Sunday, January 31, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 2



இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது, ஆனால் இதில் சில டிப்ஸ்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும், பல ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு. இதை எழுதிய புண்ணியவான் வாழ்க வளமுடன். என் பிலாக் மூலம் பல சகோதர சகோதரிகள் இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது




மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.





மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது





நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.





உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன





குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.





சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.





காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.





புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.





மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்





காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.





நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது





அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிம்



+ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது

இது பெரிய பதிவாக இருந்ததால் 4 பாகமாக பிரித்து போட்டுள்ளேன்.

இது என் சொந்த ஆக்கம் இல்லை.

13 கருத்துகள்:

பாத்திமா ஜொஹ்ரா said...

இதுல இவ்ளோ இருக்கா.வாவ் .
நாந்தான் பர்ஸ்ட்

S.A. நவாஸுதீன் said...

அருமையான பகிர்வு சகோதரி. ரொம்ப நன்றி

அன்புடன் மலிக்கா said...

அது சரி யக்கோவ் நல்ல தகவல் நிறை வாழைப்பழத்தைப்பற்றி அறியத்தமைக்கு சந்தோசம்

சிங்கக்குட்டி said...

சூப்பர். சத்தான அட்டகாசம்தான் போங்க :-)

Paleo God said...

நல்ல பகிர்தல் :)) நன்றி சகோதரி.:)

ஒரு சிறிய விண்ணப்பம் - உங்கள் பதிவுகளை, சைவம், அசைவம் என்று இரண்டாய் பிரித்தால் என்ன? தேடுவதற்கு சுலபமாய் இருக்குமே.:)

R.Gopi said...

//இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது,//

ஜலீலா அவர்களே..... பரவாயில்லையே... உங்களுக்கு வாழைப்பழ குலை அல்லவா வந்துள்ளது.... கூடவே அதை ருசிக்க துடிக்கும் ஒரு சின்ன குரங்கும்... நல்லா இருக்கு...

மிக விரிவாக தரப்பட்டுள்ளது.... கூடவே உங்களிடம் பிடித்த இன்னொரு விஷயம் இதோ கீழே...

//இது என் சொந்த ஆக்கம் இல்லை.//

இது போல் சொல்ல எவ்வளவு பேருக்கு தைரியம் வரும்... இதற்காகவே உங்களுக்கு ஒரு பெரிய “சபாஷ்”...

மற்றொரு நல்ல பதிவு உங்களிடமிருந்து......

வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்......

நாஸியா said...

வாழைப்பழத்துல இவ்வளவு நன்மைகளா?

ஜஸகல்லாஹு க்ஹைர்...


***

எங்க வாப்சா என்னை வாழப்பழ சோம்பேறின்னு சொல்லுவாங்க :))))

நட்புடன் ஜமால் said...

பிரித்து போட்ட பின் மீண்டும் வாசிச்சாச்சி.

கோபி சொன்னதை நானும் சொல்லிக்கிறேன்.

Menaga Sathia said...

சூப்பர்!!பகிர்வுக்கு நன்றி ஜலிலாக்கா!!

அப்துல்மாலிக் said...

வாழைப்பழம் மறவாமல் இரவில் சாப்பிடும் பழக்கம் இருக்கு, நல்ல விடயம்

பகிர்வுக்கு நன்றி

athira said...

ஜலீலாக்கா... அப்படி என்னதான் இருக்கு வாழைப்பழத்தில் என பார்த்திட வேணுமென்று கஸ்டப்பட்டு இப்போதான் உள்ளே வந்தேன்.... எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கு... மிக அருமையான தகவல், பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்...

பித்தனின் வாக்கு said...

மிக நல்ல பகிர்வு. நன்றி நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு.

Jaleela Kamal said...

பாத்திமா வாங்க முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.

சகோ. நவாஸ் மிக்க நன்றி

வாங்க மலிக்கா வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

சிங்கக்குட்டி வந்தது ரொம்ப சந்தோஷம்..

ஷங்கர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

பதிவுகள் இனி தான் நீங்கள் சொன்ன படி சைவம், அசைவம் பிரிக்கனும், குறீப்பு நிறைய இருக்கு. கொஞ்சம் டைம் எடுக்கும். போடுகிறேன்.

கோபி உங்கள் அழகான பின்னூட்டமே என்னை பதிவுகள் போட வைக்கிறது.

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி கோபி

நாஸியா வாங்க வாழைபழ சோம்பேறியா (உங்கள் கிட்ட இருந்து தான் வாப்சா, கம்மா எல்லாம் அர்த்தம் கண்டு கொண்டேன்.


ச‌கோ.ஜ‌மால் மிக்க‌ ந‌ன்றி உங்க‌ள் தொட‌ர் பின்னூட்ட‌ம் நிறைய‌ ப‌திவுக‌ள் போட் வைக்கிற‌து.


வாங்க மேனகா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

அதிரா வாங்க உங்கள் வருகைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
ஓப்பன் பண்ணா ரொம்ப நேரம் ஆகுது என்றீர்கள், ஆமாம் டிசைன் மாற்றனும் பதிவுகள் நிறைய இருப்பதால் மாற்ற பயம்.


பித்தன் சார் வாங்க நினைவு வைத்து வந்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா