Sunday, April 4, 2010

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா!!!!...
//ரொம்ப உருக்கமா இருக்க இதேல்லாம் நான் எழுதியது கிடையாது.மெயிலில் வந்தது, கணவனை பிரிந்து வாழும், மனைவிமாரின் கவிதை, மெயிலில் வந்தது. நீங்களும் பிரிந்து வாழும் கணவர் மார்களும் நாம தான் காச அனுப்புறோமே சொகுசா தானே இருக்கிறாள் என்று நினைக்காதீர்கள்.//


வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?


12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா..?


அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ


விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

********************##############*****************

பேச்சுலரின் வாழ்க்கை
இரண்டாம் பாகத்தை தான் எழுத என் சொந்த வார்த்தைகளை மனதில் கோர்ந்து கொண்டிருந்தேன்,

இந்த மெயில் வரவே அது எழுத முடியல பிறகு போடுகிறேன்.

பிளாக்கில் வரும் கவிதைகள் ஏதும் என் சொந்த படைப்பில்லை, தினம் நிறைய பார்வேட் மெயில்கள் வருகின்றன அதில் இப்படி மனதை உருக்கும் கவிதைய படிச்சிட்டு அத டெலிட் பண்ண மனசு வரல.

//ஏதோ வேலை பார்த்தோம் நானும் ஒன்னாந்தேதி ஆச்சா காச டிராஃப்ட் எடுத்து அனுப்பிட்டு, நிறைய இளைஞர்கள், பேஸ் புக்கில் சாட்டிங், பிலிப்பைனிகளுடன் உல்லாசம் இப்படி திரிகின்றனர். ஆனால் நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை.
ஆனால் இன்னும் உத்தம புருஷர்கள், 25 வருட காலமாக பிரிந்து தன் குடும்பத்துக்க்காக வாழ்ந்து அவரவர் அன்பு மனைவியை பிரிந்து தான் வாழ்கின்றனர்.
ஆகையால் ஊரில் ஒருத்தியா நின்று எல்லாத்தையும் சமாளிக்கிறாள். உங்களுக்கென்று ஒரு ஜீவன் என்றென்றும் காத்து இருப்பதை ஒரு கனமும் மறவாதீர்கள்.
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதல. ஆனால் இன்று இது தான் நடக்கிறது.//

நிறைய மனைவிமார்கள், இப்படி சாம்பாதித்து வாழனுமா கூழோ கஞ்சியோ ஒன்றாக குடிக்க்கலாம் வாங்க என்பார்கள்.


33 கருத்துகள்:

நாஞ்சில் பிரதாப் said...

ஜலிலாக்கா.... கவுஜை...கவுஜை... சூப்பர்... கணவனை பிரிந்து வாழும் மனைவியின் வேதனையை அப்படியே எழுதியிருக்கீங்க...துபாய் மட்டும்ல்ல எல்லா வெளிநாட்டு கணவன்களுக்கும் இது பொருந்தும்.

ஆனா கவிதை மாதிரி பிரிச்சு எழுதுங்க...

Jaleela said...

நாஞ்சிலாரே இது நான் எழுதியது கிடையாது, எனக்கு கவிதை ஞானோதயம் துளியும் கிடையாது.

மெயிலில் வந்தது, ரொம்ப உருக்கமாக இருந்தது அதான் இதில் போட்டேன்.

துபாய் ராஜா said...

ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போது படித்த போதும் இதயத்தை தொட்டது.

திரைகடலோடி திரவியம் தேடும் பலரது நிலைமையும் இப்படித்தான்.

நல்லதொரு பகிர்வு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான வரிகள்..நெஞ்சைத் தொடுகிறது.. இந்த கவிதையை அனுப்பியவருக்கும் அதை அழகாக வரிகளில் கோர்த்துஎடுத்த ஜலீலாவுக்கு என் நன்றிகள்.

கண்களில் ததும்பும் நீருடன் ஸ்டார்ஜன்.

நாடோடி said...

க‌விதையில் க‌ண‌வ‌னை பிரிந்து வாழும் ம‌னைவிக‌ளின் வ‌லி தெரிகின்ற‌து...ப‌கிர்விற்கு ந‌ன்றி

அநன்யா மஹாதேவன் said...

கரெக்ட்!
இது எனக்கும் ஃபார்வார்டாகி வந்தது!
படிச்சுட்டு ரொம்ப வருத்தமா இருந்தது!
நன்றி!

சென்ஷி said...

hm... :(

athira said...

ஜலீலாக்கா சூப்பரோ சூப்பர்.... இது கவிதையல்ல.. கணவனைப்பிரிந்து வாடும் ஒரு இதயத்தின் கதை.... இதைப்படித்ததும் எனக்கு பசியெல்லாம் போனதுபோல இதயமெல்லாம் என்னவோ செய்கிறது.

உண்மைதான், பட்டினிகிடந்தாலும் ஒன்றாக இருப்பதுதான் சொர்க்கமே.

எனக்கு எழுத நிறைய வருகிறது.. ஆனால் எழுதத்தெரியவில்லை. நிறையப்பேரின் இப்படிக் கதைகளைக் கேட்டு பலதடவை கண்கலங்கியிருக்கிறேன்.... கப்பலில் தொழில் பார்ப்போரின் வாழ்க்கையும் இப்படித்தான்... பணம்தான் மிஞ்சும்.

மின்மினி said...

அருமையான கவிதை ஜலீலா அக்கா.. வெளிநாட்டில் பிரிந்துவாழும் எல்லோரும் நினைத்து நினைத்து நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வரிகள். நல்ல கவிதையை உங்களுக்கு அனுப்பியவருக்கு நன்றிகள்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பிரிவின் வலி..!

:(

அஹமது இர்ஷாத் said...

பிரிவின் வலி அது பட்டால்தான் தெரியும்.
கவிதை சூப்பர்.

கட் & பேஸ்ட் செய்த ப்ளாக் ஒனருக்கு(ஜலீலா) வாழ்த்துக்கள்..

அன்புடன் மலிக்கா said...

கவிதை மிக அருமை ஜலீக்கா
பிரிவால் வாடும்
இதயங்களின் சோகம்
இந்த முஹாரி ராகம்.

மு.அ. ஹாலித் சிட்னி said...

ஜலீலாக்கா.,

சுட்ட கவிதை மட்டுமல்ல

மனதை "சுட்ட" கவிதையும் கூட

இது ஒரு நல்ல தேர்வு

அன்புத்தோழன் said...

Cha.. Romba paavam... indha kavidhai ezhudhiya sagodhariyin yekkangalukku viraivil vidai kidaikattum...... Insha Allah...

Inbamaana vazhvai vaazha iraivan arul puriyattumena idhu pondra sagodharigalukkaaga praarthippom.....

Thanks for sharing...

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த கவிதையின் சொந்தகாரருக்கும்,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Jaleela said...

ஆமாம் துபாய் ராஜா இது எப்போது வந்ததுன்னு தெரியாது, எனக்கு இப்ப தான் வந்தது, உடனே பகிர்ந்து கொண்டேன் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela said...

ஸ்டார்ஜன் நீங்கள் எழுதியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

Jaleela said...

நாடோடி வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela said...

வாங்க அநன்யா மஹாதேவன், முதல் வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் எல்லோருக்கும் வருத்தம் தான்.

தமிழ் பிரியன் said...

mmmmm :-((

Mrs.Menagasathia said...

ம்ம்ம்ம் பிரிவின் வலி....

asiya omar said...

கவிதை அருமை,அதை படிக்க தந்த ஜலிலாவிற்கு நன்றி.பிரிந்து வாழும் பெண்களின் வேதனையை பெரிதா? ஆண்களின் வேதனை பெரிதா?ன்னு பட்டிமன்றமே வைக்கலாம்.அவ்வளவு சப்ஜெக்ட் இருக்கு.

ஜெய்லானி said...

சொன்னது இத்தனை !!
சொல்லாதது எத்தனையோ !!!

மலரின் கண்ணீரை தேன் என்கிறது இவ்வுலகம்

முதலையின் கண்ணீரை வேஷம் என்கிறது இவ்வுலகம்.

தான் விட்டால் மட்டும் கண்ணீர் அசலா

seemangani said...

//நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!//

அருமையான பகிர்வு அக்கா படித்த கணவன்மார்களுக்கு நிச்சயம் காதில் மனைவியின் குரல் கேட்கும்...

ஆமா எதுக்கு எனக்கு கவிதை வராது இத்தன தடவ சொல்லி இருக்கீங்க???
:)))))))

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு விருது கொடுத்து
உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.

R.Gopi said...

//12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா..?//

********

பிரிவின் வலி வெகு வலிமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது...

நீங்கள் எழுதவில்லை என்று சொன்ன உங்களின் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன்...

ஆயினும், அதை இங்கு சமர்ப்பித்ததில் வெகு ஜனங்களை அடைந்திருக்கிறது...

இது மத்திய கிழக்கு நாடுகள் என்று மட்டுமல்ல... நாஞ்சில் பிரதாப் சொன்னது போல், மனைவியை பிரிந்து வாழும் எல்லா கணவர்களுக்கும் பொருந்தும்...

பதிவை படிச்சாச்சு
அதுல மனசு கனமாச்சு

குரு said...

http://ngprasad.blogspot.com/2009/04/blog-post.html

:) :) :)

இமா said...

வெகு உருக்கமாக இருக்கிறது கடிதம்.

ஹுஸைனம்மா said...

இதில மனைவி கணவனைப் போகவேண்டாமென்று சொல்வதுபோல் கவிதை உள்ளது; சில நாட்களுக்கு முன் ஒருவனின் தாயும், மனைவியும் அவனைத் துபாயிலேயே இருந்து சம்பாதித்துத் தரும்படி வற்புறுத்துவதாகக் கடிதம் ஒன்று ஃபார்வேர்ட் மெயிலில் வந்தது. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்!!

1993ல நான் முதலில் அமீரகம் வந்தப்போவும், பின் மீண்டும் 1997லும் வந்தப்பவும், ஃபேமிலியா இருக்கவங்க ரொம்ப ரொம்பக் குறைவு; அந்த நிலைமை மாறி, இப்ப குடும்பத்தோடத்தான் இருக்கணும்னு நினக்கிறவங்க அதிகமாகிட்டு வருது. துபாயைப் பாத்தாலே தெரியும்!!

குடும்பத்தைக் கூட்டிட்டு வர இயலாதவர்கள், இருப்பதைக் கொண்டு சமாளிப்போம் என்று ஊருக்குச் செல்வதையும் பார்க்கிறேன். :-))

Jaleela said...

தமிழ் பிரியன் @ நன்றி

மேனாகா ஆமாம் பிரிவின் வலி ஆழமானது

ஆசியா நானும் சில வருடஙக்ள் பிரிந்திருந்ததால் அதன் வலி ரொம்பவே தெரியும்.

ஜெய்லானி மேலும் வரிகள் அருமையாக சொல்லி இருக்கீங்க.

சீமான் கனி ஆமாம்யாராவது நான் காப்பி அடித்தேன் என்று சொல்லிட போறாங்க.நன்றி

சைவ கொத்து பரோட்டா எனக்கு அவார்டா மிக்க நன்றி.

கோபி ஆமாம் இந்த பதிவை படித்து எல்லோருக்குமே மனசு கனமா தான் போச்சு, ஒரு நிமிடமாவது இதை பற்றி சிந்திபபார்களே.
இமா வருகைக்கு மிக்க நன்றி , ஆமாம் மிகவும் உருக்க மான கவிதை.

ஸ்டார்ஜன் பராவாயில்ல என் பதிவு உங்களை பாத்து விட்டதேன்னு தான் வருத்தம் மற்ற படி உங்கள் கமெண்ட்டில் குத்தமில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு பகிர்வு :((

Viki's Kitchen said...

Intha kavithai yai padithayudan azhuthu vitten. Naanum sila kaalam ippadi irunthen:( Paavam intha penngal.

tamil nadu india said...

இந்த ஆக்கத்தை padithavudan என் கணவர் நேற்று தொலைபேசியில் பேசியதுதான் நினைவுக்கு வந்தது.வாழ்வின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர்.வாழவின் பெரும்பகுதியை அங்கேயே செலவிடுகின்றனர்.என் கணவர் சொன்னது."நீ மட்டும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாய்.நான் இங்கு தனியாக."
இங்கு வழி இல்லாமல்தானே வலியோடு செல்கிறார்கள்.

தமிழில் டைப் செய்பவர்கள் தயவு செய்து எப்படி என்று சொல்லவும்.நான் இதை கூகுள் குரோம் ஜிமெயில் ஓபன் செய்து கம்போஸ் மெயிலில் தமிழ் போனதில் டைப் செய்து காபி செய்து பின் இதில் பேஸ்ட் செய்துள்ளேன்.

அன்புடன்,
கதிஜா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா