Saturday, October 3, 2009

கிட்னி பிரை (ஸ்மால் சிக்கன்) - kidney fry









தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி











செய்முறை




1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி


குறிப்பு


இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்,

9 கருத்துகள்:

Priya Suresh said...

Yennaku romba pidicha fry..naaku ooruthu pakkum pothey..

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பிரியா.

SUFFIX said...

கிட்னி+ஈரல் ஃப்ரை, என்னோட பேவரைட்!! யம்மி...ய்ம்மி!! உங்க செய்முறையில ஒரு நாளைக்கு செய்து பார்த்துட வேண்டியது தான். நன்றி!!

பாத்திமா ஜொஹ்ரா said...

யம்மி...ய்ம்மி

Jaleela Kamal said...

வாங்க ஷபிக்ஸ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லவும்.

Jaleela Kamal said...

வாங்க பாத்திமா ஜொஹ்ரா ஆமாம் இது ரொம்பவே யம்மி தான்.

S.A. நவாஸுதீன் said...

ஈரல் நமக்கு புடிச்ச ஐட்டம் ஆச்சே. ரொம்ப ஈசியாத்தான் இருக்கு.

இதே ஃபார்முலாவை நுரையீரலுக்கும் செய்யலாமா?

Jaleela Kamal said...

நுரையீரலுக்கும் செய்யலாம் ஆனால் அதிக நேரம் வேக விட்டு தண்ணீர் வற்றவிடனும்,

நுரை கத்திரிக்காய் சால்னா ரொம்ப நல்ல இருக்கும்.

மிளகு சேர்த்து செய்தாலும் சூப்பரா இருக்கும்.

GEETHA ACHAL said...

ஜலிலா அக்கா, இந்த பதவினை அப்படியே ஒருவன் காப்பியடித்து அதனை தமிழிஸில் வேறு பதிவு செய்து இருக்கின்றான்...பார்க்கவும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா