Saturday, February 27, 2010

ம‌சாலா மிக்ஸ்

மசாலா என்றதும் சமையலுக்கு மசாலா என்று நினைக்க வேண்டாம், எல்லோரும் அஞ்சறை பெட்டி, கொத்து பரோட்டா, டிரெங்கு பெட்டி என்று போடும் போது சரி நாமும் போடுவோமே. இது ஸாதிகா அக்கா ஜலீ நீங்களும் ஒரு கொத்து பரோட்டா போடுங்கள் என்று சொன்னதால் போட்டது. ஆனால் எப்படி தான் எல்லோரும் மொக்கை பதிவு, அஞ்சறை பெட்டி, கவுஜை எல்லாம் போடுகிறீர்களோ. சமையல் குறிப்பு, டிப்ஸ் என்றால் உடனே பத்து நிமிடத்தில் போட்டு விடலாம் போல ஆனால் இந்த பதிவு போடுவது எனக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு

அனுபவ மசாலா மிக்ஸ்.





எச்சரிக்கை

இப்ப துபாயிலும் அங்காங்கே முகமூடி கொள்ளை காரர்கள் ஆட்டம் தாங்க முடியல உஷாராக இருக்கனும்.
இத்தனை வருடமா சாமான் வாங்கி வரும் குராசரி ஷாப்பில், கிராசரியில் கெஷ் கவுட்ண்டரில் இருப்பவரை , இரண்டு வாரம் முன் இரண்டு பளுச்சி கார மூகமூடிகாரார்கள் , கத்தியால் அவரை கையில் கிழித்து விட்டு காசு 5,000 திர்ஹம்ஸ் எடுத்து கொண்டு போய் விட்டார்கள்.

வீட்டில் கூட கேஸ், பேப்பர், லான்ட்ரி,தண்ணீர் கொண்டு வருகிறவர்கள் வந்தால் ரொம்ப உஷாராக பார்த்து கதவை திறக்கனும்.

ஏமாற்றம்.


ஒரு பையன் பேனா விற்கிறென்னு வந்தான் ஒரு பேனா 10 திர்ஹம் என்றார், பேனாவ யார் காசு கொடுத்து வாங்குவார்கள். வேண்டாம் என்றேன். காலையில் இருந்து விற்கிறேன் ஒரு பேனாவும் விற்கல ஒன்று வாங்கி கொள்ளுங்கள். என்றான் பேனா வேண்டாம் என்றேன். உடனே ரொம்ப கெஞ்ச‌ ஆரம்பித்து விட்டான், காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடல அப்படின்னு சொன்னதும் 10 திர்ஹம் எடுத்து கொடுத்தேன். உடனே ஆள் எஸ்கேப், பேனா கொடுக்கல. எல்லாம் திட்டினாங்க லூஸா நீங்க பேனாவாவது வாங்கி கொள்ள வேண்டியது தானே என்று, என் நினைப்பெல்லாம் இவ்வளவு சின்ன பையன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கானே என்று ஒரு நிமிடம் யோசிப்பதற்குள். அவன் போய் விட்டான்.

க‌டுப்பு

அடுத்து இரண்டு வாரம் கழித்து அதே போல் வேறு ஒருவர் கோட் சூட் போட்டு கொண்டு ஒரு பெட்டியுடன் வந்தார், நேர பெட்டிய தூக்கி கொண்டு நுழைந்தார் நானும் சேல்ஸ் க்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். ஒரு பேனாவை நீட்டி 10 திர்ஹம் என்றார், ஆஹா இப்ப ஏமாற கூடாது உஷாராகிடனும் என்று வேண்டாம் என்றேன்.
இப்ப துபாயில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு பிச்சை எடுக்கிறார்கள் அதை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. விசாரித்தா ஓன்னு அழறார் காசு கேட்டு.
கண்டிப்பா வேண்டாம் என்று சொல்லி போக சொல்லிட்டேன்.
இப்படி பேனாவை தூக்கி கொண்டு குரூப்பா கிளம்பிட்டாங்க போல



ரொம்ப சந்தோஷம்

வருஷ வருஷம் ஷாப்பிங் பெஸ்டிவல் வந்த போக முடியாமல் போய் விடும், இருக்கிற டிராபிக்க நினைத்தாலே போகப்பிடிககது. போன வருடம் போய் விட்டு மாப்பிள்ளை ஊர்வலத்தைவிட மோசமா வண்டி நகர்ந்தது ஆகையால் உள்ளே போகாமல் வீடு திரும்பியாச்சு.

இந்த முறை மாமானார் மாமியார் வந்து இருந்ததால் அவர்களை கூப்பிட்டு போய் காண்பிக்கனும் என்று போனோம்.அவர்களுக்கு நடக்க கஷ்டமாக இருந்ததால், அங்கு உள்ள ரிக்ஷாவில் அவர்களை சாக்கிட்டு எல்லோரும். ஏறி ஒரு ரவுண்டு அடிச்சாச்சு, முன்பு சென்னையில் ரிக்ஷா தான், அதில் போகும் பொது ஊர்வலம் மாதிரி இருக்கும்.




அதுவும் ரொம்ப சுற்றி பார்க்க முடியல, சில நாடுகள் வரை சரி உள்ளேவாவது நுழைந்தோமே என்று ஒரு திருப்தி அங்கு என்ன சுற்றி பார்க்கவா வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவரவர் நாட்டு சாப்பாடு முக்கை துளைத்து கொண்டு இருக்கு.


இந்த அரபி பெண்கள் அபாயா போடுவது துபாய கூட்டி பெருக்க போல எவ எவன் துப்பிவைத்ததெல்லாம் அப்படியே பெருக்கி கொண்டு போகிறார்கள். பெரிய ஷாப்பிங் மாலில் துத்தமாக துடைத்து கொண்டே இருப்பார்கள் அங்க பெருக்குவது ஒகே, இங்க ஷாப்பிங் பெஸ்டிவலில் ஐய்யோ பார்க்க சகிக்கல, கொஞ்சம் சரியான அளவில் தைத்து போடலாம். அவர்கள் உயரத்தை விட 5" அதிகமாக பெருக்கி கொண்டு போகுது.


எரிச்சல்

முதல் எரிச்சல் டெலிபோன் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிரில் உள்ளவரின் சைகை சரியான எரிச்சலை அடையவைக்கும்.
அதே போல் யார் மேல கோபம் இருந்தா என்ன எதிர் முனையில் பேசிக்கொண்டு இருப்பவர்கள். காது ஜவ்வு கிழியும் அளவிற்கு போன பட்டாருன்னு வைப்பது செம்ம எரிச்சல்.



ஆச்சரியம்

என் பையன் உண்மை பேசுவதில் காந்திஜி வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்லலாம். என்னதான் காந்திய போல உண்மை பேசினாலும், சென்னையில் கம்பியுட்டரில் உட்காரும் போது ஒரு பிளெயின் கிளாஸ் போட்டு கொள்ள சொன்னார் டாக்டர் அங்கு போய் காந்திஜி போட்டரே அதே மாதிரி பிரேம் இருக்கான்னு கேட்கிறான். டேய் ஏன் அவர் போட்டமாதிரி கேட்கிற எல்லாம் கிண்டல் பண்ண போறாங்க என்றேன், யார் கிண்டல் பண்ணாலும் எனக்கு கவலை இல்லை என்றான். அதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பயம்
என் கணவரின் தங்கை விசிட்டில் வந்திருந்த போது, தினம் எங்க வீடுக்கு வந்து விட்டு இரவு அவங்க கணவ‌ர் கார்ஸில் வேலை பார்த்தார் வந்ததும் போவாங்க, வர 11 மனிக்கு மேல் ஆகும்,. அப்ப நாங்க‌ வரை எல்லாம் ஒரே அறையில் படுத்து கொண்டு லைட்டும் ஆஃப் பண்ணியாச்சு, எனக்கு சின்ன சத்தம் வந்தாலும் பிடிகாது. காலண்டர் ச‌ரக் சரக் சத்தம் இருட்டில் கண்ணை மூடி கொண்டே எழுந்தேன், லைட்ட போட்டு , பெட்டுகு கீழ் இருக்கும் மாஸ்கிங் டேப், கத்திரி கோல் எடுத்து கொண்டு பெட்டு மேலே ஏறி நின்றேன், ஹஸ் உடைய தங்கை அண்ணனை தான் தூக்கத்தில் வெட்ட போறேன் என்று கதறி கொண்டு இருகிறார் நான் துக்க கலக்கத்தில் எதையும் கவனிக்கல. பெட்டு மேலே இருக்கும் காலண்டரில் கத்த்ரியால் மாஸ்கிங் டேப்பை வெட்டி ஒட்டிட்டு படுத்துட்டேன், காலையில் எழுந்து என் நாத்தானார் நான் கத்த கத்த நீங்க ஒன்றுமே சொல்லல , நடந்ததை சொனனர், நான் சொன்னேன், முழித்து விட்டால் மறுபடி தூக்கத்தை பிடிப்பது கஷ்டம் அதான் போய் படுத்து விட்டேன் என்றேன். அது இன்னும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.

மனவருத்தம்

சமீப காலமாக பரவி வரும் கேன்சருக்கு ஒரு தீர்வு கிடைக்கனும்.என் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் ஏற்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் நபர்கள், என் சுற்றி உள்ளவர்கள் எங்கு பார்த்தாலும் கேன்சர், இது எனக்கு மிகவும் மனவருத்ததை தருகிறது. அந்த கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

சிரிப்பு நகைச்சுவை

தம்பி கல்யாணத்துக்கு, என் தங்கைகள், மற்றும் தங்கை குழந்தைகளுடன் ஷாப்பிங் போன போது இரண்டு தங்கையின் குழந்தைகள் காக்ரா சோளி எடுத்து கொண்டு ட்ரையல் பார்க்க போனார்கள். ரொம்ப நேரம் ஆகியும் இருவரையும் காணும், வெளியில் கீவில் லைனா நிறைய பெண்களும் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள், நான் போய் கதவை தட்டினேன், இரண்டும் வெளியில் கெக்கே புக்கேன்னு சிரித்து கொண்டேவருகிறார்கள். என்ன ஏன் லேட்டு என்றேன். உள்ளே நாலா பக்கமும் கண்ணாடி அதான் இரண்டு பேரும் ஸ்கூல் டே பங்ஷனில் ஆட இருக்கும் டான்ஸை உள்ளே ஆடி பார்த்துட்டு வந்தோம் என்று சொன்னார்கள்,அடப்பாவிகளா வெளியில் இத்தனை பேர் வெயிட் பண்றாங்க, என்று எல்லாம் சிரித்தோம்.





அதே போல் நான்கு வருடம் முன் கொழுந்தன் கல்யாணம் முடிந்து ஹாலில் எல்லோரும் மாமியார்,மாமனார், நாத்தார்கள் அவர்கள் குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது என் பையன் இப்ப சாச்சாக்கு கல்யாணம் முடிந்து விட்டது அடுத்து யாருக்கு கல்யாணம் நடக்கும் என்றான், மொய்தீன்,அனஸ்,ஜாபில்,சித்திக்,ஹகீம்,... பத்து பேர சொல்லிட்டு அப்பரன் ஹனிப் என்றது வாயெல்லாம் பல்லு தான்,, அப்ப எனக்கு எந்த பொண்ணு என்று கேட்டான், இப்படி பார்த்து விட்டு இருக்கிறதிலேயே சின்னவள் குடுமியுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொன்டு இருந்தாள், இதோ இவ இருக்காளே இவள வேண்டுமான பொண்ணா வைத்து கொள்ளலாம் என்று உடனே அவள் சிரிச்சிக்கிட்டே ஐய்யோ நான் மாட்டே பா இப்பதான் நான் ஸ்கூல் சேர்ந்தேன் எக்ஜாம் இருக்கு மிச்(ஸ்) திட்டுவாங்க என்றாள், அந்த பொண்ணு அன்று சொன்னதை நினைத்து அப்ப‌ அப்ப‌ சிரிப்ப‌துண்டு.

கோப‌ம்

ரொம்ப‌ இன்ரெஸ்டா சமைத்து தாளிக்கும் நேர‌ம் பைய‌ன் ம‌ம்மி , ம‌ம்மி சீக்கிர‌ம் வாங்க‌ நானும் கீழே விழுந்துட்டான் போல‌ அப்ப‌டியே அடுப்ப‌ ஆஃப் ப‌ண்ணி விட்டு ஓடி போய் பார்த்தா, என்னுடைய‌ இர‌ண்டு ட‌வ‌லில் ஒரு ட‌வ‌லை காணும். எங்கே வ‌ச்சீங்க‌...இல்லை இந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா, அந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா என்று கேட்கும் போது வ‌ருமே கோப‌ம்...

23 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா said...

மசாலா சரியான கலவையில் இருக்கு....

ஜெய்லானி said...

நல்ல வேளை தூக்கத்தில நடக்கிர வியாதின்னு சொல்லாம விட்டாங்களே.. நல்ல ஜோக்...

Prathap Kumar S. said...

//அஞ்சறை பெட்டி, கொத்து பரோட்டா, டிரெங்கு பெட்டி என்று போடும் போது சரி நாமும் போடுவோமே.
அனுபவ மசாலா மிக்ஸ். //

ஹஹஹ...ஜலீலாக்கா நீங்களுமா??? நீங்களுமா???
டரங்குபொட்டியைவே தாங்க முடில... இனி மசாலா மிக்ஸ்ஸை வேற தாங்கிக்கனுமா?

Prathap Kumar S. said...

உங்க பையனுக்குள்ள இப்படி ஒரு காந்தியவாதி இருக்பாப்லயா? ஆச்சர்யமா இருக்கு... :))

அரபிப்பெண்கள் அபாயா போடுற மேட்டர் டாப்பு...
அவங்க ஊரை அவங்க சுத்தம் பண்ணிட்டுப்போறாங்க விடுங்க... நம்மூர்ல யாராவது இப்படி பண்ணுவோமா??? :)

ஸாதிகா said...

ஹா..ஹா..ஹா..ஜலி மனதினுள் தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியாச்சு.இனி பல்சுவைகளையும் ஜலியிடம் இருந்து எதிர் பார்க்கலாம்.சில செய்திகள் உங்களிடம் இருந்து ஏற்கனவே அறியப்பட்டு இருந்தாலும் இந்த மசாலாமிக்ஸ் மூலம் எதிர் பார்க்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

ஜலீலா அக்கா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்கும் மிலாடிநபி வாழ்த்துக்கள் , உங்கள் மசாலா மிக்ஸ் உங்கள் சமையலை போல் மணமாக உள்ளது

Asiya Omar said...

மசாலா மிக்ஸ் சூப்பர்.very interesting."இரண்டு வாரம் முன் இரண்டு பளுச்சி கார மூகமூடிகாரார்கள் , கத்தியால் அவரை கையில் கிழித்து விட்டு காசு 5,000 திர்ஹம்ஸ் எடுத்து கொண்டு போய் விட்டார்கள்."ஜலீலா நீங்க அவர் என்று குறிப்பிட்டது யாரை?பக்குன்னு இருக்கு.ஜலீலா எனக்கு ரொம்ப தெஞ்சவங்களை பஸ்ஸில் துபாய் - அபுதாபி போகும் பொழுது நல்ல பேசிகிட்டே பழகிய பின்பு சாக்லேட் கொடுத்து அனைத்தையும் கொள்ளையடித்தது மட்டும் அல்ல 3 நாட்களாக நினைவு இல்லாமல் இருந்தாங்க.அதை திரும்ப நினைக்கவே ரொம்ப மனசு பதைபதைக்குது.

சைவகொத்துப்பரோட்டா said...

கொத்துபரோட்டன்னு படிச்சதும், நம்ம மேட்டரோன்னு நினைச்சேன் :))
மசாலா ருசியாக இருக்கு.

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்குங்க கலவை.

அபுதாபியில் ஒரு நூதனமுறையில் என்னை ஏமாற்றினார்கள்.

கார்ல ஒரு குடும்பத்தோடு வந்தவங்க வழில நிக்கிறவங்க கிட்ட பெட்ரோல் போட காசில்லைன்னு சொல்லி 20திர்ஹம் கேட்டாங்க நான் அதுக்கு மேலேயே கொடுத்தேன் அவங்க போன பின் அங்குள்ள மக்கள் விளிக்கி சொன்னாங்க

Chitra said...

அக்கா, மசாலா மிக்ஸ் பேர் பொருத்தம் சரியா இருக்கு.
அக்கா, உங்கள் வீட்டுக்காரர் கையையா கிழித்து விட்டு ........?
அக்கா, துபாய், அபுதாபியில் இப்படி எல்லாம் கொள்ளை நடக்கும் என்று கேள்விப்பட்டதில்லை. அங்கே சென்று வந்தவர்கள், ஏதோ பொன் விளையும் பூமி மாதிரி சொல்லி கிட்டு இருந்தாங்க.
உங்கள் மகன் மற்றும் குடும்பத்தினர் விஷயங்கள் எல்லாம் நல்ல கலகலப்பு.

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்லா இருக்கு அக்கா உங்க ஜல்லி

மங்குனி அமைச்சர் said...

ஹலோ மேடம் நான் ஒரு சேல்ஸ்மென் , ஒரு பேனா பத்து திர்ஹம் மேடம் , ப்ளீஸ் வாங்கிங்க மேடம் , சாப்டு ரெண்டுநாள் ஆச்சு மேடம்
ம் ம் ம் ம ம் ம் ம் ம்... ((அழுகுறேங்க)

ஹுஸைனம்மா said...

அட ஜலீலாக்கா!! நல்லாருக்கு மசாலா மிக்ஸ்!

நவரசம்னு பேர் வச்சிருக்கலாம், எல்லா உணர்ச்சிகளையும் சொல்லிருக்கீங்க!!

அங்கங்க இந்த மாதிரி கொள்ளை சம்பவங்கள் நடக்குதுன்னு கேக்கும்போது கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது.

ஆமா, இந்த பசங்க நின்ன இடத்துல இருந்தே ம்மா, இங்க வான்னு அலறும்போது கோவமாத்தான் வரும், நான் போமாட்டேன்; எதுவானாலும் கிட்ட வந்து சொல்லுன்னு சொல்லிடுவேன்.

மாமியாரை அபுதாபிக்கும் கூட்டிகிட்டு வாங்க.

//நாஞ்சில் பிரதாப் said...
டரங்குபொட்டியைவே தாங்க முடில... //

ஏன் பிரதாப்பு அந்த ட்ரங்குப் பொட்டிய தாங்கமுடியாம தலையில தூக்கிவச்சுகிட்டு நிக்கிறீங்க?

Prathap Kumar S. said...

//ஏன் பிரதாப்பு அந்த ட்ரங்குப் பொட்டிய தாங்கமுடியாம தலையில தூக்கிவச்சுகிட்டு நிக்கிறீங்க?//

அந்த பொட்டி உங்களோடதா?? அடடா தெரியாம தலைல தூக்கி வச்சுட்டேன்... இறக்கிடறேன்.

ஜலீலாக்கா நீங்களாவது சொல்லிருக்கலாம் அந்தப்பொட்டி யாரோடதுன்னு...

சீமான்கனி said...

அங்கயும் பேனாகரன் அவங்கவேலைய ஆரம்பிச்சுடானுகளா??
மசாலா மிக்ஸ் சூப்பர்...அக்கா அடிக்கடி கலந்து குடுங்க...

Jaleela Kamal said...

நன்றி அமுதா

ஜெய்லானி அட அவஙக் சொல்ல வில்லை என்றாலும் நீங்கள் சொல்லி கொடுத்துடுவீஙக் போல இருக்கே..

நாஞ்சிலாரே நீங்க போடுகிற மொக்கைய நாங்க தாங்கிக்கலையா?

இது மசாலா மிக்ஸ் ரொம்ப ருசியா இருக்கும்

ஆமாம் என் பையன பற்றி பேசனும் என்றால் நிறைய பேசி கொன்டே போகலாம்


ஸாதிகா அக்கா இந்த பதிவே உங்க்ளுக்க்காக தான். ஹா ஹா


சாருஸ்ரீ மசாலா மனமாக இருக்கா நன்றி

Jaleela Kamal said...

ஆசியா நீங்கள் சொல்வதை பார்த்தா பக்குன்னு இருக்கு, இப்ப நானும் அடிக்கடி, அபுதாபி,புஜேராவிற்கு பஸ்ஸில் போகிறேன்.

என் வீட்டுக்காரம் கையை இல்லை, குராசரி ஷாபப்பில் வேலை பார்ப்பவர் கையை கிழித்து விட்டாராம்.

Jaleela Kamal said...

சகோ.ஜமால் அடபாவமே ஊர் விட்டு ஊர் வந்து நீங்களும் ஏமாந்துட்டீஙகளா?

எந்த ஊரிலி இருந்தாலும் உஷாராக இருக்கனும்.

Jaleela Kamal said...

சித்ரா பொன் விளையும் பூமி தான் இப்ப வந்த கிரைஸஸில் அது எல்லாம் மாறிபோச்சு.

Jaleela Kamal said...

சீமான் கனி மசாலா மிக்ஸ் சூப்பரா , மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மாபோன வாரமே மாமியார் மாமனாரை கூப்பிட்டு கொன்டு அபுதாபி வந்து திரும்பியாச்சு

(டிரெங்கு பெட்டி விஷியத்தில் நாஞ்சிலாரே நீங்களாச்சு, ஹுஸைம்மாமாவாச்சி) ஆனால் யாராலும் டிரெங்கு பெட்டிய தல மேலதூக்கி வைக்க முடியாது அது என்னவோ நெசம்...

Jaleela Kamal said...

சைவ கொத்து பரோட்டா வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, முடிந்த போது வாங்க கருத்தை தெரிவிக்கவும்.

Anonymous said...

மசாலா கலவை அருமைக்கா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா