Tuesday, November 24, 2009

முப்பழ ஹல்வா



பேரித்தம் பழம் = 200 கிராம்
கருப்பு கிஸ்மிஸ் பழம் = 25 கிராம்
அத்தி பழம் = 25 கிராம்
கட்டியான பால் = அரை டம்ளர்
சர்க்கரை = இரண்டு மேசை கரண்டி
(தேவைப்பட்டால் கொஞ்சம் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
நட்ஸ் வகைகள் = 50 கிராம் (பாதம்,பிஸ்தா,முந்திரி,அக்ரூட்)
சாஃப்ரான் (குங்குமப்பூ) = கால் தேக்கரண்டி





பேரித்தம் பழத்தை கொட்டை நீக்கி, டேட்ஸ்,அத்திபழம்,கிஸ்மிஸ் பழம் மூன்றையும் சிறிது வெண்ணீரில் ஊறவைத்து ஆறிய பால் சேர்த்து அரைக்கவும். வெண்ணீரில் ஊறவைத்தால் ரொம்ப ஹாடாக இல்லாமல் ஷாஃப்டாக இருக்கும்.





சிறிது பட்டரை காயவைத்து அதில் அரைத்த கலவை + சிறிது பட்டர் (அ) நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். பாதி கிளறியதும் சர்க்கரை சேர்த்து சாப்ரானும் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும்.





இதில் முன்றிலும் இனிப்பு இருப்பதால் சர்க்கரை கொஞ்சமாக சேர்த்தால் போதும்.
கலவை கெட்டியானதும் நெயில் நட்ஸ் வகைகளை வருத்து சேர்க்கவும்.


ரொம்ப சத்தானது அத்திபழம், பேரிட்சை இரண்டிலும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. கிஸ்மிஸ் பழம் + சாப்ரான் சளியை கட்டு படுத்தும். சாப்ரான் சேருவதால் நல்லதொரு மனமும் வரும்.


கவனிக்க:


இது போல் செய்து வைத்து குழந்தைகளுக்கு பிரெட்டில் தினம் தடவி கொடுக்கலாம். நட்ஸ் வகைகளை மொத்தமாக அரைத்தும் ஊற்றி கிளறலாம்.


குழந்தைகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு, ஹிமோகுலோபின் கம்மியாக இருப்பவர்கள் மற்றும் அனைவரும் இதை செய்து சாப்பிடலாம்

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி



ஈத் பெருநாள் என்றாலே பிரியாணி தான் இது ஏற்கனவே கொடுத்துள்ளேன், இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.



அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



15 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ஹோம் மேட் ஸ்பெசல் ஜாம் மாதிரியும் யூஸ் பண்ணிக்கலாம்.

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிட தோணுது

Menaga Sathia said...

சூப்பராயிருக்கு..

GEETHA ACHAL said...

அத்தி பழம் என்றால் apricotஆ..படத்தில் பார்த்தால் apricot மாதிரி தெரிகின்றதே...

நம்மூரில் காய்ந்த அத்திபழம் வேறு மாதிரி பார்த்து இருக்கேன்...

சூப்பராக இருக்கின்றது...ஈத் வாழ்த்துகள்.

Sarah Naveen said...

yummy yumm!!!!

சீமான்கனி said...

வாழ்த்துகள்....
கூடவே அல்வா குடுதுடின்களே அக்கா...சுப்பர்....

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ...

suvaiyaana suvai said...

akka supera irukku!! ungkaLukku oru award waiting vaangka vanthu vaangkiddu pongka!

Malini's Signature said...

ஹெல்த்தி அல்வான்னு சொல்லுங்க அக்கா...சூப்பர்

ஸாதிகா said...

வித்தியாசமான அல்வா

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.


கொஞ்சம் முடியல எனக்கு ஆகையால் எல்லோருக்கும் பதில் போட முடியல.


ஊருக்கு போகிறேன்.

ஆனால் குறிப்புகள் போட்டு வைத்து விட்டேன் வரும்.

Jaleela Kamal said...

சுவையான சுவை அவார்டு கொடுத்து இருக்கீங்களா? ரொம்ப சந்தோஷம்.

பிறகு வந்து பதில் போடுகிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

முக்கனி அல்வா,பெருநாள் ஸ்பெஷலா?
ஈத் வாழ்த்துக்கள் அக்கா.

Priya Suresh said...

Superana halwa, healthyum kuda..romba nalla irruku..

Jaleela Kamal said...

நன்றி பாத்திமா ஜொஹ்ரா
பெருநாளுக்கு, இங்கு ஷீர் குருமா செய்து சாப்பிட்டு விட்டு தொழுதுட்டு ஊருக்கு போய் அங்கு பெருநாள் கொண்டாடினோம்.

Thank you Priya

Jaleela Kamal said...

ஆமாம் நவாஸ் இதை ஜாம் மாதிரியும் பயன் படுத்தி கொள்ளலாம்.

சாருஸ்ரீ பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கா ம்ம் உடனே செய்து சாப்பிடுங்கள்.

ம்ம் மேனகா சூப்பரா இருக்கா, மிக்க நன்றி

ஆமாம் கீதா ஆச்சல் படத்தில் இருப்பது தான் ஆனால் அத்தி பழம் சேர்க்கனும்.கடையில் இதை தான் கொடுத்தார்கள்.
இரத்தம் கம்மியாக இருப்பதால் இதை சாப்பிட சொன்னார்கள் அதான் முன்றையும் சேர்த்து ஹல்வா கிண்டியாச்சு.

பெருநாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.


நன்றீ சீமான் கனி,


சுவையான சுவை கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ, அவார்டுக்கும் மிக்க நன்றி நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்கிறேன்.



ஆமாம் ஹ‌ர்ஷினி அம்மா ரொம்ப‌ ஹெல்தியான‌ சூப்ப‌ர் ஹ‌ல்வா.



பாத்திமா ஜொஹ்ரா ஆமாம் இது முக்க‌னி ஹ‌ல்வா, ந‌ல்ல‌ பெய‌ரா சொல்லீட்டீங்க‌.


ஸாதிகா அக்கா ஆமாம் ஒரு வித்தியாச‌மான‌ ஹ‌ல்வா. ந‌ல்ல‌ இருக்கும் செய்து பாருங்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா