Wednesday, October 28, 2009

ஹோம்மேட் சைனீஸ் சிக்கன் & வெஜ் ரோல் - Chicken Spring roll




//ஹோட்டலில் வைக்கும் ஸ்டாட்டர்ஸ், சைனீஸ் சிக்கன் ரோல் இப்ப வீட்டிலும் சுலப‌மா செய்துவிடலாம்.
வெஜ்டேரிய‌ன்க‌ள்.சிக்க‌னை த‌விர்த்து விட்டு இதே முறையில் விருப்பமான காய் க‌றிக‌ளுட‌ன் செய்ய‌வும்.
இதே பில்லிங்கை, ரோல் செய்ய‌ நேர‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள். பிரெட், ப‌ண்ணில் வைத்தும் சாப்பிட‌லாம்.//




தேவையான பொருட்கள்

சிக்கன் போன்லெஸ் - 150 கிராம்
கேபேஜ் - கால் கப்
கேரட் - இரண்டு மேசை கரண்டி
கேப்ஸிகம் - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று
வெயிட் பெப்பர் (அ) பிளாக் பெப்பர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - ஒன்று (அ) வெங்காய தாள் - இரண்டு ஸ்டிக்
பூண்டு - இரண்டு பல்
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
லெட்டியுஸ் இல்லை - முன்று மேசை கரண்டி



கேபேஜ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.

லெட்டியுஸ்,கேப்ஸிகம்,பச்சமிளகாய், பூண்டு வெங்காயம் பொடியாக நருக்கி வைக்கவும்.

மாவை பூரி உருண்டைகலாக போட்டு மாவு தடவி வைகக்வும்.

மாவை குழைத்து பூரிக்கு உருண்டை போடுவது போல் போட்டு மேலே மாவை நன்கு தூவி வைக்கவும் (சப்பாத்திக்கு பிசையும்போதும் இதே போல் செய்து வைத்தால் நல்ல இட வரும்)

சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக போட்டு அதில் பாதி மிளகு தூள், சோயா சாஸ் அரை தேக்கரண்டி, சிறிது உப்பு போட்டு குக்கரில் வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் பேனை காயவைத்து இரண்டு ஸ்பூன் எண்னை அல்லது பட்டர் ஊற்றி சர்ர்கரை,பூண்டு பச்ச மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் போட்டு வதக்கவும்.

அடுத்து கேரட் மற்றும் கேபேஜை போட்டு வதக்கவும்.எல்லாம் இரண்டு இரண்டு நிமிடம் வதக்கினால் போதும்.
ரொம்ப வேக தேவையில்லை. இப்போது உதிர்த்து வைத்துள்ள சிக்கன், கேப்ஸிகம்,லெட்டியுஸ் இலை மீதி உள்ல மிளகு தூள், உப்பு, சிறிது எல்லாம் போடு வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கி இரக்கி ஆற விடவும்.


மிகவும் மெல்லிய பூரிகளாக இட வேண்டும், மாவு தேய்ப்பதால் பிரியாமல் திரட்ட வரும்



இட்ட பூரியை நாலா பக்கமும் கட் பண்ணவும்.



ஒரு மேசை கரண்டி முழுவதும் பில்லிங்கை வைகவும்.

மேல் புறத்தில் முதலில் மடித்து இரண்டு சடிலும் மடித்து அபப்டியே ரோல் பண்ணி லேசாக அழுத்தி விடவும்.


ஒரு டம்ளர் மாவில் 10 ரோல்கள் ரெடி


எண்ணையை காயவைத்து பொரிக்கவும்.



மறுபக்கமும் திருப்பி போட்டு நன்கு முருகியதும் எடுத்து வடிகவும்.



சுவையான சிக்கன் ரோல் ரெடி


சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச்






இதே பில்லிங்கை பிரெட் ம‌ற்றும் ப‌ண்ணிலும் வைத்து ஈசியாக‌ சாண்ட்விச் த‌யாரித்து கொள்ள‌லாம்.







அப்ப‌டியே பிள்ளைக‌ளுக்கு பிரெட்டில் ஒரு சைட் கெட்ச‌ப்பும், ம‌றுப‌க்க‌ம் இந்த‌ பில்லிங்கையும் வைத்து மூடி அழுத்திவிட்டு, முக்கோண‌வ‌டிவில் க‌ட் ப‌ண்ண‌வும்.




பிள்ளைக்க‌ளுக்கு ப‌ள்ளிக்கு கொடுத்த‌னுப்ப‌லாம், நாமும் ஆபிஸ் கொண்டு செல்ல‌லாம்.




10 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

இங்கே வந்து எல்லாத்தையும் எல்லாரும் கத்துகிட்டா ஹோட்டல் எல்லாம் மூட வேண்டியதுதான். பார்த்துக்குங்க, ஹோட்டல் அசோசியேசன்லேர்ந்து புகார் எதாவது வரப்போகுது.

அருமையா சொல்லி இருக்கீங்க

Menaga Sathia said...

கலக்கல் ரெசிபீஸ் இரண்டுமே அட்டகாசமா இருக்கு ஜலிலாக்கா...

SUFFIX said...

Simply Superb!! மாலை நேரம் தீணிக்கு உகந்தது. கலக்கல்ஸ்!!

Jaleela Kamal said...

நவாஸ் நெஜமாவா சொல்றீங்க.
ஹா ஹா

ஹோட்டல் போல் 100% வராது.

ஏதோ எனக்கு தெரிந்தது


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மேனகா

ஷபிக்ஸ் மாலை நேரத்துக்கு ம்ம் சூப்பரா இருக்கும்.

Malini's Signature said...

சூப்பர் ஜலீலா அக்கா...மாவு பிசைந்து உருட்ட எல்லாம் எனக்கு பொருமை இல்லை அதனாலே ரெடிமேட் சீட் வாங்கி செய்வேன் ....அடுத்த முறை இதை ட்ரை பன்னனும்.

சான்விச் ஃபேக் செய்து எடுத்து போக நல்ல இருக்கும்.

Jaleela Kamal said...

வாங்க ஹர்ஷினி செய்து பாருங்கள்,

ரொம்ப ஈசியாக இருக்கும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

சீமான்கனி said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்க...
ரெண்டுமே நல்ல ருசி அக்கா...
நன்றி...

Jaleela Kamal said...

ஆமாம் சீமான் கனி ஒரே கல்லில் இரண்டு மாங்கா, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Umm Mymoonah said...

Hmmm, yumm yumm. Super delicious.

Jaleela Kamal said...

thanks umm

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா