Saturday, March 6, 2010

தியான பீட விளையாட்டு பிள்ளை//எல்லோரும் நித்யானந்தாவை அவரவர் பங்குக்கு வறுத்து எடுத்தாச்சு, இனி என் பங்குக்கு சொல்ல ஒன்றுமில்லை அதான் எனக்கு மெயிலில் வ்ந்தது இதையும் படிங்களே//
நித்யானந்தா சற்று முன் தலைப்பு செய்தி "மெயிலில் வந்த தகவல்"சன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் "தியான பீட விளையாட்டு பிள்ளை" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.


புன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .


வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும் வரவேற்பு பெற்றது.


குப்பென்று பத்திகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் ரஜினி பிரச்சனை பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும்.


அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு " நித்தியின் சித்து விளையாட்டு " ஸ்டான்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும் சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.


தங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.


தங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் "அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு " என இடைவிடாத ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.


அதே போல் ஊர் ஊராய் சென்று படத்தின் ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.


படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.எங்கே படத்தின் காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய கூறுகள் உள்ளது.

படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி


பாராட்டுக்குரியது"தியான பீட விளையாட்டு பிள்ளை" - சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்


15 கருத்துகள்:

ஜெய்லானி said...

நீங்களுமா ????. ஐயோ யாராவது வந்து காப்பாத்துங்களேன்..........
(( சோதனை மேல் சோதனை போதுமடா சாமி , நித்தி மட்டுமெ பதிவு என்றால் தாங்காது பூமி (நெட்))

ஸாதிகா said...

ஆரம்பிசுட்டாங்கையா..இன்னும் முடிந்த பாடில்லை.

Anonymous said...

நல்ல திரை விமர்சனம்...... ஆனாலும் திருட்டு VCD யை ஒழிக்க... பாசத்தலைவர் நடவடிக்கை எடுக்காதது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.... 5 லட்சத்தை தாண்டிய பிரதிகளால் பர்மா பஜாரே கலை கட்டியதாக சூடான செய்தி அறிந்து மக்கள் அலை மோதியதால்.... மேற்கொண்டு பிரதிகள் தயாரிக்க அவகாசம் கேட்டுள்ளனர் கடை உரிமையாளர்கள்.... எப்புடிலாம் சம்பதிக்ராய்ங்கய்யா.... அவ்வ்வ்வவ்...

seemangani said...

பொதுவாய் இந்த ஆள் படத்தை பார்த்தாலே ஓடி போய் விடுவேன் அக்கா புதுசா எழுவிகனு பொறுமையா படிச்சேன் என் நம்பிக்கை வீண்போகவில்லை நல்லா இருக்கு அக்கா...

சைவகொத்துப்பரோட்டா said...

விமர்சனம் ஜூப்பரு :))

அன்புடன் மலிக்கா said...

என்னக்கொடும ஜலீலாக்கா இது

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
நெசமா மெயிலில் வந்துச்சா? இல்ல
வந்ததுன்னு சொல்லி அம்மணியே போட்டுத்தாக்கியா?

மங்குனி அமைச்சர் said...

இதுநாள் சகலமான பொது ப்ளாக்-கர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இனமே யாராவது சாமியாரபத்தி எழுதினா அவுங்க ப்ளாக்கு சைக்கிள் , ஆடோ , டெம்போ , மினி லாரி , லாரி , கன்டைனர் , கப்பல் , பிளைட் எல்லாம் வரும் என்பதை தெரியபடுதிகொல்கிறோம் , (முடியல, ப்ளீஸ், வேணாம் எங்க போனாலும் இத பாத்து காது , மூக்கு , கண்ணு எல்லாத்துலையும் ரத்தம் கொட்டுது )

இப்படிக்கு
இந்த ரெண்டுநாள்ல கொலை வெறிக்கு ஆளானோர் சங்கம்

Jaleela said...

அமைச்சரே என்ன ப்பா அப்படி ஒரு கொலைவெறி , இப்படி சங்கம் அமைத்து ஒரு குரூப்ப்பாஅ திரியீராக்கும்.

Jaleela said...

//நீங்களுமா ????. ஐயோ யாராவது வந்து காப்பாத்துங்களேன்//
ஜெய்லானி உங்களை காப்பாற்றி மங்குனி அமைச்சர் படையுடன் வருவார்

Jaleela said...

ஸாதிகா அக்கா இது முடியாது போல சாமியார் சன் டீவி படத்தயாரிப்புக்கு பிறகு எப்ப இந்த உலகமே வேண்டான்னு காசி ராமேஷுவரத்தில் போய் உயிரை துறந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை//

Jaleela said...

அனானி வருகைக்கு மிக்க நன்றி, என்ன பர்மா பஜாரே கட்டியதா அப்ப ரெம்ப ப்பேமஸு தான்....

Jaleela said...

சீமான் கனி நான் எழுத திரைகதை வசனத்தை, அது மெயிலில் வந்தது..

Jaleela said...

சைவ கொத்து பரோட்டா ரொம்ப தாங்குஸுக்கோ

Jaleela said...

மலிக்கா இருந்தாலும் இருக்கலாம்..

seemangani said...

நீங்கள் பகிந்ததை சொன்னேன் அக்கா...பகிர்ந்தமைக்கு நன்றி...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா