Thursday, November 12, 2009

லெமன் வித் இட்லி உப்புமா - lemen with idly uppuma


//சூப்பரான இட்லி உப்புமா, எனக்கு எந்த சமையலுமே தெரிய காலத்தில் ஒரு வாத்தியார் (நட்ராஜன் சார்) சொல்லி கொடுத்த இட்லி உப்புமா இது.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவை பற்றியும், சிக்கனம் பற்றியும் கூறும் போது இந்த உப்புமாவை சொன்னார்.
அப்ப சொன்னது எனக்கு அப்படியே மனதில் பதிந்து விட்டது.
இது கூட நம் இஷ்டத்துக்கு சில பொருட்களை சேர்த்தும் செய்யலாம். காய்கறிகள் சேர்த்து வெஜ் இட்லி உப்புமாவும் செய்யலாம்
இதில் கடைசியாக லெமன் சேர்த்துள்ளேன்//
./தேவையானவை

சுமாரான மீடியம் சைஸ் இட்லி = 10
தாளிக்க‌
பெரிய வெங்காயம் = ஒன்று
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு = முன்று தேக்கரண்டி
கருவேப்பிலை = உருவி இரண்டாக கிள்ளியது கால் கை பிடி
பெருங்காயப் பொடி = இரண்டு சிட்டிக்கை
உப்பு = ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
நெய் = உருக்கியது ஒரு தேக்கரண்டி
கடைசியில் மேலே தூவி கிளறி விட‌

பச்ச மிளகாய் = ஒன்று
கொத்து மல்லி தழை = சிறிது
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி


செய்முறை
இட்லியை பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் கல்லு மாதிரி இருக்கும்.
அதை வெங்காயம் செதுக்குவதில் நீளவாக்கில் செதுக்கி கொள்ளவும்.(அப்படியே கையாலும் உதிர்த்து கொள்ளலாம்).
பிறகு சூடு படித்தி கொள்ளவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து (சர்க்கரை, நெய் தவிர) செதுக்கிய இட்லியை போட்டு நன்கு கிளறவும்.
க‌டைசியாக‌ நெய், ச‌ர்க்க‌ரை சேர்த்து கிள‌றி, இஞ்சி , ப‌ச்ச‌மிள‌காய்,கொத்து ம‌ல்லி த‌ழை தூவி ந‌ன்கு கிள‌றி விட்டு தேவைப‌ட்டால் அரை எலுமிச்சை பழ‌ம் பிழிந்து இர‌க்க‌வும்.

நெய் மணம் சும்மா கும்முன்னு, கார‌சார‌மாகவும், லேசான இனிப்பு சுவை,இருக்கும், எலுமிச்சை சேர்ந்தால் கார‌சார‌ம் புளிப்பு சுவையுட‌ன் இருக்கும்.

குழ‌ந்தைக‌ளுக்கு கொடுப்ப‌தா இருந்தால் ப‌ச்ச‌மிளகாய் சேர்க்க‌ தேவையில்லை.

19 கருத்துகள்:

டவுசர் பாண்டி said...

தங்கச்சி , சக்கரைக்கு பதிலா, இட்லிப் பொடி, லேசா போட்டுப் பாருங்க அப்பிடியே பச்சை மிளகாய்க்கு பதில் மோர் மிளகாய் தாளித்தால் இன்னும் சூப்பர் ஆ இருக்கும் , நம்ப குப்பத்துல இது மேரி செய்தாக்கா ஒரே நிமிழத்துல , உப்புமா காணாம பூடும் அக்காங் !!

ஹர்ஷினி அம்மா said...

அக்கா எங்க ஹாஸ்டல்லே மாலை நேரத்தில் குடுப்பாங்க....யாரும் எடுக்கவே மாட்டாங்க..... இதை பாத்ததும் எனக்கே இப்ப செய்யனும் போல இருக்கு...நல்லா இருக்குக்கா.

Jaleela said...

அண்ணாத்த அடுத்த முறை செய்துடுவோம் இல்ல நீங்க சொன்ன மெத்தடில்.

நன்றி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ.

உங்கள் தோழி கிருத்திகா said...

ஆகா.....
நல்லா சொல்லிக்குடுத்துருக்கிங்க...
இதே மாதிரி படிப்படியா போங்க...ஏன்னா இப்போதான் நாங்க சமையல் கத்துக்குறோம் :)

Jaleela said...

ஹர்ஷினி எனக்கு எங்க அம்மா ஸ்கூல் போகும் போது காலை டிபனே தான் மதியத்துக்கும் அதில் வாரம் ஒரு முறை இட்லி.

எனக்கு இட்லிய கண்டாலே பிடிக்காது.
பள்ளியில் எல்லாம் ஷேர் பண்ணி தான் சாப்பிடுவோம். ஆகையால் இட்லி யாருக்காவது கொடுத்துட்டு அவங்க சாப்பாடை எல்லாம் ஒரு வாய் வாங்ககி கொள்வேன்,

ஆனால் மாலை போகும் போது அம்மா சுட சுட மீன், (அ) மட்டன், எதாவது செய்து வைத்து இருப்பாஙக் போய் நல்ல ஒரு வெட்டு தான் .இரவு ஒன்றும் தேவை படாது.

அப்பரம் கொஞ்ச நாளில் இட்லி உப்புமா நான் இந்த முறையை அம்மாவிடம் சொன்னேன், செய்து பார்த்தார்கள் ரொப்ம்ப சூப்பர் நல்ல சாப்பிட்டோம்.

அதிலிருந்து இட்லி போட்டாலே ஒரு ஒப்பு (ஒரே ஈடில் 24 இட்லி) கூட சேர்த்து செய்து அதை இது போல் உப்புமா செய்து தருவார்கள்.

ப‌ழைய‌ ஞாப‌க‌ம் அதான் இன்று இதை செய்து சாப்பிட்டேன்.

Mrs.Menagasathia said...

உங்க செய்முறை நல்லாயிருக்கு.அடுத்த முறை செய்துடுவோம்.

//பள்ளியில் எல்லாம் ஷேர் பண்ணி தான் சாப்பிடுவோம். ஆகையால் இட்லி யாருக்காவது கொடுத்துட்டு அவங்க சாப்பாடை எல்லாம் ஒரு வாய் வாங்ககி கொள்வேன்,//நானும் காலேஜ் படிக்கும் போது இப்படிதான் சாப்பாட்டை மாத்தி சாப்பிடுவேன்.எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க.

நீ ஒரு வீட்ல சோறுவாங்கி சாப்பிட்டு இருக்கமாட்ட.உனக்கு பிச்சைகாரிக்கூட ப்ரெண்ட் போல அதான் உனக்கு இந்த்மாதிரிலாம் தோனுதுன்னு ப்ரெண்ட்ஸ் நல்லா கலய்ப்பாங்க[அவங்களும் என்னைமாதிரி தான் சாப்பிடுவாங்க என்பது வேற செய்தி]என் கண்ணுல மாட்டின அன்னிக்கி அவங்க அவ்ளோ தான் ஒரு வழி பண்ணிடுவேன்.

உங்க சாதாராண இந்த உப்புமாவால பழைய நினைவுக்கு போய்ட்டேன் ஜலிலாக்கா..

Jaleela said...

வாங்க தோழி கிருத்திகா அதுக்கென்னா என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், போட்டுட்டா போச்சு.

மேனகா உங்கள் பதிவு படித்து விட்டு ஒரே சிரிப்பு தான் முன்பு போன அந்த பள்ளி, தையல் கிளாஸ், டைப்ரைட்டிங், கம்புட்டர் கிலாஸ்,ஹிந்தி கிளாஸ் இதெல்லாம் நினைக்கும் போது மனதுக்கு ரொமப் சந்தோஷமாய் இருக்கும்.

ஒரு வருட டெயிலரிங கோர்ஸ் போயிருந்தேன் அங்கு கலச்சா கலாய்ப்பு ரொம்ப வே சுவாரஸ்யம், ரொம்ப அரட்டை அடித்துடு பிரண்ட்ஸ் எல்லாம் ஏம்பா இபப்டி இருக்கோமே நாம் நமக்கு ஏர்போர்ட் ல பெருக்குர வேலையாவது கிடைக்குமா என்பார்கள்.

Sarah Naveen said...

oh wow!!! thats my favorite looks really yummy!!!

கருவாச்சி said...

ஜலீ யக்கா,

எங்க வூட்ல இட்லீ மீந்து போனா இப்படி செய்ய சொல்லி சாப்பிடுவோம்

Suvaiyaana Suvai said...

இப்ப செய்யனும் போல இருக்கு...நல்லா இருக்குக்கா

seemangani said...

அக்கா...சிம்புளி சூப்பர்....இங்க இட்லிய பாதே ரெம்ப நாள் ஆச்சு...

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு இது. இந்த செய்முறையில் இட்டிலி பொடி போட்டும் செய்யலாம், தக்காளி வெங்காயம் போட்டு தக்காளி சாதம் செய்வது போல உப்புமாவும் செய்யலாம். நன்றி.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு , என் சின்ன மகளுக்கு மிகவும் பிடித்த உணவு, மேனகா நீங்க சொல்ற மாதிரி காலேஜ் படிக்கும் போது நாம கொண்டுபோற சாப்பாட்டை சாப்பிடாம அடுத்தவர்க்ளுடன் பகிர்ந்து கொள்வேம் , காலைல முடித்துவிடுவோம் மதியம் காண்டீன்ல போய் ஒரு சம்சா, கேக் சாப்ட்டு விடுவோம் மதியம் 3.30 க்கு வீட்டுக்கு போய் மதிய சாப்பாடும் , அது ஒரு நிலாக்காலம்

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

மாதேவி said...

ஜலீலா உங்கள் சக்கரை சேர்த்த உப்புமா குழந்தைகளுக்கு ரொம்ப சுவை தருமே!.

இங்கு பெரும்பாலும் காரமிளகாய்க் கூட்டு சேர்ப்பதுண்டு.

Jaleela said...

கருவாச்சி ஆமாம் இட்லி மீதம் ஆனால் சொல்லி செய்ய சொல்லுங்கள்.

Thank you sarah naveen

சுவையான சுவை ம்ம் அப்பரம் என்ன உடனே செய்துவிடுங்கள்.


சீமான் கனி இட்லிய பார்த்தே ரொம்ப நாள் ஆகுதா? ஏன்?


சுதாக‌ர் சார், ஆமாம் வெங்காய‌ம் த‌க்காளி சேர்த்து கொத்து ப‌ரோட்டா போல் செய்தாலும் ந‌ல்ல‌ இருக்கும்.

சாருஸ்ரீ உங்க‌ளுக்கு மேனகாவிற்கு உங்க‌ள் க‌னாக்கால‌ம், நிலாக்கால‌ம் எல்லாம் என் இட்லி உப்புமாவால் நினைவுக்கு வ‌ந்து விட்ட‌தா?

இனிமையான‌ நாட்க‌ளை நினைத்து பார்த்தால் ம‌ன‌துக்கு ரொம்ப‌ இத‌மாக‌ இருக்கும் இல்லையா?


த‌மிழ் நெஞ்ச‌ம் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி,

குழ‌ந்தைக‌ள் தின‌ நாள் என்றாலே நேருமாமா தான் நினைகவுக்கு வ‌ருவார்.


ஆமாம் மாதேவி குழ‌ந்தைக‌ள் இல்லை பெரிய‌ குழ‌ந்தைளுக்கும் ச‌ர்க்க‌ரை சேர்த்து சாப்பிட‌ பிடிக்கும்.
வ‌ருகைக்கும் க‌ருத்து தெரிவித்த‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நான் இது வரை சாப்பிட்டது இல்லை, ஒரு நாளைக்கு சமைச்சு சாப்பிட்டுவோம்.

S.A. நவாஸுதீன் said...

ஆகா!. இட்லி மிஞ்சிப்போனால் உப்புமா பண்ணலாம்னு கேள்விப்பட்டிருக்கிறேன். விளக்கமா கொடுத்துட்டீங்க. சூப்பர்

பாத்திமா ஜொஹ்ரா said...

super idea

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா