Monday, July 13, 2009

குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?





குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?


வெளி நாடுகளில் காற்றோட்டம் கிடையாது 24 மணி நேரமும் ஏசி உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் கண்ணுக்கு தெரியாத தூசிகள் நிறைய வீட்டுக்குள்ளேயே நிறைய் இருக்கும்.









குழந்தைகள் தவழும் வயதில் கீழே இரக்கி விட்டதும் முதலில் அவர்கள் ஓடி போய் ஒளிவது கட்டில், சோபா, சேர் அடியில் தான்அவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களும் அங்கு தான் போய் சேரும் அதை எடுக்க செல்வார்கள், அங்குள்ள தூசியை முகர்ந்து கொண்டு வருவதால் தான் வீசிங் ஏற்படுகிறது.








இப்படி தான் ஒருவர் வீடு காலி பண்ணிட்டு ஊருக்கு போவதா இருந்தாங்க குழந்தைக்கு ஆறு மாதம். எல்லா சாமனையும் பேக்கிங் செய்து கொண்டு இருக்கும் போது பெட்டின் அடியில் உள்ள பெட்டி எடுத்து அந்த இடம் காலியாக இருக்கவே அந்த குழந்தை உள்ளே ஓடி ஓடி விளையாடி ஒளிந்து விளையாடி கொண்டு இருந்தது. இரண்டு நாள் கழித்து அந்த பையனுக்கு நிலைமை மோசமாகி முச்சு திணறி நெபுலைசர் வைக்கும் நிலை பாவம் வீடும் காலி பண்ணனும், ஊருக்கு கிளம்பனும், காலை மாலை மாற்றீ மாற்றி போய் நெபுலைசரும் வைத்து விடனும், அந்த பொண்ணு ரொம்பவே தவித்து போய் விட்டாள்.
க‌டைசியில் இர‌வு ப‌யண‌ம், உள்ளே போனா பிளைட்டில் ஏற்ற‌ மாட்டேன் அந்த‌ நெபுளைச‌ர் மிஷினோடு வ‌ந்தால் தான் ஏற்றுவேன் என்று சொல்லி விட்டார்க‌ள்.அந்த‌ ராத்திரியில் கூடே போன‌வ‌ர்க‌ள் அலைந்து திரிந்து வேறு ஏதோ ஒரு சாத‌ம் வாங்கி வ‌ந்து போய் ஊருக்கு போய் சேர்ந்தார்க‌ள்.
ஆனால் இன்னும் அந்த‌ பைய‌னுக்கு ட‌ஸ்ட் ப‌க்க‌ம் போனால் , குளிர் கால‌த்தில் வீசிங் வ‌ருகிற‌து.
எந்த‌ வேலை பார்த்தாலும் குழ‌ந்தை மேல் எப்போதும் ஒரு க‌ண்ணு வைத்து கொண்டே இருங்க‌ள். வீட்டையும் சுத்த‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து, சில‌ரால் முடியாது.நேர‌த்தை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தி வேலைக‌ளை பிரித்து செய்தால் எல்லாம் ச‌ரியாக‌ அமையும்.

8 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

நல்லதொரு பதிவு ஜலிலாக்கா!!.
ஊருக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்க.

S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு பதிவு சகோதரி.

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்ல பதிவு, என் மகளுக்கு சிறு வயதில் இந்த பிரச்னை இருந்தது, வீட்டில் கார்பெட் இருந்தால் அதை எடுத்துவிடும்படி கூறினார், அதன் பிறகு மெல்ல மெல்ல சரியாகி விட்டது.

Mrs.Faizakader said...

உங்களுக்காக காத்திருக்கும் இந்த விருதை ஏற்றுக்கொள்ளவும்.
http://azurillcrafts.blogspot.com/2009/07/blog-post_20.html

Jaleela said...

நன்றி பாயிஜா நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன், அப்ப ரொம்ப நாள் ஆச்சு உங்கள் பதிவை பார்த்து. எப்ப‌டி இருக்கீங்க‌

Jaleela said...

நவாஸ் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றீ,

ஆமாம் ஷபி கார்பெட்டில் அலர்ஜி உண்டு, ஒரு முறை பிள்ளைகள் ஒரு கேன் தண்ணி முழுவதும் சரித்து ஈரமாகி அதை காயவைக்க ரொம்ப பாடு பட்டேன்.

Jaleela said...

மேனகா மிக்க நன்றி.
இப்ப பிலாக்கில் எங்கு பார்த்தாலும் அவார்டாக இருக்கு.
ஷிவனி நலமா?

எம் அப்துல் காதர் said...

நல்ல பயனுள்ள தகவல் ஜலீலாக்கா.
பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளனும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா