Thursday, August 6, 2009

கேரட் டிப்ஸ்


குழந்தைகளுக்கு வயிற்று போக்கின் போது கேரட்டை வேகவைத்து மசித்து ஊட்டி விடலாம்.


கேரட், ஆப்பிலுடன் கலந்து ஜூஸாக அரைத்து வடிகட்டி கொடுக்கலாம்.சூப்பாகவும் கொடுக்கலாம்.

.பெரியவர்கள் வயிற்று போக்கின் போது கேரட் சூப்,கேரட் கஞ்சி, கேரட் சாலட் உப்பு எலுமிச்சை தூவி சாப்பிடலாம்.

கர்பிணி பெண்கள் உணவில் கேரட் அதிகம் சேர்த்து கொண்டால் குழந்தைக்கு கலரும் நல்ல வரும்

சொரி சிறங்கு, ஸ்கின் பிராப்ளம் இருப்பவர்கள், தொடர்ந்து 40 நாட்கள் ஒரு கேரட் சாப்பிடலாம். நாளடைவில் குணம் தெரியும்.

குழந்தைகளுக்கு சூப், ஜுஸ் போன்றவை செய்து கொடுக்கலாம்.



கர்பிணிபெண்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு நல்ல கலர் கிடைக்கும்.


நோன்பு கால‌த்தில் நோன்பு க‌ஞ்சியில் கீமாவுட‌ன் கேர‌ட் சேர்ப்பார்க‌ள்.கேர‌ட் சேர்த்து செய்வ‌தால் அல்ச‌ர் வ‌ராம‌ல் இருக்கும்.

கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு கேரட்டை மென்று சாப்பிடலாம்.


கேரட்டை நன்கு அரைத்து சாறெடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


.பளிச்சிடும் கண்பார்வைக்கு கேரட் ஒரு அரு மருந்தாகும்.

9 கருத்துகள்:

Mrs.Faizakader said...

அக்கா எல்லா டிப்சும் அருமை. //கர்பிணி பெண்கள் உணவில் கேரட் அதிகம் சேர்த்து கொண்டால் குழந்தைக்கு கலரும் நல்ல வரும்// சூகர் இருக்கும் கர்பிணி பெண்கள் அதிகம் கேரட் சாப்பிடக்கூடாதுனு டாக்டர் சொன்னாங்க.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//.பளிச்சிடும் கண்பார்வைக்கு கேரட் ஒரு அரு மருந்தாகும்.//

கவுண்டர் : இது தாங்க வேணும் ... ஏன்னா தூரமா இருந்து பாத்தா சூப்பரா இருக்கும் போல இருக்கு பக்கத்தில வந்தா சுமரா இருக்குங்க,..

Jaleela said...

//கவுண்டர் : இது தாங்க வேணும் ... ஏன்னா தூரமா இருந்து பாத்தா சூப்பரா இருக்கும் போல இருக்கு பக்கத்தில வந்தா சுமரா இருக்குங்க//

ஆஹா வந்துட்டாரையா வந்துட்டாரையா கவுண்டர்.
ஒன்னு பண்ணுங்க தினம் ஒரு அவித்த முட்டை சாப்பிடுங்க கிட்ட வந்து பார்த்தாலும் பளிச்சின்னு தெரியும்..

Jaleela said...

பாயிஜா நீஙக்ள் சொல்வது சரி தான் சுகர் பேசண்ட்

பார்த்து அதற்கேற்ற டயட் உணவை எடுத்து கொள்வது நல்லது.

S.A. நவாஸுதீன் said...

நிறைய நல்ல டிப்ஸ். தொடரட்டும் உங்கள் மிகச்சிறந்த பணி

ஷ‌ஃபிக்ஸ் said...

கேரட் துருவல், அதில் கொஞ்சம் மிளகு, உப்பு!! செகன்டுகளில் சலாட் என்னோட Favorite.

Jaleela said...

ஷபி அதில் சிறிது லெமன் பிழிந்து அவித்த வேர்கடலை சேர்த்து சாப்பிடுங்கள்

காலையில் ஹெல்தி டிபனும் ஆச்சு.

தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

அனைத்து டிப்ஸ்களும் அருமை அக்கா!!

Jaleela said...

/அனைத்து டிப்ஸ்களும் அருமை அக்கா!!/


என் டிப்ஸ்களை தவறாமல் படித்து பதில் கொடுத்தமைககு நன்றி மேனகா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா