Wednesday, July 29, 2009

அலஹாபாத் போகும் போது



ஹகீம் கூடவே வைத்து வளர்த்தாச்சு எனக்கு இந்தியா அனுப்ப மனமில்லை ஆனால் அவனுக்கு அங்க போய் தான் படிக்கனும் என்று.


ஒரு மாதம் முன்பே போய் விட்டான், அவன் போனதிலிருந்து எனக்கும் இன்னும் கூட மனசு சமாதானம் ஆக மாட்டுங்கிறது.

காலேஜ் சேர்க்க அலகாபாத் சென்றோம், குடும்பத்தோடு இங்கிருந்து 10 நாள் லீவு போட்டு கொண்டு போனோம். நான் போவதா இல்லை திடீர் முடிவு தான் போய் 4 நாட்கல் சென்னையில் இருந்தோம்.

19 அன்று மதியம் 3 மணிக்கு சங்கமித்ரா எக்ஸ்ப்ரெஸில் போனோம் நல்ல வசதியா இருந்தது, முதல் முறையாக இரண்டு நாள் ரயில் பயணம், புளி சாதம், இனிப்பு, கார சோமாஸ்கள் வீட்டில் செய்து கொடுத்தார்கள்.
ரொம்ப நல்ல இருந்தது.





பெரிய‌வ‌ன் ஜ‌ன்ன‌லோர‌மா உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தான். எல்லாம் காலேஜ் டென்ஷ‌ன் தான் நான் அவ‌னையே பார்த்து கொண்டு த‌ஸ்பி ஓதி கொண்டே வ‌ந்தேன்






டிரெயினில் சின்ன‌ பைய‌ன் ஒரே குஷி மேல் ப‌ர்த்தில் அங்கும் இங்கும் தாவி கொண்டு இருந்தான்.
அங்கு அரை மணிக்கொருமுறை சாய் டிப் சாய், மசாலா சாய் வந்து கொண்டே இருந்தது, சின்னவர் அவரை மாதிரியே சொல்லி கொண்டே இருந்தான் சாய் டிப் சாய், சாய் டிப் சாய் என்று எனக்கும் அவன் சேட்டையை பார்த்து சிரிப்பதா? சிரிப்பு வந்தாலும் சிரிக்க்க முடியல.. இல்லை பெரியவன் பேசாமல் வருகிறானே அவனை பார்த்து கவலை பட்டு கொண்டே வந்தேன்






21 காலை 3 ம‌ணிக்கு போய் சேர்ந்தோம்.அங்கிருந்து ஒரு ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு ப‌க்க‌த்தில் உள்ள‌ கான் சியாம் ஹோட்ட‌லில் த‌ங்கினோம்.

காலை ப‌த்து ம‌ணிக்கு கிள‌ம்பி காலேஜ் சேர்க்க‌ போனோம் அங்கு புது இட‌ம் நிறைய‌‌ பெற்றோர்க‌ள் பெட்டி ப‌டுக்கையோடு பிள்ளைக‌ளோடு வ‌ந்திருந்தார்க‌ல்.

1 கருத்துகள்:

ஹைஷ்126 said...

அம்மா, அப்பா தம்பி, நண்பர்களை விட்டு போகிறோம் என்ற சோகம் நன்கு தெரிகிறது. இப்போது ஊருக்கு வரும் போது நல்ல பீரிடம் கொடுங்க.

வாழ்க வளமுடன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா