Thursday, July 30, 2009

விருதுக்கு வெஜ் விருந்து

ரச மலாய்பீஸ் ரைஸ்
சப்பாத்தி மின்ட் கறி

மோர் குழம்பு
அரைத்து விட்ட சாம்பார்


இஞ்சி டீ

கொண்டைகடலை வடை
மாவடுவிருதுக்கு த‌ர்ஷினி கேட்ட‌ வெஜ் விருந்து
த‌ர்ஷினி இந்த‌ அயிட்ட‌ம் போதுமா

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?


பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?


அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.


இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.


'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா


'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.


ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்


Mail Message

அது ஒரு காகம்

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்'
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'
'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'


சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;


'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.


(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்' என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

ப‌ட்டு புட‌வை துவைப்ப‌த‌ற்கான‌ விதிமுறைக‌ள்


1. கைத்தறி, மெஷின் மூலம் நெய்யப்பட்ட பிரிண்டட் செய்யப்பட்ட அல்லது கிரேப் ஆகிய அனைத்து வகைப் பட்டுப் புடவைகளின்நீண்ட ஆயுட்காலத்திற்கு அவற்றைத் தரமான உலர் சலவைக் கடைகளில் (டிரை கீனர்) கொடுத்துச் சலவை செய்வதே சிறந்தது.

2.பட்டுப் புடவையின் சாயம் போகாமல் அல்லது வண்ணம் குழம்பாமல் (புடவையின் பார்டர் சாயம் ,புடவையின் உடலில் படியாமல் ) இருக்க உலர் சலவை மட்டுமே சிறந்தது.

3.தவிர்க்க முடியாத காரணத்தால் பட்டுப் புடவைகளை உலர்சலவை செய்ய முடியவில்லையெனில், வீட்டிலேயே துவைக்கலாம். ஆனால் இதற்குப் பிரத்தியேக கவனம் தேவை.

4.முதலில் இரண்டு அல்லது முன்று முறை வீட்டில் துவைக்கும் போது சாதாரண சுத்தமான நீரிலேயே துவைக்க வேண்டும்.

5.சாதாரண நீரில் இரண்டு அல்லது மூன்று முறை துவைத்த பிறகு தரமான டிடர்ஜெண்ட் பவுடரை நீரில் நன்றாகக் கரைத்த பின் புடவையை அதில் நனைக்க வேண்டும்.


6.பட்டு புடவையை அதிக நேரம் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. பல புடவைகளைச் சேர்த்துச் சுருட்டியும் நீரில் நனைக்கக் கூடாது.

7. ப‌ட்டுப் புட‌வைக‌ளை வீட்டில் துவைக்கும் போது அடித்து துவைக்க‌க் கூடாது.

8. ப‌ட்டுபுட‌வைக‌ளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க‌ கூடாது.

9. ப‌ட்டு புட‌வைக‌ளை நிழ‌லில் காய‌வைத்து மித‌மான‌ சூட்டில் இஸ்திரி செய்ய‌ வேண்டும்.

மேலே உள்ள‌ டிப்ஸ்க‌ள் போத்தீஸில் ப‌ட்டு புட‌வை எடுத்த‌ போது அந்த‌ அட்டையில் இந்த‌ டிப்ஸ்க‌ள் இருந்த‌து எல்லோருக்கும் ப‌ய‌ன்ப‌டும், ஏற்க‌ன‌வே ப‌ட்டு புட‌வை ப‌ற்றி டிப்ஸ் போட்டுள்ளேன்.

இது என்னுடைய டிப்ஸ்:


பட்டு புடவையை கட்டி கொண்டு போய் வீட்டுக்கு வந்ததும் நல்ல வேர்வை போகும் அளவிற்கு காய போட வேண்டும்.

வேர்வை ஈரத்தோடு உள்ளே அப்படியே வைத்தால் மடிப்பில் கறை படிந்து அடுத்த முறை கட்டும் போது திட்டு திட்டாக அந்த இடத்தில் மட்டும் கலர் மாறி விடும்.

முன்று முறை போட்டு விட்டு பிறகு நாம் வீட்டில் வாஷ் பண்ணுவதோ டிரை கிளீங்கோ கொடுக்கலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் அப்படியே பீரோவில் பட்டு புடவையை அடிக்கி வைத்து விட்டு வரவேண்டாம். அதில் துரு ஏறிவிடும்.அதை துணிபையில் போட்டு வைத்தால் அப்படியே இருக்கும்.

முன்று அல்லது ஆறு மாதம் ஒரு முறை எடுத்து உதரி மறுபடி மடித்து வைப்பது நல்லது.

Wednesday, July 29, 2009

விருதுக்கு விருந்து

இஸ்லாமிய இல்ல சமையல்
பகாறா கானா, மீன் குழம்பு,மீன் பிரை,கட்டி பருப்பு, தக்காளி ஹல்வா
தட்டு ரொட்டி, மாசி, வெங்காய முட்டை
மீலாது ஸ்பெஷல் சப்ஜி பிரியாணி, தால்சா
டேங்க் கடற்பாசி


முழுமீன் டீப் பிரை

லெமென் லாலிபாப்


சுறா மீன் கட்லெட்
இது எல்லா அவார்டு, விருது எல்லாத்துக்கும், இன்னும் பாயாச‌ம், ஜூஸ் மிஸ்ஸிங்இது எல்லா விருதுக்கும் சேர்த்து ஸ்பெஷ‌ல் விருந்து. ச‌கோத‌ர‌ர் ந‌வாஸ் போட‌ சொன்னார். போட்டாச்சு, இதேல்லாம் என் கைம‌ண‌ம்..ஹி ஹி

அலஹாபாத் போகும் போதுஹகீம் கூடவே வைத்து வளர்த்தாச்சு எனக்கு இந்தியா அனுப்ப மனமில்லை ஆனால் அவனுக்கு அங்க போய் தான் படிக்கனும் என்று.


ஒரு மாதம் முன்பே போய் விட்டான், அவன் போனதிலிருந்து எனக்கும் இன்னும் கூட மனசு சமாதானம் ஆக மாட்டுங்கிறது.

காலேஜ் சேர்க்க அலகாபாத் சென்றோம், குடும்பத்தோடு இங்கிருந்து 10 நாள் லீவு போட்டு கொண்டு போனோம். நான் போவதா இல்லை திடீர் முடிவு தான் போய் 4 நாட்கல் சென்னையில் இருந்தோம்.

19 அன்று மதியம் 3 மணிக்கு சங்கமித்ரா எக்ஸ்ப்ரெஸில் போனோம் நல்ல வசதியா இருந்தது, முதல் முறையாக இரண்டு நாள் ரயில் பயணம், புளி சாதம், இனிப்பு, கார சோமாஸ்கள் வீட்டில் செய்து கொடுத்தார்கள்.
ரொம்ப நல்ல இருந்தது.

பெரிய‌வ‌ன் ஜ‌ன்ன‌லோர‌மா உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தான். எல்லாம் காலேஜ் டென்ஷ‌ன் தான் நான் அவ‌னையே பார்த்து கொண்டு த‌ஸ்பி ஓதி கொண்டே வ‌ந்தேன்


டிரெயினில் சின்ன‌ பைய‌ன் ஒரே குஷி மேல் ப‌ர்த்தில் அங்கும் இங்கும் தாவி கொண்டு இருந்தான்.
அங்கு அரை மணிக்கொருமுறை சாய் டிப் சாய், மசாலா சாய் வந்து கொண்டே இருந்தது, சின்னவர் அவரை மாதிரியே சொல்லி கொண்டே இருந்தான் சாய் டிப் சாய், சாய் டிப் சாய் என்று எனக்கும் அவன் சேட்டையை பார்த்து சிரிப்பதா? சிரிப்பு வந்தாலும் சிரிக்க்க முடியல.. இல்லை பெரியவன் பேசாமல் வருகிறானே அவனை பார்த்து கவலை பட்டு கொண்டே வந்தேன்


21 காலை 3 ம‌ணிக்கு போய் சேர்ந்தோம்.அங்கிருந்து ஒரு ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு ப‌க்க‌த்தில் உள்ள‌ கான் சியாம் ஹோட்ட‌லில் த‌ங்கினோம்.

காலை ப‌த்து ம‌ணிக்கு கிள‌ம்பி காலேஜ் சேர்க்க‌ போனோம் அங்கு புது இட‌ம் நிறைய‌‌ பெற்றோர்க‌ள் பெட்டி ப‌டுக்கையோடு பிள்ளைக‌ளோடு வ‌ந்திருந்தார்க‌ல்.

அண்ணாவை காலேஜ் சேர்க்க தம்பியின் பில்டப்இது அல‌காபாத்தில் எடுத்த‌து அங்குள்ள‌ ரிக் ஷாக்க‌ள் ந‌ம்ம‌ ஊர் ரிக் ஷா மாதிரி இல்லை ஒரு ஜிகு ஜிகுன்னு இருக்கு ப‌ட்டும், ஜ‌ரிகை லேசுமாக‌ அல‌ங்க‌ரிக்க‌ ப‌ட்டுள்ள‌து.

எல்லாம் முடிந்து வரும் போது சின்னவர் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்து போட்டோ வேறு.
பெரிய பையனை காலேஜ் சேர்க்க அவசரமா எல்லோரும் 10 லீவு போட்டு கொண்டு இந்தியா போனோம், அப்ப சின்னவருடைய ஆட்டம் தாஙக் முடியல.என்னவோ அவர் தான் காலேஜ் சேருவது போல் அங்கு ஒரு பில்டப்
காலேஜ் அட்மிசன் செல்லும் முன் அண்ணாவிற்கு வாங்கி டிரெஸ் எவ்வளவோ அதே தனக்கும் ஒரு பிளாக் டிரெஸ் அதுக்கு மேட்சா தொப்பி போட்டு கொண்டு ரெடிஆனார்.இங்கிருந்து அரபிகள் போடும் கந்துரா நாங்க உம்ரா போன போது வாங்கியது அதை எடுத்து வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு போட்டு கொண்டு போனார்.

Tuesday, July 28, 2009

ஹே ஹே எனக்கும் ஒரு அவார்டு கிடைத்து விட்டது1. ஒரு அவார்டு இல்லை "இரண்டு அவார்டு" கிராப்ட் வொர்க்கில் அனைவரில் மனதிலும் இடம் பிடித்துள்ள சகோதரி பாயிஜாவும் ஒரு "இன்ரெஸ்டிங் அவார்டு" குழந்தை வளர்பு மற்றும் உணவு முறைக்கு கொடுத்து இருக்கிறார்கள்.www.kidsfood-jaleela.blogspot.com

2. சகோதரர் ஷபி அவர்கள் சமையல் + டிப்ஸ்க்காக கொடுத்து இருக்கிறார்.
ரொம்ப சந்தோஷம் + நன்றிகள் பல...... www.tips-jaleela.blogspot.com
நெட்டில் பல சைட் களில் என் சமையல் குறிப்புகளும், டிப்ஸ்களும் கொடுத்து இருக்கிறேன்


சமையல் குறிப்பு மூலம் நெட்டில் பல நாடுகளில் உள்ள பல தோழிகள் மூலம் நிறைய வாழ்த்து பெற்றுள்ளேன்.

எல்லோரிடமும் சமையல் ராணி,டிப்ஸ் ராணி என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

என் சமையல் மூலம் சமையலே தெரியாதவர்களும் சமைத்து நிறைய பாராட்டை பெற்று இருக்கிறார்கள்.இது பிளாக் மூல‌மாக‌ மற்றும் சகோதரி பாயிஜா , ச‌கோத‌ர‌ர் ஷ‌பிக்ஸ் மூல‌ம் இந்த‌ ஸ்வார‌ஸ்ய‌ அவார்டு கிடைத்துள்ள‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.ந‌ன்றி பாயிஜா, ஷ‌பி

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
இது மெயிலில் வந்தது எல்லோருக்கும் பயன் தரும் என நினைக்கிறேன்.


கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே
உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண
டெஸ்டில் தெரிய வராது, அவை
சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின், டாக்டர்
நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான
அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான
செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக
இருக்கும்போது கேன்சருக்கான செல்
அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்
(tumors) ஏற்படுவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து
குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு
மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து
குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான
சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை
மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை
போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம்,
மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான
செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்
(tumor) அளவைக் குறைக்க
செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை
கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது
அழிக்கப் பட்துவிடும். இதனால்
மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்
எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்
மற்ற இடங்களில் பரவ ஒரு
காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்
பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை
நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக
நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.
ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை
தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது
சக்தியை கேன்சர் செல்லின்
கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer
cells) கேன்சர் செல்லை
அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs
etc, போன்றவை
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's
own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள
பாதிக்கப்பட்ட, தேவையற்ற
செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like
vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing
of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)
நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை
அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்
அமிலத்தன்மையையும்
அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,
வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.
தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த
சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியானது
(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை
தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு
தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள
NutraSweet, Equal,
Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும்
பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை
எடுத்துக் கொள்ளலாம். Table
Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக
Bragg's amino or sea salt
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்
(gastro-intestinal)
பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக
இனிப்பில்லாத சோயாப் பாலை
எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.


3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான
உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.
எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு
சிக்கன் போன்றவற்றை எடுத்துக்
கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,
ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,
இது மிகவும் ஆபத்தானது..


4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு
தானியங்கள், விதைகள்,
பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்
வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக
இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள
நொதிகளை அளிக்கிறது, இவை 15
நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர
உதவுகிறது. ஆரோக்கியமான
செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ்
மற்றும் ஒரு நாளைக்கு 2
அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)
104 degrees F (40
degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை
தவிர்த்து விடவும். இதற்கு
மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர்
செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல்
உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக
கலவை அதிகமுள்ள குழாய் நீரை
தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்

இது மெயிலில் வந்த தகவல்

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

சூரிய கிரகணம் முடிந்துவிட்டது இது மெயிலில் வந்த தகவல், இப்ப தான் பார்த்தேன், இனி இதை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:(வரும் July 22 2009 துபாயில் சூரிய கிரஹண நேரம் காலை y 5:43 - 5:48;

இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றனஇன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)

சூரிய கிரகண தொழுகை:கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:அதிகமாக துஆ செய்வது
பாவங்களை நினைத்து, வருந்தி, அஞ்சுவது
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவது
இஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வது
தர்மம் செய்வது


சந்திர கிரஹண தொழுகை:சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்) தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.சூரிய கிரகணம் பற்றிய‌ முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

Sunday, July 26, 2009

துணிக‌ளை அல‌சும் போதும் காய‌ப்போடும் போதும்

லைனிங் வைத்து தைத்து உள்ள‌ துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.சில‌ பேர் நிறைய‌ சோப் போட்டு பிரெஷ் போடுவார்க‌ள் ஆனால் ச‌ரியா அல‌சமாட்டார்க‌ள். சோப்பை ந‌ன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிற‌கு வெண்ணீரில் அல‌சினால் கூட‌ சீக்கிற‌ம் சோப் நுரை விடும். முன்று த‌ண்ணீரில் ந‌ல்ல‌ அல‌ச‌னும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட‌ அல‌ர்ஜி ம‌ற்றும் அரிப்பு வ‌ரும்.பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.


டூர் செல்லும் போது ஹேங்க‌ரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிக‌ளை காய‌ப்போடுவ‌து சுல‌ப‌ம்.


வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உட‌ற்ப‌யிற்சியும் ஆச்சு.இதே போல் மிதிய‌டிக‌ளையும் அல‌ச‌லாம்.டெய்ல‌ரிட‌ம் லைனிங் துணி வைத்து காட்ட‌ன் டிரெஸ்க‌ளை தைக்கும் போது அதை அல‌சி அய‌ர்ன் செய்து கொடுக்க‌வும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்த‌தும், க‌ருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உய‌ர்ந்த‌ துணியாக‌ இருந்தால் இன்னும் உங்க‌ளுக்கு ம‌ன‌சே ஆறாது.

காட்ட‌ன் புட‌வை க‌ட்டுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பால்ஸ் வைத்து தைத்து க‌ட்டினால் புட‌வை தூக்கி கொள்ளாம‌ல் இருக்கும்.

நிறைய‌ க‌ர்சீப் துவைத்து காய‌போடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த‌ தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைக‌ளை சேர்த்து முடிச்சி போட்டு காய‌ போட‌லாம்.

மனசே சரியில்லை

ஊர் போய் வந்தாச்சு, பையனை காலேஜில் சேர்த்தாச்சு

பத்து நாள் எப்படி போச்சுன்னே தெரியல, இந்த லீவு பையனுக்காக மட்டும் , ஊரில் யாரையும் சரியா பார்க்கல, அம்மா வீட்டில் உட்கார்ந்து அரட்டை அடிக்கல.

நான்கு நாட்கள் தான் சென்னையில் இருந்தோம்.
வீட்டில் எல்லோரும் சிரித்து அரட்டை அடித்து பேசி கொண்டு இருக்கிறார்கள்,
ஆனால் என் மனம் ஒரு நிலையில் இல்லை, எல்லாம் ஹகீம் ஹகீம் என்றே இருந்தது.
பையனை தேடுது மனசே சரியில்லை போஸ்டிங் மெதுவா தான் போடுவேன்.

Monday, July 13, 2009

குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?

குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?


வெளி நாடுகளில் காற்றோட்டம் கிடையாது 24 மணி நேரமும் ஏசி உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் கண்ணுக்கு தெரியாத தூசிகள் நிறைய வீட்டுக்குள்ளேயே நிறைய் இருக்கும்.

குழந்தைகள் தவழும் வயதில் கீழே இரக்கி விட்டதும் முதலில் அவர்கள் ஓடி போய் ஒளிவது கட்டில், சோபா, சேர் அடியில் தான்அவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களும் அங்கு தான் போய் சேரும் அதை எடுக்க செல்வார்கள், அங்குள்ள தூசியை முகர்ந்து கொண்டு வருவதால் தான் வீசிங் ஏற்படுகிறது.
இப்படி தான் ஒருவர் வீடு காலி பண்ணிட்டு ஊருக்கு போவதா இருந்தாங்க குழந்தைக்கு ஆறு மாதம். எல்லா சாமனையும் பேக்கிங் செய்து கொண்டு இருக்கும் போது பெட்டின் அடியில் உள்ள பெட்டி எடுத்து அந்த இடம் காலியாக இருக்கவே அந்த குழந்தை உள்ளே ஓடி ஓடி விளையாடி ஒளிந்து விளையாடி கொண்டு இருந்தது. இரண்டு நாள் கழித்து அந்த பையனுக்கு நிலைமை மோசமாகி முச்சு திணறி நெபுலைசர் வைக்கும் நிலை பாவம் வீடும் காலி பண்ணனும், ஊருக்கு கிளம்பனும், காலை மாலை மாற்றீ மாற்றி போய் நெபுலைசரும் வைத்து விடனும், அந்த பொண்ணு ரொம்பவே தவித்து போய் விட்டாள்.
க‌டைசியில் இர‌வு ப‌யண‌ம், உள்ளே போனா பிளைட்டில் ஏற்ற‌ மாட்டேன் அந்த‌ நெபுளைச‌ர் மிஷினோடு வ‌ந்தால் தான் ஏற்றுவேன் என்று சொல்லி விட்டார்க‌ள்.அந்த‌ ராத்திரியில் கூடே போன‌வ‌ர்க‌ள் அலைந்து திரிந்து வேறு ஏதோ ஒரு சாத‌ம் வாங்கி வ‌ந்து போய் ஊருக்கு போய் சேர்ந்தார்க‌ள்.
ஆனால் இன்னும் அந்த‌ பைய‌னுக்கு ட‌ஸ்ட் ப‌க்க‌ம் போனால் , குளிர் கால‌த்தில் வீசிங் வ‌ருகிற‌து.
எந்த‌ வேலை பார்த்தாலும் குழ‌ந்தை மேல் எப்போதும் ஒரு க‌ண்ணு வைத்து கொண்டே இருங்க‌ள். வீட்டையும் சுத்த‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து, சில‌ரால் முடியாது.நேர‌த்தை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தி வேலைக‌ளை பிரித்து செய்தால் எல்லாம் ச‌ரியாக‌ அமையும்.

அழுகையிலும் ஒரு சிரிப்பு


என் இரண்டு செல்லங்கள் அப்துல் ஹகீம், ஹனீபுதீன்.

பெரிய பையன் காலேஜ் சேர ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஒரே அழுகை தான் அப்ப என் பிள்ளைகளிடம் பேசிய போது.


அழுகையிலும் ஒரு சிரிப்பு

நான்: சின்னவனிடம் ஹனீப் அண்ணா ஊருக்கு போகிறான் ஏதாவது கிஃப்ட் கொடு..

ஹனீப்: அவன் பார்எவர் போகிறானா? ஆமா. அப்ப அவன் எனக்கு கவுண்டர்ஸ்ரைக் கேம் போட்டு கொடுத்தா 5 திர்ஹம் கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.


நான் : பெரியவனிடம் ஹகீம் ஊருக்கு போறீயே தம்பி கிட்ட சொல்லிட்டு போ, உன் கூட பிறந்தவன், என்று சொன்னேன்.ஹகீம்: வு இல்ல இல்ல அவன் என் கூட பிறக்கல.
நான்: ஆ ஆ என்ன இப்படி சொல்கீறான்.


ஹகீம்: அவனுக்கு முன் நான் ஏழு வருடம் முன்பே பிறந்துவிட்டேன் என்றான்.
அப்ப‌டியே அழுகைய‌ நிருத்திட்டு சிரிப்பு வ‌ந்து விட்ட‌து.

Ahed ahmed

க‌டைசி த‌ங்கை ப‌சீராவின் முன்றாம் ம‌க‌ன்


பெயர் : ஆகெத் அகமது

பிறந்த தேதி : 15.05.2009

வெள்ளி கிழமை மாலை 4 மணிக்கு சுகப்பிரசவம்.

கென‌டிய‌ன் ஹாஸ்பிட்ட‌லில் சுக‌ப்பிர‌ச‌ம்.
ஹீட் ஸ்டோக் என்ற வெப்பத்தாக்கம்


ஹீட் ஸ்டோக் என்ற வெப்பத்தாக்கம் தவிர்த்துக் கொள்ள முடிந்ததே!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அறிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்

களைப்பு
உடம்பு வலி
அதிக வியர்வை
அதீத தாகம்
குமட்டல், வாந்தி
தசைவலி
தலைசுற்றல்
நினைவிழப்பு
இசுவு அல்லது இழுப்பு அல்லது வலிப்பு

தவிர்க்கும் வழிகள்

நடுப்பகல் நேரத்து வேலைகளைத் தவிர்த்தல்.
நேரடி சூரிய வெளிச்சத்தில், புழுக்கத்தின்போது வேலைகளைத் தவிர்த்தல்.
காஃபி, டீ, கார்பன் அடைத்த பானங்கள், மது, போதை மருந்து போன்ற நீரிழப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்தல்.
புகை பிடித்தலைத் தவிர்த்தல்.
செயற்கை நூலிழைகளிலான இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல்.


செய்து கொள்ள வேண்டியவை


உச்சிப் பொழுதில் ஓய்வு.

உப்பு மாத்திரைகள், பொடிகள் கலந்த தண்ணீரை அடிக்கடி குடித்தல்.

முடிந்தால் ஒரு நாளைக்கு 2 முறையாவது பழச்சாறுகள் அருந்துதல்.

சிறுநீர் மெல்லிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுதல்.

வெப்பத்தாக்கத்தின் அறிகுறிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் சகதொழிலாளிக்கோ

தெரிந்தால் உடனே மேலாளருக்குத் தெரிவித்தல்.

வெப்பத்தாக்குதலுக்கான நபரை எப்படிக் கையாள்வது

(மேலாண்மை நிர்வாக அலுவலர்களுக்கு)

குளிர்ச்சியான ஓரிடத்துக்குக் கொண்டு செல்லுதல்.

சீருடை, வெளி உடைகளை நீக்குதல்.

குளிர்ந்த நீரில் முக்கி எடுத்த ‘ஸ்பாஞ்ச்’ மூலம் ஒத்தடம் கொடுத்தல் அல்லது ஸ்ப்ரே செய்தல்.

மின்விசிறி அல்லது குளிர்சாதனம் வழி குளிர்ச்சியூட்டல்.

வாந்தி இல்லாவிட்டால் குடிக்க தண்ணீர் கொடுத்தல்.

முன்னேற்றம் இல்லாவிட்டால் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லுதல்.

( துபாய் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் அலுவ‌ல‌க‌த்தால் க‌ட‌ந்த‌ ஆண்டு வெளியிட‌ப்ப‌ட்ட‌ இத்த‌க‌வ‌ல் த‌மிழக‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இருந்து வ‌ளைகுடாவில் ப‌ணிபுரிபவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுடையதாய் இருக்கும். ஆங்கில‌ம், ஹிந்தி, ம‌லையாள‌ம் போன்ற‌ மொழிக‌ளில் வெளிவந்த‌ இத்த‌க‌வ‌ல் த‌மிழில் வெளிவ‌ர முக்கிய‌க் கார‌ண‌மான‌வ‌ர் தொழிலாள‌ர் ந‌ல க‌ன்ச‌லாக‌ ப‌ணிபுரிந்த‌ பி.எஸ். முபார‌க் அவ‌ர்க‌ளே. த‌ற்பொழுது ஜெத்தா இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ஹ‌ஜ் க‌ன்ச‌லாக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். )


இது மெயிலில் வந்த தகவல்,
இது என் டிப்ஸ்


1. ஆர‌ஞ்சில் உப்பு குளுக்கோஸ் க‌ல‌ந்து குடித்தால் போதும்.


2. லெமென் ஜூஸ், லெமென் சாத‌ம் சாப்பிட‌லாம்.

3. த‌யிர் சாத‌ம், ஸ்வீட் ல‌ஸ்ஸி, மோரில் இஞ்சி, கொத்தும‌ல்லி , சிறிது வெந்த‌ய‌ பொடி க‌ல‌ந்து அடித்து குடிக்க‌லாம்.

4. மேற்க‌ண்ட‌வைக‌ளை தின‌ம் அல்ல‌து வார‌ம் முன்று நாட்க‌ள் குடித்தால் ஹீட் ஸ்டோக் வ‌ராம‌ல் பாதுகாக்க‌லாம்.

5.உட‌ம்புக்கு குளிர்சி த‌ர‌க்கூடிய‌ உண‌வு க‌ளை உண்ப‌து ந‌ல்ல‌து.

6.சிக்க‌ன், பீஃப்,இறால் போன்ற‌வ‌ற்றை அள‌வோடு சாப்பிட‌வேண்டும்,இதெல்லாம் உட‌ல் சூடு அதிரிக‌ரிக்கும் உண‌வுக‌ள், முறையாக‌ த‌யிர் , லெமென் சேர்த்து ச‌மைத்தால் சாப்பிட‌லாம்.

Sunday, July 12, 2009

முட்டை மூளை வதக்கல் - Brain with eggதேவையான‌ பொருட்க‌ள்ஆட்டு மூளை = இரண்டு
முட்டை = இரண்டு
வெங்காயம் = நான்கு
தக்காளி ‍= ஒன்று பொரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
ரெட் க‌லர் ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி (ருசிக்கு)
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை ‍= ஆறு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = கால் கை பிடி

செய்முறை

1.சூடான‌ வெண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி மூளையை போட்டு மேலே உள்ள‌ மெல்லிய‌ தோலை மூளை உடையாம‌ல் பிரித்து எடுத்து ந‌ன்கு க‌ழுவி எடுத்து த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.

2.முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.

3. மூளையில் கால் தேக்க‌ர‌ண்டி,உப்பு கால் தேக்க‌ர‌ண்டி, சிறிது மிள‌காய் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

4.ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு ஊற்றி காய‌வைத்து ப‌ட்டையை போட்டு வெடிக்க‌விட்டு வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.

5.வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வாடை போக‌ வ‌த‌க்கி சிறிது கொத்தும‌ல்லி த‌ழை சேர்த்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.

6. இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.

7. க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌ற்ப‌க‌க்மும் பிர‌ட்டு வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி ப‌ச்ச‌மிள‌காய், கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இர‌க்க‌வும்.

8. சுவையான‌ முட்டை மூளை வ‌த‌க்க‌ல் ரெடி.ஆட்டு பாட்ஸில் மூளையை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம், அப்படியே முழுசாக வ‌றுத்தும் எடுக்க‌லாம்.

இதை ஐந்து பேர் சாப்பிடலாம்.

Saturday, July 11, 2009

த‌ம்பி ம‌க‌ள் அச‌லீனா

தம்பி புகாரியின் மகள் அசலீனா

பிப்ரவரி 16 ந்தேதி பிறந்தது , சாட்டிங் பண்ணும் போது எடுத்தது


அண்ணா தம்பி , ஹனீப்

முன்று பேரும் சேர்ந்து ஒரே கம்புட்டரில் கேம், அதுக்கு கண்ணு இருந்த அது கூட அழுதிருக்கும்.ப‌ச்ச‌ குழ‌ந்தை என்றாலே எல்லோருக்கும் ஆசை தான் /

ஆண்டி ஆண்டி நான் கொஞ்ச‌ம் நேர‌ம் வைத்து கொள்கிறேன்.என் பைய‌ன் ஹ‌னீப் சொன்னான். ம‌டியில் வைத்த‌து ச‌ந்தோஷ‌ம் தாங்க‌ல‌ அத‌ நான் போட்டோ வேறு எடுப்ப‌தால் ஒரு சிரிப்பு + போஸ் வேறு க‌ண்ணை விரித்து கொண்டு...
அடுத்து அண்ணா த‌ம்பி இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேருடைய‌ பேச்சுக்க‌ளை சொன்னால் சொல்லி கொண்டே போக‌லாம்.

அவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் கூப்பிட்டு கொள்வ‌தே அண்ணா ஆ ஆஆ
த‌ம்பி பீ பீ பீ என்று தான் அது வீட்டுக்கு வ‌ர‌ எல்லோருக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.உட‌னே ஹ‌னீப் த‌ம்பிய‌ வ‌ச்சுக்குறான், த‌ம்பி வா குட்டி த‌ம்பிய‌ வ‌ச்சு போட்டோ எடுதுக்க‌லாம்.
த‌ம்பிக்கு த‌லைவ‌லிக்கு தான் ஆஃப்தாப் கொஞ்ச‌ம் தைல‌ம் தேச்சு விடுமா.. என் த‌ங்கை சொல்ல‌ உட‌னே த‌ம்பீ இங்க‌ வா தைல‌ம் தேய்க்கிறேன்.
உட‌னே த‌ம்பி ப‌டுத்து கொண்டே நீ வேணும்நா இங்க‌ வ‌ந்து த‌ட‌வி விடு....
சின்ன‌துக்கு ரொம்ப‌வே குசும்பு ஜாஸ்தி....
அடுத்து லைட் போட்டா குட்டி த‌ம்பி முழித்து விடுவான் போய் கொஞ்ச‌ம் த‌ண்ணீ கொண்டு வாம்மா...
ச‌த்தமா த‌ம்பீ குட்டி த‌ம்பி தூங்குறா போ போய் த‌ண்ணீ கொண்டு வா,
க‌டைசியில் இரண்டும் இருட்டில் போக‌ ஒரு டார்ச் ந‌ல்ல‌ வெளிச்ச‌மா போட்டு கொண்டு ந‌ல்ல‌ குழ‌ந்தை முக‌த்தில் அடித்து கொண்டு த‌ண்ணிய‌ கொடுத்தார்க‌ளாம்.


Friday, July 10, 2009

குழந்தைக்கு மசாஜ் மற்றும் ஆயில் பாத்
1. முதலில் ஒரு இரண்டு மூன்று பெரிய பேப்பர் எடுத்து கொண்டு அதில் குழந்தையை படுக்க வைத்து எண்ணையை தடவுங்கள்.துணியில் என்றால் எண்ணை பிசுப்பாகிடும். அதை துவைக்க நேரம் எடுக்கும்.

2. தலைக்கு சிறிய தலையனை (அ) டர்கி டவலை நான்காக மடித்து தலைக்கு வைத்து கொள்ளுங்கள்.

3.ஜான்சன்ஸ் பேபி ஆயில் (அ) ஆலிவ் ஆயில் தேய்த்து மெதுவாக பூவை தொடுவது போல் மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்வதால் கால் முட்டி, நரம்புகள் வலுவடையும்.15 நிமிடம் ஊறினால் போதும் உடனே வெது வெதுப்பான நீரில் குளிக்கவையுங்கள்.குளிக்க கொண்டு செல்லும் போதே உங்கள் தோள் பட்டையி டவல் இருக்கட்டும்.குளிக்க வைத்து உடனே தோள்பட்டையில் உள்ள டவல் மேல் போட்டு அபப்டியே மூடி கொண்டு போய் பெட்டில் போடு நன்கு துடைக்கவும்.பேனை ஆஃப் பண்ணிவிடவும்.

4. இப்போது நல்ல வயிற்றை நிறைத்து , ஏப்பம் விட விட்டு பெரிய டவல் கொண்டு நன்கு இரண்டு கைபுறம், கால் புறம் சேர்த்து கட்டுவது போல் கொண்டு வந்து பெட்டில் நாலா பக்கமும் தலையன் வைத்து தூங்க வையுங்கள்.(ஓவ்வொரு முரை பால் கொடுக்கும் போதும் நீங்கள் சூடான பானம் ஏதாவது குடித்து கொள்ளுங்கள்.(சூப், ஹார்லிக்ஸ், பால்,போஸ்ட், போன்வீட்டா, ராகி, அல்ல்து வெண்ணீர்)

5. வாரத்திற்கு முன்று நாட்கள் ஆயில் மசாஜ் செய்தால் போதும்.

ஜலீலா
(தொடரும்)


Thursday, July 9, 2009

பிரிவு என்பது ஏன் வருகிறது


என் செல்லம் ஹகீம்
என் செல்லம் ஊருக்கு போய் இன்றோடு ஒரு மாதம் ஆகப்போகிறது.
அப்துல் ஹகீம் காலேஜ் சேர ஊருக்கு போய் விட்டான்.
அவன் ஊருக்கு போன‌திலிருந்து ஒரு வேலையும் ஓட‌ல‌ இது வ‌ரை பிரிந்த‌தே இல்லை.
ஒரு ர‌ச‌ம் வைக்க‌ கூட‌ என்னால் முடிய‌ல‌, வீட்டில் சின்ன‌ பைய‌னும், என் ஹஸும் இருந்தால் கூட அவர்களுக்காகவும் சமைக்க முடியல, ஒரே அழுகை தான் அவன் துணியாபார்த்தா அழுகை வருது , அவன் புக்கை பார்த்தா அழுகை வருது.


ஏன் பிரிவு என்பது ஏன் வருகிறது. எப்ப பார்த்தாலும் ஹகீம் ஹகீம் ம்ம்ம்ம்ம்ம் என்று கூப்பிட்டு கொண்டே இருப்பேன்.
அமைதியான தங்கமான பையன், ஒரு சாக்லேட் வாங்கி சாப்பிடுவதா இருந்தால் கூட என் கிட்ட கேட்டுட்டு தான் சாப்பிடுவான். அவன் உண்மைய சொல்வதில் அவன் காந்திஜி வீட்டு பக்கத்து வீட்டு பையன் என்றூ சொல்லலாம்.
நானும் பிளாக்கில் எவ்வளவோ பதிவுகள் போட்டு மனசை தேர்த்த பார்த்தேன், ஆனால் என்னால் முடியல.
எல்லோரும் ப‌டிக‌க் தானே போகிறான், பொம்ப‌ல‌ பிள்ளைக‌ளே த‌னியா போய் ப‌டிக்கிறார்க‌ள். இவ‌னை அனுப்பிட்டு ஏன் இப்ப‌டி அழுகிறாய் என்று கேட்டார்க‌ள். என்ன‌ தான் ச‌மாதான‌ ப‌டுத்தினாலும் என‌க்கு முடிய‌ல‌.

போய் ஊருக்கு போய் பார்த்து விட்டு வ‌ர‌போறேன்.

சமையலறை டிப்ஸ்

சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.


3. தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.4.ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

5. தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்

6.பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.


9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.(தொடரும் )

ஸலவாத்தன் துனஜ்ஜின்னா

அல்லஹும்ம ஸல்லி அலா செய்யதினா வ மௌலானா முகம்மதின் வ அலா ஆலி செய்யதினா மௌலானா முகம்மதின் ஸலவாத்தன் துனஜ்ஜின்னா பிஹா மின் ஜமீஅல் அஹ்வாலி வலாஆஃபாதி வதக்லீலன பிஹா ஜமீஅல் ஹாஜாதி வதுதக்ஹிர்னா பிஹா மின் ஜமீஅல் ஸய்யிஆத்தி வதர்ஃபகுனா பிஹா இன் தக்க அலல் தர்ஜாதி வதுபல்லிகுனா பிஹா அக்ஸல் ஆயாதி மின் ஜமீஅல் ஹைராதி ஃபில் ஹயாதி வபஅதல் மமாதி இன்னக்க அலா குல்லி ஸையின் கதீர்.யா அல்லாஹ்! எங்கள் தலைவர்,பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், எங்கள் தலைவர், பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் நீ ஸலவாத்து அருள் புரிவாயாக! அதன் காரணமாக எங்களை சகலவித ஆபத்துகள், இடுகண்களிலிருந்து காப்பாற்றுவாயாக! மேலும் எங்களது சல தேவைகளையும் நிறைவேற்றுவாயாக! மேலும் எங்களை உயர் பதிவிகளுக்கு உயர்த்துவாயாக! மேலும் வாழ்விலும், மரணத்திற்குப் பின்னும் உள்ள எல்லா நன்மைகளின் இறுதி எல்லைகளை அடையச் செய்வாயாக! நிச்சயமாக நீ எல்லாவற்றின் மீதும் ஆற்றல் படைத்தவன்!
துன் ஜீனா ஸலவாத்தை தனியாகவோ ,கூட்டாகவோ அதிகமாக ஓதுவதில் பலனாகவும் வீடுகளில் தகுந்த இடத்தில் எழுதி வைபப்தாலும், அல்லாஹு தஆலா பலவிதமான இன்னல்களிலிருந்தும் சோதனைக் காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறான்.

கோதுமை பூரியும் பாஜியும்


கோதுமை பூரி

தே.பொருட்கள்
கோதுமை மாவு = கால் கிலோ
பட்டு போல் உள்ள ரவை = 25 கிராம்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = ஒரு டம்ளர்
எண்ணை = இரண்டு தேக்கரண்டி

செய்முறை

 • கோதுமைமாவில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எண்ணை தவிர போட்டு குழைக்கவும்.

 • குழைக்கும் போது இடையில் ஒரு தேக்கரண்டி எண்ணையும், கடைசியில் ஒருதேக்கரண்டி எண்ணையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

 • தண்ணீர் முதலில் முக்கால் டம்ளர் ஊற்றி குழைக்கவும், பிறகு தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்கவும்.
பாஜி

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு = கால் கிலோ
வெங்காயம் = முன்று
த‌க்காளி = ஒன்று
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = முக்கால் தேக்க‌ர‌ண்டி
இஞ்சி = ஒரு தேக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து)
ப‌ச்ச‌ மிள‌காய் = முன்று (இர‌ண்டாக‌ ஒடித்து கொள்ள‌வும்)
கடுகு = அரை தேக்கரண்டி
முந்திரி = முன்று (பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்)
உளுந்த‌ம் ப‌ருப்பு = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
எண்ணை = நான்கு தேக்க‌ர‌ண்டி

செய்முறை

 • பூரிக்கு மாவு குழைக்கும் முன் உருளை கிழ‌ங்கை வேக‌ போட‌வும்.
 • உருளை கிழ‌ங்கை ந‌ன்கு ம‌ண் போக‌ க‌ழுவி இர‌ண்டாக‌ வெட்டி அதில் கால் தேக்க‌ர‌ண்டி உப்பு, கால் தேக்க‌ர‌ண்டி சேர்த்து மூழ்கும் அள‌விற்கு த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் நான்கு ஐந்து விசில் விட்டு இர‌க்க‌வும்.ஆறியதும் தோலை உறித்து மசித்து வைக்கவும்.
 • ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணையை காய‌வைத்து அதில் க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு, முந்திரி,க‌ருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
 • வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும் த‌க்காளியை ஆறாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிள‌காய், இஞ்சியை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.

 • பிற‌கு மிள‌காய் தூள்,கால் தேக்க‌ர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூள் , உப்பு அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து இர‌ண்டு நிமிட‌ம் வ‌த‌ங்க‌ விட‌வும்.
 • ம‌சித்த‌ உருளையை சேர்த்து கிள‌றி கால் ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து முடி போட்டு சிறிது நேர‌ம் சிறு தீயில் விட‌வும்.க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.
  குறிப்பு:

பூரி பாஜி என்ப‌து ரொம்ப‌சுல‌ப‌ம் தான் பல‌ வ‌கைக‌ளில் செய்ய‌லாம்.மைதாவில் செய்தால் உட‌னே சுட‌ சுட‌ சாப்பிட‌னும்.இது கோதுமையில் செய்வ‌தால் ப‌ள்ளிக்கோ ஆபிஸுக்கோ க‌ட்டி கண்டு போக‌லாம்.பூரியை எண்ணை ந‌ன்கு காய்ந்த‌தும் தீயின் அள‌வை மீடிய‌மாக‌ வைத்து சுட‌வும்.ஒரே சீராக‌ தேய்த்து போட‌னும். எண்ணையில் போட்ட‌தும் சும்மா சும்மா போட்டு கிண்ட‌க்கூடாது.ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் , உட‌னே ம‌றுப‌க்க‌ம் திருப்பி பொங்கி வ‌ரும் போது எடுத்து விட‌வேண்டும்.

குழந்தைகளுக்கு, ஆபிஸுக்கும் கட்டி கொடுக்கும் போது இப்படி ஓவ்வொரு பூரியிலும் பாஜியை தடவி மடக்கிவைத்தால் சாப்பிட ஈசியாக இருக்கும்.
(இந்த அயிட்டம் என் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட் .முன்று பேரும் முன்று விதமா சாப்பிடுவர்கள். பெரியவர் பூரிக்கு பொட்டுகடலை துவையல், சின்னவர் பூரி சாம்பார் , எங்க அத்தானுக்கு பூரி பாஜி ரொம்பவே பேவரிட்) ஆபிஸ் கொண்டு போன பக்கத்து டேபுள் அரபிகளுக்கு கூட மூக்கை துளைத்து கேட்டு சாப்பிடுவார்கள்.)இந்த‌ பூரிக்கு மீன் குழ‌ம்பு, பீஃப் பிரை,ம‌ட்ட‌ன் குருமா, ம‌ட்ட‌ன் கூட்டு எல்லாம் ந‌ல்ல‌ இருக்கும்.