Wednesday, September 23, 2009

சில பெண்களுக்கு கோபம் வந்தால்(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள். அதுக்கு தான் இதில் சில‌ வ‌ரிக‌ள்)
1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன‌ செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது.

2.அவர்கள் கோபம் முழுவதும். பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்கார் மேல கோபமா? பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா?  பிள்ளைகளுக்கு தான் (முதுகில் நல்ல எண்ணைய தடவி தோசை சுடுவது) அடி டமால் டிமீலுன்னு விழும் பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

3. வெளிநாட்டில் உள்ள கணவரிடமிருந்து வரும் போன் அன்று வரலையா உடனே கிடைத்தது பிள்ளைகள் காரணமே இல்லாமல் சாத்து சாத்துன்னு சாத்தரது, அந்த ஆளு அங்கு சொகுசா  ஜாலியா இருக்காரு , இதுங்க‌ல‌ க‌ட்டி நான் தான்மேய்க்க‌ வேண்டியாதா போச்சு ஒரு நிம்ம‌தி கிடையாது..என்று பொல‌ம்ப‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள்.

4. அவர்கள் அன்று சுட இருக்கும் தோசை ரொட்டி எல்லாம் பிள்ளைகள் முதுகில் தான் விழும்.

5. சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்.அது யாருக்கும் தெரிவதில்லை. இது நிறைய வீட்டில் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கு

6. பிள்ளைகள் தெரியாம தண்ணி கொட்டிட்டா கூட போட்டு சாத்துவது , ஒரு நிமிஷம் கொட்டியது நம்மளா இருந்தா என்ன செய்வோம். கொஞ்சம் யோசிக்கலாமே,அது தண்ணிய கொட்டிட்டு நடுங்கி கொண்டே நிற்கும்.
இதுலேயே மூச்சா போயும் வைக்கும், அதுக்கும் சேர்த்து நாலு சாத்து..

7. ஆனால் வேண்டுமென்றே ஜித்தில் போட்டு கொட்டும் பிள்ளைகளை , அப்படி உள்ள குழந்தைகளுக்கு இரண்டு போடதான் செய்யனும்.

8. ரொம்ப கோபப்படுவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயசாகி விடும் கிழவி பொல் ஆகி விடுவாய் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள்.

9. இது நான் எங்கோ கேள்வி பட்டது, ஒரு கிரிக்கெட் பேட்டை எடுத்து கொண்டு தலையனையை கண்ட மட்டுக்கும் சாத்துவார்களாம்.

10. //நான் கேள்வி பட்டது சில பேர் வீட்டில் உள்ள கண்ணாடி பாத்திரத்தை முற்றத்தில் போய் கோபம் தீரும் வரை போய் உடைத்து விட்டு வருவார்களாம்.//

11. சில‌ டென்ஷனை ப்போக்க பேர் அரிசி , அவல், மாவு எடுத்து என்னேர‌மும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்க‌ள்.சில பேர் நகத்தை நறு நறு வென கடித்து கொண்டு இருப்பார்கள். நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள்.

இதே கோபம் உஙக்ளை சிறு வயதிலேயே பீபீ எகுறும் நிலைக்கு கொண்டு போய் விடும்.இல்லை ஹார்டடாக்கே வரலாம்கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். .

இப்படி பட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷியங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம். துணி தைப்பது, விதவிதாமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.

2 கருத்துகள்:

sarusriraj said...

ஹி ஹி , கரெக்ட் தான் நீங்க சொல்லுறது , எனக்கு இந்த அளவுக்கு இன்னும் வரலை . அதற்குள் தவிர்ப்பதற்கான வழியை சொல்லிவிடுங்கள்

Jaleela said...

சாரு நீங்களாவது வந்து பதில் போட்டீர்களே , பயந்து கொண்டே இருந்தேன்,. எல்லா லேடிஸும் என்னை மொரத்த எடுத்து மொத்திட போறாங்க என்று,

இன்னும் குழந்தைகள் கோபம் இருக்கு, ஆண்கள் கோபம் இருக்கு.
ஏற்கனவே அதற்குண்டான டிப்ஸ் கொடுத்துள்ளேன் மீதி நேரம் கிடைக்கும் போது போடுகீறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா