Tuesday, March 16, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள்(தொடர் தொடருதுங்கோ)



இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.


தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.ஆனால் கூலி வேலை செய்பவர்களை பற்றி சில பேர் தான் போட்டுள்ளார்கள். அவ‌ர்க‌ளுடைய‌ உழைப்பும் எல்லோருக்கும் தெரிய‌னும். அதான் இப்ப‌டி அவ‌ர்க‌ளை ப‌ற்றி போட்டுள்ளேன்


நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...







1.லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி என்ன குரல் வளம்.இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.






2. விமான பணி பெண்கள் என்ன ஒரு கனிவுடன் இன்முகத்துடன் சேவை செய்கிறார்கள். அவர்கள் சீருடையே ஒரு தனி அழகு தான்.









3.செவிலியர்கள், இவர்களுக்கு ரொம்பவே பொறுமை அதிகம், அதிலும் இந்த பிலிப்பைனி நர்ஸுகள் எல்லோரும் ஒரே சைஸ், என்ன ஒரு இனிமையான பேச்சு, அவர்களுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை, எரிச்சல் படாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே சூப்பர்.
அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் ரங்கமணிகளை... ஹி ஹி









4.வீடு கட்டும் போது கட்டுமானத்தில் முக்கியமாக சித்தாள் கண்டிப்பாக உண்டு. இந்தியாவில் எல்லா இடங்களில் சித்தாள்களை வைத்து தான் வேலை நடக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட படிப்பறிவில்லாத நிறைய பெண்களை இந்த வேலையில் பார்க்கலாம்.அதே போல் தமிழ் சினிமாவிலும் (ரஜினி,சத்யராஜ்,தியாகரஜன்) எல்லோருக்கும் ஒரு பிளாஷ் பேக் கதை ஓடும் பார்த்தா அம்மா ஒரு சித்தாளாக தான் இருப்பாள்.





5.இந்திரா காந்தி

இந்திரா காந்தி, சோனியா காந்தி எல்லோரும் இவர்களை பற்றி சொல்லி இருந்தாலும், எனக்கும் இவர்களை ரொம்ப பிடிக்கும்.
இந்திரா காந்தி பாரதத்தின் முதல் பெண் பிரதமர்.இவர் நடை, உடை, பாவானை பேச்சு திறன் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கும்.

சமீபத்தில் அலகாபாத்தில் உள்ளா ஆனந்த பவன் அங்கு சென்ற போது அவர்கள் சிறு வயது போட்டோக்கள், கல்யாண போட்டோக்கள், மற்றும் பல போட்டோக்கள் பார்த்தேன், அனைத்தும் அவ்வளவு அற்புதம்






6. சோனியா காந்தி
சோனியா காந்தி ஒரு இத்தாலிய பெண்மணி நம் நாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்து கொண்டு சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் அங்ரேஜி என்று சிலர் ஏளனப்படுத்திய போது இரவு பகல் பாராது ஹிந்தி மொழியை விரைவில் கற்று கொண்டவர்.







7.பெண் ஆசிரியைகள் நிறைய பேருக்கு வீட்டில் இல்லத்தரசிகளுக்கு இரண்டு முன்று குழந்தைகளை சாமாளிப்பது எவ்வளவோ கழ்டமாக இருக்கு. எப்படாப்பா 3 வயதாகும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒரு வகுப்பில் 35 பிள்ளைகள வைத்து அதுவும் கே.ஜி யிலிருந்து 3ஆம் வகுப்பு வரை சமாளிப்பது மிக கடினமே. அப்படி அவர்கள் கற்றுக்கொடுத்து , இருப்பதிலேயே டீச்சர் வேலையில் தான் வேலைகளும் மிக அதிகம். சாட், புராஜெக்ட் என்று இன்னும் பல.








8.ஔவையார் , ஔவையின் ஆத்திசூடியை யாராலும் மறக்க முடியாது.
அதே போல் நெல்லிக்க‌னியும் ஔவையால் தான் பிர‌ப‌லமான‌து.
(அறம் செய விரும்பு, ஐயம் இட்டு உண், ஓதுவது ஒழியேல் இளமையில் கல் , இலவம் பஞ்சில் துயில்,வைகறைத் துயில் எழு, ஊருடன் கூடி வாழ். )








9..வீடு வீடாக பத்து பாத்திரம் தேய்க்கும்(முனிமா, ராக்கமா) பெண்கள் சோம்பல் சடவில்லாமல். காலை 6 மணியிலிருந்து இரவு 8 வரை டைம் மேனேஜ்மென்டோடு வேலை உழைத்து காசு கொண்டு வந்து என்ன புரயொஜனம் அப்படி கழ்டப்பட்டு சம்பாத்தித்து கொண்டு வந்தால் அவர்களுடைய ரிக் ஷா, மூட்டை தூக்கும் ரங்கமணிகள் சாராய கடைக்கே சரியாபோகும்.அடி உதையும் வாங்கி கொண்டு வ‌ந்து வேலை பார்ப்பார்க‌ள். (ப‌ட‌த்தில் உள்ள‌து காஸ்லி வேலைக்காரி ஹி ஹி)











10.பெண் டெயிலர்கள் ஊர் ஊராக ஏற்றுமதியாகும் பல வகையான துணிகளை தைக்கின்றனர். மிக கடின உழைப்பு. இதில் பணி புரியும் நிறைய பெண்களும் ஆதவற்றவர்கள். அவர்கள் சொந்த உழைப்பைக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.





மலிக்கா சொல்வது போல் நமக்கு நம்மை தான் முதலில் பிடிக்கனும். எனக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது

நட்புடன் ஜமால் (கற்போம் வாருங்கள்)
மேனகா சத்யா
சசிகுமார் (வந்தேமாதரம்)
தோழி விஜி





முதல் போட்டோவில் உள்ள உஷா உதுப் இந்தியாவின் பாப் பாடகி, எல்லா மொழிகளிலும் கலக்கலான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதினொன்றாவதாக அவரையும் சொல்லி கொள்கிறேன், நிபந்தனைய மீறிட்டேனே...

27 கருத்துகள்:

சசிகுமார் said...

அய்யயோ,அய்யயோ எனக்கு சந்தோஷம் தாங்க முடியலைங்க. எகிறி எகிறி குதிக்கலாம் போல உள்ளது. என்ன பண்ண என்னையும் நம்ம ஜலீலா அக்கா பதிவு எழுத கூப்பிட்டிருக்காங்க ஒரே சந்தோஷம், அக்கா மிக்க நன்றி எனக்கு வேற என்ன சொல்வது என்றே தெரியவில்லை

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு பிடித்த 11 - ரைட்டு.......ஆமா, கடைசியில் ஏன் இவ்ளோ கேப்பு :))

ஜெய்லானி said...

//அதிலும் இந்த பிலிப்பைனி நர்ஸுகள் எல்லோரும் ஒரே சைஸ், என்ன ஒரு இனிமையான பேச்சு,//

இந்த பிலிபைனி மேட்டர் பிரதாப்புக்கு எழுத மறந்து போச்சா.ச்சொ..ச்சொ.

//அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் //

எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க ,நீங்க டாக்டரா ???

ஜெய்லானி said...

மொத்ததுல நல்லா இருக்கு (சோனியா .கமெண்ட் கொஞ்ஜம் கம்மி )

ஹுஸைனம்மா said...

ஐ, ஜலீலாக்கா, நான் உங்கள கிட்டத்தட்ட உஷா உதுப் போலத்தான் கற்பனை செஞ்சு வச்சிருக்கேன்!! அவங்களப்போலவே ஒரு ஃப்ளூயன்ஸி, கலகலப்பு உங்ககிட்ட உண்டு; உஷாவைப் பாத்தாலே ஒரு சந்தோஷம் நம்மகிட்டயும் வந்துடும்; அதேபோலத்தான் உங்க ப்ளாக்கும், பின்னூஸும்.

ஸாதிகா said...

///ஐ, ஜலீலாக்கா, நான் உங்கள கிட்டத்தட்ட உஷா உதுப் போலத்தான் கற்பனை செஞ்சு வச்சிருக்கேன்/// என்ன கொடுமைடா...!அப்ப அதிரடி ஜலிலாவா!!!!!!!!!!!!!!

நட்புடன் ஜமால் said...

இந்த தொடர் நிறையவே அலச வச்சிருக்கு ...

நானுமா... நன்றி.

காஞ்சி முரளி said...

பிடித்த 10 பேர்....
இந்திரா காந்தி... நெ.1 தேர்வு....
யார்யாரையோ தைரியமானவர் என்று போட்டார்கள்....
ஆனால் "நேர்கொண்ட பார்வை... துணிவு..." போன்ற பாரதியின் கனவுப் பெண்மணியாக இருந்தவர். அதோடு இந்திய திருநாட்டை தலைநிமிரச் செய்தவர்.... இவர் சரியான தேர்வு...
அடுத்து...
பெண் கூலித்தொழிலாளிகள் சூபெர்ப் தேர்வு...
சோனியாவும் சரியானத் தேர்வே......
ஆக....
பத்து பெண்மணிகளும் கண்மணிகளே......

வாழ்த்துக்கள்...

நட்புடன்.....
காஞ்சி முரளி..........

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரைட்டு,,....

//கடைசியில் ஏன் இவ்ளோ கேப்பு //????

Jaleela Kamal said...

ரொம்ப கேப்பாக வருது என்ன செய்வது என்று தெரியல இதோடு பத்து முறை சரி செய்தாச்சு.

Jaleela Kamal said...

சசிகுமார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,


சைவ கொத்து பரோட்டா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,
க‌டைசியா சொன்ன‌து தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கா?


கேப்பை என்ன‌ செய்வ‌துன்னு தெரிய‌ல‌/


ஜெய்லானி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. பிராதாப் ரொம்ப ஃபீல் பண்றார் ஆகையால் போடல.உங்களுக்கு பிடித்த பத்தில் என்னையும் சொன்னது ரொம்ப சந்தோஷம். சோனியா, இந்திரா காந்தி எல்லாம் எல்லோரும் போட்ட பதிவு தானே... பத்து பெண்கள் தானே அதான் அவ்வளவா எழுதல‌

//உஷா உதுப் போலத்தான் கற்பனை செஞ்சு வச்சிருக்கேன்!! அவங்களப்போலவே ஒரு ஃப்ளூயன்ஸி, கலகலப்பு உங்ககிட்ட உண்டு//

ஹா ஹா இன்னும் கொஞ்ச நாளில் அப்படி ஆகிடுவேன்னு நினைக்கிறேன்.



ஸாதிகா அக்கா அதிர‌டி ஜ‌லீலா ஆனாலும் ஆவேன்.

இந்த தொடர் நிறையவே அலச வச்சிருக்கு ச‌கோ.ஜ‌மால் அதென்ன‌வோ ச‌ரிதான்/

Jaleela Kamal said...

காஞ்சி முரளி வாங்க உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி + ச‌ந்தோஷ‌ம்.

Jaleela Kamal said...

போனி பேஸ் மிக்க நன்றி , கேப்பை என்னால் ஒன்றும் பண்ண முடியல‌

Menaga Sathia said...

உங்கள் தேர்வு அனைத்தும் சூப்பர்ர் அக்கா!! என்னையும் அழைத்ததற்க்கு நன்றியக்கா.விரைவில் தொடர்கிறேன்.

Prathap Kumar S. said...

ஜலீலாக்கா முதல்ல பதிவை எடிட்பண்ணி கீழே உள்ள காலி இடத்தை எடுத்துவிடுங்க...பதிவு ரொம்ப மேல போயிருச்சு,,

Prathap Kumar S. said...

பின்னணிபாடகர்களின் பெயர் படத்தில் டைட்டில் கார்டில் போடனும்னு சொல்லி அதைஅறிமுகப்படுத்தியது லதா மங்கேஷ்கர்தான்.

ஒவ்வைபாட்டியெல்லாம் சொல்லிருக்கீங்களே...புல்லரிக்குது...

அது ஏன் பிலிப்பினோ பேச்சை எடுத்தா எல்லாருக்கும் என் ஞாபகம் வர்து... ஜெய்லானிக்கு ஏன் இந்த கொலைவெறி...????

Vijiskitchencreations said...

ஜலீ உங்க செலக்‌ஷன் எல்லாமே சூப்பர். என்னையும் அழைத்தற்க்கு மிக்க நன்றி. நான் கூடிய விரைவில் போடுகிறேன். ஆனல் ஏன் இந்த இடைவெளி என்று புரியாமல் பேஜ் டவுன் வரை பார்த்தேன் சரியா வரவே இல்லை.
நன்றி ஜலீ விரவில் போடுகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

அனைத்து பெண்மணிகளின் அறிமுகங்களும் சூப்பரக்கா சூப்பர்..

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் தேர்வு அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பெண்மணிகளை தேர்வு செய்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் எனக்கும் பிடித்தவர்கள்.

சீமான்கனி said...

அழகான பகிர்வு அக்கா...நாம் அன்றாடம் பார்க்கும் மங்கையரையும் வரிசையில் சேர்த்து கொண்டதற்கு உங்களுக்கு பெரிய பாராட்டுகள்...

R.Gopi said...

நாஞ்சில் பிரதாப் அவர்களின் பிரதாபங்களை (பிலிப்பைன்ஸ் பெண்கள்) வெளிக்கொணர்ந்த ஜெய்லானிக்கு ஒரு “ஜே”...

ஜலீலா அவர்களே... இந்த வரிசை சற்றும் எதிர்பாராத ஒன்று...

எல்லோரும் பிரபலங்களை சுற்றியே வந்த போது, நீங்கள் சித்தாள், நர்ஸ் போன்றோரையும் சுற்றி வந்தது அழகு..

வாழ்த்துக்கள் மேடம்...

Kanchana Radhakrishnan said...

தேர்வு அருமை.

பித்தனின் வாக்கு said...

// ஐ, ஜலீலாக்கா, நான் உங்கள கிட்டத்தட்ட உஷா உதுப் போலத்தான் கற்பனை செஞ்சு வச்சிருக்கேன் //

அது மாதிரியே குண்டா, மைக்குப் பதிலா கரண்டியேட நிண்ணா... அய்யே ஜலிக்க்காஆஆஆஆ,,, நான் கொயந்த பையன் பயந்துருவேன். வேண்டாமடா சாமி (மனசாட்சி : டேய் பித்தா அடக்கி வாசி--- அப்புறம் பிரியானி பிரியா கிடைக்காது)

// கேப்பை என்ன‌ செய்வ‌துன்னு தெரிய‌ல‌/ //

அய்ய இது கூட தெரியாதா ? டுப்பாக்கில போட்டு வெடிச்சுருங்க. தீவாளி கேப்பை நாங்க அப்படித்தான் வெடிப்பேம்.

// அதிர‌டி ஜ‌லீலா ஆனாலும் ஆவேன். //

எப்படி பிரியானி சட்டி பறக்குமா?

//அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் //

இதைப்பத்தி என்னமே சொல்லனும் என்று நினைத்தேன். அட ஆமாங்க.

மறந்துட்டேன்.

எந்த ஆசுப்பத்திரிங்க. எனக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை ஹி ஹி ஹி.

நல்ல பதிவு ஜலில்லா... தாராபுரத்தார் மாதிரியே நீங்களும் உழைக்கும் பெண்கள் அனைவரையும் ஞாபகம் வைத்து இருக்கின்றீர்கள். நம்ம சமந்தா கூட பாடகிதாங்க... நன்றி.

kavisiva said...

ஜலீலாக்கா தேர்வுகள் அருமை.

Thenammai Lakshmanan said...

நர்ஸ் சித்தாள் வேலைக்காரின்னு வித்யாசமா சொல்லி அசத்திட்டீங்க ஜலீலா

SUFFIX said...

படங்களுடன் நல்லா அலசி ஆராய்ஞ்சு எழுதியிருக்கீங்க, பத்தோடு பதினொன்னும்சூப்பர்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா