Sunday, November 22, 2009

நட்ஸ் தேங்காய் பர்பி - Nuts Coconut Barfi


தேங்காய் துருவல் = ஒரு கப்
சர்க்கரை = ஒரு கப்
தண்ணீர் ‍= கால் கப்
கிஸ்மிஸ் பழம் = ஒரு ஸ்பூன்பிஸ்தா = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
பாதம் = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
முந்திரி = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
ஏலப்பொடி = கால் தேக்கரண்டி
நெய் = ஒரு மேசை கரண்டி

ஒரு நான் ஸ்டிக் பாத்திர‌த்தில் நெய் ஊற்றி ந‌ட்ஸ் வ‌கைக‌ள் ம‌ற்றும் கிஸ்மிஸ் ப‌ழ‌த்தை வ‌ருத்து அதே பாத்திர‌த்தில் தேங்காயையும் போட்டு வ‌ருத்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கால் க‌ப் த‌ண்ணீர் விட்டு அப்ப‌டியே கிள‌றி சுருண்டு வ‌ரும் வரை கிளறவும்.


நெய் த‌ட‌விய‌ த‌ட்டில் ஊற்றி சமமாக பரப்பி விட்டு சிறிது நேர‌த்தில் துண்டு போட்டு விட‌வேண்டும்.
சிறிது நேரம் கழித்து துண்டு போட்டால் சரியாக துண்டு போட வராது.இது அவரவர் விருப்பமான வடிவத்தில் கட் பண்ணலாம்.

ஆறிய‌தும் பிரித்து எடுத்து ஒரு க‌ண்டெயின‌ரில் போட்டு வைக்க‌வும்.
15 நாள் வ‌ரை கெடாது.

சுவையான ந‌ட்ஸ் தேங்காய் ப‌ர்பி ரெடி

இது ஸ்வீட்டே செய்ய தெரியாதவர்கள் கூட எளிதாக செய்து விடலாம்.
டைமன் ஷேப்பில் கட் பண்ணால் பார்க்க நல்ல இருக்கும். நான் எப்போதும் அவசரடி, ஆகையால் என் இஷ்டத்துக்கு துண்டு போட்டேன்.
தேங்காய் நல்ல வரு படனும் அப்பதான் கெட்டு போகாது

12 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நான் தான் முதலா? !!!!

//சிறிது நேரம் கழித்து துண்டு போட்டால் சரியாக துண்டு போட வராது//

பட்ஜெட் பர்பிங்களா?

ABU NOORA said...

நாங்களும் ஏதாச்சும் ரெசிப்பி அனுப்பித் தரணும்ணா எப்படி தொடர்பு கொள்வதாம்?

abunoora.mail@gmail.com

Jaleela said...

ஆமாம் ராஜ் குமார் சார் பட்ஜெட்டே தான் ஹா ஹா

ஆனா எது எப்படியோ இந்த பர்பி செய்தே ஆகனும்மு ஒரு இது

உடனே வெள்ளி செய்து தட்டும் காலி 20, 25 பர்பி வந்தது கொஞ்சம் நேரம் கழித்து துண்டு போட்டதால் 5 பர்பி தூளாகிவிட்டது.

Jaleela said...

அபு நூரா இதில் எப்படி நீஙகள் குறிப்பு போடனுமுன்னு எனக்கு தெரியல.

வேறு எப்படி அனுப்பலாம் என்று நான் பிறகு நேரம் கிடைக்கும் போது மெயில் பண்றேன் அதற்குள் குறிப்பு , படம் , செய்முறை எல்லாம் ரெடி பண்ணி வையுங்கள்.

நாஸியா said...

ஈத் முபாரக், ஜலீலா லாத்தா... :) பர்ஃபிய பாத்து வாய் ஊருது..

S.A. நவாஸுதீன் said...

சின்ன புள்ளைல தேங்காய் மிட்டாய் சாப்பிட்டது. இப்போ ஆசைப்பட்டால் பௌண்ட்டி தான். இத முயற்சி பண்ணி பார்க்கலாம்போல இருக்கே.

கருவாச்சி said...

ஸ்கூல்ல படிக்கும் போது தேங்காய் பர்பி பாக்கெட்டோட வாங்கி சாப்டுவோம்
அது ஒரு கனாக்காலம்

அக்கா எங்க வூட்டுக்கும் வாங்க
http://karuvaachi.blogspot.com

seemangani said...

ஆஹா...அக்கா...அருமை...ஈஸியா இருக்கே...பிரஷ் தேங்காய் தான் போடனுமாக்கா???

அப்போ இந்த ஈத்க்கு செஞ்சுடுவோம்...நன்றி அக்கா...பெருநாள் வாழ்த்துகள்...

sbsbanu said...

அக்கா உங்க ப்ர்பி பார்த்து நான் கண்டிப்பா செய்வேன் என் குழ்ந்தைக்கு செய்து கொடுக்க்ணும் உங்க receipies எல்லாம் notes எடுத்துகிட்டுதான் இருக்கேன் அப்ப்தான நான் துபாய் போய் என் ஹ்ஸ்க்கு வித் வித்மா செய்து த்ந்து பாராட்டு பெற முடியும் எனக்கு இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள பொதுவா த்க்காளி தேங்காய் ச்ட்னி புதினா ச்ட்னிதான் ப்ண்ணுவோம் வேற ச்ட்னி உங்க ச்ட்னி வகைகள் நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க்ள் அக்கா

sarusriraj said...

பர்பி நல்லா இருக்கு அவசரமாக செய்தாலும் சுவையான பர்பி .

Jaleela said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நாஸியா.


நாவாஸ் இப்பவும் எல்லா பிள்ளைககளுக்கு தேங்காய் மிட்டாய் பவுண்டி தான் ரொம்ப பிடித்தது, அது போல் தேங்காய் உருண்டை செய்யலாம் தான் இதை ஆரம்பித்தேன் ஆனால் அது பர்பி ஆகிவிட்டது.கருவாச்சி வரேன் உஙக்ள் பக்கத்துக்கும் வந்து பதில் போடுகீறேன்.
நேரம் சரியாக இருக்கு இங்கே இரண்டு நாளுக்கு ஒரு முறை தான் வரமுடியுது, நான் வந்தாலும் வரவில்லைஎன்றாலும் தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

சீமான் கனி இது இங்கு கிடைக்கும் ரெடி மேட் துருவலில் தான் செய்தேன், பாதம் பிஸ்தாவும் கிரேட்டடே கிடைத்தது அதை சேர்த்து கொண்டேன், சுலபமா முடிந்தது.


sbs பானு ரொம்ப நன்றீ, முடிந்த போது சட்னி வகைகளை கொடுக்கிறேன்.குழ‌ந்தைக‌ளுக்கு என் ரெசிபி எல்லாம் ரொம்ப‌ பிடிக்கும்.என் ரெசிபியில் கார‌ம் அவ்வ‌ள‌வா இருக்காது.

சாருஸ்ரீ வாங்க‌ வெள்ளி அன்று கெஸ்ட் அதான் இஸ்லாமிய‌ இல்ல‌ ச‌மைய‌ல், ம‌ருந்து சோறு , மீன் குழ‌ம்பு, மீன் வ‌றுவ‌ல்,இறால் வ‌றுவ‌ல், காஜ‌ர் கி ஹ‌ல்வா, இடையில் இந்த‌ தேங்காய் ப‌ர்பியும் செய்தேன் அதான் இப்ப‌டி.

பித்தனின் வாக்கு said...

யக்கா இவ்வளவு நல்ல பர்ப்பி பண்ணி வைச்சுட்டு அங்கன என்ன பேச்சு, முதல எனக்கு ஒரு பத்து பர்ப்பி பார்சல் அனுப்புங்க. ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா