Sunday, July 12, 2009

முட்டை மூளை வதக்கல் - Brain with egg



தேவையான‌ பொருட்க‌ள்



ஆட்டு மூளை = இரண்டு
முட்டை = இரண்டு
வெங்காயம் = நான்கு
தக்காளி ‍= ஒன்று பொரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
ரெட் க‌லர் ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி (ருசிக்கு)
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை ‍= ஆறு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = கால் கை பிடி

செய்முறை

1.சூடான‌ வெண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி மூளையை போட்டு மேலே உள்ள‌ மெல்லிய‌ தோலை மூளை உடையாம‌ல் பிரித்து எடுத்து ந‌ன்கு க‌ழுவி எடுத்து த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.

2.முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.

3. மூளையில் கால் தேக்க‌ர‌ண்டி,உப்பு கால் தேக்க‌ர‌ண்டி, சிறிது மிள‌காய் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

4.ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு ஊற்றி காய‌வைத்து ப‌ட்டையை போட்டு வெடிக்க‌விட்டு வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.

5.வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வாடை போக‌ வ‌த‌க்கி சிறிது கொத்தும‌ல்லி த‌ழை சேர்த்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.

6. இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.

7. க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌ற்ப‌க‌க்மும் பிர‌ட்டு வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி ப‌ச்ச‌மிள‌காய், கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இர‌க்க‌வும்.

8. சுவையான‌ முட்டை மூளை வ‌த‌க்க‌ல் ரெடி.ஆட்டு பாட்ஸில் மூளையை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம், அப்படியே முழுசாக வ‌றுத்தும் எடுக்க‌லாம்.

இதை ஐந்து பேர் சாப்பிடலாம்.

5 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

சாரி அக்கா, லின்க் கொடுக்க மறந்துட்டேன். தயவு செய்து இந்த விருதை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.
http://shafiblogshere.blogspot.com/2009/07/blog-post_19.html

Jaleela said...

Thank you shafi

Mrs.Faizakader said...

முட்டை மூளை வதக்கல் நேற்று செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக வந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டாங்க.. முட்டையும் மூளை போல் ருசியாக இருந்தது..

Jaleela said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பாயிஜா.

இது முட்டை போட்ட மாதிரியே தெரியாது. இன்னும் இரண்டு முறையில் இதை செய்யலாம், மிளகு சேர்த்தும் செய்யலாம்.

Jaleela Kamal said...

Joe said...
எனக்கு ரொம்பப் பிடித்த உணவுவகைகளில் ஒன்று மூளை வறுவல்.
"உங்களுக்கு இதை சாப்பிட்டாவது மூளை வளரட்டும்" என்று கேலி செய்வாள் என் மனைவி. அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது, மூளை வறுவல்.

சமையல் குறிப்புக்கு நன்றி.
வீட்டில் ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.

July 30, 2009 1:21 PM
Jaleela said...


வாங்க ஜோ கண்டிப்பா செய்து பாருங்கள் அதுவும் என் முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவையை விடவே மாட்டீர்கள்.
இதில் போட்டுள்ளேன் அதில் தற்சமயம் குறிப்புகளை போட முடியல எப்படி எதில் போடுவது என்று தெரியல



தங்கள் வ‌ருகைக்கு ந‌ன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா