Saturday, September 12, 2009

சாதம் டிப்ஸ் ‍- டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்




1. பிரியாணி செய்யும் போது வடித்து தம் போடும் சாதம் உதிரியாக வர அரிசி தட்டி பாதி வெந்து கொண்டு இருக்கும் போது சிறிது எலுமிச்சை சாறும், எண்ணை ஒரு ஸ்பூனும் ஊற்றினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

2. வயதானவர்களுக்கு புளி சாதம் தயாரிக்கும் போது கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து வேகவைத்து போட்டு செய்தால் சத்தும் ஆச்சு அவர்களால் மென்றும் சாப்பிடவும் முடியும்.


3. த‌யிர் சாத‌ம் ம‌ற்றும் எலுமிச்சை சாத‌ம் த‌யாரிக்கும் போது க‌டைசியாக‌ சிறிது துருவிய‌ கேர‌ட்டை தூவி கிள‌றி இர‌க்கினால் சாத‌ம் பார்க்க‌ க‌ல‌ர் புல்லாக‌ இருக்கும்.



4. பிரியாணி செய்யும் போது வாசனை கமகமன்னு வரனுமா செய்ய ஆரம்பித்ததிலிருந்து இடை இடையே கிளறும் நேரம் தவிர மற்ற வேளைகளில் முடிபோட்டு தீயின் அளவை சிம்மிலேயே வைத்து சமைக்கவும்.இப்படி செய்வதால் அடிப்பிடிக்காது. பிரியாணி செய்து முடிப்பதற்குள் மற்ற அனைத்து வேலையும் செய்து முடித்து விடலாம்.



5.சில‌ர் விற‌கு அடுப்பில் க‌ள‌றிக்கு (விசேஷங்களுக்கு)பிரியாணி செய்யும் போது ச‌ட்டி பின்னாடி நிறைய‌ க‌ரி பிடிக்கும் அதை க‌ழுவி முடிக்க‌ ரொம்ப‌ நேர‌ம் எடுக்கும் அத‌ற்கு தேக் ஷாவை (பெரிய பானை)அடுப்பில் ஏற்றும் முன் அத‌ன் பின் புற‌ம் ச‌பீனாவை ந‌ன்கு தேய்த்து விட்டு ஏற்றினால் செய்து முடித்து க‌ழுவும் போது ஈசியாக‌ க‌ழுவி விட‌லாம்.


6.ஃபிரைட் ரைஸ் செய்யும் போது அரிசியை அரை மணி நேரம் ஊறவத்து கீரைஸ் போல் தாளித்து தண்ணீர் ஒன்றுக்கு ஒன்று ஊற்றி வேக வைத்து செய்தால் ரொம்ப அருமையாக வரும்.


7. மிதியான‌ சாத‌த்தில் ப‌ச்ச‌மிள‌காய், சீர‌க‌ம், பெருங்காய‌ம் சேர்த்து க‌ட்டியாக‌ அரைத்து சிறிய‌ உருண்டைக‌ளாக‌ பிடித்து சாத வ‌டாம் த‌யாரிக்க‌லாம்.


8.இட்லி தோசை ஆப்ப‌த்திற்கும் மீதியான‌ சாத‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தலாம்.


9. சாதம் வடிக்கும் போது உதிரியாக வர உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை விட்டால் போதும் பொல பொல வென்று வரும்

16 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான குறிப்புகள்!

Jaleela Kamal said...

சகோதரர் நிஜாமுதீன், வருகைக்கும், கருத்து தெரிவித்து ஓட்டு போட்டதற்கும் மிக்க நன்றீ.

ரொம்ப யோசித்து ஒன்று ஒன்றா சேர்த்து போட்டேன், யாருக்கும் இந்த டிப்ஸ் பிடிக்கவில்லையோன்னு நினைத்தேன்.

நீஙக்ள் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Menaga Sathia said...

அனைத்து டிப்ஸ்களும் அருமை!!

அதிரை அபூபக்கர் said...

1. பிரியாணி செய்யும் போது வடித்து தம் போடும் சாதம் உதிரியாக வர அரிசி தட்டி பாதி வெந்து கொண்டு இருக்கும் போது சிறிது எலுமிச்சை சாறும், எண்ணை ஒரு ஸ்பூனும் ஊற்றினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.//

எனக்கு இப்பொழுதுதான் தெரியும்..நன்றி. உங்களது தகவலுக்கு..

சென்ஷி said...

நல்ல பயனுள்ள டிப்ஸ்..

(அதென்ன எண் வரிசையில 1 க்கு பிறகு 4 வந்து மறுபடி 3 மறுபடி 4 வருது :-) )

Jaleela Kamal said...

அதென்ன எண் வரிசையில 1 க்கு பிறகு 4 வந்து மறுபடி 3 மறுபடி 4 வருது :-) ithoo maaRRukiReen

Anonymous said...

அக்கா என் ப்ளாகிற்கு வந்து உங்களுடைய விருதை பெற்று கொள்ளுங்கள்..

அன்புடன்,
அம்மு.

Jaleela Kamal said...

நன்றி மேனகா

நன்றி அதிரை அபூபக்கர், ஆமாம் இதன் படி பிரியாணி செய்து பாருங்கள் நல்ல உதிரியாக வரும்.


அம்மு விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி, பெற்றுக்கொள்கிறேன். ஆனால் டிப்ஸ் பற்றி ஒன்றூம் சொல்லாமல் போய்விட்டீர்களே

Jaleela Kamal said...

சென்ஷி வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

(அது பாயிண்ட்ஸ் போடும் போது மாற்றி மாற்றி போட்டதால் அபப்டி ஆகிவிட்டது, இப்போது மாற்றி விட்டேன்)

அன்புடன் மலிக்கா said...

நல்ல டிப்ஸ் ஜலீலாக்கா

Jaleela Kamal said...

நன்றி மலிக்கா

Malar Gandhi said...

Dear Jaleela,

Thanks for stopping by at my place. Me back after vacation! Love the way you write in Tamil, its a good read. Miss talking in my mother tongue!:(

Well...these are great tips for any cook (both amertuer and experienced person). Wish you soon start a recipe blog, I think you will do it lot better than anyone, here. 20 YRS cooking experience...hmmm, I really want to know more from you.

Stay in touch...

R.Gopi said...

வழக்கம் போல, கலக்கல் மெனு மற்றும் ஐடியாஸ்... நன்றி ஜலீலா..

என்ன, உங்க ரெஸிப்பிஸ் படிச்ச‌ உடனே பசி வயிற்றை கிள்ளுதுங்க...

Jaleela Kamal said...

மலர் காந்தி உங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டுக்கும்
மிக்க நன்றி

Jaleela Kamal said...

சகோதரர் ரஹ்மான் வாஅலைக்கும் ஸலாம் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த பிலாக் ஐடியை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்கிறேன்

Jaleela Kamal said...

//வழக்கம் போல, கலக்கல் மெனு மற்றும் ஐடியாஸ்... நன்றி ஜலீலா..

என்ன, உங்க ரெஸிப்பிஸ் படிச்ச‌ உடனே பசி வயிற்றை கிள்ளுதுங்க..///



வாங்க கோபி பீட்ரூட் ஹல்வாக்கு பிறகு இப்ப தான் வருகிறீர்கள் போல .ப‌ர‌வாயில்லை.

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா