பிட‌ முழுங்க‌ முடியாம‌ல் இர‌ண்டு மாதமாக‌ அவ‌தி ப‌ட்டு அவ‌ர் இறைய‌டி சேர்ந்துவிட்டார்.

9. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர் 1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது.

10. எல்லோரும் 35 , 40 வ‌ய‌தை க‌ட‌க்கும் போது ரெகுல‌ராக‌ ஒரு நோய் இருக்கோ இல்லையோ ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜென‌ர‌ல் செக்க‌ப் செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

2 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

நமது உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதின் மூலம் கேன்சர் வியாதியை தடுக்கலாம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். மாமிச உணவுகளை குறைத்து, சர்க்கரையயும் முடிந்த அளவு குறைத்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி மிக அவசியம்.

Jaleela said...

ஷாபி நீங்கள் சொல்வது மிகச்சரியே


புதுசா ஒரு நல்ல கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி.
பெரிய பதிவா இருக்கு அதான் பாதில் விட்டு இருக்கேன்.
மீதி போடனும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா