Monday, February 1, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3
//இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது, ஆனால் இதில் சில டிப்ஸ்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும், பல ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு. இதை எழுதிய புண்ணியவான் வாழ்க வளமுடன். என் பிலாக் மூலம் பல சகோதர சகோதரிகள் இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.
உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும்.//

மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது.

மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.மூளைக்கு வலுவூட்டும்.

தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்

உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.


தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.


தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.


அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்


வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.


குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


மலத்தை இளக்கி, சூட்டை தணிப்ப தோடு, மிளகளவு பெருங்காயத்தை வாழைப் பழத்துடன் விழுங்கினால் உடம்பில் சிரங்கு நமச்சல் தீரும்.


இது பெரிய பதிவாக இருந்ததால் 4 பாகமாக பிரித்து போட்டுள்ளேன்.

இது என் சொந்த ஆக்கம் இல்லை.


9 கருத்துகள்:

Chitra said...

Thanku so much jaleela..Will c the other parts too..I've to practice my doter to eat banana :)

நாஸியா said...

Jazakallaahu khair!

Tell me when can I come home to eat biriyani :)

Anonymous said...

கண்டிப்பாக நல்ல தகவல் நன்றி..ரைஹானா..

jailani said...

இதைப்போல நல்லவிஷயங்கள் மெயிலில் வந்தால் ப்லாக்கில் போடுங்கள் .அனைவரும் படித்துப் பயன்பெறட்டும்....
---------- ------
பிரியாணி நாஸியாவே உங்ககிட்ட பிரியாணி கேக்கிறாங்க உஷார்!!!!!!!!!!!!

மகா said...

வாழையடி வாழையா வர பதிவு நல்ல இருக்கு ...

Jaleela said...

சித்ரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

நாஸியா வாங்க எப்ப வேண்டுமானாலும் வாங்க, உடனே சூடானாசெய்து தரேன்.

தோழி ரைஹானா வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஜெய்லானி இது நல்ல விஷியங்கள் நிறைய வருது ஆனால் எல்லாத்தையும் போட்டா காப்பி என்று சொல்லிடுவாங்களே.

மகா வாங்க வாழையடி வாழை ம்ம் இதை கேட்க நல்ல இருக்கு அவ்வ்வளவு தான் இன்னும் ஒரு பகுதி தான் இருக்கு அடுத்து வாழைப்பழம் பற்றி எனக்கு தெரிந்த டிப்ஸ்கள் போடுவேன்

Jaleela said...

ஜெய்லானி நாஸியாவிற்கு அவங்க பிரியாணி சாப்பிட்டு அலுத்து போச்சு அதான் நானும் ஒரு சட்டி அனுப்ப முடிவு பன்ணியாச்சு .

vijis kitchen said...

என்ன ஜலீ சமையல் குறிப்பு வரவே இல்லை. சமைத்து போடுங்கோ.

Jaleela said...

போடலாம் விஜி மெதுவா போடுறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா