Sunday, February 14, 2010

ஹனீப் பிறந்த நாள் துஆ செய்யுங்கள்


பிறந்த நாள் , கல்யாண நாள் எதுவும் கொண்டாடுவதில்லை.ஆனால் ஹனீப் பிறந்தது காதலர் தினத்தில், ஹாஸ்பிட்டலில் எல்லா நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் வேலன்டைன்ஸ் டேவில் ஒரு கியுட் பேபி என்று சொன்னார்கள், நெசமாவே அப்ப தான் காதலர் தினம் என்று இருக்குன்னு எனக்கு தெரியும்
ஹனீப் பிறந்தது 40 நாட்களில் அவங்க சாச்சா வைத்து இருக்கும் போது எடுத்தது கூட பெரிய பையன் ஹகீம் தம்பிக்கு விளையாட்டடு காண்பிக்கிறாராம்ஹனீப் தவழ ஆரம்பிக்கும் போது, இது வரை பிறந்ததிலிருந்து எதற்கும் அழுததில்லை, எழுந்திருக்கும் போதே சிரித்து கொண்டே எழுந்திருப்பான்.
ஆனால் இப்ப இல்லை எதற்கெடுதாலும் ரொம்ப கோபம் வருது, பதின் பருவம் ஆரம்ப்பிக்குது இல்லையா
இது சிங்கப்பூர் கேபில் காரில்,அங்கிருந்து ஊருக்கு போன போது எல்லோரும் ஆசையா தூக்கினால் ஒரே சிரிப்பு, யார் தூக்கினால் குதி குதின்னு குதிப்பான், எல்லோரும் ஹனீப் மாதிரி (அழாமல்) தான் குழந்தை வேண்டும் என்று சொல்வார்கள.
இது ஒரு வயதில் அவனை வைத்திருப்பது எங்க ஹஸ் உடைய நண்பர் ரொம்ப உதவி, தீடீருன்னு ஹாஸ்பிட்டல் போகனும் என்றால் எங்க ஹஸால் வர முடியாது, அவரே வந்து நான் கூட போக தேவையில்லை அவரே கூப்பிட்டு போய் காண்பித்து வந்துடுவார். இப்ப ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டார்.


ஹனிபும், ரஷீதும்.

மம்ஜார் பீச் ஹனீஃப், ஆதிஃப்
பிள்ளைகளுக்கு ஸ்கூலில் கலர் டிரெஸ் போட்டு கொண்டு சாக்லேட் கொடுப்பது என்றால் தனி சந்தோஷம் தானே. ஆகையால், எல்லோருக்கும் சாக்லேட் எடுத்து கொண்டு போகிறார்./
காலையில ஸ்கூலுக்கு பஸில் ஏற்ற கூட நானும் போனேன், ஒரே சிரிப்பு தாங்கல அங்க வந்த பசங்க எல்லாம் ஹனீப் யு ர் பர்த்டே, லேசா தலைய ஆட்டி ம்ம் உடனே கை கொடுத்து நித்தின், அகீல் எல்லாம் விஷ் பண்ணாங்க, அங்கிருந்த அம்மா மார் எல்லாம் பார்த்து பார்த்து சிரித்தார்கள்.

பை முழுவதும் எல்லோருக்கும் சாக்லேட் அதான் பிள்ளைகளுக்கு சந்தோஷம்.
மற்றபடி மதியம் வெரும் தக்காளி ரசம் அப்பளம் போதும் என்று சொல்லி விட்டான்.

ரொம்ப தங்கமான பையன்.
குர் ஆன் 23 வது ஜுஜு இப்ப ஓதிக்கொண்டு இருக்கிறான்.

துஆ செய்யுங்கள்.

38 கருத்துகள்:

டவுசர் பாண்டி said...

ஹனீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் , காதலர் தினத்துல பிறந்ததுக்கு உன்னொரு ஸ்பெசல் வாழ்த்து ,
உங்கள் குடும்பம் நீடூடி நலமுடன் வாழ , வாழ்த்துக்கள்
- அன்புடன் பாண்டி

சிநேகிதி said...

ஹனீப் க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்.
சின்ன குழந்தை போட்டோ ரொம்ப அழகு அக்கா..

SUFFIX said...

தங்கள் அன்பு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இறைவனின் அருள் என்றென்றும் உண்டாவதாக.

செ.சரவணக்குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹனீப்.

சென்ஷி said...

ஹனீஃபிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா said...

ஹனீஃபுக்கு எங்கள் துஆக்கள்.

என் வாப்பாபேரும் ஹனீஃப்தான். சின்னவனுக்கு வைக்கலாம் என்று நினைத்து, பின் நலமாக இருப்பவர்களின் பெயர் வைக்கவேண்டாம் என்று வைக்கவில்லை. வச்சிருந்தா இன்னுமொரு ஒற்றுமை.

நம்ம மூத்த பிள்ளைங்க பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்: ஹகீம் - அகீல்!!

/பை முழுவதும் எல்லோருக்கும் சாக்லேட் அதான் பிள்ளைகளுக்கு சந்தோஷம்.//

ஆமாக்கா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹனீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஹனீபுக்கு என் அன்பும்,வாழ்த்துக்களும் ஜலி.என்ன சிம்பிளான விருந்துடன் முடித்துக்கொண்டீர்கள்?

நாஸியா said...

ஹனீஃப் என்ற பெயருக்கு ரொம்ப நல்ல அர்த்தம் உண்டுதானே... இப்ராஹீம் (அலைஹி வசல்லம்) அவர்களை ஹனீஃப் என்று அழைக்கப்பட்டாங்கன்னு நினைக்கிறேன்.. மாஷா அல்லாஹ்..

செல்ல மகன் ஹனீஃபுக்கு எங்கள் துவாக்கள்..

மாஷா அல்லாஹ், குரான் ஓதுவது ரொம்ப சந்தோஷம்.. அது தானே நமக்கு சொத்து :)

ஜெய்லானி said...

ஹனீப்க்கு இனிய பிறந்த நாள் துவாக்கள்.

kavisiva said...

ஹனீப் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அபுஅஃப்ஸர் said...

வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி ஹனீஃப் வாழ வாழ்த்துக்கள்..

இதுமாதிரி தினங்கள் மறக்கமுடியாதருனம்

R.Gopi said...

ஹனீஃப் அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அவர் வாழ்வில், நோய் நொடியின்றி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நன்கு படித்து எல்லா வளங்களும் பெற்று வளமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

ஜலீலா... பதிவும், படங்களும் மிக்க அருமை....

அன்புத்தோழன் said...

அன்பும் பாசமும் நிறைந்து, அனைத்து நற்பண்புகளும் பெற்று பல்லாண்டு நல்ல புள்ளையா (என்ன மாத்ரி) வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.... ;-) ha ha, ஹனீஃப் பிறந்த நாளையொட்டி உலகின் பெரும்பாலான நாடுகளில் விடுமுறை விட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.... அட நம்புங்கப்பா.....இன்னிக்கி சண்டே.... ஹா ஹா......

asiya omar said...

ஹனீஃபிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நல்ல தங்கமான பையன் - தாயிடமிருந்து கிடைத்த இந்த பட்டமே பெரிய துவா தான்.மொத்தத்தில் அருமையான பிள்ளைக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றென்றும்.

அன்புடன் மலிக்கா said...

ஹனீஃப் எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். அன்புதங்கத்துக்கு என்மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..

எல்லாவளங்கலும் பெற்று இறைவனின் அருள் பெற்று
நலமாய் வாழ இந்த சின்னம்மாவின்
துஆக்களும்..

Jaleela said...

பாண்டி அண்ணத்தே முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பாயிஜா ,ஷபிக்ஸ் உங்கள் இருவரின் துஆக்களுக்கும் மிக்க ச‌ந்தோஷ‌ம்.

சென்ஷி ,செ.சரவணகுமார் உங்கள் இருவரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Jaleela said...

ஹுஸைனாம்மா ஆமாம் இருவருக்கும் நிறைய ஒத்து போகிறது,

பிள்ளைகளுக்கு சாக்லேட் கொண்டுபோய் பிரண்டு மாருக்கு டீச்சருக்கு,பஸ்ஸில் எல்லாக் கொடுப்பதில் அலாதி சந்தோஷ‌ம்.


உங்கள் வாப்பா பெயரும் ஹனிபா அப்ப என்னை எப்போதும் மறக்கமாட்டீங்க இல்லையா?

Jaleela said...

ராஜ்குமார் சார் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.

Jaleela said...

ஸாதிகா அக்கா வாழ்த்துக்கு நன்றீ, ஆமாம் சிம்பிளா முடிச்சாச்சு. அவனுக்கு பிடிச்சது என்ன வோ அது செய்து கொடுத்துட்டேன்.

Jaleela said...

ஜெய்லானி உங்க‌ள் துவாக்க‌ளுக்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.


கவிசிவா மிக்க நன்றி.

//இதுமாதிரி தினங்கள் மறக்கமுடியாதருனம்//

ஆமாம் கண்டிப்பா //மறக்க முடியாத தருனம் தான், வாழ்த்துக்கு மிக்க நன்றி.

Jaleela said...

கோபி உங்கள் அருமையான வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela said...

அன்புத்தோழன் சந்தடி சாக்குல உங்களையும் நல்ல புள்ளையா போட்டுக்கிட்டிங்க... ம்ம்ம்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Chitra said...

Happy Birthday, Haneef!
May the Lord's choicest blessings be with you always!

Jaleela said...

ஆசியா என்னிடம் மட்டும் இல்லை என் தாயிடமிருந்தும் நல்ல பெயர் அவனை மறவாமல் செய்து பேர் வாங்கியுள்ளான். உங்க‌ள் அன்பான‌ துவாக்க‌ளுக்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

Jaleela said...

நாஸியா ஆமாம் அவன் எப்பவோ குர் ஆன் முடிக்க வேண்டியது நிறைய ஆலிம்சா மாறியதால் மறுபடி மறுபடி ஓதுகிறான்.

அவனுக்கு பிறந்த நாளுக்குள் குர் ஆன் முடிக்கனும் என்று ஆனால் முடிக்க முடியலையேன்னு ஒரு வருத்தம்/

Jaleela said...

சின்னம்மா உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பேரா> சந்தோஷம், ஒரு முறை பார்க்கில் வீட்டுக்கு கிளம்ப அவனை கூப்பிடும் போது ஹனீப் என்று கூப்பிட்ட போது அங்கு ஆஹா இந்த பெயரை நீங்க சொல்லும் போது கேட்க எவ்வள்வு நல்ல இருக்கு என்றார்கள்.

சுந்தரா said...

ஹனீஃப் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜலீலா.

சீரும் சிறப்புமாக வாழ இறைவன் அருள்செய்யட்டும்.

(ஹனீஃப் Our own ல படிக்கிறாரா?)

வேலன். said...

ஹனீப்புக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வேலன்.

sarusriraj said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்

Anonymous said...

ஜலீலா அக்கா ஹனீபுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று நலமாக் நீண்ட ஹயாத்தோட வாழ வாழ்த்துக்கள்
by shirin

Jaleela said...

ஹனீஃப் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜலீலா.

சீரும் சிறப்புமாக வாழ இறைவன் அருள்செய்யட்டும்.

(ஹனீஃப் Our own ல படிக்கிறாரா?)
ஆமாம் , சுந்தரா வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி வேலன் சார்

Jaleela said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி சாருஸ்ரீ,

உங்கள் துஆக்களுக்கு மிக்க சந்தோஷம், ஷீரின்

Mrs.Menagasathia said...

ஹனீப்புக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்...

சாச்சா என்றால் யார் ஜலிலாக்கா?

Jaleela said...

மேனகா வாழ்த்தை எப்ப சொன்னாலும் சந்தோஷ்ம்.

சாச்சா என்றால் என் கணவரின் தம்பி

seemangani said...

ஹனீப்புக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..

Kanchana Radhakrishnan said...

ஹனீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா