Monday, November 30, 2009

சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை




சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்)
பெயரை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இதுக்கு பேர் சும்மா கிண்டலுக்கு ஆட்டே பார்ம் என்பார்கள். இது வெல்லம் தேங்காய் உருண்டை என்று சொல்லலாம். வெல்லம் பூரணம் என்றும் சொல்லலாம்.





ரொட்டி, தக்குடி, புட்டு, கொழுக்கட்டைக்காக நாங்க சிகப்பரிசி மாவு மொத்தமா திரித்து வருத்து வைத்து கொள்வோம்.





சிகப்பரிசி மாவு = ஒன்னறை டம்ளர்
தூளாக்கிய வெல்லம் = ஒரு டம்ளர்
தேங்காய் துருவல் = ஒரு டம்ளர்
நெய் = சிறிது
வெண்ணீர் = மாவு கிளற தேவையான அளவு
உப்பு = சிறிது














ஓன்ன‌றை ட‌ம்ள‌ர் மாவு எடுத்து வெண்ணீரை கொதிக்க‌ விட்டு சிறிது உப்பு ஒரு சிட்டிக்கை அளவு,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மாவில் கிள‌ற‌வும்.



அப்ப‌டியே கொஞ்ச‌ம் நேர‌ம் ஊற‌வைக்க‌வும். கை பொருக்கும் ப‌க்குவ‌த்தில் மாவை குழைத்து உருண்டைக‌ளாக‌ பிடிக்க‌வும்.







ஒவ்வொரு உருண்டைகளையும் நடுவில் குழியாக்கி (உருண்டும் போது கையில்சிறிது நெய் தடவி கொள்ளவும்). அதில் முதலில் வெல்லம் அடுத்து தேங்காயை வைத்து மூடி உருண்டைகளை மூடவும்












இட்லி பானையில் தண்ணீர் வைத்து மூடியின் மேல் ஈர துணியை விரித்து எல்லா உருண்டைகளையும் வைத்து அவிக்கவேண்டும்.





சுவையான வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்) ரெடி.










குறிப்பு



உருட்டும் போது கையில் சிறிது நெய் தடவி கொள்ளவும்.


இந்த‌ மாவு வெண்ணீரில் ஊறிய‌வுட‌ன் நிறைய‌ மாவு ஊறி வ‌ரும்.


இது நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம். கூட‌ கார‌த்திற்கு சுண்ட‌ல் (அ) வ‌டை ஏதாவ‌து த‌யாரித்து கொள்ள‌லாம்.







19 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா said...

ஹையோடா நந்தானே முதல்ல வந்தேன். ஜலீலாக்கா நான் ஃபஸ்ட் வந்திருக்கேன், எதனாச்சிம் பார்த்து பார்சல்போடுங்க,

என்ன கொடுமையிடா இது ஒரேநாட்டுல்ல இருத்துகிட்டு பார்சல்வேறையான்னு கேட்கிறது புரியுதுங்கோஒ

ஸாதிகா said...

http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html

இந்த லின்க்கை பார்க்கவும்.

இந்த ரெஸிப்பி பழைய நினைவுகளைத்தூண்டுகின்றது.

சீமான்கனி said...

ஊருக்கு போகும் பொது ஆட்டே பார்ம்-லாம் போட்டு இருகிங்க திரும்பி வாங்க நாங்க உங்களுக்கு போடுறோம்...நல்லிருக்கு அக்கா ஆட்டே பார்ம்...:)

suvaiyaana suvai said...

அக்கா போனவாரம் ஒரு தெலுங்கு ஃப்ரெண்டு வீட்டில் சாப்பிட்டேன் ரெம்ப நல்லா இருந்தது ரெசிப்பி வாங்கி இருக்கேன். இங்க வந்து பார்த்தால் படத்தோட இருக்கு கண்டிப்பாக செய்றேன் ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்களா! உங்களுக்கு ஒரு அவார்டு இருக்கு வந்து வாங்கிகோங்க!!

Anonymous said...

அக்கா..இதை எவ்வளவு நாள் வைத்து சாப்பிடலாம்

பாத்திமா ஜொஹ்ரா said...

super

S.A. நவாஸுதீன் said...

5 நாள் லீவு முடிஞ்சு இன்னைக்குதான் வந்தேன். வந்தவுடனே ஸ்வீட் கொடுத்ததுக்கு சந்தோசம்.

தாஜ் said...

salaam ஜலீலா நலமா? சில காலம் உங்கள் குறிப்பை மிஸ் பன்னிட்டேன் இனி இன்ஷா அல்லாஹ் தொடருவேன் அனைவருக்கும் என் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள் ஆட்டோபாம் சூப்பர் சுவையாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

ஜலீலாக்கா இங்கு வந்து விருதினை பெற்றுக்கொள்ளுங்கள்..http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

Uma Madhavan said...

thanks for the receipe. Please visit my blog

http://snehiti.blogspot.com

சாருஸ்ரீராஜ் said...

ஈசியான சுவையான குறிப்பு

சிங்கக்குட்டி said...

இந்த அட்டகாசம் அருமையாக இருக்கிறது ஜலீலா :-)

உம்மு ஹாஜர் said...

செய்து பார்க்கிறேன்.

-------------

ஈத் வாழ்த்துகள்

Jaleela Kamal said...

மலிக்கா கண்டிப்பா பார்சல் தரேன், பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா அக்கா ஆமாம் பழங்காலத்து உணவு. ரொம்ப நல்ல இருக்கும்.
என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவன் ஊருக்கு போனதிலிருந்து இதை செய்யவே இல்லை. இப்ப தான் செய்தேன்.

நேரம் கிடைக்கும் போதுவரேன்.

சீமான் கனி என்னது எனக்கு பார்ம் வைத்து இருக்கீங்களா? இது ஞாயமா?
மறக்காமல் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றீ.


சுவையான சுவை, ஓ இது தெலுக்கு காரங்க வீட்டில் செய்தீர்களா? எல்லா ஊரிலும் இந்த அயிட்டம் ரொம்ப பேமஸா?


அம்மு இது பிரெஷா செய்து அப்ப‌டியே சாப்பிடுவ‌து, பிரிட்ஜில் முன்று நாட்க‌ள் வ‌ரை வைத்து சாப்பிடும் போது சூடு ப‌டுத்தி சாப்பிட‌னும்.

ச‌கோத‌ர‌ர் ந‌வாஸ் அங்கு 5 நாட்க‌ள் லீவா? ப‌தில் அளித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.

தாஜ் ரொம்ப‌ நாள் க‌ழித்து உங்க‌ள் ப‌திவு ரொம்ப‌ பார்ப்ப‌து ரொம்ப‌ ம‌கிழ்சியாக‌ இருக்கு. வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

ம‌லிக்கா நேர‌ம் கிடைக்கும் போது வ‌ருகிறேன்.


சாருஸ்ரீ ப‌தில் அளித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.


உம்மு ஹாஜ‌ர் (ந‌ட்புட‌ன் ஜ‌மால்) பெருநாள் வாழ்த்து தெரிவித்த‌மைக்கு ரொம்ப‌ ச‌ந்தோஷம்.

சிங்க‌க்குட்டி, ந‌ன்றி.
இன்னும் என் அட்ட‌காச‌ம் நிறைய‌ இருக்கு...

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஜலீலா: இணைந்து விட்டேன். இது எனக்கு செய்ய கொஞ்சம் கஷ்டமான ரிசிப்பி, எளிமையானதா தேடி செய்து பின்னுட்டம் கொடுக்கிறேன். இதையும் நட்பு பகுதியில் இணைத்து விட்டேன்.

வாழ்க வளமுடன்
அன்பு சகோதரன்

Jaleela Kamal said...

சகோதரர் ஹைஷ் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ரொம்ப சந்தோஷம்.

இது உங்களுக்கு கொஞ்சம் கழ்டம் தான் செய்வது இதில் எளிமையான ரெசிபி களும் நிறைய இருக்கு முடிந்த போது செய்து பாருங்கள்.

அதிரா பூனையாருடன் வந்து விட்டீர்கள், ரொம்ப சந்தோஷம்

SUFFIX said...

ஊரில் இருந்து வந்தாச்சா? சுழியன் மாதிரியே இது புது வகையா இருக்கு, ஒரு நாளைக்கு செய்து பார்த்துடுறோம்.

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் நலமா?ஆமாம் ஊரில் இருந்து வந்தாச்சு

my kitchen said...

Healthy & tasty dish

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா