Thursday, October 29, 2009

குஸ்கா


பாசுமதி அரிசி = ஒரு கப்
கடலை பருப்பு = கால் கப்

எண்ணை + பட்டர் = 5 தேக்கரண்டி

பட்டை = ஒன்று
ஏலம் = ஒன்று
கிராம்பு = ஒன்று

வெங்காயம் = ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி முழுவதும்
புதினா = எட்டு இதழ்
கொத்துமல்லி தழை = இரண்டு மேசை கரண்டி
தக்காளி = சிறியது ஒன்று
பச்ச மிளகாய் = ஒன்று
மஞ்சள் தூள் ‍= அரை தேக்கரண்டி
தயிர் = இரண்டு தேக்கரண்டி
லெமென் = சிறிய அரை பழம்







1. அரிசி + கடலை பருப்பை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.


2. ரைஸ் குக்கரில் எண்ணை + பட்டரை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும், சிவற விட வேண்டாம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.


3. பச்ச வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து மஞ்சள் தூள்+பச்ச மிளகாய்+கொத்துமல்லி+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.

4. தண்ணீர் அரிசி ஒரு கப்பிற்கு ஒன்னறை டம்ளரும் யும், பருப்பு கால் கப்பிற்கு அரை டம்ளர் தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து லெமென் சாறு சேர்த்து (ரைஸ் குக்கரில் ) குக் செய்யவும்.
5. ரைஸ்குக்கர் இல்லை என்றால் குக்கரிலும் வைக்கலாம்.

6. சுவையான குஸ்கா ரெடி. இதை கிச்சிடி என்றும் சொல்லலாம்.

குறிப்பு

சுவையான காலை நேர உணவு சூடாக கொத்து மல்லி துவையல் (அ) புதினா துவையலுடன் வெரும் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
மதிய உணவிற்கு என்றால் மீன் குழம்பு, கார குழம்பு வகைகள் பொருந்தும்.
பட்டர் வேண்டாம் என்றால் வெரும் எண்ணையே போதுமானது. நெயில் தாளித்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

21 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ஒரு ஸ்பெசல் குஸ்கா பார்...........சல்

Menaga Sathia said...

சூப்பரான குஸ்கா..

GEETHA ACHAL said...

கடலை பருப்பு குஸ்கவா...சூப்பராக இருக்கின்றது..

Sarah Naveen said...

Rice looks yumm!!!! but i cant read tamil :(

பீர் | Peer said...

இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்துமல்லி, புதினா இவை Ingredients list ல் இல்லையே.. இவையும் எந்த அளவு தேவை என்பதை சொல்லவும்.

கிட்டத்தட்ட வெண்பொங்கலும் இதே மாதிரிதானோ?

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/10/pongal.html - வெண்பொங்கல்


பீர் = சேர்த்தாச்சு,

வெண்பொங்கல் வேற குஸ்கா வேற, கீரைஸ் வேற, பகாறாகானா வேற‌

Jaleela Kamal said...

நவாஸ் பார்சல் தானே ம்ம்ம்

கொரியரில் அனுப்பிடுறேன்

மேனகா, கீதா, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

thank you sarah

பீர் பொருளை சேர்க்காத‌தை சொன்ன‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி க‌வ‌னிக்க‌ல‌.
அவ‌ச‌ர‌த்தில் போட்டு விட்டேன்.

சீமான்கனி said...

பிரியாணில பிஸ்... இல்லாம சாப்படா அதுதான் குச்கனு நெனச்சுட்டு இருந்தேன்...அனால் இது வித்யாசமா இருக்கு நன்றி....

பாவா ஷரீப் said...

ஜலி அக்கா,
எனக்கு ரெண்டு குஸ்கா பார்சல்.......

Malini's Signature said...

பருப்பு போட்டு குஸ்காவா!!!...புதுசா இருக்கே...எங்க அம்மா இதே மாதிரிதான் அரிசிபருப்பு சாதம் செய்வாங்க ஜலீலா அக்கா.

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்கு. அந்த பிளேட் எல்லாம் எனக்குத்தான். நான் யாருக்கும் தராம சாப்பிட்டு தூக்கம் போடுவேன். நல்லா இருக்கு செய்து பார்க்கின்றேன். நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமா இருக்கு ஜலிலா இந்த குஸ்கா , கடலை பருப்பு போட்டு செய்தது இல்லை , நாளைக்கு செய்து பார்த்துவிடுகிறேன், பாஸ்மதிக்கு பதில் பச்சரிசி சேர்த்துக்கலாமா

Chitra said...

I loveeeee kuska..Super , thanks a lot for the recipe..will prepare this for my father :)

ஸாதிகா said...

கடலைப்பருப்பு சேர்த்து குஸ்கா.ஆஹா..பேஷ் பேஷ் உங்கள் அட்டகாசம் தாங்க முடியலே ஜலி

suvaiyaana suvai said...

புதுசா இருக்கே!!! super

சாருஸ்ரீராஜ் said...

காலைல செய்தேன் பச்சரிசில சுவையா இருந்தது , பசங்க விரும்பி சாப்பிட்டாங்க.

Jaleela Kamal said...

சீமான் கனி வாங்க பிஸியா இருந்த உங்களையும் என் குஸ்கா பதிவு போட வைத்து விட்டது.

நன்றி.

கருவாச்சி ஒகே நாலு பார்சல் குஸ்கா அனுப்பிவிடுகிறேன்.


பித்தனின் வாக்கு, எடுத்துக்கஙங்க நல்ல சாப்பிடுங்க நல்ல தூங்கங்க..

ரொம்ப சந்தோஷம் சாருஸ்ரீ கருத்த்து தெரிவித்து , உடனே செய்தும் பார்த்து விட்டீர்கள்.

சுவையான சுவை மிக்க நன்றி.

நன்றி பிரியா கண்டிப்பா உங்கள் அப்பாவிற்கு இது பிடிக்கும் செய்து கொடுங்கள்.


நன்றி ஸாதிகா அக்கா என்ன என் அட்டகாசம் தாங்க முடியல.. என்கீறீர்களா?

SUFFIX said...

:)சூப்பர்!!

Jaleela Kamal said...

நன்றி ஷஃபிக்ஸ்

marlia noohu said...

ஜலீலாக்கா அஸ்ஸலாமுஅலைக்கும்....உங்க தளம் மிகவும் அருமை....ம்ம். அதே பிரஷ்ஷான புது அக்கா புது தளம் பேஷ் பேஷ் கலக்குரீங்கக்கா...நா ஊருது எல்லாத்திலும் 2 பார்சல் மெயிலில் போட்டுடுங்க

இந்த ரெசிபி நான் செய்து இருக்கேன் சுவை சூப்பர்...நன்றி...வாழ்த்துகள்

Unknown said...

paasiparuppu pottu kichdi seivom ide madiri.kadalai paruppu pottu nalla irukku.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா