Sunday, October 11, 2009

கொள்ளு ரசம் - horse gram rasam - deit



//இது கொள்ளு ரசப்பொடியில் செய்தது, கொள்ளு சட்னிக்கு கொள்ளு வேகவைக்கும் போது அந்த தண்ணீரில் செய்தது. கொள்ளு உடல் எடையை குறைக்கும் ஆனால் கொள்ளு சூடு . எப்பவாவது என்றால் பரவாயில்லை அடிக்கடி கொள்ளு சேர்த்து சமைத்து சாப்பிடுபவர்கள். அதற்கேற்றார் போல் பொருட்களை சேர்த்து செய்து கூட கூலானா ஜூஸ் (அ) மோர் குடித்து கொள்வது நல்லது.//

தேவையான‌ பொருட்க‌ள்

கொள்ளு வேக வைத்த தண்ணீர் = ஒரு ட‌ம்ள‌ர்
கொண்டைகடலை வேகவைத்த தண்ணீரி = ஒரு ட‌ம்ள‌ர்
புளி = ஒன்ன‌றை எலுமிச்சை அள‌வு (க‌ரைத்த‌து ஒரு டம்ளர்)
கொள்ளு சேர்த்து திரித்த ரசப்பொடி = இரண்டரை தேக்கரண்டி

தாளிக்க

எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் (அ) பட்டர் = ஒரு தேக்கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
வெந்தயம் = ஐந்து
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
கொத்து ம‌ல்லி = கால் கை பிடி
பூண்டு = நான்கு பல்
சாம்பார்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
த‌னியா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி




செய்முறை

1.கொள்ளு வேக‌வைத்து வ‌டித்த‌ த‌ண்ணீர், கொண்டைக‌ட‌லை வேக‌ வைத்து வ‌டித்த‌ த‌ண்ணீர், புளி க‌ரைத்த‌ த‌ண்ணீர் முன்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்த்து அதில் உப்பு , இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி ர‌ச‌ப்பொடி, இர‌ண்டு ப‌ல் பூண்டு த‌ட்டி போட்டு, சிறிது க‌ருவேப்பிலை, சிறிது கொத்தும‌ல்லி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

2. த‌னியாக‌ ச‌ட்டியில் எண்ணை +நெய்யை சூடாக்கி க‌டுகு, வெந்த‌ய‌ம், பூண்டு, க‌ருவேப்பிலை, சாம்பார் பொடி மீத‌ம் உள்ள‌ ர‌ச‌ப்பொடி, பெருங்காய‌ப்பொடி சேர்த்து க‌ருகாம‌ல் தாளித்து கொதித்து வைத்துள்ள‌ ர‌ச‌த்தில் சேர்க்க‌வும்

குறிப்பு

இது பூரி சென்னாவிற்காக‌ வேக‌ வைத்த‌தால் அந்த‌ த‌ண்ணீரை வேஸ்ட் செய்யாமல் இதில் சேர்த்தேன், நீங்க‌ள் செய்யும் போது இல்லை என்றால் வெரும் கொள்ளு த‌ண்ணீரும் புளி த‌ண்ணீருமே போதுமான‌து, தேவைப்ப‌ட்டால் த‌க்க்காளி ஒன்று பிசைந்து விட்டு கொதிக்க‌ விட்டுகொள்ள‌லாம்.

20 கருத்துகள்:

Saraswathy Balakrishnan said...

Very health rasam and a comfort food for our climates here..

நிஜாம் கான் said...

ஜலீலாக்கா! இந்த ரசத்த சாப்பிட்டா குதிரை மாதிரி ஓட முடியுமா? நமக்கு எங்க சமயல்லாம்? சாப்டத்தான் தெரியும்.

மாதேவி said...

ஜலீலா உங்கள் கொள்ளுரசம் நன்றாக இருக்கிறது.

நீங்கள் கூறியது போல "உடல் எடையைக் குறைக்கும்".

கொலஸ்டரோலையும்,நீரிழிவையும்கூட குறைக்கும் என்கிறார்கள் வைத்தியர்கள்.அதனால் கொள்ளு உணவை சேர்த்துக்கொள்வது நன்மையே.

Chitra said...

aaavi parakka kollu rasam super !!

சாருஸ்ரீராஜ் said...

ஜலிலா உங்கள் டயட் சமையல் ரொம்ப நல்லா இருக்கு..

S.A. நவாஸுதீன் said...

கொள்ளு ரசமா, சூப்பர்

Jaleela Kamal said...

சரஸ்வதி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஹா ஹா நிஜாம் தம்பி எப்படி கண்டு பிடிச்சீங்க ஆமாம் குதிரை மாதிரியே ஓடலாம், என் பிரெண்ட் உடைய அம்மா ஸ்போட்ஸ் கிளாஸ் இருந்தா கொள்ளு சுண்டல் செய்து கொடுப்பார்களாம்

Jaleela Kamal said...

வாங்க மாதேவி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ, நீங்கள் சொல்லும் அனைத்தும் சரி

Jaleela Kamal said...

சித்ரா ஆமாம் சுட சுட ஆவி பரக்க அப்ப செய்து அப்ப சாப்பிட்டா ம்ம்ம் வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வித விதமா கோலம் போடும் கோகுல ராணியே உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

நவாஸ் ஆமாம் கொள்ளில் ரசம், ரசத்தில் இன்னும்பல வகை உண்டு.

Menaga Sathia said...

ஆவி பறக்கும் கொள்ளு ரசம் அருமை!!

பாத்திமா ஜொஹ்ரா said...

kollu is not available here jaleela akka,can you send some????????????
super rasam.

Jaleela Kamal said...

மேனகா ஆவி பறக்கும் ரசம் நல்ல இருக்கா.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,


பாத்திமா ஜொஹ்ரா எங்க இருக்கீங்க ஏன் கொள்ளு கிடைக்கல, ஏற்கனவே இரண்டு ரசம் வகைகள் கொடுத்து இருக்கேன் பாருங்கள். இஞ்சி ரசம், கருவேப்பிலை கொத்து மல்லி ரசம்,

Priya Suresh said...

Kollu rasam manakuthu..

Jaleela Kamal said...

பிரியா தவறாமல் வந்து கருத்து தெரிவித்தமைக்கு. மிக்க நன்றீ.

vanavel said...

very good recipe for diet , pls tell something how to feed children for weight gain .

Jaleela Kamal said...

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி வான‌வில்
இந்த‌ பிலாக்கையும் சென்று பாருங்க‌ள்

www.kidsfood-jaleela.blogspot.com

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Amma seivaanga ithai, romba super-a iruku!!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா