Tuesday, September 1, 2009

பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்க வேண்டிய துஆ


எந்த ஒரு துஆ ஓதும் போதும் முன்பும் பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும்.



1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக!

5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவ‌ர்க‌ளாக‌ எங்களை ஆக்கியவைப்பாயாக!

6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

8. இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!

9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!

10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!

11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!

12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!

13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!

14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

21. இறைவா! மரண வேதன. மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

22.இறைவா! இரைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

23. இறைவா! நாலை கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!

24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

!
எந்த ஒரு தூஆவையும் ஓதுவதற்கு முன்பும், பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள்.

17 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

அல்ஹம்துலில்லாஹ்

அழகிய துவாக்கல்.

நன்றி சகோதரி.

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

அருமையான தூவாக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஆமீன்!...

அருமையான துஆக்கள்....

உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....

அதிரை அபூபக்கர் said...

அல்ஹம்துலில்லாஹ்.. அருமையான துஆக்கள்..

S.A. நவாஸுதீன் said...

ஆமீன். அருமை சகோதரி.

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால், பயிஜா,சப்ராஸ் அபூ பக்கர் , அதிரை அபூபக்கர்,நவாஸ் அனைவருக்கும் நன்றி, இது முன்பே போட்ட பதிவு தான் இருந்தாலும் இது நோன்பு நேரத்தில் எல்லோருக்கும் உதவும் என்று தான் இப்ப மறுபடி எடுத்து போட்டேன்.

SUFFIX said...

நல்ல தொகுப்பு, தங்களது முயறசியை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. ஆமீன். நன்றி சகோதரி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படியே.. எங்களுக்கும் சேர்த்து ஓதுங்க!!!

malar said...

unkaludaya pathiuvkal anathum arumai .

copy past veelai chiyavilai.

iftaar rukku piraku kudikka nalla juice vakai cholunkka.

salam

சீமான்கனி said...

அருமையான மிக முக்கியமான தேடல்கள் அக்கா.....
நோன்பு திறக்கும் முன்பு கேட்டக வேண்டியவைகள்
நன்றி அக்கா,,,

Jaleela Kamal said...

//அப்படியே.. எங்களுக்கும் சேர்த்து ஓதுங்க!!!//

நன்றி ராஜ் பதிவை படித்து பதில் தந்தமைக்கு, அப்படியே ஆகட்டும்

Jaleela Kamal said...

மலர் வாங்க வருகைக்கு மிக்க நன்றி, ஜுஸ் தானே போட்டுட்டாபோச்சு, முன்பு உள்ள பபதிவில் ஏறக்கனவே இரண்டு ஜூஸ் இருக்கு பாருங்கள்,முக்கனி ஜூஸ், கேரட் ஜூஸ் இன்னும் ஒன்று ரெடி பதிவுதான் போடனும், நேரமில்லாததால் உடனே போட முடியல.

Jaleela Kamal said...

//அருமையான மிக முக்கியமான தேடல்கள் அக்கா.....
நோன்பு திறக்கும் முன்பு கேட்டக வேண்டியவைகள் //

நன்றி சீமான் கனி

Jaleela Kamal said...

//நல்ல தொகுப்பு, தங்களது முயறசியை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. ஆமீன். நன்றி சகோதரி./


நன்றி ஷபிக்ஸ் .

asiya omar said...

ஜலீலா அருமையான துவாக்கள் ஆமீன்! ஆமீன்!யாரப்பில் ஆலமின்!

Jaleela Kamal said...

சகோதரி ஆசியா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா