Tuesday, March 30, 2010

வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?தெரியலையா?அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை படைச்சே?எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்


தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!


டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!


ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்!
பீட் ரூட்ல என்ன போகும்?


தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம்
பெல்க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ


பரவாயில்லை என்று!!


அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க!
அப்ப ஒரு டிராபிக் போலீஸ்
கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா
"யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று
கேட்டான். இது எப்படி இருக்கு?டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா?


----- பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற
மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்,
உங்க மொபைல்'ல வரும் பொது
"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...


எல்லாரும் மொக்க, கவுஜ ந்னு போடுறாங்க மொக்கை பதிவு ந்னா என்னா,கவுஜ நா என்னா அது எனக்கு புரியவே இல்ல‌ அத நம்ம மொக்க பதிவா,(கவிதையா) போடும் நாஞ்சிலார் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்கி, முஸ்கி (இதென்ன அமைச்சர் மாதிரிவருது):

மெயிலில் வ‌ந்த‌ மொக்கை.

63 கருத்துகள்:

kavisiva said...

உங்க ஊர்ல எல்லாம் வெயில் நல்லா போட்டுத் தாக்குதுன்னு மட்டும் புரியுது.
யூ டூ ஜலீலாக்கா!

asiya omar said...

ஜலீலா நாளைக்கு மகளுக்கு எக்ஸாம்,நாம ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா?எல்லாம் ரசிக்கும்படியிருந்தது.

அபுஅஃப்ஸர் said...

ரொம்பவே சிரிச்சிட்டேன்... அப்போ லூசுனு சொல்லுவாங்களோ

கீபோர்டை தட்டுனா திரையிலே எழுத்து வரும்
திரையிலே எழுத்தை தட்டுனா கீபோர்டு வருமா???/ ஆஆஆவ்

நாஞ்சில் பிரதாப் said...

யக்கோவ் ஜுப்பரு... எப்ப இருந்து இப்படியெல்லாம்...?என்னோட கவுஜைகளை படிச்சதோட விளைவுக்ள்னு நினைக்கிறேன். கரண்டியையும், பிரியாணி சட்டியையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு அப்பப்ப இதைமாதிரி போடுங்க... நல்லாருக்கு...

// மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! //

ஜலீலாக்கா... இவங்களோட அட்ரஸ் இருக்கா?? :))

சைவகொத்துப்பரோட்டா said...

ஸ்.ஸ்......ஸ்........
முடியலை..........:))

அன்புத்தோழன் said...

இத எல்லாத்தையும் எங்கயோ படிச்ச மாதுறியே இருக்கே.... இருங்க யோசுச்சு சொல்றேன்.... ஆனா என்னதான் எல்லாத்தையும் ஏற்கனவே படிச்சிருந்தாலும் காமெடி என்பது மறுபடி மறுபடி ரசிக்க வேண்டிய விஷயம் தான்.... நல்லாருந்துச்சு....

Mokkach chaami said...

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_30.html

yakka, why mokkai same mokkai?
:)))))))))))

மின்மினி said...

///எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.


தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!.///

ஜலீலா அக்கா அருமையாக உள்ளது..,

எல்லாத் தகவல்களும் அருமை.., தெரிந்து கொள்ளவேண்டியவை.

அக்பர் said...

எத்தனை பேரு கிலம்பியிருக்கீங்க. :)

கலக்கல். சிரிச்சு முடியலை.

(ஏற்கனவே வேறொரு இடுகையில் படித்த ஞாபகம் சரிபார்க்கவும்)

அண்ணாமலையான் said...

கலக்குங்க

Chitra said...

அக்காவும் மொக்கைக்கு வந்துட்டாங்களா? எங்க புளப்பு என்ன ஆவுறது? அக்கா........!!!! செம ஜோக்ஸ்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்பவே ரிலாக்ஸ் பண்ணலாம் அருமையான தக‌வல்கள்..

ஸ்ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே! முடியல..

ஷாகுல் said...

ஸ்ஸப்பா...........

அன்புடன் மலிக்கா said...

தாங்கலப்பா தாங்கல எனக்கும் மெயில் வந்தது இது. ஹா ஹா

seemangani said...

ஜலி அக்கா...அஆஹ்ஹஹ்ஹ்கா...
டாப் டக்கர்ர்ர்...
நான் சிரிச்சத பார்த்து ''அவனா நீ...''னு ஒருத்தன் கேட்டுட்டே போய்ட்டான்...

Vijay Ramaswamy said...

தங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு... வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

மகாகவி பாரதி + பூக்காரி , ஜோக்கில நெம்பர் 1. நினைக்கும்போதே சிரிப்பு கப...கப... வருது. ஹா....ஹா..

athira said...

ஜலீலாக்கா... சூப்பரா... படையல்போட்டு, இப்படிச் சிரிக்க வைத்திட்டீங்கள்.... அதாரது எக்ஸாமைக் கண்டுபிடித்தது.. மாட்டினா செத்தான்... வீட்டில் சொல்லிச் சொல்லிச் சிரித்தேன்.

உங்களுக்கு நான் புவஹா ஜலீலாக்கா எனப் பெயர் சூட்டியிருக்கிறேன், இப்போ என்னைப் புவஹா ஆக்கிட்டீங்கள்... புவஹா... ஹாக்ஹாஅக்க்க்க் ஹா.. கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

thenammailakshmanan said...

ஜலீலா ரொம்பப் பிடிச்சது எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் ஜோக்தான் அருமையா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

சே யாரையும் நம்பி மெயில் அனுப்ப முடியல , உடனே அவுக ப்ளாக்ல போட்டு நல்ல பேரு எடுதுர்ராக

மங்குனி அமைச்சர் said...

///ஜெய்லானி said...

மகாகவி பாரதி + பூக்காரி , ஜோக்கில நெம்பர் 1. நினைக்கும்போதே சிரிப்பு கப...கப... வருது. ஹா....ஹா..////

டே ஜெய்லானி , இப்படிக்கா வா நாம பேசாம பீச்சால போய் தேங்கா, மாங்கா பட்டாணி சுண்டல் வித்து போலசுகலாம்
பார்ரா நம்ம ரெண்டு போரையும் கோத்து விட்டு இவுக நம்ம வேலைய புடுங்கிட்டாக , இப்ப என்னா செய்யலாம் ?
அட்டாக்கா ? இல்ல பீச்சா ? யோசனை பன்னி சொல்லு , நான் போய் ஆயுதங்கள ரெடி பன்றேன். வெற்றி வேல் ,வீர வேல் ,.. ஜெய்லானி ஸ்டார்ட் முசிக் ..

ஜெய்லானி said...

//ஜெய்லானி ஸ்டார்ட் முசிக் //

ஓகே!! முதல் கமெண்ட் யாரு ?

பாருய்யா!!ம்ங்கு இந்தோனேசியா ஃபிரிஜ்ல ஒக்காந்துட்டு இங்க் வெயில கமெண்ட்ட் குடுக்குறத இதுக்கு பேருதான் மனுசனை வெறுப்பு ஏத்தரதா.

ஜெய்லானி said...

//ஜலீலா நாளைக்கு மகளுக்கு எக்ஸாம்,நாம ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா?.//

அப்ப இன்னைக்கு கொல பட்டினியா வீட்டில.பசிமயக்கத்தில வீட்டுக்கு வந்தா அப்ப பேய்சிரிப்புதான் கிடைக்கும்ன்னு சொல்லுங்க

ஜெய்லானி said...

//
கீபோர்டை தட்டுனா திரையிலே எழுத்து வரும்
திரையிலே எழுத்தை தட்டுனா கீபோர்டு வருமா???/ ஆஆஆவ்//

ரொம்ப தட்டினா கண்ணாடி துண்டும் வரும் .ஐயோஓஒ.. ரத்தம்மும் வருதே!!.

ஜெய்லானி said...

ஆனி பிடுங்க போவதால் மீதி இரவு 8 மணி அளவில்

ஸாதிகா said...

ஜலி முடில..

ஸாதிகா said...

கரண்டியை சமைக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்.எங்களை எல்லாம் மண்டையில் நங் என்று அடி போட்டு சிரிக்க வைக்கவும் யூஸ் பண்றீங்களே ஜலி!!!

ஹுஸைனம்மா said...

அக்கா, எத்தன தரம் படிச்சாலும் சிரிக்க வக்கிற ஜோக்ஸ்!!

ரோஸ்விக் said...

பாட்டிக்கு கொல்லி வைக்கிறது, ஓட்டப் பந்தய ஜோக்கு, மயிலை நடக்க வைக்கிறது, எல்லாம் ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது. எனக்கு புதியவை அவை.

நல்லா இருக்கு அக்கா.

மாதேவி said...

மொக்கை கலக்கல்.

மங்குனி அமைச்சர் said...

// ஸாதிகா said...
//
ஜலி முடில..///

ஹலோ ஜலி முடில ,ஊ..ர்கா பன்ன முடியாது

மங்குனி அமைச்சர் said...

டம....டம....டம....டம....

இதுநாள் சகல மான பொது ஜனகளுக்கு தெரியபடுத்துவது என்னான்னா , இங்க ஒரு ஆடு தற்கொலை செய்யப்பட போகிறது ,தற்கொலை எப்படி செய்வது என்று ஜெயலானியும் , மங்குவும் ஆட்டிற்கு சொல்லி தர போகிறார்கள் , எனவே ஆடு தற்கொலை செய்வதை பார்க்காதவர்கள் உடனடியாக ஜலீலா மேடம் ப்ளாக் வந்து ஜலீலா என்ற ஆடு தற்கொலை செய்வதை பார்த்து செல்லுமாறு எல்லோரும் அன்போடு அழைக்கபடுகிறார்கள்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி இந்த ஆடு தலைய வெளியே காட்ட மாடேங்குதே ?

மங்குனி அமைச்சர் said...

//ஸாதிகா said...

கரண்டியை சமைக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்.எங்களை எல்லாம் மண்டையில் நங் என்று அடி போட்டு சிரிக்க வைக்கவும் யூஸ் பண்றீங்களே ஜலி!!!//

இவுக சொல்ற மாதிரி சமையல் செய்து சாப்பிட்ட இப்படிதான் "ஜாலி " ன்னு சொல்றதுக்கு பதிலா ஜலி, ஜலி ன்னு தான் வரும்

மங்குனி அமைச்சர் said...

// மாதேவி said...

மொக்கை கலக்கல்.//

மொக்கைய கலக்க முடியாதுங்க , வேனும்ன்னா "க்மொகை", "மொகைக்", "கைக்மொ" "க்கைமொ" கொலப்பிகிரலாம்

மங்குனி அமைச்சர் said...

என்னாங்க மேடம் ஒரு கமன்ட் மட்டும் விசிபிள் ஆகிருக்கு மத்தத காணோம் , இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
அந்த பயம் இருக்கட்டும்

Jaleela said...

அமைச்சரே உம்ம லொள்ளு தாங்க முடியாம தான் முதல்ல பின்ன்னூட்ட குலசாமி படையல் போட்டுட்டு வந்தேன்//

ஆஹா மங்குனி ஸாதிகா அக்காவையும் விட்டு வைக்கலையா?

Jaleela said...

கவி இது ரொம்ப டூ மச்சா இல்ல, வெயில் இனிதான் போட்டு தாக்கனும்.

Jaleela said...

ஆசியா என் பையனுக்கு எக்சாம் முடிந்து லீவு அதான் ரிலாக்ஸ்/

உங்கள் மகளுக்கு வாழ்த்துகக்ள்.

Jaleela said...

அபு அஃப்ஸர் பார்த்து சிரிக்கும் போது அக்கம் பகக்ம் பார்த்து சிரிங்க.

Jaleela said...

இந்த நாஞ்சிலாந்த கண்ணுல எது படுதோ இல்லையோ பிகருங்க அது மட்டும் தான் தெரியும், வயசு கோளாறு..

Jaleela said...

அவங்க மூன்று பேரு அட்ரஸும் அமைச்சர் கிட்ட வாங்கிக்கங்க

Jaleela said...

.. சைவ கொத்து பரோட்டா முடியல எல்லோருக்கும் முடியலையாம் ரொம்ப கண்ண கட்டுதாம்,

Jaleela said...

அன்புத்தோழன் இந்த பார்வேட் மெசேஜ் இப்ப நான் இத பார்வேட் பண்ணா இதே ஆறு மாதம் கழித்து இஙகேயே திரும்பி வரும்.

காமடிய எஙக் எப்ப எத்தனை முறை படித்தாலும் நல்ல இருக்கும்.

Jaleela said...

அட மொக்க ச்சாமி உங்களுக்கு வந்த அதே பார்வேட் மெசேஜ் தான் ஒரே நேரம் இரண்டு பேரும் சம்மிட் செய்துள்ளோம்.
எனக்கும் .நான் தான் மெயிலில் வந்த மொக்கைன்னு போட்டு இருக்கேனே பார்ககலைஅயா?

Jaleela said...

மின்மினி, வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ.

Jaleela said...

அக்பர் வாங்க யார் யாருக்கெல்லாம் இது மெயிலில் வந்துச்சோ,யார் யார் எல்லாம் பிளாக் வைத்து இருக்காஙக்ளோ எல்லாரும் கிளபிட்டோமுல்ல.
ஹிஹி

நன்றி

Jaleela said...

அண்ணாமலையார் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.

ஸாதிகா said...

ஜலி,மங்குனி உங்களை இந்த வாரு வாருகிறாரே,நீங்கள் ஏன் இப்படி பொம்பளை மங்குனி ஆகிட்டீங்க.வாங்க..வந்து ஏதாவது பண்ணுங்க.கொசுத்தொல்லை ஜாஸ்தியாகிடுச்சி.

Jaleela said...

//அக்காவும் மொக்கைக்கு வந்துட்டாங்களா? எங்க புளப்பு என்ன ஆவுறது? அக்கா........!!!! செம ஜோக்ஸ்//
சித்ரா யாரும் பயப்பட வேண்டாம் உஙக்ள் பிளாக்கில் நீங்க ஹச்சுன்னு தும்பினாலே கூட்டம் சேரும்.

Jaleela said...

ஸாடார்ஜன் தொடர் வருகைக்கு மிகக் நன்றி, ஒரே சீரியஸா இருககக்கூடாது.
அதான் இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ்

Jaleela said...

//உங்களுக்கு நான் புவஹா ஜலீலாக்கா எனப் பெயர் சூட்டியிருக்கிறேன், இப்போ என்னைப் புவஹா ஆக்கிட்டீங்கள்... புவஹா... ஹாக்ஹாஅக்க்க்க் ஹா.. கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//

அதிரா இது எல்லோரும் சூட்டியது தானே, பரவாயில்லை அதை நீங்க சூட்டும் போது இன்னும் நல்ல இருக்கு

Jaleela said...

வந்தமைக்கு மிக்க நன்றி ஷாகுல்.

Jaleela said...

//மலிக்கா இது துபாயில் இது எல்லோருக்கும் வந்திருக்கும்/ எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்ததால் நான் இத போட்டுக்கொண்டே, நான் படிச்சி சிரிச்சதை, எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன்.

//இது மொக்கச்சாமிக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

Jaleela said...

.//ஜலி அக்கா...அஆஹ்ஹஹ்ஹ்கா...
டாப் டக்கர்ர்ர்...
நான் சிரிச்சத பார்த்து ''அவனா நீ...''னு ஒருத்தன் கேட்டுட்டே போய்ட்டான்...
ஹ்ஹாஅ நெச‌மா வே அவ‌னா நீ சும்மா த‌மாசுக்கு .

ந‌ன்றி சீமான் க‌னி

Jaleela said...

//ஜலி,மங்குனி உங்களை இந்த வாரு வாருகிறாரே,நீங்கள் ஏன் இப்படி பொம்பளை மங்குனி ஆகிட்டீங்க.வாங்க..வந்து ஏதாவது பண்ணுங்க.கொசுத்தொல்லை ஜாஸ்தியாகிடுச்சி//

கவலை வேண்டாம் ஸாதிகா அக்கா கொசு மருந்து அடிக்க, ஜெய்லானி இன்னும் சுதாகர் சாரெல்லாம் வருவாஙக்..

அதுக்கு தான் அடுத்த பதிவில் போட்டு இருக்கேன்.

Jaleela said...

//அக்கா, எத்தன தரம் படிச்சாலும் சிரிக்க வக்கிற ஜோக்ஸ்//

நன்றி ஹுஸைனாம்மா/

Jaleela said...

விஜய் ராம சாமி முதல் வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

மாதேவி நன்றி

இந்த அமைச்சர் உங்களையும் விட்ட பாடில்லை.

யாராவது வாஙக் ப்பா மூட்ட பூச்சி தொல்லை தாங்க முடியல.

அவர் ஈக்வல பதிவு போட்டு விட்டோமேன்னு அதான் இப்படி...

Jaleela said...

//என்னாங்க மேடம் ஒரு கமன்ட் மட்டும் விசிபிள் ஆகிருக்கு மத்தத காணோம் , இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
அந்த பயம் இருக்கட்டும்//

அமைச்சரே பயம் எல்லாம் இல்லை , உங்களுக்கு சரி சமமா, சித்ராவும் நானும் பதிவு போட்டுட்டோமேன்னு ஒரு பயத்தில் தான் மாஞ்சு மாஞ்சு பதிலுன்னு நினைக்கிறேன்.

geetha said...

ஹையோ! சிரிச்சு சிரிச்சு வயறே புண்ணாய்டுச்சு. கொஞ்சம் இல்லீங்க ரொம்பவேவேவே...., ரிலாக்ஸ் பண்ணியாச்சு.
சரியான கலக்கல்தான் போங்க! முடியல! தனியா வாயை யார்கிட்டயாவது கடன் வாங்கிதான் சிரிக்கவேண்டியிருக்கு!
சூப்பர் ஜலீலா!

மன்னார்குடி said...

முடியல...

Jaleela said...

கீதா தனியா வாய வாங்கி சிரிச்சீங்களா? நான் வயற்று வலிக்கு டேப்லெட் போட்டு கொண்டு சிரிப்பேன். ஹி ஹி

வருகைக்கு மிக்க நன்றி கீதா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா