Sunday, August 2, 2009

குழந்தைகளின் விரல்கள் வலுவடைய‌




குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்கள் பென்சிலை பிடித்து எழுத அவர்களின் விரலுக்கு சத்து வேண்டும்.

சரியான கிரிப் கிடைக்காது அதற்கு பள்ளி அனுப்புவதற்கு ஆறு மாதம்
முன்பாக கைக்கு உடற்பயிற்சி கொடுக்க வேண்டும்.

வீடு கொஞ்சம் குப்பையாகும் அதற்கும் டிரெயிங் கொடுக்கனும்.

நிறைய வேண்டாத பேப்பரை கையில் கொடுத்து சுக்கு நூறா கிழிக்க சொல்லனும் அது எழுதும் விரல்களை வலுவடைய வைக்கும்.

அதுவும் பேப்பரை கிழித்து போட சொன்ன ரொம்ப சந்தோஷமாய் கிழிப்பார்கள்.

கிழிக்கும் போது ம‌ற‌க்காம‌ல் கூட‌வே ஒரு க‌வ‌ர் அல்ல‌து சிறிய‌ குப்பை கூடையை வைத்து அதில் போட‌ சொல்ல‌னும்.

இது ப‌ள்ளி செல்லும் போது அவ‌ர்க‌ள் கை வ‌லிக்க‌ம‌ல் ஈசியாக பென்சிலை பிடித்து எழுதுவார்கள்.

இந்த‌ டிப்ஸ் எல்லோரும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன்.‌




அடுத்து


குழ‌ந்தைக‌ள் இருக்கும் வீட்டில் நுழைந்தால் சுவ‌ரெல்லாம் சித்திர‌ம் தான்.
சில‌ வீட்டில் சுவ‌ரை பார்க்க‌வே முடியாது. சுவ‌ரெல்ல்லாம் க‌ண்ண‌ பின்னான்னு கிறுக்கி வைத்து இருப்பார்க‌ள்.

இத‌ற்கு முத‌லே நீங்க‌ள் ப‌ழைய‌ டைரி, நிறைய‌ நோட்டுக‌ள் இது போல் வாங்கை பென்சிலை தூக்கும் போதே அதை கொடுத்து எவ்வ‌ள‌வு கிறுக்கினாலும் அதிலேயே கிறுக்க‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்த‌னும்.


க‌ண்டிப்பாக‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்துவ‌து க‌டின‌ம் தான் ஆனால் ப‌ழ‌க்க‌ப‌டுத்தி விட்டீர்க‌ள் என்றால் க‌ரெக்டாக அவ‌ர்க‌ள் அந்த‌ நோட்டு அல்ல‌து டைரியில் தான் எழுத‌னும் என்ப‌தை புரிந்து கொள்வார்க‌ள்.

கொஞ்சம் பேச ஆரம்பிக்கும் போதே சுவரில் நிறைய படங்கள் (மிருகங்கள், பழங்கள் இது போல் எல்லாம் ஒட்டி வைத்து சொல்லி கொடுத்து பழக்க படுத்தலாம்.

12 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

விரலுக்கு கொடுத்த டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு சகோதரி. நம்ம புள்ளைங்க ஸ்கூல் புக்ஸ் எல்லாத்தையும் அதே மாதிரி கிழிக்காம இருக்கனுமே.

//இத‌ற்கு முத‌லே நீங்க‌ள் ப‌ழைய‌ டைரி, நிறைய‌ நோட்டுக‌ள் இது போல் வாங்கை பென்சிலை தூக்கும் போதே அதை கொடுத்து எவ்வ‌ள‌வு கிறுக்கினாலும் அதிலேயே கிறுக்க‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்த‌னும்.//

இது நல்ல ஐடியாதான்.

Mrs.Faizakader said...

நோட்டு புக், சேலேட்டு எல்லாம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் அவங்களுக்கு சுவரு தான் போர்டு. எங்க வீடு முழுவதும் என் மகளின் கைவண்ணம் தான்.
கை பழக்கம் என்பதால் அவளுக்கு தடை போடவில்லை

ஷ‌ஃபிக்ஸ் said...

//அதற்கும் டிரெயிங் கொடுக்கனும்.//

பேப்பரை எப்படி கிழிப்பதுன்னு சொல்லிக் கொடுக்க விரைவில் யாராவது டியூஷன் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை

ஷ‌ஃபிக்ஸ் said...

//இத‌ற்கு முத‌லே நீங்க‌ள் ப‌ழைய‌ டைரி, நிறைய‌ நோட்டுக‌ள் இது போல் வாங்கை பென்சிலை தூக்கும் போதே அதை கொடுத்து எவ்வ‌ள‌வு கிறுக்கினாலும் அதிலேயே கிறுக்க‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்த‌னும்.//

எங்கள் வீட்டில் ஏற்க்கனவே இது பழக்கத்தில் உள்ளது, மிக அத்தியாவிசயமான நல்ல பழக்கம்.

ஷ‌ஃபிக்ஸ் said...

பேப்பர் கிழித்தல் பற்றி படித்தவுடன் எனக்கு கல்லூரி நாட்களில் எங்க குரூப் போட்ட ஒரு மொக்கை விவாதம் ஞாபகம் வருது, பேப்பரை எப்படி கிழிப்பதுன்னு, எததனை வகையாக கிழிக்கலாம் என‌ ஒரு டெமோ போட்டு அத வச்சு அரை மணி நேரம் ஓட்டினோம்!!

Jaleela said...

ஹபிக்ஸ் கீழே உள்ள மெசேஜ் உங்கள் பிளாக்கில் வண்ணகல்வைக்கு கீழ் பேஸ்ட் செய்யவும், முன்று நாளா சுஹைனா பிளாக் தவிர யாருக்கும் பதிவுகளில் பதில் போட முடியல.





(இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அத்னான் க்கு வாழ்த்துக்கள்,அவர் கொடுத்த கலர் காம்பினேஷன் எல்லாம் சூப்பர். அவர் வரைந்த அளவிற்கு கூட எனக்கு வரைய தெரியாது, ஆனால் என் பெரிய மகன் ஹகீம் எதையும் பார்த்ததும் தத்ரூபமாக வரைவான்.)

குறை ஒன்றும் இல்லை !!! said...

Good Tips.. thx..

Jaleela said...

//விரலுக்கு கொடுத்த டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு சகோதரி. நம்ம புள்ளைங்க ஸ்கூல் புக்ஸ் எல்லாத்தையும் அதே மாதிரி கிழிக்காம இருக்கனுமே//


நவாஸ் ஹா ஹா இதுக்கு என்னத்த சொல்ல, அது தானா ஸ்கூல் போனதும் எல்லா பிள்ளைகளையும் பார்த்து வந்துடும்,

Jaleela said...

//எங்கள் வீட்டில் ஏற்க்கனவே இது பழக்கத்தில் உள்ளது, மிக அத்தியாவிசயமான நல்ல பழக்கம்.//

ரொம்ப சந்தோஷம்

Jaleela said...

பேப்பர் கிழித்தல் பற்றி படித்தவுடன் எனக்கு கல்லூரி நாட்களில் எங்க குரூப் போட்ட ஒரு மொக்கை விவாதம் ஞாபகம் வருது, பேப்பரை எப்படி கிழிப்பதுன்னு, எததனை வகையாக கிழிக்கலாம் என‌ ஒரு டெமோ போட்டு அத வச்சு அரை மணி நேரம் ஓட்டினோம்!!

ஷபி படித்து விட்டு ஒரே சிரிப்பு இதுக்கு வேறு ஒரு குரூப் மொக்கையா?

Jaleela said...

//நோட்டு புக், சேலேட்டு எல்லாம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் அவங்களுக்கு சுவரு தான் போர்டு. எங்க வீடு முழுவதும் என் மகளின் கைவண்ணம் தான்.
கை பழக்கம் என்பதால் அவளுக்கு தடை போடவில்லை//

பாயிஜா கொஞ்சம் கொஞ்சமா பழக்கத்தை மாற்றுவது நல்லது இல்லை என்றால் வெளியில் எங்கு சென்றாலும் கிறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

Jaleela said...

//Good Tips.. thx..//


ராஜ் குமார் சார் உங்கள் பாராட்டுக்கு நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா