Tuesday, August 18, 2009

பீட்ரூட் ஹல்வா





தேவையான பொருட்கள்


பீட்ரூட் = அரை கிலோ
பால் = 100 மில்லி
மில்க் மெயிட் = 100 மில்லி
பாதம் = 25 கிராம் (பொடிக்க)
சர்க்கரை = 200 கிராம்
முந்திரி, பிஸ்தா,கிஸ்மிஸ் = 25 கிராம்
நெய் = 25 கிராம்
பட்டர் = 25 கிராம்
உப்பு = ஒரு பின்ச்

செய்முறை


பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி பூந்துருவலாக துருவி கொள்ளவும்.
பாதத்தை பொடித்து கொள்ளவும்.
சிறிது நெய்யில் முந்திரி, பிஸ்தா வை பொடியாக அரிந்து கிஸ்மிஸ்பழம் சேர்த்து வருத்து வைத்து கொள்ளவும்.
பீட்ரூட்டை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பட்டர் சேர்த்து பச்ச வாடை போக வதக்கி பால் சேர்த்து வேக விடவும்.
வெந்த‌தும் பொடித்த‌ பாத‌ம் + உப்பை சேர்த்து கிள‌ற‌வும்.
வெந்ததும் சேர்த்த்து மீதி உள்ள நெய் சேர்த்து தண்ணீர் வற்றி கிரிப் ஆகும் வரை வதக்க‌வும்.
கடைசியாக மில்க் மெயிட் சேர்த்து கிளறி, வருத்து வைத்துள்ள முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ்பழம் தூவி இரக்கவும்.

குறிப்பு:

இஸ்லாமிய இல்லங்களில் விஷேஷங்களுக்கு செய்யும் பலவகை இனிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பிரெட்டில் தடவி கொடுக்கலாம்.அந்த‌ க‌ல‌ருக்கே கூட‌ இர‌ண்டு இட்லி கேட்டு சாப்பிடுவார்க‌ள்.நல்ல சத்தான ஸ்வீட், மில்க் மெயிட் பதில் இனிப்பில்லாத பால் கோவாவும் சேர்க்கலாம்.
கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும்.
நிறைய‌ செய்து வைத்து பிரிட்ஜில் ஒரு வார‌ம் வ‌ரை வைத்து சாப்பிட‌லாம்.

8 கருத்துகள்:

R.Gopi said...

ஜ‌லீலா

எனக்கு ரொம்ப புடிச்ச ஸ்வீட்ல பீட்ரூட் ஹல்வாவும் ஒண்ணு....

உங்களோட செய்முறை விளக்கம் சூப்பர்... கூடவே கரிசனமான இந்த வார்த்தையும்... (கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும்). இதுதான் ஜலீலா ஸ்பெஷல்...

வாழ்த்துக்கள் ஜலீலா...

Jaleela said...

தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி கோபி.
மனதில் பட்டதை எழுதுகிறேன் அவ்வளவு தான்.

Jaleela said...

கோபி

மேலே டிப்ஸ் பகுதி இருக்கு பாருங்கள் சிலருக்கு பயன் படும்.

Jaleela said...

கோபி

மேலே டிப்ஸ் பகுதி இருக்கு பாருங்கள் சிலருக்கு பயன் படும்.

R.Gopi said...

//Jaleela said...
கோபி

மேலே டிப்ஸ் பகுதி இருக்கு பாருங்கள் சிலருக்கு பயன் படும்.//

ஓ யெஸ்... க‌ண்டிப்பாக‌ பார்க்கிறேன்.... ந‌ன்றி...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க இனிமே இந்த பச்ச மிளகாய்ல எல்லாம் ஹல்வா செய்வீங்க?


பக்கத்து வீட்டுக்காரங்க ஒரு முறை கத்திரிக்கா ஹல்வா கொடுத்தாங்க.. ம்ம்ம்ம் அப்போ விட்டவன் தான் ஹல்வா சாப்பிடரத!!!!


ஆனா இது நல்லா இருக்கும் போல இருக்கு!!!

Jaleela Kamal said...

என்னது பச்சமிளகாய் ஹல்வா,
யார் மேலேயோ உள்ள கோபத்தை காட்டி விட்டர்கள் போல‌

இது நல்ல இருக்கும் அம்மணி கிட்ட சொல்லி செய்து பாருங்கள்

Unknown said...

Jaleela Akka,we tried your Beetroot Halwa today and it is soooooooooo tasty and got the same taste we get in marriage functions.I liked it verymuch and thanks for this nice recipe.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா