Tuesday, September 1, 2009

மொரு மொரு பகோடா


தேவையான பொருட்கள்
கடலை மாவு = ஒரு டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
வெங்காயம் = முன்று
பச்ச மிளகாய் = 1பூண்டு = 4 பல் (பெரிய‌து)
இஞ்சி = ஒரு அங்குலம் அளவு
புதினா, கருவேப்பிலை = கால் கட்டு
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
டால்டா ( பட்டர்) = ஒரு மேசை க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
இட்லி சோடா = அரை பின்ச்
பெருங்காய‌ப்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி (தேவைப்ப‌ட்டால்)

செய்முறை

1. வெங்காய‌ம் நீள‌வாக்கிலும், ப‌ச்ச‌மிள‌காயை பொடியாக‌வும் அரிந்து வைக்க‌வும்.

2. புதினா, க‌ருவேப்பிலையை ம‌ண் போக‌ க‌ழுவி த‌ண்ணீரை வ‌டித்து பொடியாக‌ (பைன் சாப்பாக‌) அரிந்து கொள்ள‌வும்.

3. இஞ்சியை கேர‌ட் துருவியில் துருவி கொள்ள‌வும், பூண்டை த‌ட்டி வைக்க‌வும்.

4. வெங்காய‌த்தில் ப‌ச்ச‌மிள‌காய், புதினா, க‌ருவேப்பிலை,பூண்டு, இஞ்சி,பெருங்காய‌ப் பொடி,இட்லி சோடா, உப்பு சேர்த்து வெற‌வி கொள்ள‌வும், அதில் டால்டா (அ) ப‌ட்ட‌ரை லேசாக‌ உருக்கி ஊற்றி கிள‌ற‌வும்.

5. க‌டைசியாக‌ க‌ட‌லை மாவு, அரிசி மாவு சேர்த்து பிச‌ற வேண்டும்.த‌ண்ணீர் சிறிதும் சேர்க்க‌க்கூடாது. ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் கொஞ்ச‌மா கை அள‌வு எடுத்து தெளித்து பிச‌ற‌வும்.

6. ப‌கோடா சுட‌ தேவையான‌ அள‌வு எண்ணையை காய‌ வைத்து க‌ருகாம‌ல் தீயின் த‌ண‌லை மீடிய‌மாக‌ வைத்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வான‌லியில் கொள்ளும் அள‌விற்கு க‌ல‌ந்து வைத்த‌ க‌ல‌வையை கிள்ளி கிள்ளி போட‌வும். ரொம்ப‌ மொத்தையாவும் போட‌ கூடாது, ரொம்ப‌ உதிரியாவும் போட‌ கூடாது.

7. சூப்ப‌ரான‌ மொரு மொரு ப‌கோடா ரெடி.

டிப்ஸ் டிப்ஸ்

பகோடா செய்யும் போது கடலை மாவில் செய்வதால் கண்டிப்பாக துருவிய இஞ்சி சேர்த்து கொண்டால் செரிமானத்திற்கு நல்லது, கேஸ் பிராப்ளத்துக்கும் நல்லது.
ஏதாவது காய்கறிகள் (முட்டை கோஸ், கேரட்) போன்றவை சேர்த்து கொள்ள வேண்டும் பகோடா எல்லோருக்கும் பிடிக்கும் காய் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுத்தமாதிரியும் ஆகிடும்.
புதினா, கொத்துமல்லி, கீரை சேர்த்தும் பகோடா செய்யலாம்.

முந்திரி பருப்பு பகோடா செய்யும் போது முழுசா போடாமல் அதை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்தால் சுவை இன்ன்மும் அதிகமாக இருக்கும். எல்லா பக்கோடாவிலும் முந்திரி தெண்படும்.இப்படி செய்வதால் குறைந்த அளவு முந்திரி போதுமானது.

21 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

டோமெட்டோ கெட்சப்புடன் செம டேஸ்டியா இருக்கும். நாங்களும் நோன்பு திறக்க பண்றது உண்டு.

நட்புடன் ஜமால் said...

பார்க்கவே சூப்பரா இருக்கே ...

Jaleela Kamal said...

//டோமெட்டோ கெட்சப்புடன் செம டேஸ்டியா இருக்கும். நாங்களும் நோன்பு திறக்க பண்றது உண்டு//

ஆமாம் நவாஸ் கெட்சப்புடன் நல்ல இருக்கும், இதிலேயே இன்னும் இரண்டு விதம் இருக்கு , இது என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

/பார்க்கவே சூப்பரா இருக்கே ...//

நன்றி நட்புடன் ஜமால்

Menaga Sathia said...

மழைக்காலத்தில் ஒரு டீயுடன் சாப்பிட அடடா என்ன ருசி....சொல்லவே வேண்டாம்.மொறு மொறு பகோடா சூப்பர் ஜலிலாக்கா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மழைக்காலத்தில் ஒரு டீயுடன் சாப்பிட அடடா என்ன ருசி....சொல்லவே வேண்டாம்.மொறு மொறு பகோடா சூப்பர் ஜலிலாக்கா//

டீ தவிர்த்து நானும் வழிமொழிகிறேன்..

என்ன கொடும சார் said...

அட்ரஸ் தரவா? செஞ்சு அனுப்பிறீங்களா?

சீமான்கனி said...

பகோடா னா எனக்கு ரெம்ப பிடிக்கும் அக்கா....அப்டியே சாப்டுவேன்.....பிரிண்ட் எடுத்து வச்சுருக்கேன்.....
நன்றி ..அக்கா...

Jaleela Kamal said...

//மழைக்காலத்தில் ஒரு டீயுடன் சாப்பிட அடடா என்ன ருசி....சொல்லவே வேண்டாம்.மொறு மொறு பகோடா சூப்பர்//

உஙகள் பாராட்டுக்கு நன்றி மேனகா

Jaleela Kamal said...

//மழைக்காலத்தில் ஒரு டீயுடன் சாப்பிட அடடா என்ன ருசி....சொல்லவே வேண்டாம்.மொறு மொறு பகோடா சூப்பர் ஜலிலாக்கா//

டீ தவிர்த்து நானும் வழிமொழிகிறேன்
வாங்க கவுண்டரே நலமா? ஜக்கம்மா நலமா?

நன்றி ராஜ்

Jaleela Kamal said...

என்ன கொடுமை சார் = ஹி ‍ ஹி பார்த்ததும் இந்த பகோடாவை தான் சொல்கீறீர்கள் என்று நினைத்தேன்.


அதுக்கென்ன எங்கு இருக்கிங்க குறுக்கு தெருவுல ஒரு பொட்டி கட போடுஙக்ள், பார்சல் பார்சலா அனுப்புகிறேன்

Jaleela Kamal said...

என்ன கொடுமை சார் =வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Jaleela Kamal said...

//பகோடா னா எனக்கு ரெம்ப பிடிக்கும் அக்கா....அப்டியே சாப்டுவேன்.....பிரிண்ட் எடுத்து வச்சுருக்கேன்.....//

சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கும், பராட்டுக்கும் நன்றி

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் டேஸ்டியான பக்கோடா

Jaleela Kamal said...

//சூப்பர் டேஸ்டியான பக்கோடா//

Thank you Sarusri

mathy said...

ரொம்ப நன்றிங்க..
பார்த்தேன்.இனி செய்துடவேண்டியதுதான்..
உங்கள் பகுதியை நண்பர்களுக்கும் உங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்துறேன்.......சம்மதமா..?

Jaleela Kamal said...

//ரொம்ப நன்றிங்க..
பார்த்தேன்.இனி செய்துடவேண்டியதுதான்..
உங்கள் பகுதியை நண்பர்களுக்கும் உங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்துறேன்.......சம்மதமா//

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி மதி, தாராளமாக அறிமுகப்படுத்தலாம்.

akkila said...

unga samayal tips paarthuthan naan veetil vitham vithama seyyaren romba thanks sister

mathy said...

Jaleela said...
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி மதி, தாராளமாக அறிமுகப்படுத்தலாம்.

September 14, 2009 11:20 AM

நன்றி சகோதரி...

Vijiskitchencreations said...

ஜலீ ரொம்ப நல்லா இருந்தது. போன சண்டே இதை பார்த்து செய்தேன். நல்ல மொறு மொற இருந்தது.
இங்கு ஸ்னோ ஸ்ராம் அன்று இது செய்தேன். இதுவும் மசாலா டீயும் சேர்த்து சாப்பிட நன்றாக இருந்தது. நன்றி.

Jaleela Kamal said...

விஜி வாங்க மொரு மொரு பகோடா செய்தது பார்த்து வந்து கருத்து தெரிவித்தற்கு ரொம்ப சந்தோஷம்.

//இங்கு ஸ்னோ ஸ்ராம் அன்று இது செய்தேன். இதுவும் மசாலா டீயும் சேர்த்து சாப்பிட நன்றாக இருந்தது. //

ஆஹா சூப்பரா இருக்குமே.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா