Wednesday, September 9, 2009

ரிச் ஃபுரூட் ஃபாலுதா - Rich Fruit Falooda












ரொம்ப ஈசி, ஆனால் ரொம்ப ரிச்சாக இருக்கும். பார்டியில் கலக்கலாம்.
பாலுதா அனைவருக்கும் பிடித்த உணவு, எல்லா ஹோட்டல்களின் மெனு லிஸ்டிலும் கண்டிப்பாக பாலுதா இருக்கும். பார்டியில் உணவில் ரொம்ப ரிச்சான டெசர்ட் இது, நோன்புகாலங்களில் நோன்பு திறக்க செய்யும் பாணங்கள் புரூட் சேலட் வகைகளில் ஒரு முறையாவது பாலுதாசெய்து விடுவேன்.

தேவையான பொருட்கள்

பழங்கள்

பச்சை திராட்சை
கருப்பு திராட்சை
ஆப்பில்
பச்சை பேரிக்காய்
மாதுளை
வாழைப்பழம்
ஜவ்வரிசி = முன்று மேசை கரண்டி (வேக வைத்தது)
சேமியா = முன்று மேசை க‌ர‌ண்டி (வேக‌ வைத்த‌து)
முந்திரி = 9 வ‌றுத்த‌து
ஐஸ் கிரீம் = விருப்பமான இர‌ண்டு பிளேவ‌ர்க‌ள்
ரோஸ் மில்க் = க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர்






செய்முறை

1.ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌வைத்து வைக்க‌வும்.சேமியாவை வேக‌ வைத்து வ‌டித்து வைக்க‌வும்.முந்திரியை நெயில் (அ) ப‌ட்ட‌ரில் வ‌ருத்து வைக்க‌வும்.


2. ப‌ழ‌ங்க‌ளை பொடியாக‌ அரிந்து வைக்க‌வும்.





3. முதலில் ஜவ்வரிசி,அடுத்து சேமியா,சிறிது ரோஸ் மில்க்,ஒரு முந்திரி,(தேவைப்பட்டால் பாதம் பிளேக்ஸ்) இரண்டு வகை ஐஸ் கிரீம் (பிஸ்தா , மேனங்கோ) போட்டு இதே போல் இரண்டு கோட்டிங் போல் மறுபடி சேர்க்கவேண்டும்.


குறிப்பு

பழங்கள் நம் இழ்டம் கலர்புல்லா பார்த்து சேர்த்து கொள்ளலாம்.
இதில் சேமியாவிற்கு பதில் நூடுல்ஸும் போடலாம்.ஐஸ் கிரீம் முன்று பிளேவ‌ர் போட்டால் இன்னும் ந‌ல்ல‌ இருக்கும்.
ஜ‌வ்வ‌ரிசிக்கு ப‌தில் க‌ட‌ல்பாசியும் சேர்க்க‌லாம், க‌ல‌ர் புல் ஜெல்லியும் சேர்க்க‌லாம்.ரோஸ்மில்க் பான‌ம் ஏற்க‌ன‌வே குறிப்பில் இருக்கு அதை பார்த்து கொள்ள‌வும்.ரோஸ் மில்க் க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர்


இது நான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிக்கும் சகோதரர் நவாஸ் கேட்டதால் இந்த ரிச் ஃபலூதா.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள், ஹோட்டலுக்கு போக வேண்டான் இனி வீட்டிலேயே ஃபாலுதா

30 கருத்துகள்:

அதிரை அபூபக்கர் said...
This comment has been removed by the author.
அதிரை அபூபக்கர் said...

இதுப்பார்பதற்கு ரிச்சாக இருக்கிறது.. ஆனால் செய்வதற்கு ரொம்ப ஈசியாக இருக்கிறது.. ok.. நாங்களும் ரூமில் செய்து பார்க்கிறோம்..
நன்றி...

S.A. நவாஸுதீன் said...

ஆஹா......... என்னொட ஃபேவரிட் ஃபாலுதா போட்டாச்சா. ரொம்ப நன்றி சகோதரி.

S.A. நவாஸுதீன் said...

இங்கே பாகிஸ்தானிகள் கடைகளில் போய்தான் வாங்குவோம். இப்ப நாங்களே பண்ணீக்கலாம். மீண்டும் நன்றி

PriyaRaj said...

First time here...u have a nice space ....unga recipes ,tips ellamay romba nalla eruku pa...unga anbaana comment iku romba nandri ....will follow u daily ...thanx for following u .....

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப ஈசியா இருக்கு அதே சமையம் ரிச் ஆன பானம் , கட்டாயம் செய்து பார்கிறேன்.

Jaleela Kamal said...

//இதுப்பார்பதற்கு ரிச்சாக இருக்கிறது.. ஆனால் செய்வதற்கு ரொம்ப ஈசியாக இருக்கிறது.. ok.. நாங்களும் ரூமில் செய்து பார்க்கிறோம்..
நன்றி...//

அதிரை அபூபக்கர் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

//ஆஹா......... என்னொட ஃபேவரிட் ஃபாலுதா போட்டாச்சா. ரொம்ப நன்றி சகோதரி//


இது உங்க‌ளுக்காக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌ குறிப்பு.
ர‌ச‌ம‌லாய் முடிந்த‌ போது போடுகீறேன்.

Jaleela Kamal said...

//இங்கே பாகிஸ்தானிகள் கடைகளில் போய்தான் வாங்குவோம். இப்ப நாங்களே பண்ணீக்கலாம். மீண்டும் நன்றி//

ஆம் இப்போது இதை வீட்டிலேயே ஈசியாக செய்து சாப்பிடலாம்.

Jaleela Kamal said...

First time here...u have a nice space ....unga recipes ,tips ellamay romba nalla eruku pa...unga anbaana comment iku romba nandri ....will follow u daily ...thanx for following //

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றீ பிரியா

Jaleela Kamal said...

/ரொம்ப ஈசியா இருக்கு அதே சமையம் ரிச் ஆன பானம் , கட்டாயம் செய்து பார்கிறேன்.//

வாங்க கோக்குல ராணி அந்த இரண்டு குட்டீஸுக்கும் செய்து கொடுங்கள்.
சந்தோஷப்படுவார்கள்.

Chitra said...

Superaa irukku.coloful.Kandippa try panren :)

Anonymous said...

very excellent. I am also going to try this in my home

Jaleela Kamal said...

வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சித்ரா.

Jaleela Kamal said...

.//very excellent. I am also going to try this in my home//

பெயர் யார்ய்ன்னு தெரியல கருத்துக்கு மிக்க நன்றி.

Romeoboy said...

பார்க்க கலர் கலர்ரா கலகலா இருக்கு கண்டிபாக செய்து பார்கிறேன் ..

அன்புடன் மலிக்கா said...

பார்க்கவே அசத்தலா ஹூம் இருக்கே பக்கத்தில் இருந்தும்
அழைத்தால்தானே வந்து இதெல்லாம் சாப்பிடமுடியும்

நல்லாயிருக்கு ஜலிலாக்கா

Jaleela Kamal said...

ராஜ ராஜன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

வாங்க மலிக்கா உங்களுக்கு இல்லாததா?

Anonymous said...

ஹாய், ஜலீலா அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி இருக்கிங்க. சூப்பறோ சூப்பர்,, உங்கள் வலைப்பூவை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.சிலது செய்து பார்தேன், சூப்பர்.
ரைஹானா.

Jaleela Kamal said...

ரைஹானா வா அலைக்கும் அஸ்ஸ்லாம் வருகைக்கும், பாரட்டுக்கும் மிக்க நன்றி. சிலது செய்து பார்த்து எப்படி இருந்தது என்று வந்து சொல்லனும்

SUFFIX said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Malini's Signature said...

ஜலீலா அக்கா உங்களுக்கும் ரமாலான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ரமாலான் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா.

Malar said...

simple and heathy drink..i ll try it out soon

Jaleela Kamal said...

மலர் வருகைக்கு மிக்க நன்றீ , செய்து பார்த்து எபப்டி இருந்தது என்று சொல்லுங்கள்

Geetha6 said...

super!!
Thanks!

Geetha6 said...

super!!
Thanks!

Anonymous said...

நல்ல குறிப்பு. ஒரு தடவை செய்து பார்க்கணும்.
இனி சம்மரில் தான்.
பிறகு உங்கள் குபூஸ் ரொட்டி செய்து
பார்த்தேன். மிக நன்றாக வந்தது.
சாப்ட்டாக இருந்தது. என் மகன்
மிகவும் ருசித்து சாப்பிட்டு இனி இதே போல்
சப்பாத்தி செய் என அன்பு கட்டளை இட்டான்.
நன்றி ஜலீலா.

prethika said...

wonderfull dessert

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா