Wednesday, September 30, 2009

Diabetic Cure

In the name of Allah, the Most Gracious, Most Beneficent.

Sheikh Saleh Mohammed Tuwairire ( may protection of Allah be on him)
The Supreme judge (Qazi) of Tabuk court has made the extensive
Experiments with perseverance and patience and discovered a
Successful treatment of Diabetes.

Now a days a lot of people, old men & women in particular suffer a lot
Due to Diabetes.

INGREDIENTS:

1… Wheat flour 100 grm.
2… Gum (of tree) (Gundh) 100 grm.
3… Barley 100 grm. ( Juwar )
4… Black Seeds 100 grm (Kalunji)

Method of preparation.

Put all the above ingredient in 5 cups of water. Boil it for 10 minutes
And put off the fire. Allow it to cool down by itselt.
When it has become cold, filter the seeds and preserve the
Water in a glass or bottle.

How to use it.

Take one small cup of this water every early morning when your stomach
is empty. Continue this for 7 days.
Next week repeat the same but in alternate days.

Inshallah with these 2 weeks of treatment you will wonder
to see that you have become normal, and can eat normal
food without any problem.

May Allah (SWT) APPROVE cure to you. Aameen.

Note: Sheikh’s request is to spread this to as many people
as possible, that others can take benefit out of it.

Kindly remember me in your prayers.

//Gum Dhawada (Gond) is derived from gum tree branches in crystal-like form. These can be used in food and beverages, and have known to be medicinal. They are mostly used in bakery, ayurvedic and dietary items//


இது போன வருடம் மெயிலில் வந்த குறிப்பு, இது பலருக்கு பயன் படும் என்று பிலாக்கில் போட்டுள்ளேன்

Tuesday, September 29, 2009

கை நகம் அழுகி விட்டதா? நகசுத்தியா?- henna tips




1. பத்து பாத்திரங்களை தேய்த்து, துணிதுவைக்கும் சோப்பு ஒத்து கொள்ளாமல். தரையை துடைக்கும் பிளீச்சிங் ஒத்து கொள்ளாமல் கை விரல்களில் நகங்கள் அழுகிவிடும்.
இதன் பின் விளைவு பல வியாதிகளை உண்டாக்கும்.




2. கையில் சிலருக்கு நக சுத்தி வந்து பாடா படுத்தும் புளி கரைக்க முடியாது, மீனுக்கு மசாலா தடவ முடியாது.எந்த காயையும் அரிய முடியாது.

3. இதற்கு எலுமிச்சை பழத்தை கை விரலின் மேல் தொப்பி போல் வைப்பார்கள்.

இது அந்த அளவிற்கு கேட்காது.

//மருதாணி தான் பெஸ்ட்//





தே. பொருட்கள்

***************

மருதாணி பவுடர் ‍ ‍ தொப்பி வைக்க தேவையான அளவு

மஞ்சள் தூள் = ஒரு தேக்கரண்டி

கிராம்பு = நான்கு

கடுகு எண்ணை = ஒரு தேக்கரண்டி

நீலகிரி தைலம் = ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை சாறு ‍= ஒரு தேக்கரண்டி
டீ தூள் = ஒரு தேக்கரண்டி

தண்ணீர் = முக்கால் கப்

ச‌ர்க்க‌ரை = அரை தேக்க‌ர‌ண்டி


செய்முறை

***********

1. த‌ண்ணீரை கொதிக்க‌ வைத்து அதில் டீ தூளை போட்டு ந‌ன்கு கொதிக்க‌விட்டு சர்க்கரஈ சேர்த்து கலக்கி வ‌டி க‌ட்ட‌வும்.


2. ம‌ருதாணியில் , ம‌ஞ்ச‌ள் தூள் சேர்க்க‌வும், கிராம்பை பொடி செய்து சேர்க்க‌வும், எலுமிச்சையை சாறெடுத்து ஊற்றி க‌ல‌க்க‌வும்.


3. இதில் வ‌டிக‌ட்டிய‌ டீ டிகாச‌னை தேவைக்கு க‌ல‌ந்து கொள்ள‌வும்.


4. க‌டை‌சியாக‌ கடுகு எண்ணை, நீல‌கிரி தைல‌ம் சேர்த்து க‌ல‌ந்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து ஆறிய‌தும் அதை கையில் உள்ள‌ ந‌க‌த்துக்கு தொப்பி போல் வைக்க‌வும்.


5. இது தொட‌ர்ந்து முன்று நாட்க‌ள் வைக்க‌வும், முத‌ல் நாள் வைக்கும் போதே வ‌லி எல்லாம் குறைந்து விடும்.


6. கையும் அழ‌காச்சு,வ‌லியும் போயே போச்சு.இது நான் ப‌ல‌ பேருக்கு சொல்லி கை ந‌க‌ம் ச‌ரியாகி உள்ள‌து.


குறிப்பு:

*******


தொப்பி வைக்கும் போது க‌ரெக்ட்டாக‌ ஷேப்பாக‌ வைக்க‌ சின்ன ச‌ல்வார் டேப்பை எது வ‌ரை வைக்க‌ போகிறீர்க‌ளோ அதுவ‌ரை சுற்றி ம‌ருதாணி இட‌வும்.

குளுமை உட‌ம்பு உள்ள‌வ‌ர்க‌ள், ம‌ருதாணி வைத்தால் உட‌னே ச‌ளி பிடிக்கும், தும்ம‌ல் வ‌ரும் என்ப‌வ‌ர்க‌ள்.

ஒரு ம‌ணி நேர‌த்துக்கு மேல் வைக்க‌ வேண்டாம்.அப்ப‌டியே வைத்தாலும், கை ம‌ணிக்க‌ட்டு, க‌ழுத்து ந‌ர‌ம்புக‌ளுக்கு ஏதாவாது ஒரு தைல‌த்தை த‌ட‌வி கொள்ள‌வும்.

இது நான் நிறைய பேருக்கு சொல்லி விரல் நகம் சரியாகி உள்ளது.

Monday, September 28, 2009

தினம் அதிகமாக ஓத வேண்டிய துஆ

"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃபில் ஆஹிரத்தி ஹஸனதவ் அகினா அதாபன்னார்."


நூல்; முஸ்லிம்


பொருள்; இறைவா! இம்மையிலும் நல்லதை தருவாயாக! மறுமையிலும் நல்லதைத் தருவாயாக! மேலும் நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக!

Sunday, September 27, 2009

தங்கம் போல மின்ன வேண்டுமா உங்கள் முகம்



















வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைவைத்தே அழகு ராணி ஆகலாம் வாங்க எந்த பியுட்டி பார்லரும் தேவையில்லை



எந்த பழம் விட்டில் உள்ளதோ அதை நல்ல மசித்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து கொள்ளுங்கள்.முகம் ஜொலிக்கும்.





எந்த பழங்கள் வீட்டில் உள்ளதோ அதை மசித்து பத்து நிமிடம் முகத்தில் தேய்த்து ஊறவைத்து பிறகு லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகத்தை கழுவலாம்.



முக்கியமாக வாழை, பப்பாளி ரொம்ப நல்லது. பப்பாளி மட்டும் வாரம் இருமுறை தேய்த்தீர்கள்.பள பளக்கும் முகம், ஜுஸாகவும், பழமாகவும் சாப்பிடலாம்.
மற்ற எல்லாவிதமான பழங்களும் முகத்தை மின்ன வைக்கும்.



எல்லாத்துக்கும் மேல் தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.

தண்ணீர் தான் என்றில்லை, சூப், பிரெஷ் ஜூஸ், மோர், பால் இது போல் குடித்து கொள்ளலாம்.

Saturday, September 26, 2009

Fish Biriyani (மீன் பிரியாணி)




//இது ட‌ய‌ட்டில் உள்ள‌வ‌ர்க‌ள், பிரியாணி சாப்பிட ஆசை பட்டால் இது போல் மீன் பிரியாணி செய்து சாப்பிட‌லாம்.
மீன் பொரிக்க‌ ஆலிவ் ஆயிலை ப‌ய‌ன் ப‌ய‌ன் ப‌டுத்த‌வும்.தாளிக்கும் போது எண்ணை கூட‌ சிறிது க‌ம்மியாக‌ ஊற்றி கொள்ள‌லாம். நெய் தேவையில்லை./

தேவையான பொருட்கள்


சீலா மீன் - அரை கிலோ
அரிசி ‍ அரை கிலோ
வெங்காயம் - முன்று பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ இரண்டு மேசை க‌ர‌ண்டி
தக்காளி - ஐந்து பெரியதுத‌யிர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - ஒன்று ஒன்று
எண்ணை ‍ அரை கப்
நெய் - ஒரு மேசை கரண்டி
எலுமிச்சை - அரை ப‌ழ‌ம்
ரெடி கலர் பொடி - ஒரு பின்ச்
கொத்து மல்லி, புதினா ‍ கால் க‌ட்டு

மீன் ம‌சாலா போட்டு பொரிக்க‌


மிள‌காய் தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - ஒரு மேசை க‌ர‌ண்டி
மிள‌கு தூள் - அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் - கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் - கால் தேக்க‌ர‌ண்டி
ஆலிவ் ஆயில் - மீன் பொரிக்க தேவையானது


செய்முறை

மீனை க‌ழுவி சுத்த‌ம் செய்து முன்றில் ஒரு ப‌ங்கை முள்ளெடுத்து விட‌வேண்டும்.
மீனில் போட‌ வேண்டிய‌ ம‌சாலாக்க‌ளை போட்டு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து. முள்ளெடுத்த‌தை லேசாகாவும், மீதியை ந‌ல்ல‌ பொரித்து எடுத்து த‌னியாக‌ வைக்க‌வும்.
அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.

தாளிக்க‌

சட்டியை காய வைத்து பட்டை ,கிராம்பு,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில் வைக்கவும்.

பிறகு கொத்து மல்லி புதினா போட்டு இரண்டு நிம்டம் கழித்து தக்காளி,பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.

இப்போது தக்காளியில்,மிள்காய் தூள்,மஞ்சல் துள் போடு வதக்கவும்.

பிறகு தக்காளி கூட்டாக வெந்ததும் தயிர், லேசாக பொரித்து வைத்த மீனை சேர்த்து லேசாக கிளறி, அரை லெமென் பிழியவும்.


உலை கொதிக்க‌விட்டு அரிசியை த‌ட்டி அதில் தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது கொத்தும‌ல்லி புதினாவை சேர்த்து முக்கால் ப‌த‌த்தில் வ‌டிக்க‌வும்.


இப்போது கிரேவியை முன்றாக பிரிக்கவும்.பொரித்து வைத்துள்ள மீனை இர‌ண்டாக‌ பிரிக்க‌வும்.

ஒரு பெரிய‌ ச‌ட்டியில் முதலில் கொஞ்சம் கிரேவி,ரைஸ், பொரித்த மீன். கொஞ்சம் நெய்.அடுத்து கொஞ்சம் கிரேவி ,சாதம் பொரித்த மீன், கொஞ்சம் நெய்.அடுத்து கொஞ்சம் கிரேவி,மீதி ஊள்ள சாதம் மேலே ரெட் கலர் பொடியை கரைத்து தெளித்து மீதி சமப்படுத்தி 20 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இரக்கியதும் உடையாமல் நல்ல கிளறி சாப்பிடவும்.சுவையான் மீன் பிரியானி ரெடி

குறிப்பு
ம‌ற்ற‌ பிரியாணியை விட‌ மீன் பிரியாணிக்கு கொஞ்ச‌ம் வேலை அதிக‌ம் மீன் என்ப‌தால்பொரித்து லேய‌ராக‌ வைத்து த‌ம் போட்டு இர‌க்க‌னும்.

இது ச‌ரியாக‌ செய்ய‌ வ‌ராத‌வ‌ர்க‌ள் ஃபிரைட் ரைஸுக்கு செய்வ‌து போல் கூட‌ செய்ய‌லாம்.

இதுக்கு பாப்புல‌ட் மீனும், ஹ‌மூர் மீனும் கூட‌ ந‌ல்ல‌ இருக்கும்.

Thursday, September 24, 2009

பூப்போன்று பஞ்சு போல் மெத்தன இருக்கும் முகத்திற்கு










1. பூப்போன்று பஞ்சு போல் மெத்தன இருக்கும் முகத்திற்குபால் ஏடு தினம் பால் காய்ச்சுகிறோம், அந்த பால் ஏடு ஃபேட் என்று தூக்கி போடுவோம்.



அதில் சிறிது ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணை கலந்து மசித்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான வெண்ணீரில் முக்கத்தை கழுவவும்.


ரொம்ப அருமையான சூப்பர் ஷாஃப்ட்டாகிடும் முகம்.





2. தயிர் அருமருந்து











முகத்தில் பொரி பொரியாக , சொர சொரப்பாக ஏதும் அலர்ஜியாக இருந்தால் உடனே தினம் இரவில் தயிர் ஒரு மேசை கரண்டி எடுத்து நல்ல முகத்தில் மசாஜ் செய்து பத்து நிமிடத்தில் லேஸ் சூடானா வெண்ணீரில் முகத்தை கழுவவும்.



நல்ல ஷனிங் ஆகிவிடும் முகம்

எண்ணை வ‌டியும் முக‌த்திற்கு, தள தள தக்காளி



//வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைவைத்தே அழகு ராணி ஆகலாம் வாங்க//

ஒரு லிட்டர் எண்ணை வடியுதா முகத்தில் கவலை வேண்டாம்.

சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து கொண்டே இருக்கும்.
எண்ணை வ‌டியும் முக‌த்தை ப‌ள‌ ப‌ள‌ப்பாக்கும் த‌ன்மை த‌க்காளிக்கு உண்டு.

தக்காளியை வட்டவடிவமாக கட் செய்து முகத்தில் நன்கு 10 நிமிடம் தேய்த்து லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகம் கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

வார‌ம் ஒரு முறை அல்ல‌து இருமுறை செய்ய‌வும்.

சும்மா தள தளன்னு தக்காளிபழம் போல் மின்னும் முகம்.






க‌ட‌லை மாவு பிசு பிசுப்பை அக‌ற்றும். க‌ட‌லை மாவு கொண்டும் முக‌த்தை தேய்த்து க‌ழுவ‌லாம்.

சில‌ருக்கு என்ன‌ தான் சோப்பு போட்டு முக‌த்தை க‌ழுவினாலும் முக‌த்தில் எண்ணை வ‌டிந்து கொன்டே இருக்கும். அவ‌ர்க‌ள் லேசான வெது வெதுப்பான‌ வெண்ணீரில் முக‌த்தை க‌ழுவுவ‌து மிக‌வும் ந‌ல்ல‌து.

சிறிது பொரித்த‌ உண‌வுக‌ளை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து.











Wednesday, September 23, 2009

குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால்





1. குழந்தைகளுக்கு டென்ஷன் கோபம் வந்தால் தொட்டதற்கெல்லாம் நைய் நையின்னு அழுதுகொண்டு இருப்பார்கள்


2. குழந்தைகள் கையில் கிடைக்கும் பாத்திரம் எல்லாம் தூக்கி நம்ம மேல அடிப்பார்கள்.


3. குழந்தைகளுக்கு கண்ணுக்கு எட்டிய பொருளை எடுத்து கொட்டி விட முடிய வில்லை என்றால் இன்னும் டென்ஷன் ஆகும்




4.முதல் முதல் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போகவே பிடிக்காது, அந்த டென்ஷனை எப்படி காண்பிப்பது என்று தெரியாது உடனே வாந்தி வருது, வயிறு வலிக்குது என்று சொல்வார்கள்


5. கொஞ்சம் பெரிய குழந்தைகள் ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு கோபம் வந்தால் ஒரே எதற்கெடுத்தாலும் சத்தம் போடுவார்கள்

6. சில பிள்ளைகள் எப்ப பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பார்கள் அப்ப அவர்களுக்கு டென்ஷான இருக்கு என்று தான் அர்த்தம் இது டாக்டர் சொன்னது.


அடுத்து அடுத்து ஒரு வயது வித்தியாசம் உள்ள இரண்டு பிள்ளைகள் உள்ள வீட்டில் விருந்தாளிகள் வந்தால் என்ன கேள்வி கேட்டாலும், சின்னவன்னுக்கு பதில் பெரிய பிள்ளையே பதில் சொல்லி கொண்டு இருக்கும், அப்படி இருக்கும் போது சின்னதுக்கு ரொம்ப கோபம் வரும் அண்ணா மேல் ஆனா வெளியில் காண்பிக்க மாட்டார்கள்.

அப்போது சின்ன பையன் எப்பா பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பான், அதுவும் டென்ஷன் தான். அதற்கு சின்னவனை பதில் சொல்லவைத்து பேச விடனும், அப்படி செய்தால் தான் அந்த டென்ஷன் போகும்.

சில பெண்களுக்கு கோபம் வந்தால்



(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள். அதுக்கு தான் இதில் சில‌ வ‌ரிக‌ள்)




1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன‌ செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது.

2.அவர்கள் கோபம் முழுவதும். பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்கார் மேல கோபமா? பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா?  பிள்ளைகளுக்கு தான் (முதுகில் நல்ல எண்ணைய தடவி தோசை சுடுவது) அடி டமால் டிமீலுன்னு விழும் பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

3. வெளிநாட்டில் உள்ள கணவரிடமிருந்து வரும் போன் அன்று வரலையா உடனே கிடைத்தது பிள்ளைகள் காரணமே இல்லாமல் சாத்து சாத்துன்னு சாத்தரது, அந்த ஆளு அங்கு சொகுசா  ஜாலியா இருக்காரு , இதுங்க‌ல‌ க‌ட்டி நான் தான்மேய்க்க‌ வேண்டியாதா போச்சு ஒரு நிம்ம‌தி கிடையாது..என்று பொல‌ம்ப‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள்.

4. அவர்கள் அன்று சுட இருக்கும் தோசை ரொட்டி எல்லாம் பிள்ளைகள் முதுகில் தான் விழும்.

5. சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்.அது யாருக்கும் தெரிவதில்லை. இது நிறைய வீட்டில் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கு

6. பிள்ளைகள் தெரியாம தண்ணி கொட்டிட்டா கூட போட்டு சாத்துவது , ஒரு நிமிஷம் கொட்டியது நம்மளா இருந்தா என்ன செய்வோம். கொஞ்சம் யோசிக்கலாமே,அது தண்ணிய கொட்டிட்டு நடுங்கி கொண்டே நிற்கும்.
இதுலேயே மூச்சா போயும் வைக்கும், அதுக்கும் சேர்த்து நாலு சாத்து..

7. ஆனால் வேண்டுமென்றே ஜித்தில் போட்டு கொட்டும் பிள்ளைகளை , அப்படி உள்ள குழந்தைகளுக்கு இரண்டு போடதான் செய்யனும்.

8. ரொம்ப கோபப்படுவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயசாகி விடும் கிழவி பொல் ஆகி விடுவாய் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள்.

9. இது நான் எங்கோ கேள்வி பட்டது, ஒரு கிரிக்கெட் பேட்டை எடுத்து கொண்டு தலையனையை கண்ட மட்டுக்கும் சாத்துவார்களாம்.

10. //நான் கேள்வி பட்டது சில பேர் வீட்டில் உள்ள கண்ணாடி பாத்திரத்தை முற்றத்தில் போய் கோபம் தீரும் வரை போய் உடைத்து விட்டு வருவார்களாம்.//

11. சில‌ டென்ஷனை ப்போக்க பேர் அரிசி , அவல், மாவு எடுத்து என்னேர‌மும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்க‌ள்.சில பேர் நகத்தை நறு நறு வென கடித்து கொண்டு இருப்பார்கள். நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள்.

இதே கோபம் உஙக்ளை சிறு வயதிலேயே பீபீ எகுறும் நிலைக்கு கொண்டு போய் விடும்.இல்லை ஹார்டடாக்கே வரலாம்கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். .

இப்படி பட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷியங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம். துணி தைப்பது, விதவிதாமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.

Saturday, September 19, 2009

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்







இந்த வருடம் நோன்பு சிறப்பாக முடிவடைந்து விட்டது.



எல்லோருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.



இந்த வருடம் போல் வருகிற அனைத்து நோன்பையும் நல்ல படியாக பிடிக்க ஆண்டவன் நம் அனைவருக்கும் கிருபை புரிவானாக.
நம் அனைத்து பிழைகளையும் பொருத்தருளுவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



























இந்நாளில்



1. "ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்."
அல்லாஹ் பரிசுத்தமானவன். சர்வ புகழும் அவனுக்கெ உரியது. மேலும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் பெரியவன்.

2. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி


3.அஸ்தக்பிருல்லாஹில் அலிம்



இவை அதிகமாக ஓதுவது மிகவும் சிறப்பு ஆகும்.


















Wednesday, September 16, 2009

முஹாஸபதுன் நப்ஸ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது.


ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் பின்வரும் கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு அவற்றுக்கு விடைகாண முயல்வது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ஏதவாக அமையும். இவ்வாறு தன்னைத் தானே விசாரிப்பது இஸ்லாமியப் பரிபாஷையில் முஹாஸபதுன் நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஹழ்ரத் உமர்(ரழி)அவர்கள், நீங்கள் விசாரிக்கப்பட
முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள்
கணிப்பிட்டுபார்க்கப்பட முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக்
கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உமர்(ரழி) அவர்கள்
தன்னைத்தானே விசாரித்துக்கொள்வதுடன் தனக்குத்தானே தண்டனையையும்
விதித்துக் கொண்டுள்ளார்கள். முஹாஸாதுன் நப்ஸ், இஸ்லாத்தில் உள்ள
விடயமொன்றாகும். இந்த வகையில் எம்மை நாமே திருத்திக் கொள்ள
பின்வரும் கேள்விகளை எம்மிடம் நாமே கேட்டுக் கொள்ள முயற்சிப்போமாக!


சுவனத்தை ஆவல் கொண்டுள்ள எமக்கு இது ஒரு நல்ல வழிகாட்டலாக அமையும்.
கிழமைக்கு ஒரு முறை அல்லது தினமும்




1. பள்ளியில் இந்தக் கிழமை முழுவதும் சுபஹ் தொழுகையை ஜமாஅத்தோடு
நிறைவேற்றினாயா? உரிய நேரத்தில் தொழுதாயா?

2. அனைத்துத் தொழுகையையும் பள்ளியில் ஜமாஅத்தோடு நிறைவேற்றினாயா? உரிய
நேரத்தில் தொழுதாயா?

3. இந்தக் கிழமையில் குர்ஆன் ஓதி வந்தாயா? மனனம் செய்தாயா?

4. ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் திக்ரு, அவ்ராது போன்றவற்றை ஓதி வந்தாயா?


5. பயபக்தியுடன் தொழுதாயா? குர்ஆனை விளங்கி சிந்தித்து ஓதினாயா?

6. மவ்த்து, மறுமைபற்றி சிந்தித்தாயா? கண்ணீர் விட்டு அழுதாயா?

7. பர்ளுத்தொழுகைகளுக்கு முன்பின் உள்ள சுன்னத்துத் தொழுகைகளைத் தொழுதாயா?

8. மறுமையின் கஷ்டங்கள், பயங்கரம் பற்றி சிந்தித்தாயா?

9. நபியவர்கள் “யார் சுவர்க்கத்தை மும்முறை வேண்டுகிறாரோ சுவர்க்கம்
அவர்ரைத் தன்னில் நுழைத்து விடுமாறு வேண்டுகிறது. யார் நரக விடுதலையை
வேண்டுகிறாரோ நரகம் அவரை தன்னில் நுழைக்காதிருக்கும் படி வேண்டுகிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கமைய உன் பிரார்த்தனை
அமைந்திருந்ததா?

10. நபியவர்களின் ஹதீஸ்களை ஒவ்வொரு நாளும் வாசித்தாயா? விளங்கிக் கொண்டாயா?

11. உனது நண்பர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்?

12. தீய நண்பர்களை விட்டும் ஒதுங்க நினைத்தாயா?

13. அதிக சிரிப்பையும், கேளிக்கைகளையும் தவிர்க்க நினைத்தாயா?

14. இக்கிழமையில் அல்லாஹ்வை நினைத்து பயந்து அழுதாயா?

15. காலை, மாலை திக்ருகளை ஓதி வந்தாயா?

16. பாவமன்னிப்பு கேட்டாயா? இஸ்திஃபார் செய்தாயா?

17. தூய்மையான உள்ளத்துடன் இறைபாதையில் மரணத்தைச் சந்திக்க
அல்லாஹ்விடம் பிராத்தித்தாயா?

18. அல்லாஹ்வின் மார்க்கத்தில் உனது உள்ளம் நிலைத்திருக்க அவனை வேண்டினாயா?

19. துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிக்கின்ற நேரங்களைப் பார்த்து பிரார்த்தனை
செய்தாயா?

20. உனக்காக கோபப்படுவதை விட்டு அல்லாஹ்வுக்காகவே கோபப்பட்டாயா?

கோபத்தை பொறுத்தவரை உனது நிலை எவ்வாறு காணப்பட்டது?

21. பொறாமை, கர்வம் போன்றன உனது உள்ளத்தில் தோன்றாதவாறு உள்ளத்தை
பார்த்துக்கொண்டாயா?

22. பொறாமை, முகஸ்துதி, குரோதம் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும்,
பொய்யுரைத்தல், கோள், வீண்வாதம், வீண்கேளிக்கைகள் போன்ற தீய
உணர்வுகளிலிருந்தும் உன்னை, உனது உள்ளத்தை பார்த்துக் கொண்டாயா?

23. நீ உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அருந்தும் பானங்கள் போன்ற இன்னோரன்ன
அம்சங்களில் அல்லாஹ்வை பயந்து கொண்டாயா?

24. தஹஜ்ஜத் தொழுகையில் உனது நிலை எவ்வாறு இக்கிழமையில் இருந்தது.

25. உன் தாய், தந்தையருக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டுமென்ற வகையில்
அவர்களுக்காகப் பிராத்தித்தாயா? நண்பரகள், உறவினர்களுக்காகவும்
பிராத்தனை செய்தாயா?

26. அல்லாஹ்வுடைய பாதையில் உனது பணத்தில் இருந்து செலவளித்தாயா?
எவ்வளவு செலவளித்தாய்?

27. நன்மைகள் உன்னை அடைந்த போது அல்லாவுக்கு நன்றி செலுத்தினாயா?

28. உன்னைத் துன்பங்கள் அணுகிய போது பொறுமையுடன் ' இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன் ' என்று கூறினாயா?

29. உன்னுடன் பழகுபவர்களுடன், உன் பக்கத்தே வாழ்வோருடனும் நன்றாக நடந்து
கொண்டாயா?

30. உன்னை விட வயது முதிந்தவர்களைக் கண்ணியப்படுத்தி இளம் வயதினர்களுடன்
அன்பாக நடந்து கொண்டாயா?

31. இந்தக் கிழமையில் இஸ்லாமிய நூற்களை வாசிப்பதில் எவ்வளவு தூரம் அக்கரை
செலுத்தினாய்? என்னென்ன நூற்களை வாசித்தாய்?

32. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டாய்?

33. உனது பொழுது போக்கு எவ்வாறு இருந்தது? அல்லாஹ் திருப்திப்படும்
விதத்தில் அவை அமைந்திருந்ததா?

34. பிற சமய சகோதரர்களுடன் உமது தொடர்பு எவ்வாறு இருந்தது? அவர்ககள் உனது
நடவடிக்கைகளைத் திருப்தியோடு ஏற்றுக் கொண்டனரா?

35. உனது வீட்டு அங்கத்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்? பெற்றோர்கள்,
பிள்ளைகள், சகோதரர்களுடன் நட்புடன் நடந்து கொண்டாயா?

36. எத்தனை முறை இஸ்திஹ்பார் செய்தாய்? உனது நாவு எத்தனை தடவை
ஸூப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர் என்று உரைத்தது?

37. இறைவனைப் புகழும்போது அவனது படைப்புக்களைப் பார்க்கும்போதும் உனது
மனநிலை எவ்வாறிருந்தது? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாயா?

38. உன்னை விட அறிவில், அழகில் உடலமைப்பில் உயர்ந்தவர்களை,
தாழ்ந்தவர்களைக் கண்ட போது அல்லாஹ் உனக்கருளிய அருளையிட்டு அவனுக்கு
நீ நன்றி செலுத்தினாயா?

39. நீ செய்த தீய செயல்களை நினைத்து வருந்தி மீண்டும் அதனை செய்யமாட்டேன்
என்று உறுதி பூண்டு அல்லாஹ்விடம் தௌபாச் செய்தாயா?

40. உரிய நேரத்தில் உரிய கடமைகளைச் செய்தாயா? வாக்களித்தபடி நடந்து
கொண்டாயா? உரிய நேரத்தில் சமூகம் அளிக்கத்தவறி பிறருக்கு அசௌகரியம்
ஏற்படுத்தினாயா?


இது போன்ற கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு விசாரித்துக் கொள்வதுடன்
தன்னில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும். அதனை
வழக்கமாக செய்து வரும் பொழுது குறைகள் நீங்க ஏதுவாகும். அவ்வாறே
அல்லாஹ்வின் திருப்திக்குப் பொருத்தமானவர்களாகவும் நாம் அமையலாம். வல்ல
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியையும் நஸீபாக்குவானாக! மனிதனின்
வெற்றி அல்லாஹ்வின் திருப்தியிலே தங்கியிருக்கிறது. எமது அமல்கள்
அல்லாஹ்சுக்காக என்ற தூய எண்ணத்தில் அமைய அல்லாஹ்வையே நாம்
பிராத்திப்பேமாக!

மரணம் நிச்சயம் இடம் பெறுகின்ற ஒன்று அது எங்கு எப்போது எவ்வாறு
இடம்பெறும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எந்த நேரத்திலும் தயாராக இருக்கவே வேண்டும் எம்மை நாமே சுய விசாரனை செய்வதன் மூலம் எம் தவறை நாமே திருத்தி அல்லாஹ்வின் திருப்தியையும் மன்னிப்பையும் பெற்ற நன்மக்களாக எம்மை அமைத்துக் கொள்ள உறுதி கொள்வோமாக!

Tuesday, September 15, 2009

வஞ்சிரம் மீன் குழம்பு / Fish salna





//மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பா புளிப்பா காரசாரமா சுல்லுன்னுவைக்கனும் என்பார்கள்.
இது புளிப்பா கார சாரமா கர்பிணி பெண்களுக்கு, ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.//


தேவையான பொருட்கள்




வஞ்சரம் மீன் = அரை கிலோ

அரைக்க‌
========

வெங்காயம் = இரண்டு
தக்காளி = நான்கு
பூண்டு = இர‌ண்டு ப‌ல்

ம‌சாலாக்க‌ள்
===========

மிள‌காய் தூள் (காஷ்மீரி சில்லி) = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
த‌னியாத்தூள் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு தூள் = தேவைக்கு

புளி = ஒன்ன‌றை லெம‌ன் சைஸ்

தேங்காய் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி


தாளிக்க‌
=======

எண்ணை = ஐந்து தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = ஒரு ஆர்க்
பூண்டு = முன்று ப‌ல் (த‌ட்டி கொள்ள‌வும்)
சின்ன வெங்காயம் = ஐந்து
கொத்து ம‌ல்லி த‌ழை சிறிது மேலே தூவ‌

செய்முறை
==========


1. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

2. அரைக்க கொடுத்துள்ளவைகளை நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.

3. புளியை அரை டம்ளர் வெண்ணீரில் போட்டு கரைத்து கொள்ளவும்.

4. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவேண்டிய மசாலா தூள்வகைகளை சேர்க்கவும்.


5. மசாலா வதங்கியதும் அரைத்த வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து நன்கு கால் மணி நேரம் தீயின் அளவை குறைத்து வைத்து மசாலா வாடை அடங்கும் வரை கொதிக்கவிடவும்.

6. புளியைக்கரைத்து சேர்த்து மீண்டும் கொதிக்க ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.


7. புளி வாடை அடங்கியதும் மீன் + தேங்காய் பவுடரை கொஞ்சமா வெண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

8. கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

9. சுவையான வஞ்சரம் மீன் குழம்பு ரெடி.


குறிப்பு
======

மீன் குழம்பை பல வகையாக செய்யலாம் அதில் இது ஒரு ஈசியான முறை.

மீனை கடைசியில் தான் போடனும் இல்லை என்றால் குழைந்து விடும்.

தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு பத்தை அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.

மீன் குழம்பிற்கு பிளெயின் சாதம், இடியாப்பம், ரொட்டி,ஆப்பம், தோசை, மைதா அடை , பருப்படை எல்லாம் பொருந்தும்.

காஷ்மீரி சில்லி சேர்ப்பதால் காரம் இல்லாமல்,அதே நேரம் நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.

இரண்டு நாள் வைத்து சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்.

Saturday, September 12, 2009

சாதம் டிப்ஸ் ‍- டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்




1. பிரியாணி செய்யும் போது வடித்து தம் போடும் சாதம் உதிரியாக வர அரிசி தட்டி பாதி வெந்து கொண்டு இருக்கும் போது சிறிது எலுமிச்சை சாறும், எண்ணை ஒரு ஸ்பூனும் ஊற்றினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

2. வயதானவர்களுக்கு புளி சாதம் தயாரிக்கும் போது கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து வேகவைத்து போட்டு செய்தால் சத்தும் ஆச்சு அவர்களால் மென்றும் சாப்பிடவும் முடியும்.


3. த‌யிர் சாத‌ம் ம‌ற்றும் எலுமிச்சை சாத‌ம் த‌யாரிக்கும் போது க‌டைசியாக‌ சிறிது துருவிய‌ கேர‌ட்டை தூவி கிள‌றி இர‌க்கினால் சாத‌ம் பார்க்க‌ க‌ல‌ர் புல்லாக‌ இருக்கும்.



4. பிரியாணி செய்யும் போது வாசனை கமகமன்னு வரனுமா செய்ய ஆரம்பித்ததிலிருந்து இடை இடையே கிளறும் நேரம் தவிர மற்ற வேளைகளில் முடிபோட்டு தீயின் அளவை சிம்மிலேயே வைத்து சமைக்கவும்.இப்படி செய்வதால் அடிப்பிடிக்காது. பிரியாணி செய்து முடிப்பதற்குள் மற்ற அனைத்து வேலையும் செய்து முடித்து விடலாம்.



5.சில‌ர் விற‌கு அடுப்பில் க‌ள‌றிக்கு (விசேஷங்களுக்கு)பிரியாணி செய்யும் போது ச‌ட்டி பின்னாடி நிறைய‌ க‌ரி பிடிக்கும் அதை க‌ழுவி முடிக்க‌ ரொம்ப‌ நேர‌ம் எடுக்கும் அத‌ற்கு தேக் ஷாவை (பெரிய பானை)அடுப்பில் ஏற்றும் முன் அத‌ன் பின் புற‌ம் ச‌பீனாவை ந‌ன்கு தேய்த்து விட்டு ஏற்றினால் செய்து முடித்து க‌ழுவும் போது ஈசியாக‌ க‌ழுவி விட‌லாம்.


6.ஃபிரைட் ரைஸ் செய்யும் போது அரிசியை அரை மணி நேரம் ஊறவத்து கீரைஸ் போல் தாளித்து தண்ணீர் ஒன்றுக்கு ஒன்று ஊற்றி வேக வைத்து செய்தால் ரொம்ப அருமையாக வரும்.


7. மிதியான‌ சாத‌த்தில் ப‌ச்ச‌மிள‌காய், சீர‌க‌ம், பெருங்காய‌ம் சேர்த்து க‌ட்டியாக‌ அரைத்து சிறிய‌ உருண்டைக‌ளாக‌ பிடித்து சாத வ‌டாம் த‌யாரிக்க‌லாம்.


8.இட்லி தோசை ஆப்ப‌த்திற்கும் மீதியான‌ சாத‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தலாம்.


9. சாதம் வடிக்கும் போது உதிரியாக வர உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை விட்டால் போதும் பொல பொல வென்று வரும்

அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து

ஸலவாத்துஸ் ஸஆதா
அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து


அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹ‌ம்மதின் வ ஆலிஹி வஸஹ்பிஹி அததமாஃபி இல்மில்லாஹி ஸலாத்தன் தாயிமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.


யா அல்லாஹ் நீ உன் அறிவில் உள்ள கணக்குப் படி நபி (ஸல்) அவர்களின் எப்போதும் ஸலவாத்து சொல்வாயாக.

தின‌ம் முடிந்த‌வ‌ரை எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு தெரிந்த ஸலவாத்தை ஓதுவது மிக‌வும் ந‌ல்ல‌து.
ஸ‌ல‌வாத்து ஒதுவ‌தால் இத‌ய‌ம் ஒளி பெறுகிற‌து.

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை படை நாளில் உள்ள ஒரு இரவு லைலத்துல் கத்ர் இரவு ஆகும் அதாவது(21 , 23 , 25 , 27, 29)
ரமளான் மாதத்தில் அதிகமாக இபாபத் செய்வது மிகவும் ஏற்றமாகும்.



அல்லாஹும்ம இன்ன(க்)க அபுFவ் வுன்(த்) துஹிப்Bபுல் அப்Fவ பFபுF அன்னீ

பொருள்: அல்லாவே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!


!

சிறப்பு: நயகம் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரையடைந்தால் இந்த துஆவை அதிகமாக ஓதி வருவார்களென்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:

லைலத்துல் கத்ர் இரவென்பது பிறை இருபத்தொன்றிலிருந்து (ஒற்றை ப‌டையில் வ‌ரும் பிறைக‌ளை) கடைசி பிறை வரை இருக்கிரதென்று சில ரிவாயத்துகளிலிருந்து காணப்படுகின்றன.

முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகலும், ஓதுங்கள்.

Friday, September 11, 2009

உளுந்து பருப்பு போண்டா - urad Dal Bonda





போண்டா என்றாலே சென்னையில் உள்ள‌ திருவல்லிகேனியில் இருக்கும் ர‌த்னா கேஃபே தான் ஞாபகம் வரும் அங்கு தான் இது ரொம்ப பேம‌ஸ். அங்கு கிடைக்கும் போண்டாவின் சுவையே த‌னி.இப்போது ம‌ற்ற‌ இட‌ங்க‌ளிலும் கிடைக்கிற‌து. என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ அயிட்ட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. இது ர‌த்னா கேஃபே அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் என் சுவைக்கு இதை நான் இந்த முறையில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ செய்து வ‌ருகிறேன்.







தேவையான‌ பொருட்க‌ள்

உளுத்தம் பருப்பு = ஒரு டம்ளர்
அரிசி = ஒரு மேசை கரண்டி
க‌ட‌லை ப‌ருப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
ஆப்ப சோடா கால் தேக்கரண்டி
தேங்காய் = இரண்டு பத்தை
மிளகு = ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை = இரண்டு மேசை கரண்டி
பெருங்காய‌ப் பொடி = ஒரு பின்ச்(தேவைப‌ட்டால்)


செய்முறை

1. உளுந்து ப‌ருப்பு, க‌ட‌லை ப‌ருப்பு, அரிசி மூன்றையும் ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வ‌த்த்து மிக்சியில் அரைக்க‌வும்.அரைத்து முடிக்கும் போது மிள‌கை சேர்த்து ஒரு சுற்று சுழ‌ற்றி எடுக்க‌வும்.

2. உப்பு + ஆப்ப‌சோடாவை ஒரு ஸ்பூன் த‌ண்ணீரில் க‌ரைத்து மாவில் க‌ல‌க்க‌வும். தேங்காயை பொடிப்பொடி சில்லாகாக‌ ந‌ருக்கி சேர்க்க‌வும். க‌ருவேப்பிலையை பொடியா அரிந்து க‌ல‌க்க‌வும்.

3. மாவை ந‌ன்கு பிசைந்து சிறிது த‌ள‌ர்த்தியாக‌ இருக்க‌ட்டும்.

4. போண்டா பொரிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணையை காய‌வைத்து தீயின் த‌ன‌லை மீடிய‌மாக‌ வைத்து போண்டாக்க‌ளாக‌ உருண்டை பிடித்து போட‌வும். இது வேக‌ லேட்டாகும் பொறுமையாக மெதுவாக‌ பொரித்து எடுக்க‌வும்.






குறிப்பு


இத‌ற்கு எண்ணை கொஞ்ச‌ம் நிறைய‌ ஊற்றி பொரிக்க‌வும். வேக‌ டைம் எடுக்கும் மெதுவாக‌ பிர‌ட்டி விட்டு ந‌ன்கு சிவ‌ந்து வ‌ரும் போது எடுத்து எண்ணையை வ‌டித்து எடுக்க‌வும்.இது மிள‌கு வாச‌ம் சாப்பிடும் போது ரொம்ப‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.
சாம்பார், பொட்டுக‌ட‌லை துவைய‌ல், புதினா துவைய‌ல் எல்லாம் பொருந்தும்.
காலையில் உப்புமாவிற்கு ந‌ல்ல‌ காம்பினேஷ‌ன்.குழ‌ந்தைக‌ளுக்கு ஏற்ற‌ மாதிரி சிறிய‌ போண்டாவாக‌ செய்து கொடுக்க‌லாம். தேவைப‌ட்டால் ப‌ச்ச‌மிள‌காய் சிறிது பொடியாக‌ அரிந்து போட்டு கொள்ள‌லாம்.

Thursday, September 10, 2009

மீண்டும் ஒரு அவார்டு வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌








மேனகா அவர்கள் எனக்கு இந்த இரண்டு அவார்டையும் கொடுத்து இருக்கிறார்கள். மிகவும் நன்றி மேனகா + சந்தோஷம்.




இதை கமலா http://adupankarai.kamalascorner.com/2009/09/blog-post.html

மாதேவி http://sinnutasty.blogspot.com/2009/08/blog-post_29.html

க‌ம‌லா, மாதேவி, பாயிஜா , ம‌ற்றும் ஹ‌ர்ஷினிக்கும் கொடுக்கிறேன்.


அடுத்து என் சமையலை பார்த்து சமைக்கும் அனைத்து சமையல் ராணிகள் மற்றும் ராஜாக்களுக்கும் வ‌ழ‌ங்குகிறேன் பெற்று கொள்ளுங்க‌ள்.







இந்த‌ அவார்டினை என் பிளாக்கிற்கு வ‌ருகை த‌ரும் அனைவ‌ருக்கும் கொடுக்கிறேன்.

Wednesday, September 9, 2009

ரிச் ஃபுரூட் ஃபாலுதா - Rich Fruit Falooda












ரொம்ப ஈசி, ஆனால் ரொம்ப ரிச்சாக இருக்கும். பார்டியில் கலக்கலாம்.
பாலுதா அனைவருக்கும் பிடித்த உணவு, எல்லா ஹோட்டல்களின் மெனு லிஸ்டிலும் கண்டிப்பாக பாலுதா இருக்கும். பார்டியில் உணவில் ரொம்ப ரிச்சான டெசர்ட் இது, நோன்புகாலங்களில் நோன்பு திறக்க செய்யும் பாணங்கள் புரூட் சேலட் வகைகளில் ஒரு முறையாவது பாலுதாசெய்து விடுவேன்.

தேவையான பொருட்கள்

பழங்கள்

பச்சை திராட்சை
கருப்பு திராட்சை
ஆப்பில்
பச்சை பேரிக்காய்
மாதுளை
வாழைப்பழம்
ஜவ்வரிசி = முன்று மேசை கரண்டி (வேக வைத்தது)
சேமியா = முன்று மேசை க‌ர‌ண்டி (வேக‌ வைத்த‌து)
முந்திரி = 9 வ‌றுத்த‌து
ஐஸ் கிரீம் = விருப்பமான இர‌ண்டு பிளேவ‌ர்க‌ள்
ரோஸ் மில்க் = க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர்






செய்முறை

1.ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌வைத்து வைக்க‌வும்.சேமியாவை வேக‌ வைத்து வ‌டித்து வைக்க‌வும்.முந்திரியை நெயில் (அ) ப‌ட்ட‌ரில் வ‌ருத்து வைக்க‌வும்.


2. ப‌ழ‌ங்க‌ளை பொடியாக‌ அரிந்து வைக்க‌வும்.





3. முதலில் ஜவ்வரிசி,அடுத்து சேமியா,சிறிது ரோஸ் மில்க்,ஒரு முந்திரி,(தேவைப்பட்டால் பாதம் பிளேக்ஸ்) இரண்டு வகை ஐஸ் கிரீம் (பிஸ்தா , மேனங்கோ) போட்டு இதே போல் இரண்டு கோட்டிங் போல் மறுபடி சேர்க்கவேண்டும்.


குறிப்பு

பழங்கள் நம் இழ்டம் கலர்புல்லா பார்த்து சேர்த்து கொள்ளலாம்.
இதில் சேமியாவிற்கு பதில் நூடுல்ஸும் போடலாம்.ஐஸ் கிரீம் முன்று பிளேவ‌ர் போட்டால் இன்னும் ந‌ல்ல‌ இருக்கும்.
ஜ‌வ்வ‌ரிசிக்கு ப‌தில் க‌ட‌ல்பாசியும் சேர்க்க‌லாம், க‌ல‌ர் புல் ஜெல்லியும் சேர்க்க‌லாம்.ரோஸ்மில்க் பான‌ம் ஏற்க‌ன‌வே குறிப்பில் இருக்கு அதை பார்த்து கொள்ள‌வும்.ரோஸ் மில்க் க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர்


இது நான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிக்கும் சகோதரர் நவாஸ் கேட்டதால் இந்த ரிச் ஃபலூதா.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள், ஹோட்டலுக்கு போக வேண்டான் இனி வீட்டிலேயே ஃபாலுதா

Tuesday, September 8, 2009

ஸ்பெஷல் மட்டர் தால் வடை - special muttur dal vadai


தேவையான பொருட்கள்

மட்டர் தால் = ஒரு டம்ளர்

இஞ்சி = இரண்டு அங்குலம் அளவு

பச்ச மிளகாய் = ஒன்று

வெங்காயம் = ஒன்று

பூண்டு = முன்று பல்

பட்டை = ஒருசிறிய துண்டு

கிராம்பு = ஒன்று

சோம்பு = அரை தேக்கரண்டி

உப்பு = தேவைக்கு

கருவேப்பிலை ,கொத்துமல்லி புதினா = சிறிது


இட்லி சோடா = ஒரு பின்ச்






செய்முறை

1. ம‌ட்ட‌ர் தாலை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும். ஊறிய‌தும் த‌ண்ணீர் முழுவ‌தையும் ஒரு வ‌டி த‌ட்டில் வ‌டிக்க‌வும்.

2. முன்றில் ஒரு பாக‌ம் ம‌ட்ட‌ர் தால் எடுத்து அத்துட‌ன் கிராம்பு, ப‌ட்டை,இஞ்சி, பூண்டு , சோம்பு சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.அப்போது தான் எல்லாம் ம‌சாலாவும் ஒன்று சேரும்.

3. இப்போது மீதி உள்ள‌ ம‌ட்ட‌ர் (பட்டாணி பருப்பு) தாலை மிக்சியில் விப்ப‌ரில் இர‌ண்டு முறை திருப்பி எடுக்க‌வும். மிக்சியை ஓட‌விட‌ம‌ல் இப்ப‌டி திருப்பி எடுத்தால் ஒன்றும் பாதியுமாய் இருக்கும்.

4. எல்லா வ‌ற்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்து அதில் வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை, புதினா, கொத்து ம‌ல்லி பொடியாக‌ அரிந்து போட்டு உப்பு ம‌ற்றும் இட்லி சோடா சேர்த்து ந‌ன்கு பிசைந்து ஐந்து நிமிட‌ம் ஊற‌வைத்து தேவைக்கேற்ப‌ பெரிய‌ வ‌டைக‌ளாக‌வோ, சிறிய‌ வ‌டைக‌ளாக‌வோ பொரித்து எடுக்க‌வும்.


சூப்பரான கிரிஸ்பி ஸ்பெஷல் மட்டர் தால் வடை ரெடி.




குறிப்பு


மசால் வடை என்றால் பட்டாணி பருப்பில் செய்தால் நல்ல கிரிஸ்பியாக வரும். அது கிடைக்காதவர்கள் கடலை பருப்பே பயன் படுத்தலாம்.

லெமென் ரைஸ், தயிர் சாதம், புளி சாதம், மாலை சிற்றூண்டி, நோன்பு நேரத்தில் கஞ்சிக்கு ஏற்றது.

அனைவரும் விரும்பி சாப்பிடுவது எல்லா டீ கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் செய்வது ரொம்ப சுலபம்

Monday, September 7, 2009

வித வித மான பஜ்ஜி வகைகள்


பேபி கார்ன் பஜ்ஜி


குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌ பிடித்த‌து, ச‌த்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவ‌து க‌ட‌லைமாவில் முக்கி பொரிக்காம‌ல் லேசாக‌ கார்ன் வெளியில் தெரிவ‌து போல் செய்தால் பிள்ளைக‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்

பேபிகார்ன் = ஆறு
க‌ட‌லை மாவு = முன்று மேசை க‌ர‌ண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கர‌ண்டி
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு (கால் தேக்க‌ரண்டி)
பெப்ப‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை + ப‌ட்ட‌ர் = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1.பேபி கார்னை ந‌ன்கு க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ க‌ட் ப‌ண்ணி கொள்ள‌வும்.

2.க‌ட‌லைமாவு, கார்ன் மாவு, பொட்டுக‌ட‌லை பொடியை ம‌ற்றும் உப்பு, பெப்ப‌ர் பொடி, பேக்கிங் ப‌வுட‌ர் அனைத்தையும் ப‌ஜ்ஜிமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.

3. மாவு கரைப்பது எப்போதும் அகலமான பாத்திரத்தில் கரைத்து கொள்ளவும்.அப்பதான் சரியாக தோய்ச்சி போட முடியும்.

4. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து வானலியில் கொள்ளும் அளவிற்கு போட்டு பொரித்து எடுக்கவும்.

5. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்




முட்டை பஜ்ஜி

இது ஒரு சத்தான முட்டை பஜ்ஜி, சில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக கொடுத்து விடலாம். நோன்பு காலங்களிலும் கஞ்சிக்கு செய்து கொள்ளலாம்.

தேவையான‌ பொருட்க‌ள்

முட்டை = இரண்டு
கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ = கால் தேக்கரண்டி
பெப்பர் பொடி = சிறிது
ரெடி கலர் பொடி = கால் தேக்கரண்டி
இட்லி சோடா = சிறிது

செய்முறை

1. முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒன்றை நான்கு துண்டுகளாக போட்டு கொள்ளவும். மொத்தம் எட்டு துண்டுகள். முழுசா போட்டா அவ்வ‌ள‌வா ந‌ல்ல‌ இருக்காது முழுசா முட்டையை சாப்பிடுவது போல் இருக்கும். க‌ட் செய்து செய்வது ருசியாக‌ இருக்கும்.

2. க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது பெப்ப‌ர் பொடி, உப்பு தூள் தூவி கொள்ள‌வும். இது கேஸ் ட்ர‌புள் வ‌ராம‌ல் இருக்க‌ இப்ப‌டி தூவி கொள்ள‌லாம். இல்லை நேர‌ம் இருந்தால் லேசாக‌ பொரித்து பிற‌கு சுட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.

3. க‌ட‌லைமாவு,அரிசி மாவு, உப்பு,மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு பொரித்து எடுக்க‌வும்.

4. சுவையான‌ ச‌த்தான‌தொரு முட்டை ப‌ஜ்ஜி ரெடி.










வாழைக்காய் பஜ்ஜி


இது இந்துக்களின் பெண்பார்க்கும் விஷேஷங்களில் சொஜ்ஜி , பஜ்ஜி க்கு முக்கிய பங்குண்டு.இது திடீர் விருந்தாளிகளை சமாளிக்க ஏற்றது பஜ்ஜி தான்.நோன்புகாலங்களிலும் கஞ்சி கூட சாப்பிட சுட்டு கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்


வாழைக்காய் = ஒன்று பெரியது
கடலை மாவு = முன்று குழிகரண்டி அளவு
அரிசி மாவு = இரண்டு மேசைகரண்டி
மைதா மாவு = அரை தேக்கரண்டி
காஷ்மிரி சில்லி பொடி = முக்கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
பெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
சோம்புதூள் = கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
இட்லி சோடா = கால் தேக்க்ரண்டி
ரெடி கலர் (அ) யெல்லோ கலர் பொடி = கால் தேக்கரண்டி

செய்முறை


1. வாழைக்காயை தோலெடுத்து நீளவாக்கில் வெட்டாமல் வட்ட வடிவமாக மெல்லிய வில்லைகளாக போட்டு கொள்ளவும். கடையில் போடுவது போல் நீளவாக்கில் போட்டு தோய்த்து சுடும் போது அதிக எண்ணை உள்ளே இழுக்கும்.இப்படி பொடியாக வெட்டுவதால் எண்ணையில் போட்டதும் சீக்கிரம் வெந்துவிடும். உடனே எடுத்து விடலாம். குழந்தைகளுக்கும் சாப்பிட இலகுவாக இருக்கும்.


2. வாழைக்காய் தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ரொம்ப தண்ணியாக இல்லாமலும், கட்டியாக இல்லாமலும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


3. எண்ணையை சூடுப‌டுத்தி வான‌லியில் கொள்ளும் அள‌விற்கு போட்டு பொரித்து எடுக்க‌வும்.


4. சுவையான‌ வாழைக்காய் ப‌ஜ்ஜி ரெடி, புதினா துவைய‌ல்,பொட்டுகடலை துவ‌ல், கெட்ச‌ப்புட‌ன் சாப்பிட‌வும்.


5. இது விரும்பிய‌வ‌ர்க‌ள் நீள‌வாக்கிலும் க‌ட் செய்து சுட்டு சாப்பிட‌லாம்.

கொட‌ மிளகாய் பஜ்ஜி

மிளகாய் பஜ்ஜி என்றது மெரினா பீச் தான் நினைவுக்கு வரும், சில பேருக்கு சாப்பிட ஆசையா இருந்தாலும் அதில் உள்ள காரம் வயிற்று வலிக்கும், அல்சர் வரும் என்று சில சாப்பிடுவதில்லை. காரமில்லாமல் மிளகாய் பஜ்ஜி சாப்பிடவும் ஒரு வழி இருக்கு.இது வாய் க‌ச‌ப்பிற்கு ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும்.

எப்போதும் போல் வாழைக்காய் ப‌ஜ்ஜிக்கு உள்ள‌ அள்விலேயே செய்ய‌லாம்.
ஆனால் மிள‌காயை க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ (அ) பெரிய‌ மிள‌காயாக‌ இருந்தால் நான்காக காம்போடு பிள‌க்க‌வும். உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வினிகர்,சிறிது உப்பு, சர்க்கரை போட்டு கட் செய்த மிளகாயை பத்து நிமிடம் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறினாலும் நல்ல தான் இருக்கும்.

இப்போது எப்போதும் போல அந்த ஊறிய மிளகாயை எடுத்து பஜ்ஜிகளாக சுட்டெடுக்கவும்.இனி இந்த‌ மிள‌காய் ப‌ஜ்ஜியை சாப்பிடும் போது ஆஸ் வூஸ் என்று சாப்பிட‌ தேவையில்லை. சுவைத்தே சாப்பிடலாம்.


கெட்சப்புடன் சாப்பிட ஆஹா ஆஹா ஆஹா சுவை அபாரம்.

குறிப்பு

பஜ்ஜி என்றது எண்ணையா பிழியும், அதை சுடும் போது இரன்டு முன்று டிஷு (அ) பேப்பர் ( அ) கண் வடி வைத்து நல்ல வடித்து எடுத்தால் எண்ணை வடியும்.அதை ம‌றுப‌டி எடுத்து வேறு டிஷு பேப்ப‌ரில் வைத்து சாப்பிட‌வும்.
ப‌ஜ்ஜியை எண்ணையில் போட்ட‌து சும்மா பெற‌ட்டி பெற‌ட்டி விட‌க்கூடாது.அப்ப‌ எண்ணை ரொம்ப‌ குடிக்கும்.

சிம்மில் வைத்தும் பொரிக்கூடாது, எண்ணை உள்ளே ரொம்ப‌ இழுக்கும்.
இது காய் க‌றி சாப்பிட‌ குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்திற்கு தொட்டு கொள்ள‌ இது போல் ஏதாவ‌து ஒரு காயில் பொரித்து கொடுக்க‌லாம்.

ப‌ஜ்ஜி என்றாலே பெரிய‌வ‌ர்க‌ள் முத‌ல் சிறிய‌வ‌ர்க‌ள் வ‌ரை விரும்பி சாப்பிடுவ‌து.

அதை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம். இது அனைத்தும் நான் செய்யும் முறை.இதே போல் க‌த்திரிக்காய், காளிபிலெவ‌ர், வெண்டைக்காய் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்டைக்காய் எல்‌லா‌வ‌ற்றிலும் செய்ய‌லாம்.

Saturday, September 5, 2009

நோன்பை பற்றி


1. எல்லா வணக்கங்களின் தலைவாசல் நோன்பாகும்.


2. நோன்பு நோற்பதினால் இதயம் ஒளி பெறுகிறது.


3.காட்டிலுள்ள மிருகங்களும் நோன்பாளிகளுக்காக துஆ செய்கின்றன.


4.பரக்கத் நிறைந்த மாதம்.
அல்லாஹு தஆலாவின் விஷேஷ கவனம் நம்மீது ஏற்படுகிறது.


5. அல்லாஹூ தஆலா விஷேஷமான அருளை நம்மீது இறக்கிவைக்கிறான்.


6. முதல் பத்து நாட்கள் ரஹ்மத்தாக இருக்கிறது.


7. இரண்டாவது பத்து நாட்கள் மஃபிரத் ‍ பிழைகளைப் பொறுத்தல்.


8 முன்றாவதுபத்தில் நரகத்திலிருந்து விடுதலை அளித்தல்.


9. நோன்பாளியின் வாடை அல்லாஹூ த ஆலாவிடம் கஸ்தூரியை விட அதிக நறுமனமாக உள்ளது.


10. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் நோன்பாளிக்காக மன்ன்னிப்புத்தேடுகின்றன.


11.. ஓவ்வோரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.

Friday, September 4, 2009

சிக்கன் பஜ்ஜி


தே.பொருட்கள்

ப‌ஜ்ஜி மாவிற்கு


மைதா மாவு = முன்று குழிகரண்டி
கார்ன் பிளார் மாவு = ஒரு குழிகரண்டி
பேக்கிங் பவுடர் = ஒன்னறை தேக்கரண்டி
எண்ணை = முன்று தேக்கரண்டி
உப்பு ‍= சிறிது

சிக்கனில் மசாலா

சிக்க‌ன் = முன்னூரு கிராம் (போன்லெஸ்)
காஷ்மிரி சில்லி பொடி = அரை மேசை க‌ர‌ண்டி
உப்பு தூள் = ருசிக்கு தேவையான‌ அள‌வு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்ன‌றை தேக்க‌ர‌ண்டி
லெமென் ஜுஸ் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = ப‌ஜ்ஜி பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1. சிக்க‌னை ந‌ன்கு க‌ழுவி சிறிய‌ துண்டுக‌ள‌க‌ போட்டு கொள்ள‌வும்.
2. சிக்கனை சிறிய துண்டுகளாக போட்டு மசாலா போட்டு அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. ப‌ஜ்ஜி மாவு க‌ல‌க்க‌ வேண்டிய‌தை க‌ட்டியாக‌ க‌ரைத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ள‌வும்.

4. எண்ணையை காய‌ வைத்து ப‌ஜ்ஜி போல‌ சிக்க‌னை மைதா க‌ல‌வையில் போட்டு தீயை மீடிய‌மாக‌ வைத்து வெந்த‌தும் பொரித்து எடுக்க‌வும்.
5. குழ‌ந்தைக‌ளுக்கு பிடித்த‌ ய‌ம்மி ய‌ம்மி சிக்க‌ன் ப‌ஜ்ஜி ரெடி, பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும், செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம்.

குறிப்பு
ந‌ல்ல‌ சுவையான‌ சிக்க‌ன் ப‌ஜ்ஜி, இது போல் க‌ட‌லை மாவிலும் முட்டையெல்லாம் சேர்த்து செய்ய‌லாம்.இதே போல் இர‌ண்டு முன்று வ‌கையாக‌ செய்ய‌லாம்.

Thursday, September 3, 2009

ரிச் புரூட் சால‌ட் - rich fruit salad



தே.பொருட்கள்


கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்


பழங்கள்


பச்சை திராட்சை - ஆறு
கருப்பு திராட்சை - ஆறு
பப்பாளி பழம் - அரைகப்
கிரீன் பியர்ஸ் - கால் கப்
ஆப்பிள் - கல் கப்
ஸ்ட்ராபெர்ரி - ஆறு
ஐஸ்கிரீம் - ஏதாவது இரண்டு (அ) முன்று பிளேவர்கள்


செய்முறை


1.பழங்கள் ரெடி மேட் டின்னைஐ விட பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும்.


2.பாலை சாப்ரான் போட்டு காய்ச்சவும். கால் கப் தண்ணீரில் கஸ்டட் பவுடரை கரைத்து பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சவும்.காய்ச்சும் போது கை விடாமல் இரண்டு நிமிடம் தொடர்ந்து காய்ச்சி இரக்கி ஆற வைக்க வேண்டும்.


3.ஆறிய கஸ்டடை பிரிட்ஜில் நல்ல குளிரவிடவும்.


4.முந்திரியை பட்டரில் வருத்து வைக்கவும், பாதத்தை பொடியக அரிந்து (கொர கொரப்பாக) அதையும் பட்டரில் வருத்து கொள்ளவேண்டும்.


5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.


6.சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து முன்று அல்லது நான்கு சேலட் கப்பு களில் ஊற்றி, அதன் மேல் ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும்.


7.பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து முன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே முன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


8.ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி , சாக்லேட் பிளேவர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.


குறிப்பு


முதலே பழங்களை காய்ச்சிய கஸ்டடில் போடு வைத்து விட்டால் சாப்பிடும் போது கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது போட்டு கலக்கி கொண்டால் போதும்.மாம்பழம், வாழைபழம் கூட சேர்க்கலாம். நோன்பு நேரத்தில் வாஙகும் பழங்கள் சில நேரம் புளிப்பாகிவிடும் அதை கூட இப்படி செய்யலாம். பார்டிகளுக்கு வைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.

நான்கு நபர்கள் சாப்பிடலாம்.

திராட்சை பழம் புளிப்பாக இருந்தால் + பழம்




1. எம். ஜி .ஆர் மாதிரி ரோஸ் கலரில் ஆகனுமா திராட்சை பழ ரசம்( கிரேப் ஜூஸ்) குடிங்க.(இது என் பிரெண்ட் ரூபி சொன்ன‌து)


2. சில‌ கிரேப்ஸ் புளிப்பாக‌ இருக்கும் அதை அப்ப‌டி த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் அல்ல‌து வெளியில் வேக‌ போடுங்க‌ள்.
வெந்து ஆறிய‌தும் ந‌ன்கு ம‌சித்து வ‌டிக்க‌டி அது ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் அத்துட‌ன் தேவைக்கு த‌ண்ணீர், ச‌ர்க்க‌ரை (அ) குளுக்கோஸ் சேர்த்து குடிக்க‌வும்.


3. இல்லை புளிப்பு திராட்சையை புரூட் சால‌டில் போட்டு சாப்பிட்டால் புளிப்பு தெரியாது.


4. ஹோட்ட‌லில் உள்ல‌ கிரேப் ஜூஸ் போல் செய்ய‌னுமா கிரேப்பை எஸ‌ன்ஸ் ச‌ர்க்க‌ரை சேர்த்து ந‌ன்கு மிக்சியில் அடித்து கொஞ்சம் தனியாக கிரேப்ஸை எடுத்து தோலெடுத்து உள்ளே உள்ள கொட்டையையும் நீக்கி விட்டுஅதை நான்காக அரிந்து ஜூஸுடன் போட்டு குடிக்கவும்.


5. பெண்க‌ளுக்கு ஏற்ப‌டும் அதிக‌ உதிர‌ போக்கை க‌ட்டு ப‌டுத்தும் இந்த‌ திராட்சை ப‌ழ‌ ர‌ச‌ம். முன்று நாள் தொடர்ந்து குடிக்கலாம்.

6. கர்பிணி பெண்கள் வாய் கசப்பிற்கு பச்சை திராட்சையை சாப்பிடலாம்.7. பிளெம்ஸ் புளிப்பாக இருந்தால் அதை அப்படியே தக்காளி ரசம் போல் தக்காளிக்கு பதில் பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம்.







8. சில நேரம் பார்ட்டிக்கு வைத்து நிறைய பழங்கள் வேஸ்டாகி விட்டால் புரூட் காக்டெயில் மற்றும் புரூட்சேலட், பாலுதா செய்து விடலாம்.


9. சில குழந்தைகள் புரூட் ஜூஸ் குடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு புருட், பால், சிறிது ஐஸ்கீரிம் சேர்த்து அடித்து கொடுக்கலாம்

10 வெயிட்டை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள் சாலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பழங்களில் உப்பு மிளகு தூள் சாட் மசாலா தூவி ஒரு பவுள் முழுவதும் சாப்ப்பிட்டு ஒரு பிளாக் டீ குடித்தால் ஒரு முழுமையான காலை உணவு சாப்பிட்டது போல் இருக்கும்.

11.குழந்தைகள் கிரேப்ஸை பார்த்ததும் அப்படியே எடுத்து வாயில் போட்டு முழுங்குவார்கள் , குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தோலெடுத்து கொட்டை எடுத்து கொடுக்கனும், இல்லை ஜூஸாக அடித்து கொடுத்து விடுங்கள்


11. கிரேப்ஸ், கிரேப் ஜூஸ் போன்றவை சாப்பிடும் போது குடிக்கும் போது சிலருக்கு தொண்டை அடைத்தது போல், தொண்டை கர கரப்பு ஏற்படும் அப்படி இருந்தால் கிரேப்ஸ் உடன் நான்கு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிகக்வும்

Wednesday, September 2, 2009

ரோஸ் மில்க் - Rose Milk



தேவையான பொருட்கள்

பால் = அரை லிட்டர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கரண்டி ( முன்று மேசை கரண்டி)
ரோஸ் எஸன்ஸ் = இரண்டு ட்ராப்
ரோஸ் வாட்டர் = ஒரு ட்ராப் (தேவைபட்டால்)
சப்ஜா விதை = ஒரு மேசை கரண்டி
நட்ஸ் வகைகள் = இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை = 9 தேக்கரண்டி

செய்முறை

1. ச‌ப்ஜா விதை க‌டுகை விட‌ பொடியாக‌ இருக்கும் இதை ஒரு ம‌ணி நேர‌ம் முன்பே ஊற‌வைக்க‌வும். ஊறிய‌தும் ஜ‌வ்வ‌ரிசி போல் சிறிது முத்து போல் வ‌ரும்.இதுவும் வ‌யிறு உபாதைக‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

2. பாலை தேவைக்கு த‌ண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற‌வைக்க‌வும்.

3.ந‌ட்ஸ் வ‌கைக‌ள் (பாத‌ம் + பிஸ்தா) பொடியாக‌ நீள‌வாக்கில் அரிந்து வைக்க‌வும். சோம்பேறித‌ன‌ம் ப‌டுப‌வ‌ர்க‌ள் மிக்சியில் ஒன்றும் பாதியுமாய் திரித்து கொள்ளுங்க‌ள்.

4. ஆறிய பாலில் ச‌ர்க்க‌ரை, ஊறிய‌ ச‌ப்ஜா விதை, ரூ ஆப் ஷா, ரோஸ் எஸ‌ன்ஸ்,ந‌ட்ஸ் க‌ல‌ந்து க‌ரைத்து பிரிட்ஜில் குளிர‌ வைத்து மாலை நோன்பு திற‌க்கும் போது குடிக்க‌வும்.

5. ஜில்லுன்னு வ‌யிறுக்கு ந‌ல்ல‌ குளு குளுன்னு இருக்கும். அல்ச‌ர், ம‌ற்றும் வ‌யிற்று புண்ணுக்கு ரூ ஆப்ஷாவை தின‌ம் பாலில் க‌ல‌ந்து குடிக்கலாம்.

6. இன்னும் க‌ல‌ர் புல்லா இருக்க வேண்டும் என்றால் க‌ட‌ல் பாசியை ப‌ச்சை க‌ல‌ரில் செய்து பொடியாக‌ க‌ட் செய்து போட‌வும்.

7.ச‌ர்க்க‌ரை அதிக‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ரவ‌ர் விருப்ப‌த்திற்கு சேர்த்து கொள்ள‌வும்.

Tuesday, September 1, 2009

அ முதல் அ (ஃ ) வரை நான்

ர‌வனைப்பு = என் கணவரின் அன்பான அரவனைப்பு என்றேன்றும் நிலைக்க துஆ கேட்கிறேன்


றுதல் ‍ = என் சோகத்தை போக்க, என் கிரான்மா சொல்லி தந்த துவாக்கள்.


ர‌ண்டு = த‌ங்கமான‌ இர‌ண்டு என் பிள்ளைக‌ள்


கோ = ஈகோ பார்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது.



லகம் = உல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ரின் பின்னூட்ட‌மும், ஊக்க‌மும், எனக்கு ரொம்ப‌ உற்சாக‌மாய் இருக்கிற‌து


ர் = என் கணவருடன் செல்ல‌ விருப்ப‌ப்ப‌டும் ஊர் புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம்.



ன் பெற்றொர்கள் = என் பெற்றோர்க‌ள் வாழ்வில் என‌க்கு கிடைத்த‌ விலை ம‌திப்பில்லாத‌ பொக்கிஷ‌ம்.


ன் இந்த பதிவு = சுமஜ்லா, சப்ராஸ் அபூ பக்கர் என்னை அழைத்ததால்


ந்து = ஐந்து நேரத் தொழுகைகளை என்றென்றும் தொழணும்



ருவன் ‍- ஏகன் ஒருவனே!


ராயிரம் = என் பிள்ளைகளை பற்றி ஓராயிரம் கனவுகள் இருக்கு


வை மொழி = ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.


க‌ஃபா = தொழும் போது என் மனக்கண்ணில் தெரிவது...




அடுத்து யாரை அழைப்பது, யாருக்கு என் பிளாக்கிற்கு வருகை தரும் அனைவரையும் அழைக்க ஆசை.


மேனகா,ஷபிக்ஸ், நவாஸ், அதிரை அபூபக்கர், தர்ஷினியை அழைகிறேன்.
அவரவருக்கு பிடித்த கேள்வியை போட்டு கொள்ளுங்கள்

மொரு மொரு பகோடா


தேவையான பொருட்கள்
கடலை மாவு = ஒரு டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
வெங்காயம் = முன்று
பச்ச மிளகாய் = 1பூண்டு = 4 பல் (பெரிய‌து)
இஞ்சி = ஒரு அங்குலம் அளவு
புதினா, கருவேப்பிலை = கால் கட்டு
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
டால்டா ( பட்டர்) = ஒரு மேசை க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
இட்லி சோடா = அரை பின்ச்
பெருங்காய‌ப்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி (தேவைப்ப‌ட்டால்)

செய்முறை

1. வெங்காய‌ம் நீள‌வாக்கிலும், ப‌ச்ச‌மிள‌காயை பொடியாக‌வும் அரிந்து வைக்க‌வும்.

2. புதினா, க‌ருவேப்பிலையை ம‌ண் போக‌ க‌ழுவி த‌ண்ணீரை வ‌டித்து பொடியாக‌ (பைன் சாப்பாக‌) அரிந்து கொள்ள‌வும்.

3. இஞ்சியை கேர‌ட் துருவியில் துருவி கொள்ள‌வும், பூண்டை த‌ட்டி வைக்க‌வும்.

4. வெங்காய‌த்தில் ப‌ச்ச‌மிள‌காய், புதினா, க‌ருவேப்பிலை,பூண்டு, இஞ்சி,பெருங்காய‌ப் பொடி,இட்லி சோடா, உப்பு சேர்த்து வெற‌வி கொள்ள‌வும், அதில் டால்டா (அ) ப‌ட்ட‌ரை லேசாக‌ உருக்கி ஊற்றி கிள‌ற‌வும்.

5. க‌டைசியாக‌ க‌ட‌லை மாவு, அரிசி மாவு சேர்த்து பிச‌ற வேண்டும்.த‌ண்ணீர் சிறிதும் சேர்க்க‌க்கூடாது. ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் கொஞ்ச‌மா கை அள‌வு எடுத்து தெளித்து பிச‌ற‌வும்.

6. ப‌கோடா சுட‌ தேவையான‌ அள‌வு எண்ணையை காய‌ வைத்து க‌ருகாம‌ல் தீயின் த‌ண‌லை மீடிய‌மாக‌ வைத்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வான‌லியில் கொள்ளும் அள‌விற்கு க‌ல‌ந்து வைத்த‌ க‌ல‌வையை கிள்ளி கிள்ளி போட‌வும். ரொம்ப‌ மொத்தையாவும் போட‌ கூடாது, ரொம்ப‌ உதிரியாவும் போட‌ கூடாது.

7. சூப்ப‌ரான‌ மொரு மொரு ப‌கோடா ரெடி.

டிப்ஸ் டிப்ஸ்

பகோடா செய்யும் போது கடலை மாவில் செய்வதால் கண்டிப்பாக துருவிய இஞ்சி சேர்த்து கொண்டால் செரிமானத்திற்கு நல்லது, கேஸ் பிராப்ளத்துக்கும் நல்லது.
ஏதாவது காய்கறிகள் (முட்டை கோஸ், கேரட்) போன்றவை சேர்த்து கொள்ள வேண்டும் பகோடா எல்லோருக்கும் பிடிக்கும் காய் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுத்தமாதிரியும் ஆகிடும்.
புதினா, கொத்துமல்லி, கீரை சேர்த்தும் பகோடா செய்யலாம்.

முந்திரி பருப்பு பகோடா செய்யும் போது முழுசா போடாமல் அதை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்தால் சுவை இன்ன்மும் அதிகமாக இருக்கும். எல்லா பக்கோடாவிலும் முந்திரி தெண்படும்.இப்படி செய்வதால் குறைந்த அளவு முந்திரி போதுமானது.

பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்க வேண்டிய துஆ


எந்த ஒரு துஆ ஓதும் போதும் முன்பும் பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும்.



1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக!

5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவ‌ர்க‌ளாக‌ எங்களை ஆக்கியவைப்பாயாக!

6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

8. இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!

9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!

10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!

11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!

12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!

13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!

14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

21. இறைவா! மரண வேதன. மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

22.இறைவா! இரைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

23. இறைவா! நாலை கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!

24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

!
எந்த ஒரு தூஆவையும் ஓதுவதற்கு முன்பும், பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள்.