Monday, October 5, 2009

சிகப்பரிசி மாவு ரொட்டி, மாசி, ஆனியன் எக்




இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் நெல் மாவு ரொட்டி, இதை பத்திரி என்றும் அரிசிமாவு ரொட்டி என்றும் சொல்வார்கள்.



ரொட்டி
********
சிகப்பு அரிசி மாவு - இரண்டு கப்
உப்பு - தேவைக்கு
வெண்ணீர் - மாவு ஊறவைக்க
நெய் - சுடுவதற்கு
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று


மாசி வதக்கல்
****************வெங்காயம் - கால் கிலோ
தேங்காய் - அரை முடி (துருவியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மாசி தூள் - இரண்டு மேசை கரண்டி
கருவேப்பிலை - சிறிது
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று

ஆனியன் எக்
***************
முட்டை - இரண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
பச மிளகாய் -ஒன்று
மிளகு தூள் - கால் தேக்கரண்டி





செய்முறை
1. முதலில் ரொட்டிக்கு மாவில் தேங்காய் பூ சேர்த்து தான் வருத்துவைப்போம் அப்படி இல்லை என்றால் சிறிது தேங்காய் பூ சேர்த்து கொள்ளவும்,மாவில் வெங்காயம் பச்சமிளகாய் பொடியாக அரிந்து போட்டு வெண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு போட்டு கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக போட்டு வைக்கவும்.




2. ஒரு ஈர துணியை தட்டின் மேல் விரித்து உருண்டையை வைத்து தண்ணீர் (அ) எண்ணை கையில் தடவி கொண்டு உள்ளஙகையால் வட்ட வடிவமாக தட்டவும்




3. நான் ஸ்டிக் பேனை சூடுபடுத்தி அதில் அந்த துணியோடு எடுத்து போட்டு துணியை எடுத்து விட வேன்டும்.
4. எல்லா ரோடி களையும் இதே போல் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வைக்கவும்.
5. சுடாக சுட்ட ரொட்டியில் நெயை உருக்கி தடவவும்.





ஆனியன் எக்

***************

1. தவ்வாவில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக நருக்கி மிளகாய் தூள் சிறிது உப்பு தூள் சேர்த்து வதக்கவும்.


2. ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் மிளகுதூள் உப்பு சிறிது கலந்து முட்டை சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.


3. அடித்த முட்டையில் வெங்காய கலவையை சேர்த்து கலக்கி முட்டை தோசைகளாக பொரித்து கொள்ள வேண்டும்.







மாசி வதக்கல்

***************






1. மாசி வதக்க தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.


2. ஒரு ஆழமான வானலியில் எண்ணை ஊற்றி காயவைத்து கருவேப்பிலை, வெங்காயம் பச்சமிள்காயை பொடியாக அரிந்து போட்டு நன்கு வதக்கவும்.


3. சிறிது வதங்கியதும் அதில் மிள்காய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூளை சேர்த்து வதக்கவும்.


4. நன்கு மசலா சேர்ந்து வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி இரகவும்.


5. மாசி வதக்கல் ரெடி





இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் நெல் மாவு ரொட்டி, இதை பத்திரி என்றும் அரிசிமாவு ரொட்டி என்றும் சொல்வார்கள்.

இப்போது சுவையாண தட்டு ரொட்டி, மாசி வதக்கல்,ஆனியன் எக் ரெடி.

16 கருத்துகள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

இலகுவாக செய்யக் கூடிய ஒரு சமையல். பொதுவாக அனைவரும் விரும்பக் கூடிய சமையல்.

முயற்சி பண்ணிப் பார்க்கிறோம் அக்கா.

வாழ்த்துக்கள்.

(ரொட்டி தயார் செய்யும் போது சுவைக்காகத் தானே இந்த நெய், பட்டர் எல்லாம் பயன் படுத்துகிறோம். பொதுவாக அதிகமானவர்கள் வெறும் கல்லில் வைத்தே சுட்டெடுக்கிறார்கள். )

Jaleela Kamal said...

வாங்க சப்ராஸ் அபூ பக்கர்

ஆமாம் இது எல்லோராலும் இல‌குவாக‌ செய்யகூடிய‌ ஈசி டிப‌ன் அயிட்ட‌ம்

வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி


(ரொட்டி தயார் செய்யும் போது சுவைக்காகத் தானே இந்த நெய், பட்டர் எல்லாம் பயன் படுத்துகிறோம். பொதுவாக அதிகமானவர்கள் வெறும் கல்லில் வைத்தே சுட்டெடுக்கிறார்கள். )

சரியாக சொன்னீர்கள்

Menaga Sathia said...

படங்களைப் பார்க்கும் போதே சாப்பிடத்தோனுது ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

மேனகா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.அப்பரம் என்ன செய்து சாப்பிடவேண்டியது தானே.

SUFFIX said...

வாவ், வகை வகையா பதார்த்தங்கள் அடுக்கடுக்காய் போட்டு வச்சாச்சா, புது கேமராவா? போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு. மாசி வதக்கல் என்னோட பேவரைட்!!

Jaleela Kamal said...

ஷபி வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
மாசி வதக்கல் பல வகையா செய்யலாம் அதில் இது ஒரு வகை.

புது கேமரா எல்லாம் இல்லை எப்போதும் எடுப்பதுதான், குறிப்பு ஏராளம் கேமராவில் இருக்கு ஆனால் பதிவு போட தான் நேரம் இல்லை.

அதிரை அபூபக்கர் said...

பலவகையான பதார்த்தங்களை ஒரே பதிவில் தந்துள்ளீர்கள்..ரொம்ப அருமையான + தெளிவான விளக்கத்துடன் விளக்கியுள்ளீர்கள்.. நன்றி...

Jaleela Kamal said...

அதிரை அபூபக்க‌ர் கருத்து தெரிவித்தமைக்கு. மிக்க நன்றி

தெய்வசுகந்தி said...

பாக்கவே நல்லா இருக்கு
மாசித்தூள்ன்னா என்னங்க?

Jaleela Kamal said...

சுகந்தி இது டிரை பிஷ் தூள், கடைகளில் விற்கும்.

என்றும் கெடவே கெடாது.

இதில் துவையல், முட்டைக்கு சிறிது சேர்ப்பார்கள். வெங்காயம் தக்காளி போட்டு கூட்டு வைப்பார்கள். எனக்கு வெங்கயாம தேங்காய் போட்டு வதக்க்கினால் தான் பிடிக்கும், இல்லை அப்படியே பச்சையாக வெங்காயம், பச்ச மிளகாய், தேங்காய், மாசி தூள், மிளகாய் தூள் சேர்த்து விறவியும் ரொட்டிக்கு தொட்டு சாப்பிட்டால் ஆகா சுவையே தனிதான்.

S.A. நவாஸுதீன் said...

எங்க வீட்ல செய்வதுண்டு. மாசியை பொறிச்சுடுவாங்க அவ்ளோதான் வித்தியாசம். மதியம் மீதி மாசியை வைத்துக்கொள்ளலாம். சோறு, ரசம் மாசிப்பொறியல் போதும் வேறொன்றும் வேண்டாம்

Jaleela Kamal said...

இது எனக்கு ரொம்ப பிடித்த ரொட்டி

நவாஸ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,

ஆஹா ரசம் சாதம் மாசி பொரித்து சூப்பரா இருக்குமே//

my kitchen said...

புதுமையாக இருக்கு,முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்

Jaleela Kamal said...

செய்து பாருங்கள் பிரியா ரொம்ப அருமையா இருக்கும்.

rahima said...

மாசி கிடைக்கல கிடைத்தால்
செய்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்

rahima said...

அருமையா இருக்கு சிஸ், மாசி கிடைக்கலே கிடைத்தால் செய்து பார்க்கலம் இன்ஷா அல்லாஹ்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா