Tuesday, December 22, 2009

வெல்லம் பிடி (அத்தரி பச்சா) கொழுக்கட்டை


//இது முஹரம் மாதம் செய்வது.
இஸ்லாமிய‌ வ‌ருட‌ பிற‌ப்பில் செய்வார்க‌ள்.

இதன் பெயர் சகோதரி ஆசியா பின்னூட்டத்தில் சொன்னது போல் அத்தரி பச்சா கொழுக்கட்டை என்று சொல்வார்கள்.//

சிக‌ப்ப‌ரிசி மாவு = ஒரு க‌ப்
ம‌ண்டை வெல்ல‌ம் = முக்கால் க‌ப்
உப்பு = கால் தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தேங்காய் = அரை க‌ப் துருவிய‌து
பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி ( வ‌ருத்து ஊற‌வைத்த‌து)வெல்ல‌த்தை தூளாக்கி கொஞ்ச‌மா கால் க‌ப் த‌ண்ணீர் ஊற்றி க‌ரைத்து சூடு ப‌டுத்தி ம‌ண்ணை வ‌டிக‌ட்ட‌வும்.


மாவில் ஊற‌வைத்த‌ பாசி ப‌ருப்பு,நெய்,உப்பு, தேங்காய் துருவ‌ல் எல்லாம் சேர்த்து விற‌வி வெல்ல‌க்க‌ரைச‌லை ஊற்றி ந‌ன்கு க‌ல‌க்கி 5 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

கொழுக‌ட்டை பிடிக்கும் போது தேவைக்கு த‌ண்ணீர் தெளித்து பிடித்து கொள்ள‌வும்.


பிற‌கு சின்ன‌ கொழுக்க‌ட்டைக‌ளாக‌ பிடித்து இட்லி பானையில் ஈர‌ துணியை விரித்து அவித்து எடுக்க‌வும்.


இது இத‌ற்கு முன் கொடுத்த‌ வெல்ல‌ உருண்டை சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டைபோல‌வும் செய்ய‌லாம்.


குறிப்பு: த‌ண்ணீர் அதிக‌ம் ஊற்றி விட‌ கூடாது. ரொம்ப கொழ‌ கொழ‌ என்று ஆகிவிடும், பிற‌கு கொழுக‌ட்டை பிடிக்க‌ வ‌ராது. மனத்துக்கு பொடி செய்த ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.

இதே கார‌த்தில் செய்ய‌ சிகப்பரிசி மாவு கொழுக்கட்டைஇதில் பார்க்க‌வும்.
an ayidda

29 கருத்துகள்:

அண்ணாமலையான் said...

”த‌ண்ணீர் அதிக‌ம் ஊற்றி விட‌ கூடாது. ரொம்ப கொழ‌ கொழ‌ என்று ஆகிவிடும், பிற‌கு கொழுக‌ட்டை பிடிக்க‌ வ‌ராது.” நல்ல வேளை சொன்னீர்கள்....

Jaleela said...

அண்ணாமலையான் கருத்துக்கு மிக்க நன்றி ஏலப்பொடி மணத்துக்கு சிறிது வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்

Malar Gandhi said...

When I visited home last year...bought a small pack of 'sigappu arisi', but had no clue what to do with it...just used them in payasam and left the remaining to rot:( Now I feel awful...

This recipe sounds very healthy and ethnic.:) Happy New Year Jaleela (to you and your entire family).

Viki's Kitchen said...

ஜலீலா , பிடி கொழ்க்கட்டை மிகவும் அருமையாக உள்ளது.

Wish you and family a
Prosperous New year filled with joy and happiness.
Love,
Viki.

suvaiyaana suvai said...

மிகவும் அருமையாக உள்ளது

asiya omar said...

ஜலீலா எங்க ஊரில் இதனை அத்தரிபாச்சா கொழுகட்டை என்று சொல்வோம்,முஹர்ரம் மாதம் இதனை நிச்சயம் செய்து சாப்பிடுவோம் தானே !

Chitra said...

அக்கா, கிறிஸ்துமஸ் வருது....... உங்க பதார்த்தங்களை பார்த்து செய்ய ஆசையாய் இருக்கு. களத்தில் இறங்க போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.

seemangani said...

இது எனக்கு ரெம்ப பிடிக்கும் அக்கா...அம்மா நியாபகம் வருது...
நல்லா இருக்கும்...

நட்புடன் ஜமால் said...

நடுவுல வடை - ம்ம்ம் வித்தியாசமான சிந்தனை தான்

இங்கு வெல்லம் கிடைக்குமா தெரியலை பார்ப்போம் ...

ஸாதிகா said...

சீசனுக்கு தகுந்தாற் போல் உணவுக்குறிப்பு வழங்கி அசத்தும் ஜலீலாவுக்கு வாழ்த்துக்கள்.

Jaleela said...

மலர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, இது சிகப்பரிசியில் செய்வது ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

Jaleela said...

நன்றி விக்கி.

நன்றி சுவையான சுவை

Jaleela said...

ஆசியா சரியாக சொன்னீர்கள், இது அத்தரி பச்சா கொழுக்கட்டை தான் என் பாட்டி அடிக்கடி சொல்வாஙக் ஆனால் ஏன் அந்த பெயர் என்று தெரியல, இதுக்கு பெயர் அப்படி தான் போடனும் என்று இருந்தேன்.

தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி

Jaleela said...

சித்ரா தைரியமா களத்தில் இறங்குங்கள். சமையலே சுத்தமா தெரியாத ஒரு பெண், இப்ப என் சமையல் மூலம், கிரேட் குக்காகி இருக்காங்க.

Jaleela said...

சீமான் கனி இப்படி எல்லாம் என் சமையல் பார்க்கும் போது உங்கள் அம்மாவை நினைப்பது ரொம்ப சந்தோஷம், நன்றி.

Jaleela said...

சகோதரர் ஜமால், இனிப்பு டிபன் செய்தால் கண்டிப்பா அதுக்கு காரத்துக்கு ஏதாவது செய்வது என் பழக்கம், வடை அல்லது சுண்டல் வகைகள்.

வெல்லம் கிடைக்காத பட்சத்தில் சர்க்கரை சேர்த்து செய்யலாம்

Jaleela said...

ஸாதிகா அக்கா உங்கள் பாராட்டுக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.பையன் வந்துள்ளதால் கொஞ்சம் வெரைட்டியா செய்கிறேன்

தாஜ் said...

சலாம் ஜலீலா கொழுக்கட்டை பார்த்ததும் ஊர் நினைவு வந்துவிட்டது
எங்க ஊரில் மிகவும் சிறப்பாக இருக்கும் நினைவுகளை பின்னோக்கி போகவச்சுடுச்சி

அன்புடன் மலிக்கா said...

கொழுகட்டை கொழுக்கட்டை யான் வேகலை
அடுப்பு எறியலை நான் வேகலை..

கொழுக்கட்டையை பர்த்ததும் பாட்டு பாடனும்போல் இருக்கு இப்படித்தான் கொழுகட்டையை கையில் வைத்து பாட்டுபாடிக்கொண்டே துண்ண ஞாபகம் வந்துரிச்சிக்கா..

சூப்பர் அசதுங்கங்க..

Jaleela said...

தாஜ் வாலைக்கும் அஸ்ஸ்லாம்.

பழைய ஞாபகங்கள் அது பசுமரத்தாணி போல் , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

மலிக்கா கொழுக்கட்டைக்கு பாட்டா? முன்பு கேள்வி பட்டுள்லேன் இந்த பாட்டை இது உங்க ஊர் பாட்டா? ம்ம் கலக்குங்க,உடனே கொழுக்கட்டை கவிதை தோன்றி இருக்குமே பாட்டோ கவிதையோ போடுங்க பா,உங்கள் பிலாக்கில் கொழுக்கட்டையை பற்றி.

நாஸியா said...

எங்க வீட்டுல முஹர்ரம் மாதம் ஸ்பெசியல் எல்லம் ஒண்ணும் கிடையாது

பாத்திமா ஜொஹ்ரா said...

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம்.

நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி,முஸ்லிம்)

இந்த நபி மூலம் ஆஷுராதினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்தாலும் ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது ரமழான் நோன்பு கடமையாக்கப் படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக்கி இருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளை யிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)- புகாரி,முஸ்லிம்) இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர். என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளூம் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்)

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.

http://www.readislam.net/asura.html

Jaleela said...

நாஸியா, இந்த கொழுக்கட்டை அந்நாளில் செய்வார்கள், நாங்க்ளும் எப்பவாவது செய்வோம்.

Jaleela said...

நன்றி பாத்திமா உங்க்ள் இடுகையை என் துஆ பிலாக்கில் போட்டு விட்டேன்.

sarusriraj said...

கொலுக்கட்டை பார்கும் போதே சாப்பிட தோணுது.

மாதேவி said...

ஜலீலா இன்றுதான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். ஆகா!

என்ன ஒற்றுமை நம் இருவருக்கும் நானும் சென்ற வாரம் தான் உழுந்துமா பிடிகொழுக்கட்டை செய்து போட்டிருந்தேன்.

Jaleela said...

நன்றி சாருஸ்ரீ, பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கா உடனே செய்து சாப்பிடுங்கள்

Jaleela said...

ஆமாம் மாதேவி நான் போஸ்ட் பண்ணிட்டு வந்தேன் நீஙக்ளும் போட்டு இருகீங்க, நம் இரண்டு பேர் இல்லை நம் மூவருக்கு கொழுக்கட்டை ஒற்றுமை இருக்கு. மேனகாவும்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா