Wednesday, August 26, 2009

ஜவ்வரிசி கடல் பாசி



தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி = ஒரு மேசை கரண்டி
கடல் பாசி = இரண்டு மேசை கரண்டி
பால் = அரை டம்ளர்
தண்ணீர் = ஒன்னறை டம்ளர்
சர்க்கரை = முன்று மேசை கரண்டி
தேவையான நட்ஸ் = சிறிது

செய்முறை

1. ஜவ்வரிசியையும், கடல் பாசியையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.
3. வெந்து தண்ணீர் பாதி வற்றும் போது சர்க்கரை நட்ஸ்,பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
4. சிறிது ஆறியதும் ஒரு வாயகன்ற பாத்திரதில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து நன்கு செட் ஆனதும் வேண்டிய வடிவில் கட் செய்து நோன்பு திறக்கும் வேலையில் சாப்பிடவும்.

குறிப்பு:

நோன்பு காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் கடல் பாசி, நோன்பு நேரத்தில் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் ஜவ்வரிசி இதை இரண்டும் சேர்த்து செய்து சாப்பிட்டால் வயிறு இதம் பெரும்.
கர்ப பை புண் மற்றும், அல்சருக்கும் இது அரு மருந்தாகும்.
இது நானே முயற்சி செய்தது. நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.கலர் தேவை பட்டால் வேண்டிய கலர் சேர்த்து கொள்ளலாம், இல்லை என்றால் ரூ ஆப் ஷா வே போதுமனது.

இது முன்று நபர் சாப்பிடலாம்
ஊறவைக்கும் நேரம் பிரிட்ஜில் வைக்கும் நேரம் தவிர செய்வது பத்து நிமிடம் தான்

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

நோன்பு காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் கடல் பாசி, நோன்பு நேரத்தில் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் ஜவ்வரி]]


இத - இத

இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

மிக்க நன்றி சகோதரி ...

Malini's Signature said...

ஜலீலா அக்கா நானும் உங்க நிறைய ரெசிபி பாத்து கடல் பாசி வாங்கி வைச்சாச்சு.... ஆனா அதுதான் கடல் பாசியான்னு தெரியலை....இப்பதான் வீடு எல்லாம் செட் பன்னிட்டு இருக்கோம் ஒரு வாரம் கழித்து பன்னிபாக்குரேன்...அதுக்குள்ளே கடல்பாசி போட்டோவை கொஞ்சம் போடுங்க அக்கா

Jaleela Kamal said...

//நட்புடன் ஜமால் குறிப்புகளை தவறாமல் படித்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.//

ஜவ்வரிசி பற்றின டிப்ஸ் என் கிரான் மா உடையது.

சுவருக்கு சுண்ணாம்பு அடித்தால் எப்படி வெள்ளையாகுதோ அது போல் இந்த ஜவ்வரிசி குடல் புண் மற்றும் கர்ப பை புண்களை சுவர் போல் அதுக்கு மருந்து என்பார்கள். சிலருக்கு வாயில் கொப்புளங்கள் வரும் அது வயிற்றில் புண் இருந்தால் தான் அப்படி வரும். இதற்கெல்லாம் நிறைய டிப்ஸ் இருக்கிறது.

Jaleela Kamal said...

ஹர்ஷினி நேரமின்மையால் ஸ்டெப் பை ஸ்டெப் எடுக்க முடியல, அதான் மெயின் படம் மட்டும் இனைத்தேன் அதே வெள்ளையா இருப்பதால் சரியாக விழல.

கடற்பாசி படம் போடுகிறேன்.

இன்னும் இதில் நிறைய வகை இருக்கு.
ஆனால் இளநீர் அல்லது தேங்காய் உடைத்த தண்ணீரில் செய்யுங்கள் சூப்பரோ சூப்பர். நுங்கு சாப்பிடுவது போல் இருக்கும்

S.A. நவாஸுதீன் said...

நோன்பு திறக்க அருமையா ஒரு கடல்பாசி ரெடி. நன்றி சகோதரி

Jaleela Kamal said...

ஆமாம் நவாஸ் இது செய்வது ரொம்ப எளிது,சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்.

இதில் சர்க்கரைக்கு பதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து செய்தாலும் சுவை இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

சீமான்கனி said...

கடல் பாசி ....
நல்லா ருசியா இருந்தச்சு.....

Jaleela Kamal said...

சீமான் கனி கடல் பாசி ருசியா இருந்தது என்றீர்கள் செய்து பார்த்து சொன்னதற்கு நன்றி.

Malini's Signature said...

அக்கா இன்னைக்கு உங்க குறிப்பை பார்த்து இளநீர் கடல்பாசி செஞ்சேன் நல்லா இருந்தது அக்கா... அதை போட்டோ எடுத்து வைச்சுஇருக்கேன் அக்கா... என் பிளாக்கில் போடலாமா?

Jaleela Kamal said...

ஹர்ஷினி ரொம்ப சந்தோஷம் பெயர் குறிப்பிட்டு போடுங்கள்.

வாங்க ஹர்ஷினி ரொம்ப‌ நாள் ஆச்சு நீங‌க்ள் இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்து ரொம்ப‌ பிஸியா .

உங்க‌ள் பிளாக்கில் போடுங்க‌ள்.மேனாகா கூட‌ சிக்க‌ன் லாலிபாப்பில் என்னுடைய‌து என்று குறிப்பிட்டு தான் போட்டு உள்ளார்க‌ள்.


என் கடல்பாசி குறிப்பு பார்த்து எல்லோருக்கும் ஆசை வந்து விட்டது.

எல்லாரும் வாங்கி வந்து விட்டார்களாம் செய்து பார்க்க.மெயில் தெரிவித்தார்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா