Monday, November 9, 2009

பிடித்த பிடிக்காத 10பதிவுலக சகோதரர் ஷஃபிக்ஸ் (ஷ‌ஃபி உங்களில் ஒருவன்), ஸாதிகா அக்கா (எல்லா புகழும் இறைவனுக்கே) அழைத்ததால் இந்த பதிவு.


அஃ ஹா ஹா இது ஒரு தொடர்பதிவு.
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...


1. ரொம்ப பிடித்தவர்: என் அப்பா, என் அத்தான்

ரொம்ப‌ பிடிக்காத‌வ‌ர்: சும்மா ப‌ச்சாத்து பேசித்திரிப‌வ‌ர்க‌ளை


2. நகைச்சுவை நடிகர்:
பிடித்த‌வ‌ர்: வ‌டிவேலு தான் (அவ்வ்வ்வ்வ்),முன்பு த‌ங்க‌ வேலு
பிடிக்காத‌வ‌ர்: சோ


3. நடிகை


பிடித்தவர் : தம்மன்னா, கரிஷ்மா கபூர், பத்மினி
பிடிக்காதவர்: நயன் தாரா, ஸ்ரேயா

4. ந‌டிக‌ர்


பிடித்த‌வ‌ர்: சிவாஜி (அருமையான‌ ந‌டிப்பு)
பிடிக்காத‌வ‌ர்: ம‌ன்சூர் அலிகான், த‌னூஷ்


5. பாட‌க‌ர்


பிடித்த‌வ‌ர்: ஹரிஹரன் (என்னை தாலாட்ட வருவாளோ) , ல‌தா ம‌ங்கேஷ‌க‌ர் (தீதி தேரா தேவர் திவானா)

பிடிக்க‌த‌வ‌ர்:யாருன்னு தெரிய‌ல‌


6. உண‌வு


பிடித்த‌து: மீன் குழ‌ம்பும் வ‌றுவ‌லும் (எல்லாம்)
பிடிக்காத‌து: பீஃப் (ஆனா செய்வேன் சாப்பிட‌ மாட்டேன்), நண்டு (செய்ய‌வே மாட்டேன்)


7. விளையாட்டு


பிடித்த‌து: கேர‌ம், வாலிபால்
பிடிக்காத‌து : ஸ்னேக் & லேட‌ர்


8. பேச்சாள‌ர்

பிடித்த‌வ‌ர்: சால‌ம‌ன் பாப்பையா (ப‌ட்டி ம‌ன்ற‌ம் ரொம்ப‌ சிரிப்பா இருக்கும்)
பிடிக்காதவர்: டி.ராஜேந்திரர் (அய்யோ இப்ப அரட்டை அரத்துல வேறயாம் போதும் போதும் நான் பார்க்கவே மாட்டேன்).

9. இயக்குநர்:


பிடித்த‌வ‌ர்: கே.எஸ்.ரவிகுமார்
பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்)


10. பூக்க‌ள்

பிடித்த‌து: கலர் கலர் ரோஜா, ம‌ல்லிகை, (க‌ன‌காம்ப‌ர‌ம், டிச‌ம்ப‌ர்)
பிடிக்காத‌து: டேரிப்பூ


இது யாராவ‌து இரண்டிலிருந்து ஐந்து பேர‌ மாட்டி விட‌னுமாம்.

1. கீதா ஆச்சல் (என் சமையல் அறையில்)
2. ராஜ் (குறை ஒன்றும் இல்லை )
3.சாருஸ்ரீ
கோலங்கள்‍, கோக்குல ராணி

வாங்க இந்த தொடர்பதிவுக்கு.....

28 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

நகைச்சுவை நடிகர்:
பிடித்த‌வ‌ர்: வ‌டிவேலு தான் (அவ்வ்வ்வ்வ்),முன்பு த‌ங்க‌ வேலு

பிடித்த‌து: மீன் குழ‌ம்பும் வ‌றுவ‌லும் (எல்லாம்). எனக்கு நண்டும் ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப் பிடிக்கும்

பிடித்த‌வ‌ர்: ஹரிஹரன்

பிடிக்காதவர்: டி.ராஜேந்தர்

************************************************

இது எல்லாமே எனக்கும் சரியா பொருந்துது.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//பிடித்த‌வ‌ர்: சால‌ம‌ன் பாப்பையா
பிடிக்காதவர்: டி.ராஜேந்திரர்//

அதே அதே..!!

R.Gopi said...

//பிடிக்காத‌வ‌ர்: சோ//

அய்யோ பாவம்... "சோ" என்ன பாவம் பண்ணினாரோ?

//பிடிக்காதவர்: டி.ராஜேந்திரர் (அய்யோ இப்ப அரட்டை அரத்துல வேறயாம் போதும் போதும் நான் பார்க்கவே மாட்டேன்).//

ஹா..ஹா... அரட்டை அரங்கம்??

//பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்)//

இயக்குனர் எங்கே கோடி, கோடியாய் போட்டு படம் எடுக்கிறார்கள் ஜலீலா மேடம்... தயாரிப்பாளர் தலையில துண்டு போடற கோஷ்டி தானே இயக்குனர்கள்!!

//1. கீதா ஆச்சல் (என் சமையல் அறையில்)
2. ராஜ் (குறை ஒன்றும் இல்லை )
3.சாருஸ்ரீ கோலங்கள்‍, கோக்குல ராணி//

ஹையா... மாட்டியாச்சா... ஜாலி.... எழுதுங்க... எழுதுங்க... ஹோம் ஒர்க் கிடைச்சாச்சு....

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//ப‌ச்சாத்து//

இந்த வார்த்தைக்கு வெப்ஸ்டேர் டிக்ஷனிரியில் அர்த்தம் கிடைக்கும்களா?

நாஸியா said...

ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர் பிடிக்காதவங்க லிஸ்ட்ல இருக்கார்.. ரொம்ப மோசம்.. ;) அவர் எப்பேர்பட்ட பேச்சாளர்!

எனக்கும் மீனு ரொம்ப புடிக்கும்.. :)

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
//ப‌ச்சாத்து//

இந்த வார்த்தைக்கு வெப்ஸ்டேர் டிக்ஷனிரியில் அர்த்தம் கிடைக்கும்களா?

சும்மா ப்ராக்கு பாக்காம வாங்க ஷஃபி புரியும்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//நாஸியா said...
ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர் பிடிக்காதவங்க லிஸ்ட்ல இருக்கார்.. ரொம்ப மோசம்.. ;) அவர் எப்பேர்பட்ட பேச்சாளர்//

அவரு அப்போ நல்லா பாட்டெல்லாம் எழுதினாரு, ஆனா இப்போ எல்லாத்தையும் மறந்திட்டாரோ? தினமும் பூஸ்ட் குடிக்க சொல்லனும்!!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//S.A. நவாஸுதீன் said...

சும்மா ப்ராக்கு பாக்காம வாங்க ஷஃபி புரியும்//

இந்த நவாஸோட ஒரே சல்லையா போச்சுங்க‌

உங்கள் தோழி கிருத்திகா said...

பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்)

//////////////////
ஆமாம்....ஒருத்தரும் நல்லா எடுக்கமாட்டெங்கறாங்க...
ரொம்ப சில படங்களே உருப்படியாக இருக்கின்றன

ஷண்முகப்ரியன் said...

நான் நிறையப் பிடிக்காதது,பிடித்தது பதிவுகளைப் படித்து விட்டேன் மேடம்.
அதில் பிடித்தது உங்கள் பதிவுதான்.

மிக,மிக இயல்பான ரசனையுடன் இருந்தது.
மகிழ்ச்சி.

ஸாதிகா said...

//அஃ ஹா ஹா இது ஒரு தொடர்பதிவு.
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...//
அப்பப்பா..அட்டகாச ராணி கலக்குகின்றீர்கள்.என் அழைப்பை ஏற்றுக்கொண்டு வந்தமைக்கு நன்றி ஜலி.

seemangani said...

அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் இந்த பதிவு பிடிச்சிருக்கு....

பீர் | Peer said...

வடிவேலு, ஹரிஹரண், தமன்னா.. மீ டூ...
=========

எனக்கும் மீனு ரொம்ப புடிக்கும்.. :)
=========

//பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்//

அதுக்காக நம்ம உயிரை வாங்கணுமா? உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க.
=========

பேச்சாளர்; நீங்க பாரதி பாஸ்கருடைய பேச்சு கேட்டிருக்கீங்களா? அருமையா பேசுவாங்க.

sarusriraj said...

ஜலி கடைசியில என்ன மாட்டிவிட்டுடிங்க , சரி என்ன பண்ணுறது , கொஞ்சம் வேலை இருக்கு முடித்துவிட்டு வந்து போட்டுவிடுகிறேன்

Jaleela said...

சரி சரி பசாத்துன்னா என்னன்னு தெரியனும் இல்லையா?

வேலையில்லாமல் கோள்சொல்லி சின்ன விஷியத்தை ஊதி பெருசாக்குவது. Backbiting
எதுவேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

Jaleela said...

ஆமாம் மீனு எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷியம், ந‌வாஸ்,நாஸியா, ஷ‌ஃபிக்ஸ் எல்லோருக்கும் மிக்க‌ ந‌ன்றி.

Jaleela said...

கோபி, முன்று மணி நேரம் ரொம்ப ஈசியா பார்த்து விட்டு வந்து விடுகிறோம்.

ஆனால் நல்ல படமோ கொட்ட படமோ எல்லோரும் பணத்துக்காக தானே ரொம்ப ராப்பகலா உழைக்கிறார்கள். அதுவும், மக்களிடம் இருந்து நல்ல பேர் கிடைக்கும் வரை திண்டாட்டம் தான், அதை மனதில் வைத்து தான் அப்ப்டி சொன்னேன்.

Jaleela said...

ஷ‌ஃபி யாருக்கு டீ ஆருக்கு பூஸ்ட் பார்த்து சச்சின் கோச்சிக்க போறாரு

அவருக்கு ஹார்லிக்ஸே போதும்

Jaleela said...

புது வருகை தோழி கிருத்திக்கா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

ஆமாம் இப்ப வர சில படங்கள் பிள்ளைகளோடு பார்ப்பது போல் இல்லை, கெட்டு போகவும் நிறைய வாய்ப்பை ஏற்படுத்து கிறது, நாங்க ரொம்ப செலெக்டிவா தான் பார்ப்பது.

Jaleela said...

வருக ஷண்முகபிரியன், வருகைக்கும் கருத்து தெரிவித்ததும் மிக்க மகிழ்சி.

ஏதோ மனதில் பட்டதை என் பாணியில் எழுதினேன் அவ்வளவு தான்.

Jaleela said...

ஸாதிகா அக்கா ரொம்ப புகழுறீங்கள் ரொம்ப நன்றி.

ஆமாம் வடிவேலு ஜோக் ஹா ஹா

Jaleela said...

//அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் இந்த பதிவு பிடிச்சிருக்கு....//

சீமான் கனி
ஏன் இப்படி ஐயயொ பிடிச்சிருக்கு

வந்ததற்கு மிக்க நன்றி

Jaleela said...

ஆமாம் பீர் இப்ப எந்த சேனலை திருப்பினாலும் தமன்னா இல்லாமல் கிடையாது, வியாபரியில் நடித்திருந்தார்கள் அப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது ஆனா யாரும் அப்ப கண்டுக்கொள்ளவில்லை அயர்ன் க்கு பிறகு ரொம்ப டாப்பாகியாச்சு.

Jaleela said...

சாருஸ்ரீ எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப போடுங்கள். நன்றி.

Mrs.Menagasathia said...

எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார்.அவர் மட்டும் பார்த்தால் டண்டணக்க... டண்டண....ன்னு கத்திக்கிட்டே இருப்பார்.

Jaleela said...

ஆமாம் மேனக அந்த டன்னடாக்கா அத கேட்டாலே பிடிக்காது.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார்.அவர் மட்டும் பார்த்தால் டண்டணக்க... டண்டண....ன்னு கத்திக்கிட்டே இருப்பார்.

ரொம்ப பேசுனா அப்படித்தான்,சரிதானே ஜலீலா அக்கா நான் சொல்வது.

Nahasi said...

உங்களின் பிடித்தது பிடிக்காதது பதிவு ரொம்ப நல்லா இருக்கு ஜலீலாக்கா

ஜுலைஹா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா