Saturday, November 21, 2009

சூடா பாப் கார்ன் சாப்பிடலாம் வாங்க‌



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது.
இதை ஒரு கைபிடி போட்டு செய்தால் தட்டு நிறைய கிடைக்கும்.
வெளியில் போகும் போது கூட நிறைய செய்து குழந்தைகளுக்கு தனித்தனி கவரில் போட்டு அவரவர் கையில் மாட்டி விட்டால் வாய் அசை போடுவதில் கொஞ்சம் வெளியில் காசும் மிச்சம்.இது நம் ருசிக்கு ஏற்றவாறு மசாலாக்களை சேர்த்து கொள்ளலாம்.



காய்ந்த சோளமணிகள் = கைக்கு ஒரு கைபிடி
உப்பு = சிறிது
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
பட்டர் = ஒரு மேசை கரண்டி





செய்முறை


ஒரு வாயகன்ற வானலியில் பட்டரை உருக்கி அதில் சோளமணி,பட்டர், மிளகு தூள் , உப்பு தூள் போட்டு சிறிது நேரம் சூடுபடுத்தவும்.


பிறகு மூடி போட்டு தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.


கொஞ்சம் கொஞ்சம பட் பட்ன்னு வெடிக்கும் திறக்க வேண்டாம்.

வெளியில் தெரித்து விடும்.




பிற‌கு பூ போல் வ‌ந்து பொங்கி நிற்கும்.


5 லிருந்து 7 நிமிட‌த்திற்குள் அடுப்பை அனைத்து விட‌லாம்.


ரொம்ப‌ நேர‌ம் விட்டாலோ, தீயின் த‌ன‌லை அதிக‌மாக‌ வைத்தாலோ க‌ரிந்துவிடும்.

சுட‌ சுட‌ பாப் கார்ன் குடும்ப‌த்துட‌ன் சுவைத்து ம‌கிழுங்க‌ள்.






21 கருத்துகள்:

shirin said...

ஜலீலா அக்கா குழ்ந்தை உட்ம்பில் quran verses தோன்றி இருக்குதாம் நம்ம அறுசுவையில் பாத்திமா சொல்லிருக்கங்க உங்களுக்கு அத ப்ற்றி தெரிந்திருந்தால் க்ண்டிப்பா அதோட் விவரங்கள் எல்லாம் போட்டு இருப்பீங்க நான் உங்க blog தான் முதல்ல பார்த்தேன் அப்புறம் அதுல் இல்லன்னு பாத்திமா கொடுத்த websitela போய் பார்த்தேன் நீங்களும் பர்த்துட்டு அதோட் விவ்ரங்கள் எல்லாம் எல்லாருக்கும் கொடுங்க http://www.jsyedali.com/
islamic_articles/
quranic_verses_on_baby_body.ph

S.A. நவாஸுதீன் said...

மாலை நேரத்தில் டி.வி.க்கு முன்னாடி இதுதான் டெய்லி தேவைப்படுது எனக்கு. நான் வெரும் எண்ணெயில் செய்திகிட்டு இருக்கேன். இனி பட்டர்ல ட்ரை செய்யவேண்டியதுதான்

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அருமை.

இதை எலெக்ட்ரிக் குக்கரிலும் செய்யலாம்.

------------

asiya omar said...

ஜலீலா இப்படி வாணலியில் செய்தது இல்லை,குக்கரில்,ஓவனில் செய்திருக்கிறேன்.ஈசியான முறையாக இருக்கே,ட்ரை பண்ணனும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வாயகன்ற வானலியில்// ஹீம்ம். அவங்கவங்க வீட்டு அம்மிணி வாய விட அகண்ட வாய் ஏதாவது இருக்குங்களா?

Jaleela Kamal said...

என்ன ராஜ் குமார் சார் இதன் கீழ் வரும் அம்மணிக்கள் எல்லாம் மொறத்த எடுத்து வந்து உங்களை மொத்த போகிறார்கள், குசும்பு... ஹி ஹி

Jaleela Kamal said...

ஜலீலா அக்கா குழ்ந்தை உட்ம்பில் quran verses தோன்றி இருக்குதாம் நம்ம அறுசுவையில் பாத்திமா சொல்லிருக்கங்க உங்களுக்கு அத ப்ற்றி தெரிந்திருந்தால் க்ண்டிப்பா அதோட் விவரங்கள் எல்லாம் போட்டு இருப்பீங்க நான் உங்க blog தான் முதல்ல பார்த்தேன் அப்புறம் அதுல் இல்லன்னு பாத்திமா கொடுத்த websitela போய் பார்த்தேன் நீங்களும் பர்த்துட்டு அதோட் விவ்ரங்கள் எல்லாம் எல்லாருக்கும் கொடுங்க http://www.jsyedali.com/
islamic_articles/
quranic_verses_on_baby_body.ph

sbs பானு நீங்கள் இந்த மெசேஜ் எல்லோருக்கும் மெயில் மூலம் அனுப்பியாச்சு.

நவாஸ் கருத்துக்கு மிக்க நன்றி. இதில் மசாலா கூட சாட் மசாலா, மிளகாய் தூள் என தேவைக்கு போட்டு சாப்பிடலாம்.

வாங்க நட்புடன் ஜமால் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, நீஙக்ள் எலக்ரிக் குக்கரில் செய்வீர்களா?

ஆசியா இதுவும் ஈசியாக இருக்கும், கணமான வானலி எடுத்து கொண்டால் பெட்டர். நன்றி

Menaga Sathia said...

பட்டர் சேர்த்து பாப்கார்ன் பொரித்ததில்லை.செய்து பார்க்கிறேன்.நன்றாக இருக்கு இந்த பாப்கார்ன்!!

பாவா ஷரீப் said...

ஜலீக்கா மச்சான கடைல ஒரு ரூபா கூட செலவு பண்ண விடமாட்டீங்க போல இருக்கே

சீமான்கனி said...

சினிமானா பாப்கார்ன் தான் நியாபகத்துக்கு வரும்...
சூப்பர்...அக்கா...

Chitra said...

super, i too make instant ones..my hubby's favv :)

Anonymous said...

nalla irukku

Anonymous said...

super appuu..........

GEETHA ACHAL said...

ஆஹா எனக்கு பிடித்த Buttered Popcorn...இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

இங்கு எனக்கு, Popcorn packetகிடைக்கும்..அதனை மைக்ரோவேவில் வைத்தால் 1 நிமிடத்தில் குடும்பமே பாப்கார்ன் சாப்பிடலாம்...

இங்கு அந்த பாக்டுகள் எல்லாம் நிறைய விதத்தில் கிடைக்கும்..விலையும் குறைவு. அதனால் ரெடிமேடாக வாங்கி சாப்பிடுவது..

Prabhu said...

madam,

ur entry was very nice.....

i am serious fan for this popcorn..

till two months before i bought ACT-2 popcorn to pop.. now i am buying corn seeds in super markets, its very cheap and tasty and no added flavours, we can add flavours for our taste...

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த பாப்கார்ன் டிரை பண்ணி பார்கிறேன்.

Jaleela Kamal said...

மேனகா கடையில் பட்டர் சேர்த்து தான் பொரிப்பார்கள்.
செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

ஆமாம் கீதா ஆச்சல் எல்லோருக்கும் பிடித்தது ரெடிமேடும் கிடைக்குது என் தங்கை ரெடி மேட்டில் தான் செய்வாள். ம்ஆனால் இது அரை கிலோ வாங்கி வைத்து கொண்டால் ரொம்ப நாளைக்கு வரும்

Jaleela Kamal said...

கருவாச்சி என்ன இப்படி சொல்லி பூட்டீங்க முன்பு பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது இபப்டி செய்து வெளியில் ஓகும் போது கவரில் போட்டே கொண்டு போய் விடுவேன். பத்தாதுக்கு அவருக்கு டீயும் போட்டு கொண்டு போவது. இப்ப‌ வெளியில் செல்வ‌தே ரொம்ப‌ அபூர்வ‌மா இருக்கு.

Jaleela Kamal said...

ஆமாம் சீமான் கனி பாப் கார்ன் என்றாலே சினிமாதான் ஞாபகம் வரும் இங்கு தான் எந்த ஷாப்பிங் மால் போனாலும் இது தான் எல்லோர் கண்ணிலும் படுவது.

Jaleela Kamal said...

Thank you very chitra

அனானி இருவருக்கும் நன்றி

இந்திய‌ன் உங்க‌ள் வ‌ருகைக்கும், க‌ருத்திற்கும் மிக்க‌ ந‌ன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா