Wednesday, March 17, 2010

எக் வெல்லம் இட்லி - egg jaggery idly

தேவையான பொருட்கள்



இட்லி மாவு = 5 இட்லிக்கு தேவையான அளவு
வெல்லம் பாகு (கட்டிப்பாகு) = ஒன்னறை மேசைகரண்டி
நெய் = தேவைக்கு
முட்டை = ஒன்று
உப்பு = ஒரு சிட்டிக்கை





செய்முறை


இட்லி த‌ட்டில் நெய் த‌ட‌வி முட்டையுட‌ன் வெல்ல‌பாகை க‌ல‌ந்து முத‌லில் வெல்ல‌ம் முட்டை க‌ல‌வை, பிறகு மாவில் உப்பு கலந்து ஊற்றவும். மாவு இட்லி குழியில் முக்கால் பாகம் தான் இருக்கனும். அப்ப தான் பொங்கி வர சரியாக இருக்கும்.ஏழு நிமிடங்கள் வேக விட்டு இரக்கவும்.

வெல்ல‌ம் எக் இட்லி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு)
மேலே குறிப்பிட்ட‌ பொருட்க‌ளுட‌ன், ஏல‌ப்பொடி கால் தேக்க‌ர‌ண்டி, தேங்காய் துருவ‌ல் ஐந்து தேக்க‌ர‌ண்டி சேர்த்து செய்து கொள்ள‌லாம்.



குறிப்பு

வெல்ல பாகு எடுக்கும் போது முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து ஒரு கொதி வரும் போது வடிகட்டி கொள்ளவும், வெல்லத்தில் கல் இருக்கும்.பிறகு பாகை வற்றவிட்டு கொள்ளவும்.

இதில் முட்டை சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகிறது.நல்ல மெத்துன்னு ஷாப்டாகவும் இருக்கும்.இது ஏற்கவே கொடுத்த தேன் இட்லி, மிளகு இட்லி.இதை கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு டிபனில் செய்து வைக்கலாம்.
இட்லி கேக்குன்னு சொல்லி கொடுங்கள்.
இந்த படம் என் தோழி ரூபி செய்து அனுப்பியது.நான் முன்பு கொடுத்த எக் இட்லி முறையில் செய்து இருக்கிறார்கள்.

37 கருத்துகள்:

மங்குனி அமைச்சர் said...

பாத்தாலே பசி எடுக்குதே

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. முட்டைக்கு பதிலா,வாழைப்பழத்தை டிரை பண்ணிப் பார்க்கலாம். நல்ல பதிவு. நன்றி ஜலில்லா

ஜெய்லானி said...

திரும்பவும் இட்லியா!! இதை தோசையா சுட்டா சரிவருமா ?

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...பாத்தாலே பசி எடுக்குதே//

யோவ் மங்கு ,புதுசா ஏதாவது சொல்லுயா ,(வீட்டுல என்ன கொல பட்டினியா )

மங்குக்கு ஒரு இட்லியும் கெட்டி சட்னியும் பார்ஸல் ப்ளீஸ்!!!

prabhadamu said...

நல்ல இருக்கு பார்க்கும் போதே சாப்பிடனும் தேனுது. ஒரு பார்சல் சிங்கப்பூருக்கு பிலீஸ் அக்கா.

அக்கா இதில் வெல்ல பாகு என்றால் 1 1/2 என்று சொல்லி இருக்கிங்க அப்ப ரொம்ப இனிப்பா இருக்கும் அப்படி தான அக்கா.

ஜெய்லானி said...

//பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. முட்டைக்கு பதிலா,வாழைப்பழத்தை டிரை பண்ணிப் பார்க்கலாம்.//

சுதாகர் சார் , வாழை பழத்துக்கு பதில் பேரிச்சை பழம் யூஸ் பண்ணிபாருங்க. அப்புரம் குட்டி போட்ட பூனை மாதிரிதான் நீங்க

thenammailakshmanan said...

இட்லியில் இத்தனை வகையா அசத்துறீங்க ஜலீலா

சைவகொத்துப்பரோட்டா said...

இப்படி பசிய கிளறி விட்டீர்களே :))

Mrs.Menagasathia said...

இட்லியில் விதவிதமா செய்து அசத்துறீங்க.நல்லாயிருக்கு ஜலிலாக்கா!!

sarusriraj said...

இட்லி ரொம்ப நல்லா இருக்கு அக்கா

நட்புடன் ஜமால் said...

நோட்டிங்ஸூ

ஸாதிகா said...

மிளகு இட்லி..இப்ப வெல்ல இட்லியா?நடத்துங்க.அண்ணன் பாவம்.

Chitra said...

அக்கா , புதுசு புதுசா சொல்லி கொடுக்கிறீங்க....... அசத்தல்.

asiya omar said...

கருப்பட்டி இட்லி அவிப்பது வழக்கம்,இதுவும் நல்லாயிருக்கு.

seemangani said...

இதனை வகை இட்லியா???அருமை வாழ்த்துகள் அக்கா..

PriyaRaj said...

idly laa egg & jaggery aa.. very new.....

kavisiva said...

இன்னொரு இட்லியா?! செய்ய ஆசைதான் ஆனால் இனிப்பு சாப்பிட வீட்டில்தான் ஆளில்லை. என் செல்ல மருமகளுக்கு செய்து கொடுக்க வேண்டும். நிச்சயம் அவளுக்கு பிடிக்கும்.

சசிகுமார் said...

அக்கா சூப்பர் அக்கா, இட்லியை இனிமேல் விதவிதமாக சமச்சி சாப்பிடலாம்

ஜெய்லானி said...

// kavisiva said...இன்னொரு இட்லியா?! செய்ய ஆசைதான் ஆனால் இனிப்பு சாப்பிட வீட்டில்தான் ஆளில்லை//

ஆஹா..என்னையும் ,மங்குனியையும் கூப்பிட்டால் வரப்போறோம்.( என்ன ஒன்னு இட்லியை விட டிக்கட் வில அதிகம்)

Jaleela said...

அமைச்சரே பார்த்தாலே பசிக்குதா? எங்கே லொள்ளான பதில காணும்.

Jaleela said...

என்ன சுதாகர் சார் முட்டைக்கு பதிலா வாழை பழமா , கிண்டலுக்கு சொல்றீங்களா இல்லை நெசமா தானா?

Jaleela said...

ஜெய்லானி திரும்பவும் இட்லியா? இன்ன்னொரு இட்லி ரெசிபி இருக்கு அதையும் போட்டா அவ்வளவு தான் போல ஜார்ஜாவுல இருந்து கல்லு வருமா?
ஓ தோசையும் சுடலாமே

Jaleela said...

மங்குக்கு ஒரு இட்லியும் கெட்டி சட்னியும் பார்ஸல் ப்ளீஸ்

ok

Jaleela said...

பிரபா, ஒன்னறை மேசை கரண்டி

பார்சல் தானே அனுபப்பிட்டா போச்சு

Jaleela said...

.//சுதாகர் சார் , வாழை பழத்துக்கு பதில் பேரிச்சை பழம் யூஸ் பண்ணிபாருங்க. அப்புரம் குட்டி போட்ட பூனை மாதிரிதான் நீங்க//


ஹா ஹா

Jaleela said...

தேனக்கா ஆமாம் இட்லியில் இத்தனை வகை இன்னும் இருக்கு.

Jaleela said...

சைவ கொத்து பரோட்டா ஆஹா என்னால் உங்கள் பசி கிளறி விட்டதா?:))

Jaleela said...

ஆமாம் மேனகா இது குழந்தைகளுக்காக ஷிவானிக்கு செய்து கொடுங்க‌

Jaleela said...

நன்றி சாரு

Jaleela said...

சகோ.ஜமால் நோட்டிஸுக்கு நன்றிங்கோ உங்கள் ஹாஜருக்கு பிடிக்கும்

Jaleela said...

ஸாதிகா அக்கா அவருக்கு இனிப்பு டிபன் நா ரொம்ப பிடிக்கும்.

Jaleela said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி சித்ரா

நன்றி ஆசியா.

சீமான் கனி உங்கள் வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela said...

கவி சிவா நிறைய பேருக்கு இனிப்பு இட்லி பிடிக்காது, இது குழந்தைகளுக்கு செய்து கொடுகக்லாம்.

இட்லியில் இன்னும் கூட இருக்கு இனி இட்லி ரெசிபி போட்டா அவ்வ்வளவு தான்னு நினைக்கிறேன்.

நன்றி பிரியா ராஜ்

Jaleela said...

சசி குமார் நன்றி.

Jaleela said...

//ஆஹா..என்னையும் ,மங்குனியையும் கூப்பிட்டால் வரப்போறோம்.( என்ன ஒன்னு இட்லியை விட டிக்கட் வில அதிகம்)//

அப்ப டிக்கெட் போட்டுஙக கவி.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜலீலா!

முட்டையும் வெல்லமும் கலந்த இட்லி மிகவும் அழகாக இருக்கிறது!!

Jaleela said...

மனோ அக்கா வாங்க வாங்க வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா