Saturday, July 4, 2009

லகத்ஜாஅகும் ந‌ல‌ன்க‌ள் அனைத்தும் பெற‌

லகத்ஜாஅகும் ரஸூலுன் மின் அன்புஸிகும் அஜீஜுன் அலைஹி மா அனித்தும் ஹரிலுன் அலைக்கும் பில்முமினின் ரவூஃபுன் ரஹீம்.

ஃப‌இன் தவல்லு ஃபகுல் ஹஸ்பியல்லாஹு லாயிலாக இல்லாஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்..



ஸூரா த‌வ்பாவின் கடைசி இரண்டு ஆயத்துக்கள் இவ்விரு வசனங்களையும் தினமும் ஓதி வருவோனுக்கு இம்மை மறுமைக்காரியங்கள் அனைத்தையும் இறைவன் நல்லபடியாக அமைத்துத் தருவான்.

அவன் இடிபாட்டுக்குள்ளே நசுங்கியோ நெருப்பில் கரிந்தோ, தண்ணீருக்குள் மூழ்கியோ இறக்கமாட்டான். என்பதாக நபித்தோழர் அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

லகத்ஹஜாஅகும்.... எனும் இரண்டு ஆயத்துகளின் கருத்தாவது:
(விசுவாசிகளே! நம்முடைய ) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். அவர் உங்களில் உள்ளவர் தாம். நீங்கள் துன்பத்திற்காளாகிவிட்டால் அது அவருக்கு வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசிகளாகிய உங்கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கிறார். (ந‌பியே இத‌ற்குப்) பின்ன‌ரும் அவ‌ர்க‌ள் (உம்மைப்பின்ப‌ற்றாது) வில‌கிக் கொண்டால் (அவ‌ர்க‌ளை நோக்கி நீர் கூறும்) அல்லாவே என‌க்குப் போதுமான‌வ‌ன். அவ‌னைத் த‌விர‌ வேறு நாய‌னில்லை. அவ‌ன் மீது நான் த‌வ‌க்க‌ல் வைத்துள்ளேன் இன்னும் அவ‌ன் ம‌க‌த்தான‌ அர்சுக்கு இர‌ட்ச‌க‌ன் (9:128:129)

7 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஃபகுல் ஹஸ்பியல்லாஹு லாயிலாக இல்லாஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்//

இதை நான் அடிக்கடி ஓதி வருவதுண்டு, மனதிர்க்கு ஆறுதல் தரும் அழகிய வசனங்கள். நன்றிகள்

அ.மு.செய்யது said...

ஜஸாகல்லாஹ் பகிர்வுக்கு...

Jaleela said...

சகோதரர் அ.மு.செய்யது வருகைக்கு நன்றி

Jaleela said...

ஷபி இது என் டாடி உம்மா அடிக்கடி ஓதி கொண்டே இருப்பார்கள்.

நன்றி.

ஷ‌ஃபிக்ஸ் said...

Jaleela said...
ஷபி இது என் டாடி உம்மா அடிக்கடி ஓதி கொண்டே இருப்பார்கள்.

டாடி உம்மான்னா...வாப்பிச்சா தானே?

Jaleela said...

வாப்பிச்சா அப்படின்னா ( வாப்பா வுடைய அம்மாவா) ஆமாம்.

ஒரு நாலு வருடமா படுத்த படிக்கயா இருந்தாங்க ஆனால் இத மட்டும் சத்தம் போட்டு ஓதி கொண்டு இருப்பாங்க.

அதிரை அபூ said...

அல்ஹம்துலில்லாஹ்.. இது போன்ற நிறைய துஆக்களை பகிர்ந்து கொள்ளவும்..(?)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா