Sunday, January 31, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 2இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது, ஆனால் இதில் சில டிப்ஸ்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும், பல ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு. இதை எழுதிய புண்ணியவான் வாழ்க வளமுடன். என் பிலாக் மூலம் பல சகோதர சகோதரிகள் இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது
மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது

நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்

காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது

அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிம்+ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது

இது பெரிய பதிவாக இருந்ததால் 4 பாகமாக பிரித்து போட்டுள்ளேன்.

இது என் சொந்த ஆக்கம் இல்லை.

Saturday, January 30, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1வாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்.
இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது, ஆனால் இதில் சில டிப்ஸ்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும், பல ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு. இதை எழுதிய புண்ணியவான் வாழ்க வளமுடன்.
என் பிலாக் மூலம் பல சகோதர சகோதரிகள் இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது.விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.


வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும்முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது.
நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட
முடியும்.
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான்.


சத்துக்கள்: எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது.இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.


மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.

இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது.

உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது.

உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.


வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட.

இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு

வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம்.குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.


ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.செவ்வாழை பலமளிக்கும்.மொந்தன் காமாலைக்கு நல்லது.பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறதுதொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.


சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் ஒதுக்கி தவிர்த்து விட வேண்டும்.சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம்.இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.


இதில் சில‌ டிப்ஸ்கள் எனக்கு தெரிந்தது தான், பல ஆச்சரியமான தகவல்கள் இருக்கு.
இது முற்றிலும் உண்மை, தினம் ஒரு வாழைபழம் சாப்பிட்டு எந்த குறைபாடும் இல்லாத ஒருவர், நல்ல உடலும் ஊளைசதை ஏதும் போடமல் இருக்கிறார். நேரில் கண்டுள்ளேன்.


இது பெரிய பதிவாக இருந்ததால் 4 பாகமாக பிரித்து போட்டுள்ளேன்.
இது என் சொந்த ஆக்கம் இல்லை.
இடைவெளியை சரி செய்ய என்னால் முடியவில்லை


Wednesday, January 27, 2010

மைதா குழிபணியாரம், அப்பம் - Maida kuzipanyaaram


மைதா = ஒரு டம்ளர்
முட்டை = 2
உப்பு = ஒரு சிட்டிக்கை
சர்க்கரை (அ) வெல்லம் = அரை டம்ளர்
கட்டி தேங்காய் பால் = முக்கால் டம்ளர்
நெய் + எண்ணை சுட தேவையான அளவு

மைதா,முட்டை, உப்பு, ச‌ர்க்க‌ரை,தேங்காய் பால் எல்லாவ‌ற்றையும் ரொம்ப கட்டியாகவும் இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல் மீடியமாக கரைக்கவும்.


ப‌ணியார‌ ச‌ட்டியில் எல்லா குழியிலும் சிறிது நெய் க‌ல‌ந்த‌ எண்ணையை ஊற்றி மாவை ஊற்ற‌வும்.


தீயை மித‌மாக‌ வைத்து எல்லாவ‌ற்றையும் மெதுவாக‌ திருப்பிவிட‌வும்.
சுவையான‌ மைதா குழிப‌ணியார‌ம் ரெடி.
இது நான் செய்யும் மைதா தோசை போல் தான்.
போன வாரம் ருவைஸ் சென்ற போது என் நாத்தனாரின் மருமகள் ஜுனைதா செய்தது. அதை நான் போட்டோ எடுத்தேன்.

இது என் அப்ப‌ம்


கோதுமை மாவு = ஒரு டம்ளர்
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = அரை டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு
கோதுமை மாவு, உப்பு,தேங்காய் துருவ‌ல்,ஏல‌ப்பொடி ஒன்றாக‌ க‌ல‌க்க‌வும்.
வெல்ல‌த்தை சிறிது த‌ண்ணீரில் சூடாக்கி க‌ரைத்து ம‌ண்ணில்லாம‌ல் வ‌டிக‌ட்டி சேர்த்து முட்டையும் சேர்த்து ந‌ன்கு கெட்டியாக‌ க‌ரைக‌க்வும்.


எண்ணையை சூடாக்கி, ஒரு ஒரு க‌ர‌ண்டி அள‌வு ஒன்றோடு ஒன்று ஒட்டாத‌வாறு ஊற்றி எடுத்து எண்னையை வ‌டிய‌விட்டு சாப்பிட‌வும்.
இதில் முட்டை சேருவ‌தால் ந‌ல்ல‌ பொங்கி வ‌ரும்.


முட்டை பிடிக்காத‌வ‌ர்க‌ள், வாழைப்ப‌ழ‌ம் சேர்த்து , ஒரு சிட்டிக்கை சோடாமாவும் சேர்த்து சுட்டெடுக்க‌வும். இதை தோசை ப‌த‌த்திற்கு க‌ரைத்து தோசைக‌ளாக‌வும் சுட்டெடுக்க‌லாம்.


இதில் முக்கால் டம்ளர் வெல்லம் (அ) சர்க்கரை சேர்த்தால் நல்ல இருக்கும்.
இதில் அரை டம்ளர் தான் சேர்த்துள்ளேன் இனிப்பு அதிகம் விரும்புவோர். முக்கால் டம்ளர் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
ஜலீலா
துபாய்

Saturday, January 23, 2010

பதிவு திருட்டு ஆகையால் குறிப்பு போட பிடிக்கல.


என் குறிப்புகளை பிரப‌ல தளங்களுக்கு அனுப்பட்டு அங்கு இப்போது போடப்பட்டுள்ளது. நான் ஒரு வருடம் முன் கொடுத்த குறிப்புகளை, இப்போது முடிந்த டிசம்பரில் போடப்பட்டுள்ளது.


ஏற்கனவே அருசுவை, தமிழ்குடும்பம்,சமையலறை, இப்ப பிலாக்கில் உள்ளதையும். பிரபல தளம் மற்றும் சில பேர் பிலாக்குகளில் காப்பி செய்து போட்டுள்ளார்கள்.


இதே முன்று பெண்கள் சேர்ந்து அனைத்து குறிப்புகளையும் எடுத்து ஒரு தளம் போல் ஒரு பிலாக் ஆரம்பித்து போட்டுள்ளார்கள்.


இன்னும் யார் யாரெல்லாம் எடுத்து இப்படி போட்டு வைத்துள்ளார்கள்.என்று தெரியவில்லை.

நிறைய குறிப்புகள் போட்டு வைத்தும் பப்லிஷ் பண்ண மனசு வரல./

Saturday, January 16, 2010

உளுந்து அடை - urad dal adai - dosai

பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்பார்கள். டயட் செய்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்

உளுந்து = கால் ட‌ம்ள‌ர்
அரிசி மாவு = முன்று தேக்க‌ர‌ண்டி
ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி
வெங்காய‌ம் = முன்று
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
கொத்துமல்லி தழை = சிறிது
நெய் + எண்ணை = சுட தேவையான அளவுசெய்முறை

உளுந்தை அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து சிறிது த‌ண்ணீர் சேர்த்து விழுதாக‌ அரைத்து கொள்ள‌வும்.

அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நருக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்து அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சிறிது சேர்த்து அடைகளாக வார்க்கவும்.
முன்று அடைகள் வரும் ஒரு நபருக்கு போதுமானது.
தொட்டுக்கொள்ள சர்க்கரை நல்ல இருக்கும். இட்லி மிளகாய் பொடி, மற்றும் சட்னி,குழம்புவகைகளும் தொட்டு சாப்பிடலாம்.

சுவையும் மணமும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இது மலிக்கா உடைய குறிப்பு. இது இடுப்பு வலி உள்ளவர்களுக்கு உளுந்து சம்பந்தப்பட்ட சமையல் செய்து சாப்பிட்டால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது. இதில் மலிக்கா ரவை சேர்க்க சொல்ல்ல நான் ரவை சேர்த்துள்ளேன். இதில் இனிப்பில் வேண்டும் என்றால் ஒரு முட்டை, தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிக்கை உப்பு சேர்த்து கொள்ளவும்.வெங்காய‌ம் ப‌ச்ச‌மிள‌காய் சேர்க்க‌ தேவையில்லை/

இடுப்பெலும்பு பலம் பெற உளுந்து அடை (இனிப்பு மற்றும் காரம்), உளுந்து களி, உளுந்து வடை, உளுந்து வட்லாப்பம்,உளுந்து சுண்டல் போன்றவை சாப்பிடலாம்.

Tuesday, January 12, 2010

பிரான் பிரட் ரைஸ் - Prawn Fried Riceதேவையான பொருட்கள்.

தரமான பாசுமதி அரிசி - அரை கிலோ
இறால் - 150 கிராம்
காய் கறிகள் - 200 கிராம்
(கேபேஜ்,கேரட், கேப்ஸிகம்,பீஸ்,பீன்ஸ்)
வெங்காய தாள் - இரண்டு ஸ்ட்ரிப்ஸ்
பூண்டு - முன்று பெரிய பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை + ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று + ஒன்று
கிரீன் சில்லி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி (அ) பச்ச மிளகாய் - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மேகி கியுப் - ஒன்று
சோயா சாஸ் - ஒரண்டு தேக்கரன்டி
வெயிட் பெப்பர் பொடி - ஒரு தேக்கரண்டி
பிளாக் பெப்பர் பொடி- இரண்டு தேக்கரண்டி முட்டை - முன்று
உப்பு - தேவைக்கு
எண்ணை - முன்று மேசை கரண்டி
பட்டர் - முன்று மேசை கரண்டி
டொமேடோ கெட்சப் - ஒரு மேசை கரண்டி
செய்முறை


1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.இறாலை தோலெடுத்து வயிற்றிலும், முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.மற்ற காய் கறிகள் அனைத்தியும் அரிந்து ரெடியாக வைக்கவும்.


2.முட்டையில் மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து அடித்து வைக்கவும், அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.


3.ரைஸ் குக்கர் (அ) குக்கரில் ஒரு மேசை கரண்டி எண்ணை + ஒரு மேடை கரண்டி பட்டர் சேர்த்து காய் வைத்து ஒரு வெங்காயம், பொருதேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்து வதக்கி மேகி கியுபில் கொஞ்சம் உடைத்து போட்டு, ஒரு தேக்கரண்டி சோயா சாஸும் ஊற்றி கிளறவும்.


4. எல்லாம் ஒன்று சேர இரண்டு நிமிடம் வதக்கவும். வதக்கி அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு அதே போல் ஒரு டம்ளர் தண்ணீரும், கூட அரை டம்ளரும் சேத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.ரைஸ் குக்கர் என்றால் பதமாக வந்து விடும் கீப்பில் வந்ததும் இரக்கி வைத்து கொள்ள வேண்டும்.குக்கர் என்றால் தண்ணீர் ஊற்றியதும் கொதிக்க விட்டு வெயிட் போட்டு முன்றவது விசில் வரும் சமயம் இரக்கி விட வேண்டும்.


5.இப்போது காய் தாளிக்க வேண்டும், இரண்டு மேசை கரண்டி பட்டர் + ஒரு மேசை கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும் சர்க்கரை,பூண்டை பொடியாக அரிந்து போட்டு , பசமிளகாய் பேஸ்ட் (அ) பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கிளறவும். 6. .வெங்காயம் ஊறவைத்த இறாலை போட்டு வதக்கவும்.

7.அடுத்து பொடியா கட் பண்ணி வைத்துள்ள அனைத்து காய் கறிகளையும் சேர்த்து கிளறவும்.

8. முட்டையை எண்ணை சிறிது பட்டர் சேர்த்து பொரித்து வைத்து கொள்ளவேன்டியது.

9.காய் கறியில் மீதி உள்ள மேகி கியுப்,சிறிது உப்பு,சோயா சாஸ், வொயிட் பெப்பர், பிளாக் பெப்பர், டொமேடோ சாஸ் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.


10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.


12. அடுத்து முட்டையையும் சேர்த்து கிளறவும்.


13.கடைசியாக தேவை பட்டால் உப்பு சரி பார்த்து தேவைக்கு உப்பு, மிளகு தூள்,சிறிது பட்டரை உருக்கி ஊற்றி நன்கு கிளறி இரக்கவும், சுவையான சூப்பரான பிரான் பிரைட் ரைஸ் ரெடி.


14.இதற்கு தொட்டு கொள்ள வெங்காயம் இறாலுடன் சேர்த்து சாப்பிடவும்குறிப்புஇது செய்வது ரொம்ப சுலபம் உதிரியான சாதம், வதகிய காய்கறிகள் வித் சிக்கன் (அ) இறால், முட்டை/ஆனால் சிலருக்கு உதிரியாக வராது சாதம் உதிரியாக வர தன் கீ ரைஸ் போல் ஆனால் கொத்து மல்லி புதினா, பச்ச மிளாகாய்,தயிர் இல்லாமல் லைட்டாக தாளித்து சாதம் ரெடி செய்யனும்.உப்பு விஷியத்தில் ரொம்ப கவனம் தேவை.சோயா சாஸ், மேகி கியிபில் உப்பு இருக்கும் ஆகையால் எல்லாத்துக்கும் உப்பு சுவையும் சேரனுமே என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கொள்ளவும்.இதை சிக்கனிலும் செய்யலாம்.

இறால் வெள்ளையாக வரட்டினால் சில பேருக்கு பிடிக்காது ஆகையால் சிறிது மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஊறவைப்ப‌து.

பிரைட் ரைஸ் என்றாலே சிறிது அஜினமோட்டோ சேர்ப்பார்கள், நான் அதை பயன் படுத்துவதில்லை, இந்த முறை ரொம்ப நீளமாக இருந்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.

Sunday, January 10, 2010

தாய்மை ஒரு இனிய பயணம்

வாங்க தோழிகளே இங்கு ஒரு தோழி கர்பிணி பெண்களுக்காக தன்னுடைய அனுபவத்தை பதிவுகளாக போட்டு இருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆகப்போகிறவர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆகி குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பிலாக் உதவும்.


இன்று தான் இந்த பிலாக் என் கண்ணில் பட்டது

தாய்மை ஒரு இனிய பயணம் இதில் சென்று படித்து பயணடைந்து கொள்ளுங்கள்.

Saturday, January 9, 2010

நொய் உருண்டை வெல்லஞ்சோறு

இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் இதன் பெயர் வெல்லம் உருண்டை சோறு, பாச்சோறு என்று கூட சொல்வார்கள்.நொய்யை உடைத்து செய்வார்கள், இதை பாசுமதி அரிசி ஊறவைத்து நன்கு கையால் உடைத்து செய்துள்ளேன். இதுவும் நான் அன்றாட டிபனில் ஒன்று.

தேவையானவை

பாசுமதி அரிசி = ஒரு டம்ளர்
வெல்லம் = முக்கால் டம்ளர்
தேங்காய் துருவல் = உருண்டை உருட்ட தேவையான அளவு
ஏலக்காய் = இரண்டு
உப்பு = இரண்டு சிட்டிக்கை


செய்முறை

அரிசியை அரை மணி நேரம் முன்பே ஊறவைக்கவும். ஊறியதும் கைகளால் உடைத்து விட்டு களைந்து வைக்கவும்.வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.குக்கரில் களைந்த அரிசியை போட்டு அரிசி ஒரு டம்ளருக்கு இரண்டு டம்ளர் + கால் டம்ளர் ஊற்றவும். வெல்லம் தண்ணீர் ஒரு டம்ளர் + ஒன்னேகால் டம்ளர்.


அதில் இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து முக்கால் பாகம் தண்ணீர் வற்றி கொதிக்கும் போது குக்கரை மூடி முன்றாவது விசிலில் அடுப்பை அனைத்து உடனே குக்கரை இரக்கவும்.ஆவி அடங்கியதும் வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஒரு தட்டில், உள்ளங்கையில் தண்ணீரை நனைத்து உருண்டைகளாக உருட்டவும்.


தட்டில் உருண்டைகள் மேலே தேங்காய் துருவல் போடு சர்குலர் மூமெண்டில் சுழற்றவும் இப்போது எல்லா உருண்டைகளிலும் தேங்காய் துருவல் கோட் ஆகிவிடும்.


எப்படியும் 17 (அ) 18 உருண்டைகள் வரும்
காரத்துக்கு ஏதாவது சுண்டல் வகைகளை செய்து கொள்ளலாம்.குழந்தைகள் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்கவனிக்க:


1. தண்ணீர் கம்மியாக இருந்தால் வேகாது நரக்கரிசியாக போய் விடும், எத்தனை முறை வேக வைத்தாலும் வேகாது.

2. குக்கர் விசில் அதிகமா விட்டு ஆஃப் பண்ணியதும் அடுப்பை விட்டு இரக்காமல் அந்த சூட்டிலேயெ வைத்து இருந்தால் அடி பிடித்து விடும்

Thursday, January 7, 2010

ஸ்டெப் பை ஸ்டெப் முர்தபா முர்தபா சென்னையில் பிர்தெவுஸ் ஹோட்டல், சீலாடு, மற்றும் புகாரி ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய இல்லங்களில் செய்யபடும், ரிச் டிபன்.இது எங்க இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.


இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.

பரோட்டாவிற்கு

மைதா = இரண்டு கப்
உப்பு ‍= சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணை = இரண்டு தேக்கரண்டி
மட்டன் கீமா = 200 கிராம் (இதில் சிக்கன் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி த‌ழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் த‌ட‌வ‌ தேவையான‌ அள‌வு
எண்ணை + டால்டா (அ) ப‌ட்ட‌ர் = சுட‌த்தேவையான‌ அள‌வு


செய்முறை

முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது மட்டன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.
.இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.
மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்
வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய மட்டன்  பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.
தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் , நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்

இப்படி முக்கோண வடிவாகவும் மடிக்கலாம்.


சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.

( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)

காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.மிக அருமையான டிபன், ரிச் டிபன், ஒன்று சாப்பிட்டாலும் ரொம்பவே பில்லிங்காக இருக்கும். காய் கறி கீரைவகைகள் , சிக்கன், மட்டன் எதுவைத்து செய்தாலும் ரொம்ப நல்ல இருக்கும்.

Wednesday, January 6, 2010

புத்தாண்டில் விஜி எனக்கு கொடுத்த அவார்டுஇந்த புத்தாண்டில் முதல் முதல் விஜி எனக்கு கொடுத்த அவார்டு விஜிஇது எனக்கு தொடர்ந்து என் குறிப்புகளை செய்து வரும் விஜி கொடுத்தது.விஜி வெஜ் சமையல் அசத்தலா செய்வாங்க.

விஜியின் வெஜ் சமையலை இங்கு சென்று பார்க்கலாம்


நன்றி விஜி

Monday, January 4, 2010

பாக்கிஸ்தானிய‌ர்க‌ளின் ப‌ரோட்டா கீமா


கோதுமை மாவு பரோட்டா கீமாபரோட்டாவை கடைகளில் மைதாமாவில் செய்து உள்ளே கீமா வைத்து சுருட்டி கொடுப்பார்கள், நான் இதை கோதுமைமாவில் செய்துள்ளேன்.

இந்த பரோட்டா கீமாவை சாப்பிட்டு விட்டு தான் இங்குள்ள் பாக்கிஸ்தானியர்கள் ஒரு ஏசி ஒருத்தரா தூக்கி முதுகில் ஏற்றி கொண்டு போகிறார்கள்.
நம்ம ஊரு தயிர் சாதம் எல்லாம் ஒன்று முடியாது .பாக்கிஸ்தானியர்களின் மிக முக்கியமான டிபன் அயிட்டம் இது. ஏன் மதிய உணவு கூட இது தான். ரொம்ப சத்தான டிபன். துபாயில் முக்கால் வாசி பேச்சுலர் உடைய காலை உணவும் இது தான். என்ன நம்ம‌ வீட்டில் செய்வது சின்ன‌தா உள்ள‌ங்கை அள‌வு தான் ப‌ரோட்டோ சுடுவோம், அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ பெரிய‌தாக‌ சாப்பிடும் த‌ட்டு சைஸுக்கு இருக்கு, ஒருத்த‌ருக்கு ஒன்று (அ) ஒன்ன‌றை போதுமான‌தாக‌ இருக்கும்.தேவையான பொருட்கள்பரோட்டா தயாரிக்ககோதுமை மாவு - மூன்று கப்


உப்பு ‍ ஒரு தேக்கரண்டி


சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை


பட்டர்(அ) நெய் - இரண்டு மேசைக்கரண்டி


பால் - கால் கப்


ச‌ர்க்க‌ரை = முன்று தேக்க‌ர‌ண்டி

கீமா தயாரிக்க
கீமா - கால் கிலோ


எண்ணை ‍ இரண்டு தேக்கரண்டி
ப‌ட்ட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் - ஐந்து
ஃபுரோஜன் பட்டாணி = இரண்டு மேசை கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
பச்ச மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்க‌ரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேகரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது

செய்முறை


கோதுமையில் சோடா,உப்பு, பட்டர் பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும். இப்போது நல்ல ஊறவைத்த பரோட்டாமவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பறத்தி அதில் ஒரு தேக்கரண்டி முழுவதும் தடவி புடவை கொசுவ‌ம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

மைதா ப‌ரோட்டா

கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்கவிடவும்.


எண்ணையை காய வைதது வெங்கயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் முறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும்.


பிறகு பொடியாக நறுக்கிய கொத்து மல்லி,பச்சமிளகாய்,தக்காளியை போட்டு வதக்க்கவும் வதக்கி எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.


கீமா மட்டர் ரெடி.


இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளயும் வட்ட வடிவ பரொட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரண்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது.எட்டு பரோட்டா வரும்.

குறிப்பு


இதில் நான் மட்டர் (ஃபுரோஜன் பட்டாணி சிறிது சேர்த்துள்ளேன்) நீங்கள் கூட எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
இதை சிக்கன் கீமாவிலும் செய்யலாம்
கோதுமை பரோட்டா செய்து இதை உள்ளே வைத்து சுருட்டினல் சாப்பிடும் போது நல்ல பஞ்சி மாதிரி இருக்கும்.

இதே கோதுமைமாவு பரோட்டாவை குழந்தைகளுக்கு 1 வயதில் இருந்து வாரம் ஒரு முறை செய்து பால் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து கொடுத்தால் நல்ல தளதளன்னு மின்னுவார்கள். இன்னும் நல்ல ஷாப்டாக வர சிறிது உடைத்தகடலையை பொடித்து சேர்த்து கொள்ளலாம்குழந்தை களுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம்,ஆபிஸுக்கும் எடுத்து செல்லலாம்.


மைதா ப‌ரோட்டா செய்முறையை இங்கு சென்று பார்க்க‌

Sunday, January 3, 2010

மைதா பரோட்டா - Maida Parota
தேவையான பொருட்கள்


மைதா - மூன்று டம்ளர்
உப்பு ‍ ஒரு தேக்கரண்டி
சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை
டால்டா = முன்று மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = முன்று தேக்க‌ர‌ண்டி
தண்ணீர் = முக்கால் டம்ளர்


முட்டை = 1 (தேவை ப‌ட்டால்) சேர்த்து கொண்டால் நல்ல ஷாப்டாக இருக்கும்
எண்ணை = சிறிது
எண்ணை + டால்டா = சுட்டெடுக்க‌ தேவையான‌ அள‌வு


செய்முறை


மைதாவில் சோடா,உப்பு, சேர்த்து கலக்கி, டால்டாவை உருக்கி ஊற்றி தண்ணீர் ஊற்றி ஒரு ஃபோர்கால் கிளறி விடவும். போர்கால் கிள‌றி விடுவ‌தால் பிசையும் போது கையில் ஒட்டி கொண்டே வ‌ராது.
சிறிது நேர‌ம் க‌ழித்து கையில் எண்ணை தொட்டு கொண்டு ந‌ன்கு பிசைய‌வும். த‌ண்ணீர் தேவைப்ப‌ட்டால் சிறிது தெளித்து பிசைய‌வும்.
பிசைந்த‌ மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாம‌ல் ந‌ம‌க்கு தேவையான‌ சைஸில் உருண்டைக‌ள் போட்டு எல்லா உருண்டையிலும் எண்ணை த‌ட‌வி ந‌ன்கு ஊற‌விட‌வும். 2 ம‌ணிநேர‌ம் போது மான‌து.மேலும் ஊறினாலும் ந‌ல்ல‌ இருக்கும்.ஓவ்வொரு உருண்டையையும் ரொட்டி பல‌கையில் தேய்த்து புட‌டைக்கு கொசுவ‌ம் வைப்ப‌து போல் ம‌ட‌க்கி ம‌று ப‌டி 20 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

(உட‌னே தேய்த்தால் சுருண்டு சுருண்டு நிற்கும்,கொசுவ‌ம் வைத்து ஊறினால் தேய்க்கும் போது சுல‌ப‌மாக‌ வ‌ரும்).
இப்போது தேய்க்க நல்ல வரும், கடையில் உள்ளது போல் கெட்டியாகவும் செய்யலாம். அது சரியாக உள்ளே வேகாது. வெள்ளையாக இருக்கும். ஆகையால் சிறிது பெரியதாக போட்டு உள்ளேன்ரெடி செய்த பரோட்டாவை தவ்வாவில் போட்டு சுடவும்.


ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி சுட்டெடுக்கவும்.


சுவையான மைதா பரோட்டா ரெடி, இதை கோதுமையிலும் செய்யலாம்.
குறிப்பு


இதற்கு எல்லா சைட் டிஷும் பொருந்தும். ஒன்றும் இல்லை என்றால் வாழைபழம் தொட்டு கூட சாப்பிடலாம், மாசி, காய் கறி குருமா, பெப்பர் சிக்கன்,மட்டன், சிக்கன், குருமாக்கள், மீன் சால்னா, வெங்காய முட்டை. ஆம்லேட், தக்காளி சட்னி,பொரியல், சைனீஸ் அயிட்டம் சில்லி சிக்கன், பட்டர் சிக்கன். எல்லாமே பொருந்தும்.துபாயில் எல்லா டீ கடையிலும் பரோட்டா கீமா ரொம்ப பேமஸ்.பாக்கிஸ்தானியர்கள் முக்கியமா இந்த மைதா பரோட்டாவை பெரிய ஆரஞ்சு சைஸ் உருண்டையில் பெரிய ரொட்டியாக சுட்டு இதில் கீமாவை உள்ளே வைத்து சாப்பிடுவார்கள்.இது ஒன்று சாப்பிட்டாலே போதும்.பரோட்டா மீந்து போனால் கொத்து பரோட்டா செய்யலாம்.