Wednesday, March 3, 2010

பெண்க‌ளே ச‌ந்தோஷ‌ம் உங்க‌ள் கையில்






இந்த‌ ப‌திவு ஸாதிகா அக்காவின் என்றும் இள‌மையை தொட‌ர்ந்து எழுதுகிறேன்.



இப்ப இருக்கிற காலகட்டத்தில் சின்ன வயதிலேயே மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் , டென்ஷன் என்று எல்லோருக்கும் வந்து விடுகிறது.


பெண்கள் மொத்த குடும்பத்தையும் ஓட்டி செல்வதால் தனக்கென எதையுமே செய்து கொள்வதில்லை ஆசைப்பட்ட பொருட்கள் கூட வாங்கிக்கொள்வதில்லை, விரும்பிய உணவு கூட செய்து சாப்பிடுவதில்லை.குழந்தைகளுக்கு, கணவருக்கு பிடித்ததை மட்டும் பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். ஆனால் த‌ன்னை க‌வ‌னித்து கொள்வ‌தில்லை.
இப்படி பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு மன அழுத்தம் மிக அதிகமாகிறது.



சின்ன சின்ன விஷியத்துக்கெல்லாம் டென்ஷன். நாளை என்ன சமையல் முதல் நாளே யோசிங்க, மறுநாள் செய்யும் போது உட்கார்ந்து யோசிச்சீங்கன்ன நல்ல இருக்கிற நாலு முடியும் கொட்ட ஆரம்பித்து விடும்.


இப்படி மன அழுத்தம் அதிகாமாவதால் ஒற்றை தலைவலி, முடி கொட்டுதல், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. காலையில் இருந்து மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்து சாப்பாடு கூட சாப்பிட மறந்துவிடுகிறார்கள்.
பார்க்க போனால் ஆண்களை விட பெண்கள் தான் சத்தான ஆகாரம் சாப்பிட்டு உடல் நலத்தை பேணிக்கொள்ளனும்.
ஏன்னென்றால் என்றும் எல்லோருக்காக‌வும் நாளெல்லாம் உழைக்க‌ வேண்டி இருக்கு. குழந்தை பெற்றெடுக்கவும் தெம்பு வேண்டும், பூப்பெய்திய காலத்திலேயே நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்து கொண்டால் குழந்தை பெறும் நேரத்தில் ஓரளவிற்கு தெம்பு கிடைக்கும். இல்லை என்றால் கர்பகாலத்திலேயே ஹிமோகுளோபின் குறைபாடு, சரியா சாப்பிடாமல் லோ பீபி போன்றவை ஏற்படுகிறது
அந்த‌ கால‌த்தில் ஆண் குழ‌ந்தை என்றால் கூட‌ இர‌ண்டு முட்டைய‌ சேர்ர்த்து வைத்து ஊட்டுவ‌து, அதே பெண் என்றால் அடுப‌டியில் கிட‌ப்ப‌வ‌ள் தானே என்று மீதி மிஞ்சிய‌தை போடுவ‌து.


எதற்கும் சலிப்பு வேண்டாம், கோபம், டென்ஷனை கிட்டே நெருங்க விடாதீர்கள், அது உங்கள் முதுமையை படம் போட்டு காட்டும். அதிகமாக கோபப்படுவதால் தான் முகச்சுருக்கம் கூட வருகிறது.



எப்ப பார்த்தாலும் அழுக்கு நைட்டி, எண்ணை வடியும் முகத்துடன் , தலைய சீவாம, தலை சொரஞ்சிக்கிட்டு நின்னா பார்க்கும் கணவருக்கு பேய பார்க்கிற மாதிரி இருக்கும்.

நைட்டி அதான் வசதியா இருக்குன்னு அதோடே காலத்தை கழிக்காதீர்கள், நைட்டியிலும் பல விதம் பல டிசைன்,பளிச்சிடும் வண்ணங்கள் இருக்கு. குறைந்த விலையில் இருக்கேன்னு வாங்கி 10 வாங்கி போடீங்கன்னா அது இரண்டு முறை துவைத்ததும் ஈன்ன்னு பல்லை இளித்து கொண்டு நிற்கும்.அதற்கு நல்லதா நாலு வாங்கி போட்டுக்கொள்ளலாம்.










மேக்கப் போட்டாதான் அழகு என்று கிடையாது, அழகாக தலைய வாரி, முகம் கழுவி நீட்டா டிரெஸ் பண்ணாலே இயற்கை அழகு தான்.


உங்களுக்கென்று வாரத்தில் அல்லது பத்து நாளைக்கு ஒரு நாள் எடுத்து கொள்ளுங்கள்.
நல்ல பிடிச்ச டிரெஸ் போட்டு கொள்ளுங்கள், டிரெஸ்ஸுக்கு மேட்சா வளையல், மணி செட்டுகள் வாங்கி வைத்து கொள்ளுங்கள், முத்து மாலை இது போல் அணியும் போது மனது ரொம்பவே லேசாக இருக்கும்.பிடித்த சமையல் செய்து சாப்பிடுங்கள், யாரைபற்றியும் கவலை வேண்டாம்,உங்களுக்கு பிடித்தவர்களோடு (வேற யார் கூடவும் இல்லை)பிடித்த‌ இடங்களுக்கு கணவர் (அ) குழந்தைகளுடன் செல்லுங்கள். இல்லை பிடித்த தோழி வீட்டுக்கு கூட சென்று வரலாம். தேவையானதை வாங்க‌ ஷாப்பிங் சென்று வரலாம்.
அடுத்த நாளிலிருந்து எபப்வும் போல் வேலை பாருங்கள். அடுத்த பத்தாவது நாள் வரும் வரை.இப்படி செய்தால் கண்டிப்பாக நல்லதெளிவும் புத்துணர்வும் வரும்.





சும்மா நாள் முழுவதும் போடுகிற டீவி சீரியல பார்த்து கண்ணீர் வடிக்காதீங்க,
அத உட்கார்ந்து பார்த்து பார்த்தே வீணா பெருத்து போவீர்கள். அதற்கு பிறகு ஜிம்முக்கு போய் பிரயோஜனம் இல்லை/

இப்ப எவ்வளவோ நகைச்சுவை போடுகிறார்கள். அதற்கென தனி சேனலே வந்து விட்டது (ஹிந்தி, ஆங்கிலம், தமிழ்) என்று விருப்பமான மொழியில் அவரவர் நகைச்சுவைகளை பார்த்து மனதை ரிலாகஸாக வைத்து கொள்ளலாம்.

சீரியல் செலக்டடாக ஏதாவது ஒன்று பார்க்கலாம்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்



குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் வரை நல்ல இன்ரெஸ்ட்டாக காலம் கழியும் அதே பிள்ளைகள் பத்தாம் வகுப்பை நெருங்கும் போது அம்மாமார்களுக்கு அவர்களின் எதிர் காலத்தைப்பற்றி டென்ஷன் ஆரம்பிக்கும்.பையனா இருந்தா அவன் நல்ல படித்து , நல்ல உத்தியோகத்தில் உட்காரனுமே என்று, பெண்ணாக இருந்தால் நல்ல இடத்தில் கட்டி கொடுக்கனுமே என்றும் இப்படி பல எண்ணங்களை போட்டு மண்டையில் குழப்புவதால் தான் அவர்களுக்கு கோபம் , டென்ஷன் அதிகமாகிறது.



சில பேர் எனக்கு தான் இப்படி எல்லாம் நடக்குனமா என்று தன்னை தானே நொந்து கொள்வார்கள், இப்படி சின்ன பிரச்சனை மேலும் மேலும் நினைத்து கொண்டு இருந்தால் தூக்கம் போய் மன அழுத்தம் தான் ஏற்படும்.
டென்ஷன் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது. எல்லோருக்கும் ஓவ்வொரு வகையில் பிரச்சனைகள் இருக்கதான் செய்கிறது.



இந்த டென்ஷனை குறைக்க காலையில் பத்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்யலாம்.
ஏதாவது உங்களுக்கு பிடித்த கை தொழிலை கற்றுகொள்ளலாம்.
மெகந்தி டிசைன் போட கற்று கொள்ளலாம்.








உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்று கொடுக்கலாம்.

உங்கள் வீட்டு சமையலறையில் நீங்கள் தான் ராணி இதை விட சந்தோஷம் வேர என்ன இருக்கு.


மனதை போட்டு குழப்பாமல் குழந்தைகளை நல் வழி படுத்தி,பிராத்தனைகளில் ஈடுபடுத்தலாம், நாமும் மனதை தெளிபடுத்தி கொள்ளலாம்,

இஸ்லாமியர்கள் மனதிற்குள் திக்ரு செய்யலாம். இது ம‌ன‌தை தெளிவ‌டைய‌ செய்யும்.மற்ற மதத்தினர்களும் அவரவர் ஸ்லோகஙகளை ஜபிக்கலாம்.






பெண்களே சந்தோஷம் உங்கள் கையில் தான் இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்து செயல் பட்டால் நல்ல மகிழ்சியுடன் இருக்கலாம்


டென்ஷனா? யார்மேலாவது கோபமா?இது முன்பு போட்ட பதிவு இதையும் சென்று பார்க்கவும்




32 கருத்துகள்:

Chitra said...

அக்கா, எல்லா விஷயங்களிலேயும் கலக்குறீங்க........!!!

ஸாதிகா said...

ஆஹா விலாவாரியா டிப்ஸ் கொடுத்து விட்டீர்கள் ஜலி.இது இன்னும் யூஸ்ஃபுல் ஆக இருக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

எல்லோருக்கு உபயோகமாக இருக்கும் இந்த பதிவு

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா, எங்களுக்கும் ஏதாவது இது போல் நல்ல விஷயங்களை ஒரு பதிவு போடுங்களேன் அத பார்த்தாவது ஆண்கள் திருந்தட்டும்.

Anonymous said...

enakku romba pdiichirukku indha post..ippa ellaaraiyum vaattum vishayam tension..padicha pin naane ushaaraagittennaa paarungalen

Regards,

thalika

Jaleela Kamal said...

சசிகுமார் ஆண்களுக்கு நிறைய போடலாம் ஆனால் யாரும் மொறத்த எடுத்து வந்து மொத்த மாட்டீங்களே

ஜெய்லானி said...

நைட்டி டிப்ஸ் ....ஹீ..ஹீ.


//பெண்கள் மொத்த குடும்பத்தையும் ஓட்டி செல்வதால்//

இப்படி சொன்னா ஸாதிகா கோவிச்சிகுவாங்க ..( என்ன ஆடு , மாடா .அதில் என்,அவர்கள் கமெண்ட் பாருங்க )

ஜெய்லானி said...

// Jaleela said...சசிகுமார் ஆண்களுக்கு நிறைய போடலாம் ஆனால் யாரும் மொறத்த எடுத்து வந்து மொத்த மாட்டீங்களே//

அப்ப மச்சான் பாவம் !! வீட்டில் ,மொரத்தில் கல் , மண், சலிக்கிரது அவரா !! ஆழ்ந்த அனுதாபங்கள்.அவருக்கு!!!

Anonymous said...

எதுக்கு இவ்வளவு எழுதினிங்க பேசாம போய் "மங்குனி அமைசர் " ப்ளாக் -அ பாக்க சொல்ல வேடியதுதானே.
டென்சன் எல்லாம் காணாம போய்டும்.

இப்படிக்கு
நான் மங்குனி அமைசர் இல்லை (நேசம்மா அட நம்புக்கப்பா )

Chitra said...

Unmai, unmai.. its becoming a tensionful world nowadays... will try to follow this :) useful post !!

அப்துல்மாலிக் said...

இது பெண்கள் பக்கம், நமக்கு வேலையில்லை, இருந்தாலும் இதை என் மனைவிக்கு எடுத்துச்செல்வேன்

Jaleela Kamal said...

சித்ரா நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஸாதிகா அக்கா மனதில் பட்டதை எழுதினேன்.

நன்றி சாருஸ்ரீ

Jaleela Kamal said...

தளி வாங்க வாங்க வாங்க
இத படிச்சதும் நீங்களே உஷாராகிட்டீங்களா?ரொம்ப சந்தோஷம்


வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானிக்கு குசும்பு ஜாஸ்தியாடுச்சி...

நான் என்ன சொன்னேன் நான் அட்வைஸ் கொடுத்தா ஆண்கள் எல்லாம் சேர்ந்து மொத்த மாட்டீங்களே

Jaleela Kamal said...

ஆமாம் சித்ரா நிறைய பெண்களிடம் பேசும் போது அவர்கள் குறைகளை தெரிந்து வைத்து கொண்டு தான் எனக்கு தெரிந்த டிப்ஸை போடு கிறேன். அவர்களுக்கும் சொல்வது. ரொம்ப சந்தோஷம் படுவார்கள்.

சில பேர் ரொம்ப உஷாரா இருந்தா கூட அப்படியே டிப்ரஷனில் இருப்பவர்கள் ஒன்றும் புரியாது, இப்படி யாராவது சொல்லும் போது உடனே ஒரு புத்துணர்வு வரும்.

இங்கு இதை படிபப்வர்கள் கூட சில பெண்களை பார்க்கும் போது சொல்லலாம் இல்லையா?

Jaleela Kamal said...

அபு அப்ஸர் பெண்கள் பக்கமா இருந்தாலும் நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது தானே/

ரொம்ப நன்றி

Jaleela Kamal said...

//எதுக்கு இவ்வளவு எழுதினிங்க பேசாம போய் "மங்குனி அமைசர் " ப்ளாக் -அ பாக்க சொல்ல வேடியதுதானே.
டென்சன் எல்லாம் காணாம போய்டும்.

இப்படிக்கு
நான் மங்குனி அமைசர் இல்லை (நேசம்மா அட நம்புக்கப்பா )//
ரொம்ப பேருக்கு மங்குனி அமைச்சர் பதிவு தெரியாது.. நான் நம்ப மாட்டேன் இது மங்குனி அமைச்சர் தான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கட்டுரை.. பெண்கள் முன்னேற நல்வழிகள் இவை

வாழ்த்துகள் ஜலீலா.

Prathap Kumar S. said...

நம்ம ஏரியா இல்லன்னாலும் ஒரு அட்டனன்ட்ஸ் போட்டுக்குறேன்...

இந்தப்பதிவு பின்னாடி உதவும் :))

Prathap Kumar S. said...

ஜலீலாக்கா நீங்க ஒரு ஆல்ரவுண்டர்...
அப்படியே எங்களுக்கும் ஏதாச்சும் சொல்றது...

R.Gopi said...

அட....

ஜலீலா எந்த விஷயம் எழுதினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது...

இந்த பதிவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது...

அதுவும் ஜலீலாவின் நகைச்சுவை உணர்வுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

//Jaleela said...
சசிகுமார் ஆண்களுக்கு நிறைய போடலாம் ஆனால் யாரும் மொறத்த எடுத்து வந்து மொத்த மாட்டீங்களே//

ஹா...ஹா...ஹா...

அதெல்லாம் மாட்டோம்... எழுதுங்க.

வாழ்த்துக்கள் ஜலீலா...

அன்புடன் மலிக்கா said...

நல்ல நல்லவிசயமாத்தான் இருக்கு
டிப்ஸ்ராணின்னு சொல்லிடலாம்..

வந்து பாருங்க இத
http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

நல்லது நாஞ்சிலாரே

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, சில மனதில் உள்ள கருத்துக்களை சொல்ல தயங்குவார்கள், நான் எங்கு யாரை பார்த்தாலும் மனதில் பட்டதை பட்டுன்னு சொல்லிடுவேன்.
இது வ‌ரை ஆண்க‌ளுக்கு அட்வைஸ் ப‌ண்ணியதில்லை என்னை விட‌ சிறிய‌வ‌ர்க‌ள் அதாவ‌து க‌ல்யாண‌ம் ஆக‌ப்போகிற‌வ‌ர்க‌ளை த‌விர க‌ண்டிப்பாக‌ இனி ம‌ன‌தில் தோன்றுவ‌தை எழுதுகிறேன்.

மங்குனி அமைச்சர் said...

//ரொம்ப பேருக்கு மங்குனி அமைச்சர் பதிவு தெரியாது.. நான் நம்ப மாட்டேன் இது மங்குனி அமைச்சர் தான்.//

வாழ்த்துக்கள் மேடம் ,
மங்குனி அமைசர் என்று மிக சரியாக கண்டுபிடித்ததற்காக உங்களுக்கு துப்பறியும் நிபுணி என்ற பட்டம் மற்றும் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும். துப்பறியும் நிபுணி என்ற பட்டத்தை நானும் ஆயிரம் பொற்காசுகல நம்ம ஜெய்லானி தருவார் .

Jaleela Kamal said...

கோபி நீங்க வந்த சரியா பாயிண்டை பிடித்து எடுத்து சொல்வதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை

Jaleela Kamal said...

மங்குனி அமைச்சரே என் யுகம் சரிதான், நீர் தான் தரனும் பொற்காசுகளை ஏன் ஜெய்லானியை கொடுக்க சொல்லனும்.


அமைச்சரே துப்பறியும் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க மகிழ்சி

Jaleela Kamal said...

//பெண்கள் மொத்த குடும்பத்தையும் ஓட்டி செல்வதால்//

இப்படி சொன்னா ஸாதிகா கோவிச்சிகுவாங்க ..( என்ன ஆடு , மாடா .அதில் என்,அவர்கள் கமெண்ட் பாருங்க )

ஜெய்லானி குடும்பத்தை ஓட்டி பார்க்கிறவர்களுக்கு தான் தெரியும் அதை பற்றி.

Asiya Omar said...

ஜலீலா அசத்திட்டீங்க.நிறைய எழுதறீங்க,தினமும் ஏதாவது வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி.இதெல்லாம் எல்லாராலும் முடியாது.பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

///ஜெய்லானி குடும்பத்தை ஓட்டி பார்க்கிறவர்களுக்கு தான் தெரியும் அதை பற்றி.///
முழுக்க முழுக்க நூறு சதவீத உண்மை. ஆண்களை விட பெண்களுக்கு கஷ்டங்கள் மிக கூடுதல்.( குழந்தை பிறப்பு , அதை வளர்தல், சமையல்>>>)

subha said...

ரொம்ப நல்ல பதிவு ஜலீலா அக்கா. அருமையான டிப்ஸ். மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா