Thursday, September 3, 2009

ரிச் புரூட் சால‌ட் - rich fruit salad



தே.பொருட்கள்


கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்


பழங்கள்


பச்சை திராட்சை - ஆறு
கருப்பு திராட்சை - ஆறு
பப்பாளி பழம் - அரைகப்
கிரீன் பியர்ஸ் - கால் கப்
ஆப்பிள் - கல் கப்
ஸ்ட்ராபெர்ரி - ஆறு
ஐஸ்கிரீம் - ஏதாவது இரண்டு (அ) முன்று பிளேவர்கள்


செய்முறை


1.பழங்கள் ரெடி மேட் டின்னைஐ விட பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும்.


2.பாலை சாப்ரான் போட்டு காய்ச்சவும். கால் கப் தண்ணீரில் கஸ்டட் பவுடரை கரைத்து பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சவும்.காய்ச்சும் போது கை விடாமல் இரண்டு நிமிடம் தொடர்ந்து காய்ச்சி இரக்கி ஆற வைக்க வேண்டும்.


3.ஆறிய கஸ்டடை பிரிட்ஜில் நல்ல குளிரவிடவும்.


4.முந்திரியை பட்டரில் வருத்து வைக்கவும், பாதத்தை பொடியக அரிந்து (கொர கொரப்பாக) அதையும் பட்டரில் வருத்து கொள்ளவேண்டும்.


5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.


6.சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து முன்று அல்லது நான்கு சேலட் கப்பு களில் ஊற்றி, அதன் மேல் ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும்.


7.பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து முன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே முன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


8.ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி , சாக்லேட் பிளேவர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.


குறிப்பு


முதலே பழங்களை காய்ச்சிய கஸ்டடில் போடு வைத்து விட்டால் சாப்பிடும் போது கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது போட்டு கலக்கி கொண்டால் போதும்.மாம்பழம், வாழைபழம் கூட சேர்க்கலாம். நோன்பு நேரத்தில் வாஙகும் பழங்கள் சில நேரம் புளிப்பாகிவிடும் அதை கூட இப்படி செய்யலாம். பார்டிகளுக்கு வைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.

நான்கு நபர்கள் சாப்பிடலாம்.

15 கருத்துகள்:

SUFFIX said...

நல்ல செய்முறை விளக்கம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு. மிக்க நன்றி


ஆமாம் குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்,முவ‌ண்ண‌ ஐஸ் கிரிம் போட்டால் இன்னும் ச‌த்த‌மில்லாம‌ல் எல்லா ப‌ழ‌ங்க‌ளும் ச‌ப்பிடுவார்க‌ள்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ

சீமான்கனி said...

ஆஹா....சுப்பர்
புரூட் சேலட் ..
விளக்கம் அருமை அக்கா.....
.....நானும் விரும்பி சாப்டுவேன்...

Menaga Sathia said...

சூப்பர் ப்ரூட் சாலட்.அருமையாக இருக்கு.

நட்புடன் ஜமால் said...

ரிச்சிதான்

எளிதா சொல்லித்தாறீங்க நன்றி.

அன்புடன் மலிக்கா said...

இது மிகவும் சத்தான உணவு, ஜலீலாக்கா

Jaleela Kamal said...

//ஆஹா....சுப்பர்
புரூட் சேலட் ..
விளக்கம் அருமை அக்கா.....
.....நானும் விரும்பி சாப்டுவேன்/

சீமான் கனி பாரட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

/சூப்பர் ப்ரூட் சாலட்.அருமையாக இருக்கு.//

மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

//ரிச்சிதான்

எளிதா சொல்லித்தாறீங்க நன்றி//

தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி (நட்புடன் ஜமால்)

Jaleela Kamal said...

//இது மிகவும் சத்தான உணவு, ஜலீலாக்கா//



வாங்க கலக்கல் மலிக்கா, வருகைக்கு நன்றி, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க சந்தோஷம்

S.A. நவாஸுதீன் said...

எளிய செய்முறை விளக்கம். ஃப்ரூட் சாலட், ஃபளூதான்னா ரொம்ப பிடிக்கும். நன்றி சகோதரி

S.A. நவாஸுதீன் said...

ரஸ்மலாய் செய்யத் தெரியுமா உங்களுக்கு?

Jaleela Kamal said...

//எளிய செய்முறை விளக்கம். ஃப்ரூட் சாலட், ஃபளூதான்னா ரொம்ப பிடிக்கும். நன்றி சகோதரி//
பாலுதா குறிப்பும் கூடிய விரைவில் போடு கிரேன்

ந‌வாஸ்

ரசமலாய் தெரியும் ரொம்ப ஈசியான முறையில் போடுகிறேன்.

நண்டு தவிர எந்த குறிப்பு வேண்டுமானாலும் கேட்கலாம்.

தமிலிஷ் மூலம் என் குறிப்பகளை முதல் முதல் பிரபலபடித்தியதற்குமிக்க நன்றி



இப்ப செய்யல முதலே செய்து வைத்த குறிப்பு இருக்கு போடுகிரேன்.
இப்ப கேமரா கொஞ்சம் ரிப்பேர், சகோதர் ஜமால் கேட்ட பருப்பு வடையும் போடமுடியாமல் இருக்கு,

Anonymous said...

நானும் இதே முறையில் தான் சேர்ப்பேன் ஆனால் சாப்ரான் சேர்க்க மாட்டேன்..பப்பாளியும் சேக்க மாட்டேன்..நீர் விடாதா அக்கா?



அன்புடன்,

அம்மு.

Jaleela Kamal said...

அம்மு ஃபுரூட் சாலடில் போடு எல்லா பழங்களும் நீர்த்து கருத்து தான் போகும்.

அது எந்த பழம் போடுவதா இருந்தாலும் அதை கட் செய்து சிறிது உப்பு தூவி பிரிட்ஜில் வைத்து விடனும், மற்ற பொருட்களும் தயாராக வைத்து கொள்ளனும். சாப்பிடும் போது எல்லாவற்றையும் அப்ப எடுத்து மிக்ஸ் பண்னனும்.

பார்க்க‌ க‌ல‌ர் ஃபுல்லா இருக்க‌னும். ரெட்,ம‌ஞ்ச‌ள்,க‌ருப்பு,ப‌ச்சை

மேங்கோ கிடைக்காத‌ போது ப‌ப்பாளி சேர்த்து கொள்ள‌லாம்.
வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி அம்மு, அடிக்க‌டி வ‌ந்து இது போல் ச‌ந்தேக‌ங்க‌ள் கேளுங்க‌ள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா