Wednesday, August 12, 2009

மீன் டிப்ஸ்





1. மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் (அ) லெமென் ஜூஸ் (அ) தக்காளி இரண்ட்டி வெட்டி அதன் சாறு மட்டும் பிழிந்து கொள்ளனும் (அ) தயிர் சேர்த்து அதில் மசாலாவை கலக்கி தடவை பொரித்து பாருங்கள் சுவை அமோகமாக இருக்கும். ஸ்கின் அலர்ஜி உள்ளவர்கள் தயிர் சேர்க்கவேண்டாம்.


2. மீனுக்கு ஒரே மாதிரி மசாலா போடாமல் ஒரு முறை மிளகாய் தூள், அடுத்த முறை சிக்கன் மசாலா,அடுத்தமுரை கீரீன் மசாலா, மிளகு மசாலாஎன்று போட்டு பொரிங்கள் நன்றாக இருக்கும்.

3. வஞ்சிர மீனுக்கு மசலா தடவும் போது சில பேர் அதை போடு கறி பிசைவது போல் பிசைந்து தூளாக்கி விடுவார்கள் அதற்கு ஒரு கிண்ணத்தில் மசலாவை கட்டியாக கலக்கி கொண்டு தடவி அடுக்கி வைக்கனும்.


4. மீன் பொரிக்குக்கும் போதுதவ்வாவில் ஒட்டி கொள்ளும் அது திருப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அதற்கு மீன் மசாலாவுடன் சிறிது அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் அல்லது, தவ்வாவில் அரிசி மாவை போட்டு லேசாக வருத்து விட்டு எண்ணை ஊற்றி பொரிக்க வெண்டும்.

5. மீனுக்கு கட்லெட் போல் முட்டையில் முக்கி கிரெம்ஸ் பவுடர் போட்டு ஊறவைத்து பொரித்தால் கூட நல்ல இருக்கும்.


6. மீனை தூளாக்கி கீமா கட்லெட் போல் செய்தாலும் நல்ல இருக்கும்.

7. மீன் பொரிக்கும் போது போட்டிருக்கும் உடையில் அந்த ஸ்மெல் பரவாமல் இருக்க ஒரு டவலை நனைத்து பிழிந்து அடுப்புக்கு முன் காய போட்டு கொள்ளுங்கள்.


8. இல்லை செண்டெட் கேண்டில்கள் கூட பயன் படுத்தலாம்.

9. மீன் பொரிக்கும் போது எண்ணையுடன் சிறிது பட்டர் கலந்து கொள்ளுங்கள் சுவை சூப்பர்.

10. டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலில் பொரித்து சாப்பிடவும்.

10. இப்பொது எல்லோரும் டயட் உணவு சாப்பிடுகிறோம். ஆனால் இந்த மீன்வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் வெயிட்டே போடாது.

11. பொடி மீன் அதிகம் சாப்பிட்டால் நல்ல முடியும் வளரும், கண்ணுக்கும் ரொம்ப நல்லது.

12. குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே மீனை நிறைய கொடுத்து பழக்க படுத்துங்கள், நோய்க்கு குட் பை சொல்லலாம்

13 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க அப்படியே வலையில மாட்டாம இருக்க மீனுக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தா நல்லா இருக்கும்!!!

தாஜ் said...

அன்பு ஜலீலா உங்கள் மீனுகான டிப்ஸி பார்த்து வியந்துதான் போனென்.எப்படிம்மா இப்படி தூள் கிளப்புறீங்க

Jaleela Kamal said...

எல்லாம் தினம் செய்யும் போது கண்டு பிடிக்கும் அனுபவம் தான் தாஜ்,

பிள்ளைக‌ள் ந‌ல‌மா? உங்க‌ளுக்கும், க‌திஜ‌த்துக்கும் தான் பிலாக்கை தொட‌ர்ந்தேன், நீங்க‌ள் வ‌ந்து க‌ருத்தை தெரிவித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.

Unknown said...

குறிப்புகள் எல்லாமே நல்லாயிருக்கு.

peacetrain said...

நல்ல,பயனுள்ள தளம்,வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய மீன் சமையல் பற்றி எழுதுங்கள்.

kavi.s said...

அக்கா மீன் குறிப்புகள ரொம்ப உபயோகமானதாக இருக்கு. அப்படியே மீன் முள் எப்படி சீக்கிரமா எடுத்து சாப்பிடனும்னு கொஞ்சம் சொன்ன நல்லாயிருக்கும்:)

Jaleela Kamal said...

ராஜ் மீன் வலையில் மாட்டமமையா அப்ப வலை போட தேவையில்லை

Jaleela Kamal said...

பீஸ் ட்ரெயின் தங்கள் வருகைக்கு நன்றி, உங்க‌ள் வாழ்த்துக்கு மிக்க‌ ந‌ன்றி.
கண்டிப்பாக தெரிந்ததை பகிர்ந்து கொள்வேன்.

Jaleela Kamal said...

வாங்க கவி எப்படி இருக்கீங்க, வருகைக்கு மிக்க நன்றி.

மீன் முள்ளை எப்படி எடுத்து சாப்பிடுவது என்று தானே போட்டுட்டா போச்சு முள்ளே இல்லாமல் எப்படி சமைப்பது என்று போடுகிறேன்.
சரியா?

Ameena said...

ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்.
உங்க டிப்ஸ் ரொம்ப சூப்பர்.

நான் மீன் குழம்பு வைக்கும் போது, புளிப்பு சரியாக வர மாட்டேங்குது. மொத்ததில் டேஸ்டே இல்லை. என்னக்கா பண்றது?

இப்படிக்கு,
ஆமினா

Jaleela Kamal said...

ஆமினா மீனை தாளித்ததும் மசாலாக்கள் நன்கு கொதிக்க விட்டு, புளி ஊற்றி அதன் வாடை அடங்கும் வரை மொத்தம் அரை மணி நேரம் கொதிக்கவிடனும் கொதிக்கும் போது வற்றும் அதற்கு ஏற்றார்போல் தண்ணீர் சேர்த்து கொள்ளனும்..

mdniyaz said...

அன்பு சகோதரி தாங்களுக்கு கோலாலம்பூரிலிருந்து முஹம்மது நியாஜ் எழுதுவது.தாங்களின் சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளது தொடர்ந்து படித்து கொண்டுவருகின்றேன். உங்களின் சமையல் குறிப்புகளை பலரும் மேலும் பயன் பெறுவதற்க்காக மலேசியாவில் இயங்கி வரும் எங்களூர் ஜமாத் இனையப்பக்கத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன் அதுபற்றிய உங்களின் விருப்பத்தையும், அனுமதியையும் எனக்கு எழுதுமாறு அன்புடன் கோருகின்றென்.
நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

www.knr2u.com சென்று சமையத்துபார் பகுதியை காண்க்...உங்களின் அனுமதிக்காக காத்திருக்கின்றது
உங்களின் விருப்பத்தை niyazknr@yahoo.com என்கிற மின்மடலுக்கு அனுப்ப்வும்.

Anonymous said...

superb tips

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா