Thursday, January 7, 2010

ஸ்டெப் பை ஸ்டெப் முர்தபா



 முர்தபா சென்னையில் பிர்தெவுஸ் ஹோட்டல், சீலாடு, மற்றும் புகாரி ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய இல்லங்களில் செய்யபடும், ரிச் டிபன்.



இது எங்க இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.






இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.





பரோட்டாவிற்கு

மைதா = இரண்டு கப்
உப்பு ‍= சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணை = இரண்டு தேக்கரண்டி
மட்டன் கீமா = 200 கிராம் (இதில் சிக்கன் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி த‌ழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் த‌ட‌வ‌ தேவையான‌ அள‌வு
எண்ணை + டால்டா (அ) ப‌ட்ட‌ர் = சுட‌த்தேவையான‌ அள‌வு






செய்முறை

முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது மட்டன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.




.இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.
மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்




வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய மட்டன்  பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.




தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்







இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் , நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்





இப்படி முக்கோண வடிவாகவும் மடிக்கலாம்.






சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.

( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)

காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.























மிக அருமையான டிபன், ரிச் டிபன், ஒன்று சாப்பிட்டாலும் ரொம்பவே பில்லிங்காக இருக்கும். காய் கறி கீரைவகைகள் , சிக்கன், மட்டன் எதுவைத்து செய்தாலும் ரொம்ப நல்ல இருக்கும்.













20 கருத்துகள்:

Asiya Omar said...

ஜலீலா சூப்பர்.எனக்காக தானே கொடுத்து இருக்கீங்க.மிக்க மகிழ்ச்சி.நன்றி.

நட்புடன் ஜமால் said...

சமையல் அட்டகாசங்கள்.

அட்டகாச படங்கள்.

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா நீங்கள் கேட்டு கொண்டதால் தான் உடனே போட்டேன். தவறாமல் வந்து ஊக்க படுத்துகிறீர்கள் உங்களுக்காகவே தான்....
இது செய்து கொண்டேபோட்டோ எடுப்பது ரொம்ப சிரமம்.

Jaleela Kamal said...

சகோதரர் ஜமால் நன்றி

Unknown said...

அக்கா உங்கள் குறிப்பை பார்த்து நான் செய்திருக்கேன்.. ரொம்ப நல்ல வந்திருக்கு..

suvaiyaana suvai said...

akka super!!

Chitra said...

அக்கா, அடுத்த போட்டோ நான் அதை சாப்பிடுற மாதிரி இருந்திருக்க கூடாதா? வாயில் நீர் ஊருது.

Saraswathy Balakrishnan said...

Wow what beautiful presented recipe..looks very delicious...

சீமான்கனி said...

படம் மட்டும் போட்டாலும் அசத்தலாதன் இருக்கு அக்கா....பசிக்குது....

பித்தனின் வாக்கு said...

/ இதில் படங்கள் மட்டும் போட்டுள்ளேன். ஏற்கனவே போட்டுள்ளதால் அதில் செய்முறையை பார்த்து கொள்ளலாம். //
அடாடா நான் கூட இதில் படங்கள் மட்டும் போட்டுள்ளேன், யாருக்காவது வேண்டும் என்றால் எங்க வீட்டுக்கு வாங்க செய்து தருகின்றேன் சொல்வீங்க அப்படின்னு நினைத்தேன். பார்க்க மிக அருமையாக ஆலூ ப்ரேத்தா போல உள்ளது, நன்றி.

சிங்கக்குட்டி said...

இது மலாய் வகை உணவு கூட.

சிங்கையில் மிக அதிகம் எந்த தெருவிலும் கிடைக்கும் :-)

எனக்கு ரொம்ப பிடிக்கும் சிங்கை போகும் போதெல்லாம் இதை சுவைக்க தவறுவதில்லை :-)

Unknown said...

Super! Ithai buhari hotel ls saaptrukken. Nice step by step pics!

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,துபாய் வந்தா செஞ்சு தருவீங்களா?

Jaleela Kamal said...

பாயிஜா என் குறிப்பு பார்த்து செய்து இருக்கீங்களா நல்ல வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்.

நன்றி சுவையான சுவை.

சித்ரா எடுத்து சாப்பிடுவது போல் தான் போட்டுள்ளேன்.

சரஸ்வதில் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

சீமான் கனி குறிப்பு ஏற்கனவே போட்டாச்சு. அதில் ஸ்டெப் பை ஸ்டெப் படம் கேட்டுகொண்டதால் இதில போட்டுள்ளேன்.

சுதாகர் சார் நன்றி அடடா வாஙக் செய்து கொடுத்துட்டா போச்சு

திவ்யா வாங்க புகாரி ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கீங்களா? ஆஹா அதன் சுவையே தனி தான்.

சிங்கக்குட்டி ஆமாம் இதன் பெயர் மலேஷியன் முர்தபா என்றும் சொல்ல‌லாம். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

தங்கை பாத்திமா வாங்க கண்டிப்பா செய்து தரேன்.

SUFFIX said...

//நட்புடன் ஜமால் said...
சமையல் அட்டகாசங்கள்.

அட்டகாச படங்கள்//

ஆமாம் படங்களின் அட்டகாசங்கள்!!

Jaleela Kamal said...

நன்றி ஷபிக்ஸ்

ஹுஸைனம்மா said...

பார்த்தும், சாப்பிட்டும் இருக்கேன். ஆனா இதுவரை செஞ்சு பாத்தது இல்லை. செஞ்சுடலாம் ஒரு நாள்!!

Mahi said...

ஜலீலாக்கா,உங்க மலேஷியன் முர்தபா பார்க்கவே சூப்பரா இருக்கு!
செய்யணும்-னு நினைச்சுட்டே..ஏ..ஏ..இருக்கேன்! :)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Jalwwlakka,This luks super inviting.Luv to try it soon.Thanks for sharing.

Asiya Omar said...

ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.முர்தபா சிறிய மாற்றத்துடன் செய்து பார்த்தேன் ஜலீலா.நல்லா வந்தது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா